13 ஆகஸ்ட், 2015

Windows 10 உங்களுக்காக தருகின்ற விஷேட வசதிகள் - ஒரு பார்வை + இலவச தரவிறக்கம்


கணிணி தொழில்நுட்பம் தினமும் புதிய விடயங்களை தன்னுள் உள்வாங்கிக் கொண்டு தன்னை புதுப்பித்துக்கொண்டிருக்கிறது. இங்கே மாற்றம் என்பது ஒரு பொருட்டில்லை என்றாலும் எப்போதாவது ஒருமுறை அடுத்த கட்டத்திற்கான நகர்வு என்று தொழ்ல்நுட்ப ஆர்வலர்கள் என்ற வளையத்தையும் தாண்டி ஏனையவர்களையும் அதன் அதிர்வுகளை உணரவைக்கும்படியாக சில நிகழ்வுகள் அரங்கேறுவதுண்டு. அப்படியாக கடந்த மாதத்தின் இறுதியில் இடம்பெற்ற நம்மில் பலரும் பேசி சிலாகித்து கொண்ட, கணினி உலகின் முன்னோடி Microsoft இனது புதிய இயங்குமுறைமை தொகுப்பான Windows10 மென்பொருள் வெளியீட்டினை கூறமுடியும். இந்த மென்பொருள் தயாரிப்பு பணிகள் துவங்கியது முதலே இம்மென்பொருள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் கணினி உலகிலே ஆரம்பித்துவிட்டன, காரணம் இதனுடைய வசதிகள் பற்றிய விளம்பரம் ஒருபுறம், தங்கள் முந்தைய வெளியீடுகளான Windows8, 8.1 இனது தோல்வியை சரிகட்டவேண்டிய கடமை மறுபுறமென இந்த விண்டோஸ் பதிப்பை பல கோணங்களில் பார்த்து பார்த்து வடிவமைத்துக்கொண்டிருந்தது. அதுமட்டுமன்றி தங்கள் முன்னைய பயனர்களுக்கு இது முற்றிலுமு் இலவசம் என அறிவித்து ஒட்டுமொத்த பயனர்களின் கவனத்தையும் தங்கள் மென்பொருள் மீது திருப்பவும் Microsoft தவறவில்லை. அந்தவகையில் நம்போன்ற பல தொழில்நுட்ப பிரியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த மென்பொருள் தொகுப்பு July 29ம் திகதியன்று உத்தியோகபூர்வமாக வெளியானதை தொடர்ந்து பலரும் இதனை பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை இணையப்பரப்பெங்கும் துாவிக்கொண்டிருக்கிறார்கள். பல Trial versionsகளுக்கு பிறகு இதன் கடைசி பதிப்பு வந்திருப்பதுடன் இனி தனியான ஒரு விண்டோஸ் மென்பொருளை தாம் வெளியிடப்போவதில்லையெனவும் Microsoft அறிவித்திருக்கிறது. மாறாக இந்த மென்பொருளையே பயனர்கள் இணையமூடாக இற்றைப்படுத்தி பயன்படுத்தி கொண்டிருக்கலாம், அதாவது அப்பிள் கைபேசிகளின் iOS இனது செயற்பாட்டினை போன்று இருக்கும்.


உங்களில் பலரும் இப்போதே இதனை பயன்படுத்த தொடங்கியிருப்பீர்கள், சிலர் அறிந்து கொள்ள ஆவலாயிருப்பீர்கள். எனவே இந்த Windows10 மென்பொருள் எந்தெந்த விதங்களில் சிறப்பு பெறுகின்றது, நடைமுறையில் அதன் பயன்பாடு எப்படியிருக்கிறது, என நீங்கள் அறிய ஆவலாயிருக்கிற அனைத்தையும் ஒருங்கே தொகுத்து இந்த பதிவிலே தருகிறேன். மேலதிக இணைப்பாக இலவச தரவிறக்கத்திற்கான இணைப்பையும் பகிர்ந்திருக்கிறேன். முந்தைய பதிப்பான Windows8இனது மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்பதால் அதன் அடிப்படை வசதிகள் பற்றி ஏற்கனவே தனி பதிவில் குறிப்பிட்டுவிட்டதால் பதிவின் நீளம் கருதி Windows10ற்கு உரித்தான தனி சிறப்புக்களை மட்டுமே இங்கு தந்திருக்கிறேன். அந்த பதிவை வாசித்திராவிட்டால் இந்த இணைப்பில் சென்று படித்துவிட்டு இந்த பதிவை படிப்பது சிறந்தது. உங்கள் கருத்துக்களையுமு் பகிர்ந்து கொள்ளுங்கள்.


# Start Menuவின் விஸ்தீரணம்


விண்டோஸ் பயனர்களுக்கு மிகவும் பரிட்சையமான பகுதி. இது திடீரென Windows8இல் காணாமல் போனதால் பலர் சிரமபட்டதுடன் அதனுடைய குறைகளில் பிரதானமாக கூறப்பட்டதென்பதால் இந்த Startmenuஐ மீண்டும் கொண்டுவந்திருக்கிறது Microsoft. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக Windows7இனது சாதாரண Menu மற்றும் Windows8இனது tilesUI இரண்டையும் ஒன்றாக சேர்த்திருக்கிறது. மற்றும் உங்கள் விருப்பத்திற்கேற்ப Single Coloumn, Two column அல்லது Full screen என இந்த Menuவை Resize செய்யவும் முடியும்.

# Cortana உதவி



இந்த வசதி கடந்த காலங்களில் விண்டோஸ் கைபேசிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இப்போது விண்டோஸ்10 இலும் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். அதாவது மேம்படுத்தப்பட்ட தேடல் பொறி உங்கள் கணினி சார்ந்த நடவடிக்கைகளை கொண்டு தேடல்களின்  உங்களுக்கு பொருத்தமான முடிவுகளை காட்சிப்படுத்தக்கூடிய Artificial Intelligence எனும் வகையிலமைந்த தேடல் பொறி. ஆனால் நீங்கள் விண்டோஸ்10 இனை நிறுவுகையில் உங்கள் Region என்பதில் இலங்கை அல்லது இந்தியா போன்ற இடதை்தை தேர்வு செய்தால் இந்த வசதியை பயன்படுத்த முடியாது. காரணம் தற்போதைக்கு இது ஆங்கிலமொழி மூலமான தேடலை மட்டுமே ஆதரிக்கிறது.


# Task Switcher



உங்கள் கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் போது அவற்றை மாற்றிக்கொள்ள பயன்படுத்துகின்ற Alt+Tab குறுக்குவிசை நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது. எனவே அதனை ஒரு வசதியாக இந்த பதிப்பில் Microsoft தந்திருப்பதுடன் பெரிய Thumbnails உடன் தோன்றுவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த ஒரு Progrmaeஇலிருந்து இன்னொன்றுக்கு இலகுவாக மாற முடிவதுடன் எமது வேலைகளை விரைவாகவும் செய்ய முடியும்.

#மேம்படுத்தப்பட்ட Command Line Interface


கணிணித்துறையில் developers ஆக இருப்பவர்கள் பெரிதும் பயன்படுத்துகின்ற இந்த வசதி கட்டளைகள் மூலமாக கணினியை இஙக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த WIndows10இல் இதன் சில வசதிகனை மேம்படுத்தியுள்ளது  Microsoft நிறுவனம். அதவது இத்தனை நாளும் இந்த Command Line Interface விண்டோவை திரையின் பாதியளவு மட்டுமே திறந்து பயன்படத்த முடிவதுடன் ஏதேனும் Folder Pathகளை உள்ளிட வேண்டிய சந்தர்ப்பங்களை அவற்றை முழுவதும் டைப் செய்ய வேண்டும். இது இந்த வசதியை பயன்படுத்துகின்ற பலருக்கும் பெரும் தலையிடியாய் இருந்தது, அனால் விண்டோஸின் இந்த புதிய பதிப்பில் இந்த இரண்டு குறைகளும் நீக்கப்பட்டுள்ளன.

# New Edge browser


Microsoftஇனை பொறுத்தவரையில் ஒரு வினைத்திறனான இணைய வலைமேலோடியொன்றை உருவாக்கி அதில் வெற்றி காண்பதென்பது கடந்த காலங்களில் மிகவும் சவாலாகவே இருந்தது. இவர்களின் Internet Explorer  மென்பொருள் இதற்க்கு சிறந்த உதாரணம். ஆனால் இம்முறை Edge என்ற பெயரில் ஒரு புதிய உலாவியை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகிள்குரோம் ஜாம்பவான் உலாவிகளுக்கு நிகரான செய்திறனை கொண்டது எனவும் இதனை விளம்பரப்படுத்தியிருக்கிறது. வெறுமனே இணையப்பக்கங்களை மாத்திரமல்லாமல் PDF போன்ற அனைத்துவகையான கோப்பு வடிவங்களையும் இதனுாடாக வாசிக்க முடியும், இதனால் Acrobat போன்ற 3rd Party மென்பொருள்களை நிறுவுகின்ற வேலை மிச்சமாகிறது.

#புதிய வடிவில் Control Panel

எமது கணிணியில் control panel என்றால் என்ன அது என்ன செய்கிறது என்பது நாமறிந்ததே. ஆனால் இங்கு இதனுடைய பெயரை Settings என்று மாற்றப்பட்டுள்ளதுடன் தெரிவுகளை Categoriesஆக காட்சிப்படுத்தியுள்ளது. 


இங்கே நான் குறிப்பிட்ட இந்த பிரதான வசதிகள் தவிர Windows8 மற்றும் Windows7 இனது அடிப்படை வசதிகளோடு வெளிவந்திருக்கிறது இந்த Windows10 இயங்குமுறைமை. இனிவரும் நாட்களில் இதனை பற்றிய விரிவான பதிவுகளை தர முயல்கிறேன். இங்கே WIndows10 Enterprise with crack பதிப்பின் தரவிறக்க இணைப்பை தந்திருக்கிறேன். நிறுவலில் சந்தேகங்கள் இருப்பின் பின்னுாட்டங்களில் பகிருங்கள். மற்றுமொரு பதிவில் சந்திப்போம்..!!

இலவச தரவிறக்கம்   (Password: itcornerblog)

Share With your friends