இந்த மாதம் நாம் JR Directory எனும் மெக்பொருள் பற்றி பார்ப்போம்.JR Directory என்பது ஒரு ஃபோல்டர் அல்லது துணைஃபோல்டர் ஒன்றினுள் உள்ள அனைத்து ஃபொல்டர்களையும் ஃபைல்களையும் டெக்ஸ்ட் வடிவமாக ப்ரின்ட் செய்யக்கூடிய விதத்தில் தரக்கூடிய ஒரு மென்பொருளாகும். இம் மென்பொருளானது மிகச் சிறிய கொள்ளளவினை கொண்டதாக இருந்தாலும் மிகவும் பயனுள்ள மென்பொருளாகவே இருக்கின்றது.மேலும் இதை நமது கணினியில் நிறுவ வேண்டிய அவசியமும் இருக்காது.நாம் இப்போது இவ்
JR Directory இன் பயன்களை பற்றி சற்று ஆராய்வோம்.உதாரணத்துக்கு நீங்கள் My documentsல் உள்ள Folderகளையும் ஃபைல்களையும் பற்றி விபரங்களை பெற்றுக் கொள்ள வேண்டுமெனில்JR Directory மென்பொருளை Ope செய்து மை டாக்குமென்ட்சை Browse செய்து Start எனும் பட்டனை அழுத்தியதும் அந்த ஃபோல்டரினுள் உள்ள அனைத்து Folderகளையும் மற்றும் ஃபைல்களையும் பற்றிய முழுமையான விவரங்களை Notepad இல் பட்டியலிட்டு காட்டும்.அதாவது ஃபோல்டர்களினதும் ஃபைல்களினதும் Name,Size
Data,Time உட்பட அது எந்த வகையினை சார்ந்தது என்பதையும் டெக்ஸ்ட் வடிவமாக மிகத் தெளிவாக Notepad இல் காட்டும்.இங்கே காணப்படும் Recurse subdirectories அதாவது Sub folders களின் விபரங்களை நமது தேவைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள முடிவதுடன் Folderகளினதும் ஃபைல்களினதும் பெயர்களை Lowercase filename வடிவத்தில் பெற்றுக் கொள்ளவும் முடிகிறது.DOS Modeஇல் ஃபோல்டர்களினதும் ஃபைல்களினதும் பெயர்களானது எட்டு எழுத்துக்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டு பட்டியலிட்டு காட்டப்படும்
என்பதை நீங்கள் அறிவிர்கள்.இங்கே DOS Style filename எனும் option மூலமாக ஃபோல்டர் மற்றும் ஃபைல்களின் பெயர்களை இலகுவாக DOS Filename வடிவத்தில் பெற்றுக் கொள்ள மிடிவது இம் மென்பொருளின் குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிறப்பம்சமாகும்.இங்கே காணப்படும் மற்றொரு Option ஆன Format எனும் Optionஇனின் மூலம் ஃபோல்டர் மற்றும் ஃபைல்களின் கொள்ளளவு பற்றிய விவரத்தை Kilobytes மூலமாகவா அல்லது Bytes மூலமாகவா என்பதனை நமது விருப்பத்திற்கேற்றால் போல தெரிவு செய்யலாம்.
இந்த JR Directoryயில் உங்களுக்கு அவசியமான ஃபோல்டர்கள் மற்றும் ஃபைல்கள் பற்றிய விவரங்களை விரும்பியவாறும் இலகுவாகவும் Text வடிவமாக பெற்று அதை Print செய்து பயனடையலாம் தானே..குறிப்பாக ஒரு சிடியில் காணப்படும் ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்களை பற்றிய விடயங்களை Text Fileஆக மாற்றி சேமித்து அல்லது ப்ரின்ட் செய்து கொண்டால் CD தேவைப்படும் ஒவ்வொரு முறையும் அதனை CD Rom இல் இட்டு அதில் காணப்படும் ஃபைல்களை அலச வேண்டியிராது. ஆனால் இந்த மென்பொருளை
பெற்று பயன்படுத்தும் போது சொல்லித்தந்த IT CORNERஐயும் நினைத்துக் கொள்ளுங்கள்...இந்த இலவச மென்பொருளை பெறுவதற்கான முகவரி http://www.convertjunction.com/download/jdiprint.zip ஆகும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக