1 ஜனவரி, 2011

CMOS-ஒரு பார்வை...(பகுதி-01)

IT CORNER இன் வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்:எமது வலைப்பதிவை தெளிவான முறையிலும் தடங்கல் இன்றியும் காண Google chrome இணைய வலைமேலோடியை (Browser) பயன்படுத்தவும்

கணினியின் Motherboard இல் காணப்படும் நினைவகக் கூறுகளில் ஒரு பகுதியாக அமைப்பு நினைவகத்தை கருதலாம்.இந்த நினைவகமானது குறைந்தளவில் மின்வலுவை பயன்படுத்தும் CMOS சில்லுகளின் மூலமே உருவாக்கம் பெற்றுள்ளது.CMOS என்பதன் விரிவாக்கம் Complementary Metel Oxide Silicon என்றவாறு அமையும்.CMOS Chip இற்கு கணினியின் மின் இணைப்புடன் தொடர்பின்றி தொடர்ச்சியாக பற்றரி மூலம் மின்வலு வழங்கப்படும்.இந்த மின்வலுவானது Motherboard இல் இணைக்கப்பட்டுள்ள சிறிய பற்றரி மூலம் பொதுவாக வழங்கப்படும்.இந்த சிறிய பற்றரி மூலம் பொதுவாக வழங்கப்படும்.இந்தச் சிறிய பற்றரி சுமார் ஐந்து வருடங்களுக்கு மின்வலுவை வழங்கும் திறனைக் கொண்டுள்ள போதும் மூன்று வருடங்களுக்கு மேலாக கணினியில் குறித்த பற்றரி பாவிக்கப்பட்டால் அதனை மாற்றுவது பொருத்தமானதாகும்.

CMOS ஆனது கணினி பற்றிய அடிப்படை தகவல்களான கணினியில் குறித்த பற்றரி பாவிக்கப்பட்டால் அதனை மாற்றுவது பொருத்தமானதாகும்.CMOS ஆனது கணினி பற்றிய அடிப்படைத் தகவல்களான கணினியில் இணைக்கப்பட்டுள்ள வன்தட்டுக்களின் வகை,எண்ணிக்கை,நினைவக அளவு,நினைவக அமைப்பு,கணினியின் நேரம்,திகதி மற்றும் வன்பொருள் அமைப்புக்கள் ஆகியவற்றை சேமித்து வைத்திருக்கும்.இந்த Settingsஐ கைமுறையாகவோ (Manual) அல்லது தன்னியக்கமாகவோ மாற்றமுறச் செய்ய முடியும்.CMOS தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும்Chipகள் மின் வலுவை மிகவும் வினைத்திறனாக குறைந்தளவில் பாவிப்பது மிகப் பெரிய அனுகூலமாகும்.கணினிகள் உருவாக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் இந்தத் தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை.இதற்கு இத் தொழில்நுட்பம் அப்போதைய நிலையில் மிகவும் உயர் செலவுடையதாக காணப்பட்டதே காரணமாகும்.

பின்னர் IBM நிறுவனத்தால் இது எல்லா கணினிகளிலும் சேர்க்கப்பட்டது.CMOS Chip மற்றும் அதனோடு இணைந்த பற்றரி ஆகிய இரண்டையும் சேர்த்து "PC's CMOS" என அழைக்கப்பட்டது.ஆனாலும் இந்தப் பெயரும் நீண்ட நாட்களுக்கு நிலைக்க வாய்ப்பேற்படவில்லை.வேறு நிறுவனங்களாலும் உற்பத்தி செய்யப்பட்ட கணினிகளில் இந்த Chip மற்றும்
அதனோடு சேர்ந்தால் போல் பற்றரியும் காணப்பட்டதால் இப்பெயர் வழக்கிலிருந்து ஒழிந்தது.CMOS இன் Settings ஐ மாற்ற இயலுமா?? இதற்கான பதிலை ஆராயும் வரை காத்திருங்கள்...பகுதி 02இல் சந்திப்போம்...


Share With your friends