புகைப்படங்கள் என்பது மனிதர்களின் வாழ்வில் அன்றும், இன்றும், என்றும் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் என்றே சொல்லலாம். மனிதனின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட ஒரு அம்சமாக இந்த
புகைப்படங்கள் காணப்படுகின்றன. எமது வாழ்க்கையை, வளர்ச்சியை மீட்டிப்பார்க்க புகைப்படங்கள் பெரிதும் துணை புரிகின்றன. வாழ்க்கையில் சந்திக்கின்ற ஆயிரம் தருணங்களில் என்றும் எப்போதும்
நம்மோடு இருக்க வேண்டும் என்று சில தருணங்களில் தோன்றுவது உண்டு. அந்த நேரங்களில் விட்டுப்போன பழைய நினைவுகளை அதே யதார்த்ததுடன் சொல்லும் சக்தியும் புகைப்படங்களுக்கு
உண்டு. சுருங்கச் சொன்னால் இன்றைய புகைப்படங்களும் நாளைய வரலாறு தான். வாழ்வின் மறக்க முடியாத, மறக்க கூடாத நிமிடங்கள் எப்பொதும் எப்போதும் எம்மோடு இருக்க வேண்டும் என நினைக்கிற பல
புகைப்படங்கள் காலத்தால் அழியக்கூடியன. எனவே இவற்றை பாதுகாக்க நம்மில் பல பேர் அவற்றை மின் வடிவத்திற்கு மாற்றி கணினிகளில் சேமித்து வைத்திருப்போம்.
ஆனால் அவ்வாறு சேமிப்பது ஒரு தற்காலிக பாதுகாப்புதான். அதுமட்டுமன்றி நீங்கள் இரசித்த புகைப்படங்களை உங்கள் உஙவுகள், நண்பர்களுக்கும் காட்டி மகிழ்வதில் ஒரு அலாதி பிரியம் எல்லோருக்குமே உண்டு.
இவ்வாறான உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கென்றே இணையத்தில் பல இணையத்தளங்கள் வலம்வருகின்றன. இவற்றில் சில இலவசமானவை, சில பணம் செலுத்தி பெறவேண்டியவை
எனவே சில முக்கிய நிழற்பட பகிர்வு (Photo Sharing) தளங்களை அவற்றின் சிறப்பியல்புகளோடு தருகிறேன். உங்களுக்கு பொருத்தமானதை தெரிவு செய்து இன்றே நிழற்பட சேமிப்பை
தொடங்குங்கள்..
முதலில் நான் சொல்லும் இந்த இணையத்தளமானது முற்றிலும் இலவசமான சேவையை வழங்குகிறது. இது நாம் யாவரும் அறிந்த கூகிள் தேடு பொறி நிறுவனத்தின் ஒரு வெளியீடாகும். இதில்
நீங்கள் உங்கள் ஜீமெயில் கணக்கை மட்டுமே வைத்து உள்நுழையலாம். உங்கள் விருப்பபடி படங்களை தரவேற்றலாம். ஆனால் தரவேற்றம் தொடர்பில் கூகிள் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறது அதாவது உங்களுக்கு
இலவசமாக படங்களை தரவேற்ற 1GB கொள்ளளவு மாத்திரமே வழங்கப்படுகிறது. மேலும் ஒன்லைனிலேயே படங்களை எடிட் செய்ய Picnik இணையத்தளம் இதில் உட்பொதிக்கப்பட்டு (Inbuild)
காணப்படுகிறது. அதுமட்டுமன்றி உங்கள் இடத்தை கூட இதில் Tag செய்யலாம். வழமையாக நாம் எதிர்பார்க்கும் Privacy இதில் கொஞ்சம் கூடுதலாகவே கிடைக்கிறது. இதன் இணைய முகவரி http://picasaweb.google.com/ என்பதாகும்.
அடுத்து நான் சொல்கின்ற ஃப்ளிக்கர் இணையத்தளமும் ஒரு இலவச சேவைதான்.. ஆனால் இது ஆரம்பத்தில் Ludicorp தம்பதிகளால் உருவாக்கப்பட்டு பின் பிரபல Yahoo நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டது.அடிப்படையான அனைத்து
வசதிகளோடும் மேலும் இந்த பிரபலமான தளமானது, வலைப்பதிவாளர்களுக்கு தங்கள் ஒளிப்படங்களை சேமித்து, அதனை தங்கள் வலைப்பதிவுகளில் காட்சிப்படுத்த ஏதுவான வகையில் சாத்தியங்களையும் வழங்குகிறது.இந்த சேவைக்கு, நவீன நகர்பேசிகளான
ஐஃபோன், பிளாக்பெர்ரி மற்றும் விண்டோஸ் ஃபோன் ஆகியவற்றிலிருந்து நேரடியாக ஒளிப்படங்களையும், நிகழ்படங்களையும் குறித்த தளத்தின் உத்தியோகபூர்வ செய்நிரல்களைப் பயன்படுத்தி நேரடியாக மேலேற்றவும் முடியும். மற்றும் உங்கள் யாஹூ கணக்கை
பணன்படுத்தி உள் நுழையலாம். இதன் வலைமனை முகவரி
www.flickr.com
www.flickr.com
இதுவும் இலவச சேவை வழங்குனர்தான் ஆனால் இதில் கட்டாயம் கணக்கு உருவாக்க வேண்டும். வழமையான சிறப்பம்சங்களுடன் இது உங்களுக்கு தரவேற்றம் தொடர்பில் எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை Unlimite Upload Spaceஐ வழங்குகிறது.
இது இலவசமான சேவை. மற்றும் இது பெரும்பாலும் இணைய தள நடத்துனர்களுக்கான சேவையையே வழங்குகின்றது. அதாவது படங்களுக்கான URL ஐ இது வழங்குகிறது. இதன் மூலம் வேறு தளங்களில் படங்களை காட்சிப்படுத்தவும் முடியும். இதன் முகவரி www.tinypic.com