6 பிப்ரவரி, 2011

Temporary Fileகளை நீக்க பல வழிகள்..


டெம்பரரி ஃபைல்கள் அல்லது tmp files என அழைக்கப்படுபவை நீங்கள் கணினியில் ஒரு ஃபைலையோ அல்லது மென்பொருளையோ பயன்படுத்தும் போது தாமாகவே உருவாகும்.இவை எந்தவித வைரஸ்களும் அல்ல. எனவே நீங்கள் Anti-virusகொண்டு Tem file களை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு டெம்பரரி ஃபைலும் .temp` என்ற குறியை ஃபைலின் பெயரோடு இணைத்திருக்கும்.சான்றாக நீங்கள் ஏதாவது வேர்ட்(Ms-Word) ஃபைலை பயன்படுத்தும் போது ஃபைலானது `IT CORNER.tmp போன்ற பெயரில் உருவாகும்.` குறியை வைத்து குறிப்பிட்ட ஃபைலானது Temporary ஃபைல் என்று அறிந்துகொள்ளலாம்.பொதுவாகவே tmp ஃபைல்கள் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் இடத்தை விணாக்குபவைகளாகும். எனவே இவற்றை குறிப்பிட்ட கால கட்டங்களில் அழித்துவிடுவது நல்லது .tmp ஃபைல்களை நீங்களாகவோ அல்லது ஏதாவது டூலை கொண்டோ அழிக்கலாம்.

வழிமுறை 01: 
Disk defragmenter பயன்படுத்தினால் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் வேண்டாத ஃபைல்கள் குவிந்துள்ள இடத்தினை மீட்கலாம்.Disk defregment பயன்படுத்துவதன் மூலம் tmp ஃபைல்களையும் அழிக்க முடியும்.

வழிமுறை 02:
My computer Iconஐ திறந்து C Driveஇனுள் உள்ள Windows Folderஐ திறந்து அதனுள் உள்ள Temp ஃபோல்டரை திறந்து அதனுள் உள்ள ஃபைல்களை அழித்து விடுங்கள்.

வழிமுறை 03:
Start menu--Programs--Accessories--System Tools வரை Browse செய்யுங்கள் அங்கு Maintenance Wizard Option ஐ தேர்வு செய்து டெம்பரரி ஃபைல்களை அழிக்கலாம்.

வழிமுறை 04:
அல்லது Run இற்கு சென்று (Windows7 பாவனையாளராக இருந்தால் Search option இல்) .tmp என தேடி அழிக்கலாம்.இந்த வழிகள் ஒன்றும் பிடிக்க வில்லையென்றால் Tmp ஃபைல்களை அழிக்க நீங்களே எளிய ஒரு Uttility உருவாக்கலாம்,Notepad ஐ திறந்து

C:>copy com a.bat
del/f/s/1 *.*tmp

என டைப் செய்து IT CORNER.bat என்ற பெயரில் டெக்ஸ்டாப்பில் Save செய்து கொள்ளுங்கள். இனி tmp ஃபைல்கள் உருவாகும் போதெல்லாம் இதனை இரட்டைகிளிக் செய்து ஃபைல்களை அழிக்கலாம். ஆனால் கணினிமென்பொருள் தேர்ச்சிபெற்றவருடன் இந்த செய்முறைகளை பரிட்சித்து பார்க்கவும்.

...மறக்காமல் திரட்டிகளில் ஓட்டளித்து இந்த பதிவை பயனடைய செய்யுங்கள்...

Share With your friends