கணினியில் எங்களுடைய ஆவனங்களை இலகுவான பாவனைக்காக நாங்கள் பிரித்து வைப்பதற்கு எமக்கு ஃபோல்டர்கள் உதவுகின்றன. இந்த ஃபோல்டர்களில் காணப்படுகிற ஆவணங்கள் முக்கியமானவையாகும். எனவே இவற்றை மிகவும் அவதானமாக பாதுகாக்க வேண்டும். இதற்காக நம்மில் பலர் அவற்றை Hidden செய்து வைப்பதுண்டு. சிலர் அவற்றை வேறு பெயர்களில் பாதுகாப்பதும் உண்டு. ஆனால் இவையெல்லாம் சாதாரண யுத்திகள்தான. உங்கள் கணினியை கையாள்கிற இன்னொருவரோ அல்லது வேறு ஏதேனும் வைரஸ் புரோக்கிராம்களோ அவற்றை இலகுவாக அழித்துவிட முடியும் அலல்து திருட முடியும். இதை தடுப்பதற்காகவே சந்தையில் இலவசமாகவும் காசு கொடுத்து பெற வேண்டியவையாகவும் பல மென்பொருட்கள் காணப்படுகிறன. ஆனால் அவையும் சில சமயங்களில் நம் காலை வாரிவிடும். எனவே எங்களுடைய ஆவனங்களை எவ்வாறு பாதுகாப்பது? மற்றவர்களை நம்பாமல் நாமாகவே ஒரு Locker ஐ உருவாக்கினால்..
எந்தவொரு கணினி மொழி அறிவும் இன்றி உங்களாலும் கூட ஒரு பாதுகாப்பான ஃபோல்டர் லொக்கரை உருவாக்க முடியும் என்றால் நம்புவீர்களா?? முடியும். அதனை வெறும் நோட்பேடை வைத்து செய்யலாம். முதலில்
- கீழே உள்ள கோடிங்கை பிரதி செய்து ஒரு புதிய நோட்பேடை திறந்து அதில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.பின்னர்
- நான் Your password here என்று கொடுத்துள்ள பகுதியில் உங்கள் கோப்புக்கான பாஸ்வேர்டை வழங்கி பின்னர் Ctrl+S அழுத்தி சேமிக்க வேண்டும் அப்பொது தோன்றும் Save As மெனுவில் Filename இல் Locker.bat என்று கொடுத்து உங்கள் கணினியின் உங்கள் ஆவணங்கள் இருக்கிற பகுதியில் சேமித்து கொள்ளுங்கள். பின்
- சேமித்த அந்த ஃபைலை இரட்டை கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.. அப்பொது உங்கள் Locker.bat ஃபைல் உள்ள அதே இடத்தில் Locker என்ற பெயரில் ஒரு வெறுமையான ஃபோல்டர் உருவாகி இருக்கும். இனி உங்கள் ஆவணங்களை அதுனுள் போட்டு பின் மென்பொருளை (Locker.bat) ஐ இரட்டை கிளிக் செய்க
- அப்போது உங்கள் ஃபைலை பாதுகாக்கவா என்று கேட்டும் அதில் Y என்பதை அழுத்தி என்டர் செய்யவும் இப்பொது அந்த ஃபோல்டர் மறைந்து விடும். பின் தேவையான சந்தர்ப்பத்தில் (Locker.bat) ஐ இரட்டை கிளிக் செய்து உங்கள் பாஸ்வேர்ட்டை வழங்கி ஃபைலை மீள பெறலாம்..ஆனால் நீங்கள் உருவாக்கிய மென்பொருளை பத்திரமாக வையுங்கள்
3 கருத்துகள்:
பயனுள்ள குறிப்பு.
கோடிங்கில் Your password here என்பது தடித்த எழுத்தில் கொடுக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்..
super machan.........hw to write virus code
கருத்துரையிடுக