19 செப்டம்பர், 2011

ஃபோல்டர்களுக்கு போடலாம் பூட்டு


கணினியில் எங்களுடைய ஆவனங்களை இலகுவான பாவனைக்காக நாங்கள் பிரித்து வைப்பதற்கு எமக்கு ஃபோல்டர்கள் உதவுகின்றன. இந்த ஃபோல்டர்களில் காணப்படுகிற ஆவணங்கள் முக்கியமானவையாகும். எனவே இவற்றை மிகவும் அவதானமாக பாதுகாக்க வேண்டும். இதற்காக நம்மில் பலர் அவற்றை Hidden செய்து வைப்பதுண்டு. சிலர் அவற்றை வேறு பெயர்களில் பாதுகாப்பதும் உண்டு. ஆனால் இவையெல்லாம் சாதாரண யுத்திகள்தான. உங்கள் கணினியை கையாள்கிற இன்னொருவரோ அல்லது வேறு ஏதேனும் வைரஸ் புரோக்கிராம்களோ அவற்றை இலகுவாக அழித்துவிட முடியும் அலல்து திருட முடியும். இதை தடுப்பதற்காகவே சந்தையில் இலவசமாகவும் காசு கொடுத்து பெற வேண்டியவையாகவும் பல மென்பொருட்கள் காணப்படுகிறன. ஆனால் அவையும் சில சமயங்களில் நம் காலை வாரிவிடும். எனவே எங்களுடைய ஆவனங்களை எவ்வாறு பாதுகாப்பது? மற்றவர்களை நம்பாமல் நாமாகவே ஒரு Locker ஐ உருவாக்கினால்..

எந்தவொரு கணினி மொழி அறிவும் இன்றி உங்களாலும் கூட ஒரு பாதுகாப்பான ஃபோல்டர் லொக்கரை உருவாக்க முடியும் என்றால் நம்புவீர்களா?? முடியும். அதனை வெறும் நோட்பேடை வைத்து செய்யலாம். முதலில்
  • கீழே உள்ள கோடிங்கை பிரதி செய்து ஒரு புதிய நோட்பேடை திறந்து அதில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.பின்னர் 
  • நான் Your password here என்று கொடுத்துள்ள பகுதியில் உங்கள் கோப்புக்கான பாஸ்வேர்டை வழங்கி பின்னர் Ctrl+S அழுத்தி சேமிக்க வேண்டும் அப்பொது தோன்றும் Save As மெனுவில் Filename இல் Locker.bat என்று கொடுத்து உங்கள் கணினியின் உங்கள் ஆவணங்கள் இருக்கிற பகுதியில் சேமித்து கொள்ளுங்கள். பின்
  • சேமித்த அந்த ஃபைலை இரட்டை கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.. அப்பொது உங்கள் Locker.bat ஃபைல் உள்ள அதே இடத்தில் Locker என்ற பெயரில் ஒரு வெறுமையான ஃபோல்டர் உருவாகி இருக்கும். இனி உங்கள் ஆவணங்களை அதுனுள் போட்டு பின் மென்பொருளை (Locker.bat) ஐ இரட்டை கிளிக் செய்க
  • அப்போது உங்கள் ஃபைலை பாதுகாக்கவா என்று கேட்டும் அதில் Y என்பதை அழுத்தி என்டர் செய்யவும் இப்பொது அந்த ஃபோல்டர் மறைந்து விடும். பின் தேவையான சந்தர்ப்பத்தில் (Locker.bat) ஐ இரட்டை கிளிக் செய்து உங்கள் பாஸ்வேர்ட்டை வழங்கி ஃபைலை மீள பெறலாம்..ஆனால் நீங்கள் உருவாக்கிய மென்பொருளை பத்திரமாக வையுங்கள்  

9 செப்டம்பர், 2011

இலவசமாய் வலைமனை அமைக்கலாம்..With free domain

1950-ம் ஆண்டிற்கு அண்மையில் தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயனர்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினர். இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள், வரிசைப்படுத்துதல் முறைகள், மற்றும் தரவுப்பொதி நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினர்.
ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider) இணைய தந்தையாக அறியப்படுகிறார். கூட்டிணைக்கப்பட்ட கணினிகளின் சேர்க்கையையே நாம் இணையம் எனக் கூறுகிறோம். அதாவது இணையம் என்பது உலகின் ஒரு மூலையிலுள்ள ஒருவர் கணினி மற்றும்
தொலைபேசி இணைப்பு போன்றவற்றை பயன்படுத்தி மற்றொரு கணினியுடன் தொடர்பினை ஏற்படுத்துதலே இணையம் எனவும் கூறலாம். இணையங்களில் தகவல்களை பெறவும் சொல்லவும் உதவுகின்ற ஊடகங்கள் இணையத்தளங்கள் எனப்படுகிறன. 
இன்றைய நிலையில் உலகெங்குமுள்ள சேவையகங்களில் (Servers) மொத்தமாக 266,848,493 இணையத்தளங்கள் காணப்படுவதாக News of Delhi இணையத்தளம் கூறுகிறது. ஆக இன்றைய காலங்களில் இணையத்தளங்கள் அவசரமும் அவசியமுமான ஒன்றாகி விட்டது. 

 வணிக நிறுவனங்களாலும் தனி மனிதர்களாலும் ஏனைய இணையம் சார்ந்த நிறுவனங்களாலும் இவை உருவாக்கப்படுகிறன. அவை உருவாக்கப்படும் நோக்கத்தை பொறுத்து பல்வேறு வகையாக பிரிக்கப்படுகின்றன. வணிக நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளை விளம்பரப்படுத்தவும் ஏனையவை குறிப்பிட்ட துறை சார்ந்த இற்றைப்படுத்தல்களை சொல்பவையாகவும் தங்களைப் பற்றி மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள 
தனிநபர்களும் இணைய தளங்களை உபயோகிக்கிறனர். ஆனாலும் இவற்றின் மறு பக்கமாக Blogs எனப்படுகிற வலைப்பூக்கள் அல்லது வலைப்பதிவுகள் காணப்படுகிறன. அதாவது தாம் விரும்பும் அறிந்த தெரிந்த ஒரு விடயத்தை சமூகத்தோடு பகிர்ந்து கொள்ள இது பாவிக்கப்படுகிறது. நான் இங்கு சொல்லப்போவது இணையத்தளங்கள் எவ்வாறு இலவசமாக உருவாக்கலாம் என்பது பற்றி மட்டுமே (வலைப்பதிவுகள் அல்ல)

பொதுவாக இணையதளங்களை அமைக்க இணைய மொழிகளான HTML, PHP, ASP.net, JSP.net இப்படியான ஏதாவதொரு மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் அடுத்தது அதனை உங்கள் பெயரில் பதிந்திருக்க வேண்டும். இந்த சேவை பணம் செலுத்தி பெறவேண்டும் இவ்வாறு பல சிக்கல்கள் இவை இல்லாமல் இலகுவாக இணையத்தளம் அமைக்க பல இணையத்தளங்கள் உதவுகின்றன. அவற்றில் சிறந்த 5 தளங்களை 
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Webs
உங்களுக்கு தேவையான இணைய தளங்களை மிகவும் இலகுவான GUI வடிவில் அமைத்துக் கொள்ளலாம். அதோடு Advanced Site builder இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைக்கும் இலவச தளங்கள் www.example.webs.com என்று காணப்படுவதுடன் தேடுபொறிகள் இவற்றை இலகுவாக கண்டுபிடிக்கும் வசதியும் உண்டு www.webs.com


Wix
இந்த தளமும் இலவசமான இணையத்தள வடிவமைப்பு சேவையை வழங்குகிறது. அதிலும் குறிப்பாக ஃளாஷ் சார்ந்த தளங்களை அமைக்க வேண்டும் என விரும்புவர்களுக்கு தேவையான அனைத்து டூல்களையும் iframe உட்பட அனைத்தையும் கொண்டுள்ளது. மற்றும் இதன் பிரதிகூலம் என்னவென்றால் தமிழ் யுனிக்கோட் எழுத்துருக்களை இது ஆதரிக்காது. ஆனால் உங்கள் இணையத்தளங்களை கண்கவரும் விதத்தில் அமைக்கலாம்.
இதன் இணைய முகவரி www.wix.com என்பதாகும்.

Weebly
பொதுவாக இலவசமாக இணையத்தளம் அமைக்க வேண்டுமென்றால் அனைவரும் கைகாட்டுவது இந்த தளத்தைதான். அந்தளவுக்கு மிகவும் பிரபலமானது. இதன் கூடுதல் சிறப்பு இது வலைப்பதிவு சேவையையும் சேர்த்து வழங்குகிறது. www.weebly.com என்பது இதன் முகவரி இது பற்றிய மேலதிக விபரங்களை இந்த காணொளி வழங்கும்



Jimdo 
இதுவும் மிகப் பிரபலமான ஒரு சேவைதான். இந்த தளம் நீங்கள் அதி உயர்ந்த இணைய வசதினளை பெற இங்கே வரும்படி சொல்கிறது..அது ஏன் அதற்க்கு 1000 காரணங்களையும் அது கூறுகிறது. www.jimdo.com 

350 Pages
இதுவும் ஒரு இலவச சேவைதான்..இது உங்கள் வலைப்பக்கத்தில் 350 பக்கங்கள் வரை தயாரிக்க உதவுகிறது. Drag and drop முறையிலான வடிவமைப்பும் காணப்படுகிறது. www.350.com 

இவற்றோடு சேர்த்து நான் மேற் சொன்ன அனைத்து வசதிகளையும் கொண்ட ஏனைய 3 தளங்கள் இவை

www.webnode.com
www.yola.com
www.hpage.com

இலவசமாய் இணையத்தளம் அமைத்தாகி விட்டது. இந்த அத்தனை தளங்களும் நமது டொமைன் பெயரோடு அவர்கள் பெயரையும் ஒட்டிவைத்திருக்கிறதே இதை என்ன செய்வது..? இலவசம் என்றாலே கூடவே ஒரு வில்லங்கம் இருக்கும். இந்த பிரச்சினைக்கு


தீர்வு உங்கள் தளத்தை ஒரு சேர்வரில் பதிவு செய்ய வேண்டும்.. ஆனால் அதற்க்கு பணம் வேண்டுமே..(கூழும் குடிக்க வேண்டும் மீசையிலும் பட கூடாது)  உங்களைப் போன்றவர்களுக்காகவே TK Domain Registration இருக்கிறது. http://www.dot.tk/en/index.html?lang=en தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான பெயரில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.  Have fun

இனியென்ன STOP BROWSING START BUILDING>>>!!

3 செப்டம்பர், 2011

மிரட்டும் கார் பந்தயம் - இம்மாத கணினி விளையாட்டு



விளையாட்டுக்கள் என்றாலே பொதுவாக அனைவருக்கும் ஒரு அலாதி பிரியம் உண்டு. அவரவர் ரசனையை பொறுத்து அது வேறுபடுகிறது. நம்ம ஊர் கபடி தொடங்கி அமெரிக்கன் ஃபுட்பால் வரை நம்மவர்கள் அனைத்தையும் ரசிக்கிறார்கள்....(இப்பொது லேட்டஸ்ட்டாக சிலருக்கு 'மங்காத்தாவும்' பிடிக்குதாம்) இப்படியாக விளையாட்டுக்களுக்கு தடைபோட்டு செல்வது தவிர்க்க முடியாதது. எனவேதான் சாதாரண PSP தொடங்கி கணினி வரை அனைத்திலும் Games என்ற பகுதி..(இது இல்லையென்றால் சிலர் அவற்றை வாங்குவதும் இல்லை..) தவிர்க்க முடியாதது. அதிலும் குறிப்பாக கணினி விளையாட்டுக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்துவிடும் சக்தி கொண்டது. குறைந்தது 1 கணினி விளையாட்டையாவது விளையாட ஒரு கணினி துறைசார்ந்தவரை காணவே முடியாது. இதனால்தான் மாதம் ஒரு புது விளையாட்டை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.

பொதுவாக கணினி விளையாட்டுக்கள் அவற்றின் தன்மையை பொறுத்து Action, Racing, Puzzle, Adventure, Shootong, Sports, Kids, Arcade, Brain teaser, Space இப்படியாக இன்னும் பல வகையாக பிரிக்கப்படுகின்றன. எத்தனை வகையான கணினி விளையாட்டுக்கள் இருந்தாலும் பந்தயங்கள் (Racing) சார்ந்த கணினி விளையாட்டுக்கள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும்.

 நான் சொல்கின்ற இந்த கணினி விளையாட்டும் ஒரு பந்தயம் சார்ந்ததுதான்  அதிலும் கார் பந்தயம் சார்ந்தது. (Car racing) நம்மில் பலர் அறிந்த Need for Speed கணினி விளையாட்டின் மற்றுமொரு பதிப்பாகிய Need for Speed Most wanted என்பதாகும். வழமையான Car racing போலல்லாது மிகவும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


முக்கியமாக காரின் ஒவ்வொரு அசைவும் அதி உயர் 3டி தொழில்நுட்பம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப ட்ரெயிலர் கண்களை அகல வைவக்கிறது. வழமையாக கேம்களுக்கிடையில் வரக்கூடிய Movieகள் கிராஃபிக்ஸ் மூலமே ஆக்கப்பட்டிருக்கும் ஆனால் இந்த விளையாட்டில் அவை நிஜ மனிதர்களை வைத்த படமாக்கப்பட்டிருக்கிறது. Career mode, Challenge mode, Quick racing ஆகிய மோட்கள் கொடுக்கப்படுகின்றன. அதிலும் Career mode இல் பதினைந்து பேருடன் சவால் விட்டு ஜெயிக்க வேண்டும். இவற்றோடு LAN வலையமைப்பின் மூலம் கூட இதனை விளையாடலாம். உங்கள் கார் ஓட்டும் திறமையை பரிசோதிக்க Online play ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது உலகளவில் உள்ள போட்டியாளர்களுடன் மோதலாம்..

இன்னும் சொல்லி கொண்டு போகுமளவுக்கு இதன் சிறப்பியல்புகள் உள்ளன. EA நிறுவனத்தாரின் இந்த வடிவமைப்பு விளையாடுபவர்களுக்கு நிஜமாகவே ஒரு காரினை ஓட்டுகிற அனுபவத்தை அளிக்கிறது... சுருங்கச் சொன்னால் NFS Most wanted மிரட்டுகிறது...இதனை உங்கள் கணினியில் நிறுவ கணினி கொண்டிருக்க வேண்டிய தகைமைகள் கீழே தந்திருக்கிறேன். உங்கள் OS விண்டோஸ:7 64பிட் கொண்டதாக இருந்தால் சிலவேளை நிறுவுவதில் சிக்கல் வரலாம் அல்லது வேறு இயங்குதளங்களிலும் சிக்கல் வந்தால் பின்னுாட்டம் இடுங்கள்... தீர்வு கிடைக்கும். நான் தந்திருக்கிற தரவிறக்க சுட்டிகள் 11 பகுதிகள் காணப்படுகிறன. அனைத்தையும் தரவிறக்கி பின் Winrar கொண்டு Extract செய்து நிறுவுங்கள்...

Minimum System Requirements

OS: Windows XP or 2000
CPU: 1.4 GHz or faster
RAM: 256 MB or more
Disc Drive: 8x or faster CD/DVD drive
Hard Drive: 3 GB or more free space
Video: DirectX 9.0c compatible (see right)
Sound: DirectX 9.0c compatible
Input: Keyboard, mouse, or USB Steering Wheel/Gamepad
Video card with 32 MB or more memory and one of these chipsets is required: ATI Radeon 7500 or greater; ATI Radeon Xpress 200; NVIDIA GeForce2 MX/GTS or greater; Intel 950/i915g; S3 GammaChrome S18 Pro
Multiplayer requires 1 set of discs per PC and a broadband (Cable, DSL, or faster) connection.
Internet or LAN (2-4 players)

தரவிறக்க சுட்டிகள்
                                     

....திரட்டிகளில் ஓட்டளித்து பதிவை பிரபலமாகக்குங்கள்...


1 செப்டம்பர், 2011

அறிந்ததும் அறியாததும்..2

இந்த மாதமும் 'அறிந்ததும் அறியாததும்' பகுதியில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்து நீங்கள் அறிந்த ஒரு விடயம் தொடர்பாக அறியாத பல விடயங்களை சொல்லி தருகிற பகுதியாக வந்திருக்கிறது. சென்ற மாதம் 1ம் திகதி Notepad மென்பொருளில் நீங்கள் அறியாத ஒரு பகுதி பற்றி சொல்லியிருந்தேன்.
இணைப்பு 

இந்த மாதம் நான் சொல்லப்போவது இன்றைய நாட்களில் பலரின் கணினிகளில் காணப்படுகிற ஒரு இயங்குதளமென்றால் அது நிச்சயமாக விண்டோஸ் 7 தான். இதற்கு காரணம் இலகுபடுத்தப்பட்ட அதன் பயனாளர் இடைமுகம் (User interface) மட்டுமன்றி அதனோடு இணைந்த பல புதிய சேவைகளும் காரணம்..(விண்டோஸ் 7 பற்றி நான் விரிவாக குறிப்பிடவில்லை) நம்மில் பலர் தினமும் இந்த இயங்கு முறைமையில் (Operating System) பல வேலைகளை செய்கிற போதிலும் அந்த வேலைகளுக்கான குறுக்கு விசைகள் (Shortcut keys) பற்றி அறிந்திருப்பதில்லை..நீங்கள் செய்கிற வேலைகளை இலகுவாக முடிக்க இவை உதவி செய்கிறன. இதனால் உங்கள் நேரமும் மீதமாகிறது.


குறுக்குவிசைகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகிறன?


பொதுவாக மெனுக்கள் அல்லது Command கள் மூலமாக நீங்கள் செய்கின்ற வேலையை இலகுவாக கீபோர்ட்டில் உள்ள கீகளை கொண்டு செய்தலே Shortcut key எனப்படுகிறது. பொதுவாக இந்த குறுக்கு விசைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட கீகளின் சேர்ககையினாலேயே உருவாகும். இவை சுட்டி (Mouse) மூலம் செய்கின்ற வேலைகளை செய்கிறவையாக இருக்கும்.

 விண்டோஸ் 7 இயங்கு முறைமையில் இதனுடன் சார்ந்த புரோக்கிராம்களுக்கு Alt விசையை அழுத்துவதன் மூலம் அந்த புரோக்கிராம்களுக்கான இலகுவான குறுக்கு விசைகளை திரையில் காணலாம்.

இனி பொதுவான  குறுக்கு விசைகளை பார்ப்போம்.

F1 -                               எந்த செய்நிரலுக்குமான உதவி இடைமுகத்தை பெறுவதற்கு
Ctrl+C or Ctrl+ insert -  தெரிவு செய்யப்பட்ட விடயத்தை பிரதி பண்ண (Copy)
Ctrl+X -                        தெரிவு செய்யப்பட்ட விடயத்தை வெட்ட (Cut)
Ctrl+V or Shift+ insert - தெரிவு செய்யப்பட்ட விடயத்தை ஒட்ட (Paste)
Ctrl+Z -                         செய்த செய்கையை தவிர்க்க (Undo)
Ctrl+Y -                         மீண்டும் அதே செய்கையை செய்ய (Redo)
Delete or Ctrl+D -         தெரிவு செய்யப்பட்ட விடயத்தை நகர்த்த (move) அல்லது
                                     Recyclebin  இற்கு அனுப்ப
Shift+Delete -               தெரிவு செய்யப்பட்ட விடயம் Recyclebinஇற்கு செல்லாமல்
                                    நேரடியாக அழிப்பதற்க்கு
F2 -                              தெரிவு செய்யப்பட்டதினை Rename செய்ய
Ctrl+Right arrow -         Cursor ஐ அடுத்த வார்த்தையின் ஆரம்பத்திற்கு கொண்டு
                                     செல்ல
Ctrl+Left arrow -           Cursor ஐ முந்தைய வார்த்தையின் ஆரம்பத்திற்கு கொண்டு
                                     செல்ல        
Ctrl+Down arrow -        Cursor ஐ அடுத்த பந்தியின் ஆரம்பத்திற்கு கொண்டு
                                     செல்ல
Ctrl+Up arrow -            Cursor ஐ முந்தைய பந்தியின் ஆரம்பத்திற்கு கொண்டு
                                     செல்ல     
Ctrl+Shift+Arrow keys - வார்த்தைகளை கட்டம் கட்டமாக தேர்ந்தெடுக்க
Shift with an any arrow key - ஒரு விண்டோவிலோ, டெக்ஸ்டாப்பிலோ அல்லது ஒரு ஆவணத்திலோ உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட பகுதிகளை தெரிவு செய்ய
F3 -                               ஒரு ஃபைல் அல்லது ஃபோல்டரை தேட
Alt+Enter -                     தேர்வு செய்யப்பட்ட விடயத்தின் Property யினை காண
Alt+F4 -                         தற்போது இயங்கி கொண்டிருக்கிற ஒரு புரோக்கிராமை
                                      நிறுத்த
Ctrl+ Esc -                     ஸ்டார்ட் மெனுவை திறக்க
Windows logo key Picture of Windows logo key+Pause      கணினியின் Properties ஐ காண
Windows logo key Picture of Windows logo key+R             Run Dialog boxஐ திறக்க




இதை தவிரவும் இன்னும் அதிகமான குறுக்கு விசைகளை காண http://windows.microsoft.com/en-US/windows7/Keyboard-shortcuts  இந்த முகவரியை காணவும்.



              








Share With your friends