2 பிப்ரவரி, 2011

இணையஉலாவல் (Web browsing) வேகத்தை துரிதப்படுத்த...


நீங்கள் சர்வதேச வலைப்பின்னலில் உள்ள பல்வேறு பக்கங்களில் அன்றாடம் உலாவரும் போதெல்லாம் அா்ாக்கங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தற்காலிக கோவைகள் (Temporary files) உங்கள் கணினியில் தற்காலிகமாக சேமிக்கப்படும்.இதன் நோக்கம் மீண்டும் இன்னோர் நேரம் நீங்கள் வலைப்பின்னலில் உலாவர எத்தனிக்கும் போது மிக விரைவாக முன்னர் உலாவிய பக்கங்களுக்கு பிரவேசிக்க வழியமைப்பதற்காகும்..ஆனால் உண்மையில் இந்த வசதியானது இணைய உலகில் அகல்கற்றை (Broadband) தொழில்நுட்பம் அறிமுகமாக முன்னர் இணைய இணைப்பு வேகம் குறைவானது என்பதால் பயனர்களின் வேலைகளை இலகுவாக்கவே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் இந்த நவீன யுகத்தில் அதாவது செக்கனுக்கு 21மெகாபைட் வேகம் கொண்ட இணையவசதி உள்ள இந்த நாட்களில் தேவையற்றது.ஆனாலும் இந்த செயற்பாடானது பெரும்பாலும் Interner cafe களில் பெரிதும் அவதானிக்கப்பட கூடியதொன்றாகும்.அதாவது நீங்கள் வலைப்பின்னலை திறந்தவுடன் நீங்கள் பிரவேசிக்காத உங்களுக்கு சம்பந்தமில்லாத வேறு சில தளங்கள் தொடக்கத்தில் தன்னியல்பாக வருவதை அவதானிக்கலாம்.
இதற்கு காரணம் குறிப்பிட்ட வலைப்பின்னலை உங்களுக்கு முன்னர் வேரொருவர் பாவி்த்தமையே இதற்கு காரணமாகும்.மேலும் இது உங்கள் வீட்டுகணினிகளில் இடம்பெறுவதால் உங்கள் கணினியின் நினைவகம் விரயமாகவும் கூடும்.இதனை தவிர்க்க என்ன செய்யலாம்..
Mozilla firefox பயன்படுத்துவோர்.....
Toolsமெனுவிற்கு சென்று அங்கு Clar recent history என்பதை கிளிக் செய்யவும்.
Google chrome பயன்படுத்துவோர்.....
Settingsசென்று History கிளிக் செய்யவும்.அல்லது Ctrl+H அழுத்தி பெறப்படும் மெனுவில் Clear items என்பதை சொடு்ககி அழிக்கவும்


Share With your friends