25 ஜூலை, 2011

தரவிறக்கத்திற்கென தனியாக ஒரு மென்பொருள் FlashGet



மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு மற்றொரு பதிவினூடாக இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி..இன்றைய இந்த பதிவில் நான் உங்களோடு ஒரு மென்பொருள் பற்றிய சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
என நினைக்கின்றேன்.அதாவது நான் தலைப்பில் சொன்னபடி நான் கூறப்போவது Flashget என்ற மென்பொருள் பற்றிதான்..இம்மென்பொருளானது இணையஅடிப்படையிலான தரவிறக்க பணிகளை செய்வதற்கான
ஒரு இலவச மென்பொருள் (Freeware) ஆகும். இதனை பயன்படுத்துவதன் அனுகூலங்கள் சிலவற்றையும் இதனால் எவ்வாறு இணைய தரவிறக்க வேலைகளை இலகுவாக்குவது பற்றியும் சில குறிப்புகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். நம்மில் பலருக்கு இன்றைய காலங்களில் தரவிறக்கம் என்பது இணையத்தை பொறுத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

எனவே இவ்வாறு தறவிறக்கம் செய்ய பலரும் பலவிதமான மென்பொருள்களை பயன்படுத்துவதை காணகிடைக்கிறது..ஆனாலும் நான் சொல்ல போகும் இந்த மென்பொருளானது சிலருக்கு அறிமுகமானதாக இருக்கலாம்..(அப்படியானால் வேற பதிவ பாருங்க.)
அறியாதவர்களுக்காக சொல்கிறேன்..
  • முதலில் இது முற்றிலும் இலவசமான ஒரு மென்பொருள். அடுத்து இது சிறிய கொள்ளளவு மட்டுமே கொண்டது.
  • இதை நிறுவிய (install) பிறகு முதலில் இதனை திறந்து (Open) கொள்ளுங்கள்..அப்போது உங்கள் தரவிறக்கங்கள் சேமிக்கப்பட வேண்டிய வழமையான கோப்புறையை (Default folder) தேர்வு செய்ய வேணடும்..இயல்பாக சி ட்ரைவில் Downloads என்ற கோப்புறை காணப்படும்.இதை உங்கள் விருப்பபடி மாற்றிகொள்ளுங்கள்
  • இம் மென்பொருளில் நீங்கள் பதிவிறக்கும் கோப்புகள் அதன் தன்மை அடிப்படையில் Movie, Software, Video, Music, Torrent என பிரிக்கப்பட்டிருக்கிறது..இது ஃபைல்களை தேட உதவுகிறது..
  • அடுத்து ஏனைய Downlaod Manager களில் இல்லாத சிறப்பம்சம் இது Peer 2 Peer எனப்படும் Torrent வகை தரவிறக்கங்களையும் ஆதரிக்கிறது...
  • வேகமான தரவிநக்கம்..Up to 30 kp/s
  • இதனோடு சேர்த்து வழமையான பண்புகள் (Start in system start up,Downlaod Log ,..etc)

கீழே நான் கொடுத்துள்ள தரவிறக்க சுட்டியில் இருந்து தறவிறக்கி பயன்படுத்துங்கள்..அப்படியே கொஞ்சம் பின்னூட்டங்களும் எழுதுங்கள்..இந்த நாள் சிறக்க வாழ்த்துக்கள்..மற்றுமொரு பதிவில் இணைவோம்..



...திரட்டிகளில் வாக்களித்து பதிவை பிரபலமாக்குங்கள்...


Share With your friends