1 ஆகஸ்ட், 2011

Notepad-அறிந்ததும் அறியாததும்

மீண்டும் ஒரு பதிவினூடாக உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி. இம்முறை இந்தப் பதிவானது சற்று வித்தியாசமாக அமைந்திருக்கிறது..அதாவது "அறிந்ததும் அறியாததும்" என்று இம்மாதம்
முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிற சிறப்பு பகுதி. அதாவது இது ஒவ்வொரு மாதத்தின் 1ம் திகதியிலும் வெளியிடப்படும்.இதில் கணினி அல்லது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏதாவது ஒரு விடயம் பற்றி நீங்கள் "அறிந்து வைத்துள்ள" சில விஷயங்களில் நீங்கள் "அறியாத" பல விஷயங்களை சொல்லி தருகின்ற பகுதியாக இது அமையப்போகிறது என்பது பற்றி முன்னரே எனது வலைப்பதிவினூடாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இன்று நாங்கள் முதலில் இப்பகுதியில் பார்க்கப்போகிற விடயம் நம்மில் பலபேர் எமது விண்டோஸ் இயங்குதளங்களுடன் இலவசமாக இணைந்திருக்கும் Notepad பற்றி அறிந்திருப்போம். இது சில எளிமையான Text editing வேலைகளுக்கும் இணைய அடிப்படையிலான HTML மொழிமூலத்தினையும் ஒருங்கிணைக்கிற (Compile) ஒரு மென்பொருள் என்பதுவும் தெரிந்திருக்கும். என்றாலும் இது அனைத்தையும் தாண்டி இந்த Notepadஇனை ஒரு Programming Toolஆகவும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா??ஆம் அதைப்பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம்

Programming என்பது கணினி துறையை நெருங்கிய பலரின் ஒரு கனவு என்றே சொல்லலாம்..சுயமாக ஒரு கணினி செய்நிரலை எழுதிவிடவேண்டும் என்பது தகவல்தொழில்நுட்பத்தை நேசிப்பவர்களின் ஒரு கனவு. அதிலும் வைரஸ் செய்நிரல்கள் எழுத வேண்டும் என சிலர் ஆசைப்படுவதும் தெரியும் எனவே அதனை நிறைவேற்ற இந்த பதிவு சற்று உதவி செய்யும்.

ஆம் Notepad மூலம் சாதாரண கணினி செய்நிரல்கள் தொடங்கி கணிணியையே செயலிழக்க செய்யும் அபாயமான வைரஸ்கள் வரை உருவாக்கலாம். அதைப்பற்றியே இங்கு பார்ப்போம்..

01. முதலில் நாம் உங்களுடைய நண்பருடைய CD Driveஇனை தொடர்ச்சியாக Eject செய்வதற்கான செய்நிரலைப் பார்ப்போம் முதலில் கீழுள்ள Codingஐ காப்பி செய்து Notepadஇல்
Paste செய்து கொள்ளுங்கள்
 


பின் அதனை Anything.VBS என Save செய்து கொள்ளுங்கள்..அதனை இதனை திறந்தால் உங்கள் CD Drive இனை தொடர்ச்சியாக Ejectசெய்வதும் உள்ளெடுப்பதுமாக இருக்கும்.. என்ன செய்தும் இதனை நிறுத்த முடியாது. ரீஸ்டார்ட் செய்வதே ஒரே வழி. கடைசியில் CD Drive பழுதடைவது நிச்சயம்.

02. அடுத்து உங்கள் கீபோர்ட்டில் உள்ள CAPS lock கீயை தொடர்ந்து இயங்க மற்றும் அணைக்க செய்யும் செய்நிரல்..

  


பின் அதனை Anythingcapslock.VBS என Save செய்து கொள்ளுங்கள். பின் இதனை திறந்தால் உங்கள் CAPS lock கீயை தொடர்ந்து இயங்க மற்றும் அணைக்க ஆரம்பிக்கும்.

03.உங்கள் கணினியை திடீரென Shutdown செய்ய..


இதனை Anything.bat என சேவ் செய்து அதனை திறந்தீர்களானால் உங்களுக்கு I don't like you என்ற செய்தியை காண்பித்து உங்கள் கணிணியை Shutdown செய்யும்.

04. அடுத்து பார்க்கப்போவது கொஞ்சம் சவாரஸ்யமான செய்நிரல் அதாவது Hello! How are you Im good ,Thanks என்ற வார்த்தையை மெதுவாக பல Notepad விண்டோக்களில் திறந்து உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது..

  

...பதிவு பிடித்திருந்தால் இன்ட்லி மற்றும் தமிழ் 10 திரட்டிகளில் வாக்களித்து பதிவை பரபலமாக்குங்கள்...





கருத்துகள் இல்லை:

Share With your friends