21 ஜூலை, 2010

இம் மாத மென்பொருள்-Skype

இன்றைய நவீன காலகட்டத்தில் மனித உறவுகளுக்கிடையேயான தொடர்புகள் அனைத்தும் தொழில்நுட்பமயமாகி வருகின்ற வேளை தொலைபேசி இணைப்புக்களை கடந்து இன்று இணைய தொலைபேசி அழைப்புக்கள் என்பது பிரபல்யமடைந்து வருகிறது.செலவு குறைவாகவும் இலகுவானதாகவும் காணப்படுவதே இதற்கான காரணமாகும்.எனவே இன்று இணையப்பயனார்களால் பெரிதும்
பேசப்படும் சொல் ஸ்கைப் என்பதுதான.அதிவேக இணைய இணைப்பு இருந்தால் உலகின் எந்த மூலையில் உள்ள ஒருவருடனும் முகத்திற்கு முகம் பார்த்து நேரடியாக தொடர்பாடலாம் என்பதை சாத்தியமாக்கிய தொழில்நுட்பம்தான் ஸ்கைப்.ஆகவே பலர் இன்று ஸ்கைப்பை அறிந்திருக்கிறார்கள்.ஆனால் சிலர் அறியவில்லை.எனவே Skypeஐ பற்றி முழுமையான விளக்கத்தினை தர
விழைகின்றோம்.
Skype என்பது இன்றுவரை 3பதிப்புக்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.அதில் நான் இங்கு குறிப்பிடப்போவது Skype Beta.(இதனை இலவசமாக பதிவிறக்க இணைப்பினை கட்டுரை முடிவில் காண்க) இம் மென்பொருளை நிறுவிய பின்னர் SignUp ஆகுவதற்கான படிவம் தோன்றும்.இதில் நீங்கள் ஏற்கனவே ஸ்கைப் கணக்கினை கொண்டிருந்தால் SignIn கட்டளையை பயன்படுத்தி
உள்நுழைக.இல்லையெனில் படிவத்தினை நிரப்பி செல்லுபடியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்து உங்கள் கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்.இப்போது உங்கள் கணக்கு திறக்கப்பட்டுவிட்டது.இனி திரையின் வலது மூலையிலுள்ள .Personalize பயன்படுத்தி உங்களது தனிப்பட்ட விடயங்களையும் உங்கள் photoவையும் மேலேற்றுங்கள்.உங்கள் Profileக்கு கீழே காணப்படும் பகுதி Contact
List என அழைக்கப்படும்.இதற்க்குள் உங்கள் நண்பரை நீங்கள் Add செய்ய வேண்டும்.Add பட்டனை அழுத்தி New contact என்பதை தேர்ந்தெடுத்து வரும் மெனுவில் உங்கள் நண்பரின் SkypeIDஐ தட்டச்சு செய்து அவரை நண்பராக இணைக்கவும்.பின்னர் அவரின் நிலைப்பாடு Online,Do Not disturb,Away,Invisible,Offline போன்றவையாகவும் காணப்படும்.
இதில் Online என்ற நிலையில் மட்டுமே நீங்கள் அவரை தொடர்புகொள்ள முடியும்.



இம் மென்பொருளை பெற.... இங்கே அழுத்துக!! 

...பதிவு பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களியுங்கள்...

7 ஜூலை, 2010

ஆவணங்களை Onlineல் பாதுகாக்க..Scribd


ஸ்க்ரைப் என்ற ஆங்கில சொல் உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்த சொல்லில் கடைசி எழுத்தான e என்பதை எடுத்துவிட்டு d என்ற எழுத்தை நுழைத்துவிட்டால் Scribd என்று அமையும்.இதைப்பயன்படுத்தி நீங்கள் உங்கள் மாக்குமென்ட்களை ஆன்லைனில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
உங்கள் டாக்குமென்ட் பிடிஎஃப் ஃபைலாக இருக்கலாம்,அல்லது வேர்ட் டாக்குமென்டாகவோ,எக்சல் ப்ரட்ஷீட்டாகவே,பவர்பாயின்ட் ப்ரசன்டேஷனாகவொ இருக்கலாம்.இவையல்லாமல் வெறும் எழுத்துக்களை கொண்ட Notepad ஃபைலாக இருந்தாலும் அதையும் நீங்கள் சேமிக்கலாம்.பிறகு நீங்கள் அந்த
கோப்புகளை விரும்பிய நேரத்தில் விரும்பியவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.Onlineல் ஃபைலகளை சேமிக்க பல இணையத்தளங்கள் உள்ளன.ஆனால் அவற்றில் இல்லாத சிறப்பம்சம் Scribdல் உள்ளது என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.ஏனைய சேவைகள் raw டாக்குமென்ட்களை சேமிக்கும்.ஆனால் Scribd தானாகவே உங்கள் ஃபைலை பல்வேறு
ஃபார்மட்டுக்களுக்கு மாற்றும். அதாவது பிடிஎஃப் அல்லது ஃளாஷ் ஃபைல்களாக மாற்றும்.இப்படி செய்வதனால் அவற்றை எளிதாக வெப்பக்கங்களிலும் வலைப்பூக்களிலும்(Blog) நுழைத்து விடலாம்.மேலும் மற்றொரு வசதி உள்ளது.அதாவது உங்களிடம் உள்ள இ-புக்/எம்பி3 ப்ளேயர் ஆக மாற்றிவிடும்.ஆகவே நீங்கள் பயணம் மேற்கொண்டிருந்தாலும் உங்களிடம் ஐபாடோ
அல்லது வேறு ஏதாவது எம்பி3 ப்ளயரோ இருந்தாலும் போதும்.Scribdல் உங்கள் டாக்குமென்ட்களை அப்லோட் செய்வதற்கு உங்கள் டாக்குமென்டுகள் ஹார்ட்ட்ரைவில் இருந்தால் வெப் ப்ரவ்சரை அடிப்படையாக கொண்ட அப்லோட் டூலை பயன்படுத்தி உங்கள் கோப்பை Scribdக்குள் போட்டு விடலாம்.மற்றொரு வழியும் உள்ளது.மற்றொரு வழியும் உள்ளது இதை Slurping
என்று கூறுவார்கள்.நீங்கள் கூகிளில் ஏதோ ஒரு சேதியை தேடிக்கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு ஒரு பிடிஎஃப் டாக்குமென்ட் கிடைக்கிறது.அந்த டாக்குமென்டை உஙகள் ஹார்ட் ட்ரைவிற்கு டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.நேரடியாகவே Scribdக்கு அனுப்பி விடலாம்.இதற்கு இலவசமாக கிடைக்க கூடிய Firefox எக்ஸடென்சன் உள்ளது.அதற்கு Slurp to
scribd என்று பெயர்.மேலும் உங்கள் டாக்குமென்ட்களை rate,tag,command செய்யலாம்.Scribdல் உள்ள டாக்குமென்டுகளை தேடும் வசதியும் உள்ளது.பல வகைகளில் போடப்பட்டிருப்பதால் அதன் பொருளடக்கத்தை ஆராய்வது எளிதுதான்.

இதன் விஷேட நன்மைகள்
*உங்கள் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.அப்லொட் செய்து விட்டால் போதும் பிறகு அங்கேதான் இருக்கும்.உங்கள் கோப்புக்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று எண்ணினாலும் பிடிஎஃப் ஆக மாற்றும் சேவையாக எடுத்து கொள்ளுங்கள்.அப்லோட் செய்தவுடன் பிரின்ட் ரெடி மற்றும் Read-onlyபிடிஎஃப் ஃபைலாகவும் மாற்றிவிடும்.

Concepte By
A.Shanojan

பீடிஎஃப் ஃபைல்களுக்கு அடோப் அக்ரோபேட் தேவையா??

நாம் தயாரிக்கும் டாக்குமென்டுகளை பகிர்ந்து கொள்ள மிகச்சிறந்தது பீடிஎஃப் ஃபார்மட்டுகள் எனவும் அதன் நன்மைகள் பற்றியும் சென்ற மாத இடுகையில் ஆராய்ந்தோம்.(www.itcornerlk.blogspot.com,,,,,,) அவ் இடுகையில் பிடிஎஃப் ஃபைல்களை வாசிக்க கட்டாயம் Adobe acrobate எனப்படும் மென்பொருள் தேவை
என கூறியிருந்தேன்.அவ்வாறான பிடிஎஃப் ஃபைல்களை எவ்வாறு உருவாக்குவது என நாம் இப்போது ஆராய்வோம்.
இன்றைய கம்ப்பியூட்டர் உலகத்தில் அதுவும் கார்ப்பரேட் உலகத்தில் டாக்குமென்டுகளை பகிர்ந்து கொள்ள எவ்வளவோ ஃபார்மட்டுக்கள் இருந்தாலும் அடோஃப் பீடிஎஃப் தலைசிறந்த ஃபார்மட் என்று கூறினால் அதை மறுக்கமுடியாது.மைக்ரோசாஃப்ட் வேர்ட் டாக்குமென்டுகள் அல்லது எக்சல் ஸ்ப்ரட்ஷீட்கள் போல் அல்லாமல் அடோபின் PDF Formatகள்
Defaultஆக Read-onlyஆக இருக்கும்.அதாவது அதை படிக்கலாமே தவிர எடிட் செய்வது என்பது என்பது முடியாது. டாக்குமென்ட்டை உருவாக்குபவர்/எழுதுபவர் அதிக பாதுகாப்பு வளையங்கள் அமைக்க முடியும்.அவர் அனுமதி இல்லாமல் அந்த பிடிஎஃப் ஃபைலை பிரின்ட் எடுக்கவோ அல்லது டெக்ஸ்ட் மற்றும் இமேஜ்களை எடுப்பது என்பது இயலாது.
வேறு ஒரு வழியும் உண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த டாக்குமென்டை மறையச் செய்யும்படி Configer செய்யவும் முடியும்.மேலும் ஒரு சிறப்பு அம்சமாக நீங்கள் நீங்கள் அனுப்பிய அந்த டாக்குமென்டு அனுப்பியவருக்கு கிடைத்தவுடன் அவர் அதைத்திறந்தால் நீங்கள் அந்த டாக்குமென்டை வடிவமைத்தபடி அப்படியே சற்றும் மாற்றமடையாமல்
இருக்கும்.Font,formating style,Layout எல்லாமே அந்த பிடிஎஃப் ஃபைலில் பாதுகாக்கப்படும்.அந்த பிடிஎஃப் டாக்குமென்டு ஒரு விசியோ Flowchartலிருந்து தயாரிக்கப்பட்டிருந்தாலோ அல்லது மைக்ரோசாஃப்ட் வேர்ட் டாக்குமென்டுகள் அல்லது எக்சல் ஸ்ப்ரட்ஷீட்கள் போன்றவற்றில் தயாரிக்கப்பட்டிருந்தாலோ இலவசமாக கிடைக்கும் அடோப்ரீடர்
அல்லது ஃபாக்ஸ்இட் (Foxit) மூலம் டாக்குமென்டை திறந்து பார்க்கலாம்.

எமது ஆவணங்களை பிடிஎஃப் ஃபைலாக மாற்றுவது எப்படி???
அடுத்த இடுகையில் எதிர்பாருங்கள்........

CONCEPTE BY
A.SHANOJAN
SHANOJAN1993@YAHOO.COM

6 ஜூலை, 2010

உலகை ஆளும் GSM

கையடக்கத்தொலைபேசிகளின் உயிர்ப்பான தொழில்நுட்பமாக விளங்கும் ஜீ.எஸ்.எம் தனது 20வது ஆண்டுபூர்த்தியை கொண்டாடுகிறது.1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம்திகதி உலகின் 15தொலைபேசி கம்பனிகள் Global System for Mobile எனும் Gsm தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்லிட வலையமைப்பை
உருவாக்குவதற்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன.
GSM ஒன்றியத்தின் தகவல் படி GSM தொழில்நுட்பமானது உலகளவில் 2.5பில்லியனுக்கும் அதிகமான கையடக்கத்தொலைபேசிகளில் பயன்படுத்தப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும் செல்பேசிகளின் வியாபிப்பானது தீவிரமாக இடம்பெற்று வருவதனால் GSM தொழில்நுட்பம் மிகவும் வினைத்திறனானதென்றே விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.1987ம் ஆண்டுசெய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக புதிய தொழில்நுட்ப அடைவை கொண்ட செல்பேசிகளின் வியாபிப்பு
மிகத்தீவிரமாக உயர்ந்துள்ளதாக GSM ஒன்றியத்தின் தலைவர் ரொபர்ட் கொன்வே (Robert conway) குறிப்பிடுகின்றார்.இன்றளவில் மனிதனின் வாழ்வில் கட்டாயம் இருக்கவெண்டிய ஒரு சாதனமாக செல்பேசிகள் மாறியுள்ளதாக கருத்து தெரிவிக்கப்படுகிறது.பிரிட்டனில் Oxfam எனும் நிறுவனத்தால் 2006ம் ஆண்டின் இறுதி
பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் படி பிரிட்டனில் 100 பேருக்கு 116.6செல்பேசி இணைப்புகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமா,முதல் ஒரு பில்லியனில் செல்பேசி இணைப்புக்கள் உலகளவில் வியாபிக்க 12வருடங்கள் எடுத்ததாகவும் அது 2பில்லியன்களாக வியாபிக்க வெறும் 30மாதங்களே எடுத்ததாகவும் GSM ஒன்றியத்தின் புள்ளிவிபரங்கள் சுட்டிநிற்கின்நன.அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும் செல்பேசிகள் இன்றியமையாத கூறாக தீவிரமாக
மாறியுள்ளது கவனிக்கப்பட வேண்டியதாகும்.இதற்கு செல்பேசிகள் அலிவு விலையில் கிடைப்பதும் செல்பேசி இணைப்புக்கள் கவர்ச்சிகரமான விதவித வகைகளில் செல்பேசி வலையமைப்பு நிறுவனங்களால் குறைந்த விலையில் வழங்கப்படுவதும் காரணங்களாக இருக்கின்றன..எதிர்காலத்தில் செல்பேசிகளின் வலையமைப்புக்கள் வேகமாக
கப்பட்டும் அவை செயற்கை நுண்ணறிவு கொண்ட நிலையில் பாவனைக்கு வரக்கூடிய சாத்தியங்களும் அதிகளவில் உள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எதிர்காலமென்பது செல்பேசிகள் தொடர்பில் வித்தியாசங்களையும் வினோதங்களையும் கொண்டனவாக அமையுமென்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.Mobile brodband எனும் தொழில்நுட்பமும் இந்நாட்களில் முன்னேறி வருவதை அவதானிக்க முடிகிறது.இதன்விளைவாக வேகமான இணைய இணைப்பை இலகுவாகப்
பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பை எல்லோருக்கும் விரைவில் ஏற்படுத்தி தரலாம்.செல்பெசிகளை பொருத்தமான நேரத்தில் பொருத்தமாக பயன்படுத்தல் தொடர்பில் நாம் எம்மை புடம்போட்டு கொள்ளுதல் காலத்தின் தேவையே!.....

Concepte By
A.Shanojan

Share With your friends