நீண்டதொரு இடைவெளிக்கு பிறகு உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிற இடுகை.. கொஞ்சம் வித்தியாசமாகவும் புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவுகள் இருக்க வேண்டும் என்பதில் குறியாயிருப்பதாலும் வேறு சில வேலைகள் குறுக்கிட்டதும் இந்த பதிவின் தாமதத்துக்கு காரணம்..என்றாலும் எப்படியேனும் பதிவிட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தட்டச்சு செய்து இன்றுதான் பதிவேற்ற வாய்ப்பு கிடைத்தது..தகவ.தொழில்நுட்ப ஆர்வலர்கள் மன்னிக்க வேண்டும்..இனி பதிவுகள் கொஞ்சம் சுறுக் நறுக்காக இருக்கும். புரியாதவற்றை பின்னூட்டங்களில் தெளிவுபடுத்துகிறேன்..
தலைப்பில் நான் சொன்னபடியும் நீங்கள் ஊகித்த படியும் சொல்லப்போவது கணிணியில் உள்ள ஒரு Trick பற்றியே.... அதாவது நீங்கள் விரும்பாத, தரிசிக்ககூடாது என நினைக்கிற இணையப்பக்கங்களை அல்லது உங்கள் பிள்ளைகள் உலாவரகூடாது என நீங்கள் நினைக்கிற பக்கங்களை தடுப்பது பற்றிதான். இந்த வேலையை செய்ய சந்தையில் பல மென்பொருள்கள் உலாவருகின்றன. ஆனால் நம்மிடமே வழி இருக்க ஏன் வேறு மென்பொருள்களை பயன்படுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் (Xp, Vista, 7) இயங்குமுறைமையிலேயே அதற்கான வழி இருக்கிறது..
இதனை மேற்கொள்ள முதலில் உங்கள் கணினியில் உள்ள ஏதாவதொரு Administrator கணக்கினூடாக உள்நுழைந்து கொள்ளுங்கள். பின்
உங்கள் Mycomputer இல் உள்ள C ட்ரைவினுள் சென்று..
- Windows ஃபோல்டரை திறந்து அதனுள் இருக்கும் System32 என்ற ஃபோல்டரை திறந்து கொள்ளுங்கள் ..
- பின் அதனுள் உள்ள drivers என்ற ஃபோல்டரை திறந்து கொள்ளுங்கள்..
- இறுதியாக அதனுள் உள்ள etc என்ற பெயரில் அமைந்த ஃபோல்டரை திறங்கள்..இப்போது உங்கள் கணினி திரை கீழுள்ளது போல காணப்படும்..
இதில் காட்டப்பட்டுள்ள hosts என்ற ஃபைலை இரட்டைகிளிக்
செய்து திறங்கள் ...அப்போது கீழுள்ளது போல் Openwith விண்டோ கிடைக்கும்..அதில் Notepadஐ தெரிவு செய்து Ok பட்டனை அழுத்துங்கள்..
இப்பொது நீங்கள் திறந்து வைத்துள்ள இந்த hosts ஃபைல்தான் உங்கள் கணினிக்கான இணையம் சம்பந்தப்பட்ட அனைத்து தரவுகளையும் ஆளுகை செய்கிறது. இதில் சில மாற்றங்கள் செய்துவிட்டால் நான் மேற்சொன்ன
மாதிரி இணையப்பக்கங்களை தடுத்து விடலாம்..
நான் படத்தி்ல் காட்டியபடி அந்த ஃபைலின் இறுதி வரி 127.0.0.1 localhost இப்படி இருக்கும்..இந்த வரி முடிகின்ற இடத்தில் Cursorஐ வைத்து
Enter கீயை அழுத்தி அதாவது அந்த வரிக்கு கீழ் பின்வருமாறு தட்டச்சு செய்யுங்கள்.
உதாரணமாக நீங்கள் யூடியூப் (Youtube) தளத்தை Block செய்ய நினைத்தால் 127.0.0.1 இதன்பிறகு ஒரு இடைவெளி விட்டு www.youtube.com
127.0.0.1 www.youtube.com இவ்வாறு அமையும்...
பின் இதனோடு சேர்த்து Facebook தளத்தை Block சேய்ய நினைத்தால் அதன் கீழ் 127.0.0.1 www.facebook.com இவ்வாறு அமையும்..
127.0.0.1 localhost
127.0.0.1 www.youtube.com
127.0.0.1 www.facebook.com
இப்படியாக நீங்கள் தடுக்க நினைக்கிற அனைத்து தளங்களின் முகவரிகளையும் வழங்கிய பின் Ctrl+S அழுத்தி Save செய்து விட்டு வெளியேறுங்கள்.. இனி உங்கள் கணினியில் நீங்கள் தடுத்த தளங்கள் மட்டுமல்ல ஏனைய தளங்களில் இணைக்கப்பட்டிருக்கும் அந்த இணையதளங்களின் Widgets கூட வெலை செய்யாது... முயற்சித்து பார்த்து கருத்துக்களை எழுதுங்கள்..
இப்படியாக நீங்கள் தடுக்க நினைக்கிற அனைத்து தளங்களின் முகவரிகளையும் வழங்கிய பின் Ctrl+S அழுத்தி Save செய்து விட்டு வெளியேறுங்கள்.. இனி உங்கள் கணினியில் நீங்கள் தடுத்த தளங்கள் மட்டுமல்ல ஏனைய தளங்களில் இணைக்கப்பட்டிருக்கும் அந்த இணையதளங்களின் Widgets கூட வெலை செய்யாது... முயற்சித்து பார்த்து கருத்துக்களை எழுதுங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக