30 அக்டோபர், 2012

MKV வகை கோப்புக்களை DVD வடிவத்திற்க்கு மாற்றித்தரும் இரண்டு இலவச மென்பொருள்கள்




இன்றைய காலங்களில் பொழுது போக்கு துறையில் கணினி ஆற்றுகின்ற பங்களிப்பு மிகவும் புதுமையானது. விளையாட்டுக்கள் (Games), பாடல்கள் (Audio), இவற்றோடு கணினியில் திரைப்படங்களை பார்த்தலும் பகிர்ந்து கொள்ளுதலும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதிலும் இன்றளவில் திரைப்படத்துறையை பொறுத்தவரையில் அதி உயர்திறன் வாய்ந்த பட அமைப்புக்கள் (High Definition) மற்றும் துல்லியமான ஒலி அமைப்புக்கள் (Dolby Surround sound) போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் உயர்தரமான அனுபவத்தை பெற முடிவதுடன் ஒரு சிறந்த பொழுது போக்காகவும் திகழ்கிறது. ஆரம்பத்தில் சாதாரண Video Disk ஆக வெளிவந்த திரைப்படங்கள் பின்னாளில் எண்முறைமைப்படுத்தப்பட்ட Digital Versatile Disk (DVD) வடிவில் வெளியானது. ஆனால் இன்று இது எல்லாவற்றையும் கடந்து நான் முன்சொன்ன அபரிமிதமான தொழில்நுட்ப வசதிகள் உட்பொதியப்பட்டவையாக Blu-ray தட்டுக்களில் வெளிவருகின்றன. இது இவ்வாறிருக்க கணினியில் இவ்வாறான அதிஉயர் தொழில்நுட்பம் வாய்ந்த திரைப்படங்களை அதே தரத்தில் இணையமூடாகவோ அல்லது சாதாரணமாகவோ பரிமாறிக் கொள்வதற்கென அமைந்திருக்கின்ற ஒரு கோப்பு வடிவம்தான் MKV. 

பொதுவாக கணினியில் அல்லது இணையத்திலிருந்து இந்த Blu-ray வடிவ திரைப்படங்களை தரவிறக்கம் அல்லது பகிரும் (Sharing) போது இந்த Format  பயன்படுத்தப்படும், வழமையாக கணினிகளில் இவ்வாறான படங்களை பார்ப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும். அதே போல அந்தவகை கோப்புக்களை (Files) திறந்து வாசிக்க (Read) விஷேட வகை மென்பொருட்கள் தேவைப்படும். ஆனால் நம்மில் பலர் இவ்வாறான திரைப்படங்களை இணையத்திலிருந்து அல்லது நண்பர்களிடமிருந்து பெற்று பயன்படுத்தும் போது அதனை கணினியில் மட்டுமே பார்க்க முடிவதுடன் அதை ஒரு DVD அல்லது VCD ஒன்றில் பதிந்து CD Player களில் பார்வையிட முடியாது. அதையும் தாண்டி அவ்வாறான MKV கோப்புக்களின் வடிவத்தை MPEG க்கு மாற்றி குறுந்தட்டுக்களில் (CD) பதிந்து Player களில் பயன்படுத்தினாலும் அந்த கோப்பின் தரம் குறைவடைந்து மங்கலான நிலையிலேயே அது தென்படும். இதே பிரச்சினை உங்களுக்கும் இருந்தால் உங்களுக்கு உதவுவதற்கென்றே இரண்டு இலவச மென்பொருட்கள் இருக்கின்றன. இதன் மூலம் நீங்கள் உங்கள் MKV கோப்புக்களை அதே தரத்தில் குறுந்தட்டில் பதிந்து தொலைக்காட்சியிலும் காணலாம்.  

#1 DVD Flick

இந்த மென்பொருளானது முற்றிலும் இலவசமானதும் ஒரு திறந்த வள (Open Source) மென்பொருளாகும். இது ஏனைய பணம் செலுத்தி பெறுகின்ற மென்பொருள்களை விட சாதாரணமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் மிகவும் வினைத்திறனாக தொழிற்படக்கூடியது. உங்கள் கணினியில் MKV கோப்புக்கள் இருந்தால் அவற்றை இதில் முதலில் Import செய்ய வேண்டும்.
பின்னர் உங்கள் தேவைக்கேற்ப உங்கள் DVD எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வடிவமைத்து பின்னர் அதை DVDயில் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். வெறும் MKV கோப்புக்கள் மட்டுமல்லாமல் பின்வருமாறும் கோப்புக்களை மாற்றம் செய்யலாம். AVI to DVD, FLV to DVD, HDMOV to DVD, MKV to DVD, MJPG to DVD, MPG to DVD, M2V to DVD, MP4 to DVD, M4V to DVD, NSV to DVD, NUT to DVD, QT to DVD, MOV to DVD, RM to DVD, SMK to DVD, OGM to DVD, WMV to DVD, ASF to DVD, 3GP to DVD, 3G2 to DVD. அதுமட்டுமல்லாது DVD Flick மென்பொருளானது உங்கள் கோப்புக்களை ISO Image File வடிவிற்கும் மாற்றி தருகிறது. 

இவை தவிர இந்த மென்பொருள் தருகின்ற மேலதிக நன்மைகள்
* எந்தவொரு வகை கோப்பையும் DVD வடிவிற்கு மாற்றும் வசதி
* 45க்கும் மேற்பட்ட வீடியோ Codec களை ஆதரிக்கிறது
* 60க்கும் மேற்பட்ட Audio codec பயன்பாடு
* உங்கள் DVDயின் Menu தோற்றத்தை இதிலிருந்தே Design செய்யலாம்.
முழுவதும் இலவசமாக கிடைப்பதுடன் Adware, Spyware தொல்லைகள்  இல்லை


#2 E.M.Free MKV Video2Dvd V3.10

இதுவும் MKV வகையிலமைந்த கோப்புக்களை DVD வடிவத்திற்கு மாற்றித்தரும் ஒரு இலவச (Freeware) மென்பொருள்தான். இதிலுள்ள விஷேட அம்சம் Drag and Drop முறை மூலம் உங்களின் வேலைகளை செய்து கொள்ள முடிவதாகும். இலகுவாக உங்கள் Output இனது அமைப்புக்களை (Settings) மாற்றியமைக்ககூடியதாக அமைந்துள்ளது.
விஷேடமாக இதிலுள்ள Easy Mode மூலமாக நீங்கள் வேறு அதிகமான எந்தவொரு மாறற்ங்களையும் தேர்வு செய்யாமல் வெறும் ஒரு கிளிக் இல் உங்கள் கோப்பை மாற்றலாம். அம் மென்பொருள் தானாகவே உங்கள் கோப்புக்கு (File) ஏற்ப ஏனைய விடயங்களை மாற்றியமைத்து கொள்ளும். பாவனைக்கு இலகுவான பயனர் இடைமுகத்தை (User Interface) கொண்ட இந்த மென்பொருள்

மேலதிகமாக உங்களுக்கு தரும் வசதிகள்
* HD-DV, Blu-ray TS, TP, M2TS, AVCHD, WMV-HD போன்ற உயர்தரமான காணொளி (Video) வகை கோப்புக்களை கூட இலகுவாகவும் விரைவாகவும் DVDயாக மாற்றிவிடும்.
* .srt .sub .ssa .ass .smi .psb .tex .idx போன்ற உபதலைப்புக்களுக்கான (Subtitles) கோப்புக்களையும் ஆதரிக்க கூடியது.
* YouTube போன்ற இணையத்தளங்களிலிருந்து நீங்கள் தரவிறக்கம் (Downlaod) செய்யும் File களைக்கூட இது மாற்றீடு (Convert) செய்யக் கூடியது.


நான் இங்கே குறிப்பிட்டது தவிர்ந்த இன்னும் பல நன்மைகளை இந்த இரண்டு இலவச மென்பொருள்களும் தருகின்றன. ஆனாலும் முக்கிய வசதிகளை தந்திருக்கிறேன். உங்களுக்கு பொருத்தமான மென்பொருளை நான் தந்திருக்கின்ற இணைப்பில் இருந்து தரவிறக்கி பயன்படுத்துங்கள். வழமைபோல தரவிறக்கின்ற திரைப்படங்களை இனி தொலைக்காட்சி, ஏனைய சாதனங்களிலும் காணலாம். அனுபவங்களை கருத்துக்களாக பகிர்ந்து கொள்ளுங்கள்.


-ஷான்






29 செப்டம்பர், 2012

பேஸ்புக்கினை (Facebook) உங்கள் விருப்பம் போல வடிவமைக்கலாம்..!


தொழில்நுட்பமானது ஆரம்பம் முதல் இன்று வரை பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களை அடைந்திருக்கிறது. இதனுடைய வளர்ச்சிக்காலம் ஆய்வாளர்களால் தலைமுறைகளாக வகுக்கப்படுவதுடன் இன்றளவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஐந்தாவது கட்டத்தில் (5th Generation) காலடியெடுத்து வைத்திருக்கிறோம் என்று கூறலாம். ஆனாலும் தொடர்பாடல் மற்றும் செய்திகளை பரிமாறுவது போன்ற செயற்பாடுகள் மனித தோற்றம் முதலே ஆரம்பமானவை. இந்த தொழில்நுட்ப வசதிகளின் வருகைக்கு  பின்னால், நான் முற்சொன்னது போல தலைமுறைக்கு தலைமுறை செய்திப்பரிமாற்றமும் தொடர்பாடலும் தொழில்நுட்பத்துடன் ஒன்றி பல்வேறு பரிணாமங்களை அடைந்திருக்கிறது. அதிலும் மின்னஞ்சல் என்பது தொழில்நுட்பம் தொடர்பாடல் செயன்முறைகளுக்கு தந்த அடிப்படை வசதி என்று சொல்லலாம். அதனோடு நின்று விடாது Online chatting, Video call, Voice call என்று வளர்ந்து இன்று இந்த இடத்தை சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமித்திருப்பதை காணலாம். 

27 செப்டம்பர், 2012

பாரியளவான கோப்புக்களை (Files) சிறிதாக சுருக்கித்தரும் அதிசய மென்பொருள்


கணினி அல்லது தகவல் தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் தரவு மற்றும் கோப்புக்களின் (Files) பயன்பாடு என்பது மிக அவசியமானதொன்றாகும். எமது தேவைகளை பொறுத்து நாம் பயன்படுத்துகின்ற கோப்புக்களின் வடிவங்களும் (Formats), கொள்ளளவுகளும் (Capacity) மாறுபடுகின்றன. அதே நேரம் இவ்வாறான தரவுகளையும் கோப்புக்களையும் சேமிக்க வேண்டிய தேவையும் மறுபுறம் உருவாகிவிடுகிறது. இதற்கென இன்றளவில் பல தரப்பட்ட சாதனங்களும் கருவிகளும் நம்மிடையே உலா வருகின்றன. சாதாரண கணினி வன்தட்டுக்கள் (Hard disk) தொடங்கி நாம் காவிச்செல்கின்ற Pen drive வரையிலும் அனைத்துமே தரவு மற்றும் கோப்புக்களின் சேமித்தல் செயற்பாட்டை இலகுபடுத்துகின்ற சாதனங்களே. ஆனாலும் தரவு சேமிப்பு மற்றும் பகிர்ந்து கொள்ளலில் எந்தவொரு சாதனமென்றாலும் அல்லது இணையவழி முறைமைகளென்றாலும் கோப்புகளின் கொள்ளளவில் குறித்தவொரு கட்டுப்பாடு நிச்சயமாக காணப்படுகிறது. முடிவிலி (Infinitive) அளவிலான கோப்புக்களையும் தரவுகளையும் சேமிக்க கூடிய சாதனங்களோ அல்லது இணையவழி சேவைகளோ எனக்கு தெரிந்து இதுவரை அறிமுகமாகவில்லை.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாரியளவிலான கொள்ளளவு கொண்ட கோப்புக்களை அந்த கோப்பை விடவும் கொள்ளளவு குறைந்த யதாயினுமொரு உபகரணம் முலமாகவோ அல்லது இணையமூடாகவோ பரிமாறிக்கொள்ள அல்லது சேமித்துக் கொள்ள அறிமுகப்படுத்தப்பட்டதே Compressing அல்லது File Zipping எனும் தொழில்நுட்பம் என எளிமையாக கூறலாம். இது சாதாரணமாக கணினி தொழில்நுட்பங்களோடு பழக்கப்பட்டவர்கள் அறிந்திருக்கின்ற விடயம். பொதுவாக விண்டோஸ் வகை இயங்குமுறைமைகளில் (Operating System) Compress என்ற வசதி இணைக்கப்பட்டே இருக்கும். அதாவது ஒரே நேரத்தில் பல கோப்புக்களை அனுப்புகின்ற தேவை வருகின்ற போது இதனை பயன்படுத்தலாம். ஆனாலும் கணினி பயனர்களிடையே தரவுச் சுருக்கத்திற்கென (Data encryption) பெயர்போன மென்பொருள் Win RAR என்பதுதான். ஆனால் நாம் நினைக்கின்ற அளவுக்கு அது பாரியளவிலான Encryption எதனையும் செய்வதில்லை. ஆனாலும் சில விஷேடித்த மென்பொருள்கள் மூலம் கோப்புக்களின் கட்டமைப்புக்களில் (File structure) மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் 10GB அளவான ஒரு கோப்பினை 10MB வரையிலும் சுருக்க முடியும். இதனை சாத்தியமாக்குகின்ற ஒரு இலவச மென்பொருள் பற்றி இந்தப் பதிவிலே பகிர்ந்து கொள்கிறேன்.

KGB Achiever எனப்படுவது முற்றிலும் இலசவமாக பெற்று பயன்படுத்தக்கூடிய Open source வகை மென்பொருள். இதனுடைய தரவுச் சுருக்க செயற்பாடுகளானது PAQ6 என்ற முறைமையை கொண்டு இயங்குவதுடன் இது AES-256 என்ற சக்திவாய்நத தரவுச் சுருக்க முறையை கையாள்கிறது. அதாவது உங்களின் தரவுகளை துவித எண் தொகுதிளாக (Binary) கூட்டமாக்கி சேமிக்கின்ற முறையை பயன்படுத்துகின்றது. இது Windows மற்றும் Linux வகை இயங்கு தளங்களில் வேலை செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் உங்கள் கோப்புக்களை சுருக்கின்ற போது மென்பொருளின் தொழிற்படு வேகம் அதிகமாக அமைவதுடன் இந்த மென்பொருள் கோப்புக்களின் வடிவங்கள் (Formats) தொடர்பில் உங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை.



அதாவது நீங்கள் எந்தவிதமான கோப்புக்களையும் இதன் மூலம் சுருக்கலாம். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் தரவுச் சுருக்கத்திற்கென்று (Data encryption)  பயன்படுத்தப்படும் பொதுவான Format இனை இம்மென்பொருள் பாவிப்பதில்லை, இதனால் நீங்கள் இந்த மென்பொருள் கொண்டு சுருக்கப்படுகின்ற கோப்புக்களை பழைய நிலைக்கு கொண்டுவர கட்டாயம் KGB Achiever மென்பொருள் தேவை. அதே போன்று இந்த மென்பொருளில் கோப்புக்களை சுருக்க பல வழிமுறைகள் காணப்படுகின்றன. High, maximum, normal, low, very weak போன்ற முறைகளில் அவை காணப்படுவதுடன் உங்கள் கணினியின் இயலுமை மற்றும் கோப்பின் வகை என்பவற்றை பொறுத்து இதில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். இந்த செயற்பாட்டிற்க்கு எடுக்கும் நேரம் இந்த முறைமைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.

முக்கியமாக நீங்கள் இந்த மென்பொருள் மூலம் கோப்புக்களை சுருக்கி இணையமூடாக பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் அதை பெற்று பயன்படுத்துகின்றவரிடம் KGB Achiever இருந்தால்தான் அதனை பழைய நிலைக்கு கொண்டுவரலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சாதரணமா இதனை நிறுவ 256 MB RAM ற்றும் 1.5 GHz Processor என்பன ஆகக்குறைந்த வன்பொருள் தகவுநிலைகளாகும். 

இவை தவிர இந்த மென்பொருளின் மேலதிக வசதிகள்.
* .kgb மற்றும் .zip வகை கோப்புக்களை ஆதரிக்ககூடியது.
* Self-Extracting கோப்புக்களை உருவாகக்லாம்.
* Unicode எழுத்துருக்களை ஆதரிப்பதால் தமிழ் மொழியிலான File name உடைய கோப்புக்களை கூட   கையாளளலாம்.
* கடவுச்சொல் மூலம் சுருக்கப்படுகின்ற கோப்புக்களை பாதுகாக்கலாம்.

இவ்வாறு முற்றிலும் இலவசமாக இத்தனை வசதிகளையும் தருகின்ற இந்த இலவச மென்பொருளை நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். இனிவரும் உங்கள் கோப்பு பயன்பாட்டையும் இலகுவாக்கி கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.



16 ஜூலை, 2012

கடவுச்சொல் கொண்ட மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு இலகு வழி..






தொழில்நுட்ப உலகில் சஞ்சரிக்கின்ற நாம் அனைவருமே தற்காலங்களில் தொடர்பாடலுக்கும் தரவுப் பகிர்தலுக்கும் பயன்படுத்துகின்ற ஒரு முக்கிய சாதனம் மின்னஞ்சல்கள்தான் (Email). அதிலும் குறிப்பாக நம்மில் பலர் இலவச இணைய மின்னஞ்சல் சேவை வழங்குனர்களான Yahoo, Gmail, Hotmail போன்றவற்றையே பயன்படுத்துகின்றோம். ஒரு நாளில் எமது உறவினர்கள், நண்பர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் நாம் மின்னஞ்சலை அனுப்புவதோடு அவற்றின் பாதுகாப்பானது அதன் நோக்கத்தையும் பெறுபவரையும் பொறுத்து அமைகின்றது. சாதாரணமான மின்னஞ்சல்களை அனுப்பிவிடலாம். ஆனால் மிக முக்கியமான பாதுகாப்பு தன்மை வாய்ந்த மின்னஞ்சல்களை அனுப்பும் போது அதனை பெறுபவர் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சந்தர்ப்பங்கள் அமைகின்ற போது, நாம் விரும்பிய படி அனுப்புகின்ற ஒவ்வொரு அஞ்சல்களையும் தனியே பூட்டி வைக்கின்ற வசதியை நான் மேற்சொன்ன இந்த இலவச மின்னஞ்சல் சேவை வழங்குனர்கள் தருவதில்லை. இந்தப் பிரச்சினையை தீர்க்க LOCKBIN இணையத்தளம் உதவுகிறது. உதாரணமாக நீங்கள் ஒரு மின்னஞ்சலை பலர் பயன்படுத்துகின்ற மின்னஞ்சல் முகவரியொன்றுக்கு அனுப்புகின்ற நீங்கள் விரும்புகின்றவர்கள் மட்டுமே அதை படிக்க வேண்டும் என நினைத்தால் அந்த கடவுச்சொல்லை அவர்களுக்கு மாத்திரம் தெரிவிக்கலாம்.




இதனை செய்வதற்க்கு முதலில்
http://www.lockbin.com என்ற முகவரிக்கு சென்று படத்தில் உள்ளது போன்று Send Message என்பதை தெரிவு செய்ய, உங்களுக்கு ஒரு படிவம் (Form) தோன்றும்.


அதில் உங்கள் பெயர், உங்கள் மின்னஞ்சல் முகவரி, பெறுபவர் முகவரி, ரகசிய கடவுச்சொல் இவற்றோடு உங்கள் செய்தியை குறிப்பிட்டு SUBMIT பட்டனை அழுத்த உங்கள் அஞசல் குறித்தவருக்கு அனுப்பபட்டு விடும், பின்பு அவர் திறக்க முற்படுகையில் நீங்கள் கொடுத்த கடவுச்சொல் கேட்கப்படும். அதை வழங்கி அவர் கடிதத்தை படிக்க முடியும். இனியென்ன உங்கள் முக்கியமான அஞ்சல்களையும் கடவுச்சொல் கொண்டு பூட்டி பாதுகாக்கலாமே..!


...பதிவு பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களியுங்கள்...



15 மே, 2012

கோப்புறைகளை பாதுகாக்க சிறப்பு மென்பொருள் Folder Protect


கணினியை பொறுத்தவரையில் வினைத்திறனான தகவல் பயன்பாட்டுக்கு உதவுகின்ற ஒரு கருவியாக கோப்புறைகள் எனப்படுகின்ற Folder களை கூறலாம். நிஜத்தில் நாம் பயன்படுத்தும் File களைப் போலவே கணினியின் தரவு சேமிப்பிலும், அவற்றின் இலகு பயன்பாட்டிற்காகவும், தகவல்களை தொகுதிவாரியாக பிரித்து அடுக்கி கொள்கின்ற செயல்பாட்டை கோப்புறைகள் எனப்படுகின்ற Folderகள் செய்கின்றன. அது கொண்டுள்ள தகவல்களின் தன்மை அடிப்படையில் அவற்றின் பாதுகாப்பு முக்கியம் பெறுகின்றது. இவ்வாறான எமது தரவுகள் பல காரணங்களுக்காக (அதாவது துருவிகள் (Hackers) தாக்குதல், வைரஸ் தாக்குதல், அல்லது ஏனைய வழிகளில் எமது தகவல்கள் திருடப்படுவதாகவோ இருக்கலாம்) பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதனை செய்வதற்கென்றே பல மென்பொருள்கள் இலவசமாகவும், பணம் செலுத்தி பெற வேண்டியவையாகவும் சந்தையில் கிடைக்கின்ற போதும் நாம் எதிர்பார்ப்பது போன்று தனிப்பயனாக்கம் (Customize) செய்யக்கூடிய பாதுகாப்பு முறைமைகளை அவை தருவதில்லை. ஆனால் நான் இம்மாத மென்பொருள் பகுதியில் அறிமுகப்படுத்துகின்ற இந்த Folder Protect என்ற மென்பொருள் கோப்புறைகள் எனப்படுகின்ற Folderகளை பாதுகாக்கவென பல வசதிகளை தருகின்றது.

நான் தந்திருக்கின்ற இணைப்பில் இருந்து இதனை பதிவிறக்கி கொள்ளுங்கள். பின் வழமைபோன்று நிறுவிக் (Install) கொள்ளுங்கள். நிறுவல் படிமுறையின் இறுதியில் Run Folder Protect என்பதை நீக்கி விட்டு Finish செய்யுங்கள். பின் நான் தந்திருக்கும் Crackஇனை இரட்டை கிளிக் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். பின் முதல் முறையாக இதனை உங்கள் கணினியில் திறக்கும் போது இந்த மென்பொருளுக்கான Master Password ஐ Set செய்ய வேண்டும். இது தெரிந்தால்தான் உங்கள் கணினியில் உள்ள எந்தவொரு Userஉம் இதனுள் செல்ல முடியும். அதனை Set செய்த பின்பு மென்பொருள் திறக்கும். இதில் Add, Edit, Remove, Unprotect, Select All, Settings, Registerd என்ற தெரிவுகள் காணப்படும். ரெஜிஸ்டட் என்பதன் மூலம் உங்கள் மென்பொருள் ஒழுங்காக Crack செய்யப்பட்டது என்பதை உறுதி செயய்லாம். இங்கு Add என்பதன் மூலம் நீங்கள் பாதுகாக்க விரும்பும் Folderஐ தெரிவு செய்யலாம். Edit என்பது உங்களின் Folderஇன் பாதுகாப்பு வசதிகளை மாற்றி கொள்ள உதவுகின்ற தெரிவு ஆகும். Remove என்பதன் மூலம் உங்கள் Folder க்கான பாதுகாப்பை நீக்கி கொள்ள முடியும். அடுத்ததாக உள்ள Settings என்பது உங்கள் மென்பொருளின் பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ள, Stealth Mode வசதிகள், இவற்றோடு இந்த மென்பொருளை Uninstall செய்யும் வசதிகளும் இங்கு உள்ளது. 

இவை தவிர இந்த மென்பொருளின் மேலதிக சிறப்புக்கள்:

  • இம் மென்பொருளில் உள்ள Stealth Mode வசதி மூலம் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இருந்து மறைத்து வைக்க முடியும். அதாவது உங்களை தவிர எவரும் இதனை Uninstall செய்ய முடியாது. அது போல இது Start menu, C Drive போன்ற இடங்களில் இருந்து மறைக்கப்பட்டுவிடும். இதனை திறக்க உங்களுக்கு மட்டும் தெரிந்த ஒரு குறுக்கு விசையை (Shortcut) அமைத்துக் கொள்ளவேண்டும்.
  • இது Folder களின் பாதுகாப்பை முக்கியப்படுத்தும் ஒரு மென்பொருளாக இருந்தாலும் உங்கள் கணினியின் Hard disk இன் Drive களையும் இது பாதுகாக்க கூடியது.
  • Extension Masks எனப்படுகின்ற கட்டளை மூலம் உங்கள் Folder களை வேறு ஒரு கோப்பு (File) போல அதாவது உங்கள் Folder ஐ .jpg, .doc, .php போன்ற file களாக இது மற்றவர்களுக்கு காட்டும்.
  • நீங்கள் பாதுகாத்த ஆவணங்களை நீங்கள் Edit செய்து விட்டு மீண்டும் பாதுகாக்க (Protect) மறக்கின்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் கொடுக்கின்ற கால இடைவெளியில் தானாகவே உங்கள் File களை அது பாதுகாக்கும் Auto Protection வசதி.


பெறுமதியான உங்கள் ஆவணங்களையும் இந்த மென்பொருள் கொண்டு பாதுகாத்து கொள்ளுங்கள். இம்மாத மென்பொருள் உங்களுக்கு பயனளித்திருக்கும் என நம்புகின்றேன். Crack உடன் சேர்த்து இலவசமாக நான் தந்திருக்கின்ற இணைப்பில் பதிவிறக்கி (Download) நிறுவிக் கொள்ளுங்கள். கருத்துக்களை பின்னூட்டங்களில் பகிருங்கள். மீண்டும் சுவாரஸ்யமான மற்றுமொரு தொழில்நுட்ப பதிவில் சந்திப்போம்.....


...திரட்டிகளில் வாக்களித்து இந்தப் பதிவை நண்பர்களுடன் பகிருங்கள்....



Share With your friends