இன்றைய சிந்தனை...

உங்கள் சிந்தனைக்கு

தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!

- ஆபிரகாம் லிங்கன்

March 28, 2011

ஃளாஷ்5 பழகலாம் வா.!

நிகழ்காலங்களில் இளவயதினரிடையே மிகவும் பிரபல்யமடைந்த ஒரு விஷயம் என்றால் அது Animation துறைதான்..அந்தளவுக்கு நாமும் ஒரு அனிமேஷனையாவது சொந்தமாக உருவாக்கி அழகுபார்க்க வேண்டும்,,என்று ஆசைகொண்டவர்களுக்காக
மாதம் ஒரு ஃளாஷ்5.0 (Flash5.0) அனிமேஷன் பாடத்தை விளக்கலாம் என்ற முடிவு..இது உங்களின் ஆசைகளை ஓரளவுக்கென்றாலும் தீர்க்கும் தானே..எனினும் உங்கள் வசதிக்காக மாதம் மாதம் வெளிவரும் இப்பதிவு ஒரு தொகுப்பாக Flssh5 என்ற
தனிப்பக்கத்தில் தரப்பட்டிருக்கின்றன.. இப்போது விஷயத்திற்கு போகலாம்..
Flash Animation Subject-01
முதலில் இலகுவாக ஒரு பந்தினை துள்ளிச் செல்வது போல வடிவமைத்தல் எவ்வாறு என பார்ப்போம்..

******************* படங்களை பெரிதாக காண அவற்றில் கிளிக் செய்யவும்*************************

* Flash5 மென்பொருளை முதலில் திறக்கவும்.பின் Layerboxல் உள்ள முதல் Layerஐ தெரிவு செய்து Stageல் ஒரு வட்டம் வரையவும்..
* Timelineல் முதல் Frameஐ தெரிவு செய்து அதில் Rightclick செய்து தோன்றும் மெனுவில் Create motion tween ஐ கிளிக் செய்க..படம்01


* பின்னர் உங்கள் Object எவ்வளவு வேகத்தில் செல்லவேண்டும் என்பதை தீரமானித்து Timelineல் சிறிதுதுாரத்தில் வலதுகிளிக் செய்து Insert key frame என்பதை கிளிக் செய்க (Shortcut-F6)
* பின் பந்து எவ்விடத்தில் அடிக்கவேண்டுமோ அங்கு Select tool மூலம் பந்தினை Drag செய்யவும்..
* பிறகு பந்து எவ்வளவு வேகத்தில் மேல் எழ வேண்டுமோ அதை பொறுத்து Timeline சிறிது துாரம் நகர்த்தி ஒரு Frameஐ செலக்ட் செய்து அதை வலதுகிளிக் செய்து Insert key frame என்பதை கிளிக் செய்க (Shortcut-F6)
* இப்போது பந்து எவ்வளவு துரம் எழ வேண்டுமோ அங்கு பந்தினை Drag செய்யவும்..
* உங்கள் கீபோர்ட்டில் Enter கீயை அழுத்த நீங்கள் செய்த பந்து துள்ளுவதனை காணலாம்..இனி உங்களுக்கு எவ்விடம் வரை இவ் அனிமேஷன் நடைபெறவேண்டுமோ அதுவரை மேற்சொன்ன முறைகளை செய்யவும்..

மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கலாம்..........##GOOD BYE##
 

March 26, 2011

வணக்கங்கள்.......

மீண்டும் பல்வேறு புதிய மாற்றங்களோடும் புத்துணர்ச்சியோடும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி..சில அவசரமும்,அவசியமுமான விடயங்களால் இத்தனை காலமும் பதிவுகளற்று முடங்கிகிடந்த IT CORNER இன் பதிவுக்கிடங்கு
இப்போது மீண்டும் உங்களிடம் வந்திருக்கிறது..புதிய பதிவுகளை எதிர்பார்த்து தினமும் தரிசித்த எனது வழமையான வாசகர்களுக்கு IT CORNER தந்த ஏமாற்றங்களுக்கு மனம் வருந்துகிறேன்..என்றாலும் சில புது உடன்படிக்கைகளை
நான் இம்முறை உங்கள் காலடிக்கு கொண்டுவந்திருக்கிறேன்..!..இவ்வளவு காலமும் நீங்கள் பார்த்த இவ் வலைப்பதிவை விட முற்றிலும் மாறுபட்ட விதமாக உங்களை சந்திக்கும் நோக்கமும் தான்!
ஆகவே இனி........! உங்கள் எதிர்பார்ப்புக்கள் இன்னும் வினைத்திறனாக நிறைவேற்றப்பட போகின்றன..ஆகவே இன்று முதல் வழமை நிலைக்கு நா(ன்)ம்.....

March 17, 2011

உங்கள் யாஹூ கணக்கை ஜிமெயிலில் தொடர

நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கின் மூலம் பயன்படுத்தலாம்.
இதற்கு முதலில் உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள்.
ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள். அதில் Accounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள்.

Share With your friends

Related Posts Plugin for WordPress, Blogger...