21 டிசம்பர், 2012

Image வடிவிலான ஆவணங்களிலுள்ள எழுத்துக்களை Text வடிவத்திற்க்கு மாற்றித்தரும் விஷேட இணையத்தளம்


 

இலங்கையிலிருந்து இணையத்தில் உலாவருகின்ற இனியது.கொம் என்ற பல்சுவை கதம்ப இணையத்தளத்தில் சென்ற மாதம் நான் எழுதிய வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட பதிவு இது. இதனை தவறவிட்ட எனது வலைப்பதிவின் வாசகர்களுக்காக இங்கே பகிர்கிறேன்....

கணினித்துறையை பொறுத்தவரையில் ஆவணப்பயன்பாடானது (Documentation) நாளுக்கு நாள் பதிய தொழில்நுட்பங்களி்ன வருகையால் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. அதிலும் கணினியோடு இணைந்து அதிகளவான ஆவணங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு பயன்படுகின்ற ஒரு விடயத்தை இந்தப்பதிவிலே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பொதுவாக நாமனைவருமே எமது பல்வேறுபட்ட தேவைகளுக்காக எங்கள் தாள் வடிவிலான ஆவணங்களை Scan செய்தோ அல்லது வேறு வழிகளிலோ மின் வடிவத்திற்க்கு மாற்றுகின்றோம். இதன்போது அவை Image வடிவிலேயே கணினியில் சேமிக்கப்படுகின்றன. இதிலுள்ள பிரதான பிரச்சினை நீங்கள் அவற்றை மேலதிகமாக தொகுக்க (Edit) நினைக்கின்ற போது அது முடியாததாகி விடும். இதனால் எங்கள் கடிதங்களையோ அல்லது வேறு ஏதேனும் முக்கியமான கோப்புக்களையோ திருத்தமாக வடிவமைப்பது சிரமமாகும். இவ்வாறானவர்களுக்கு உதவுவதற்கென்று வடிவமைக்கபட்ட தளம்தான் i2OCR.OCR எனப்படுகின்ற ஆவணப்பயன்பாட்டு சேவையை வழங்குகின்ற பல இணையத்தளங்களில் ஒன்றுதான் இந்த i2OCR என்பது. ஆனாலும் ஏனையவை போலல்லாது முற்றிலும் இலவசமாக தனது பயனர்களுக்கு ஆவண மாற்றீட்டு (Document convert) சேவையை வழங்குவதுடன் பதியப்படாத ஒரு பயனர் குறித்தளவான ஆவணங்களை மட்டுமே மாற்றீடு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடுகள் எதனையும் இத்தளம் விதிக்கவில்லை. அத்துடன் TIF, JPEG, BMP, PNG, PBM, GIF, PGM, PPM போன்ற அனைத்து வகையான Image formate வகைகளையும் இந்த இணையத்தளம் ஆதரிக்கிறது. உங்கள் பட வடிவிலுள்ள ஆவணங்களை தரவேற்றும் போது உங்கள் வன்தட்டிலிருந்து  (Harddisk) நேரடியாக தரவேற்றலாம் அல்லது ஏதாவது இணைய முகவரியிலிருந்தும் உங்கள் படங்களை உள்ளீடு (Import) செய்யலாம். அத்துடன் Image வடிவிலான கோப்புக்கள், Screen shots, Fax போன்ற உங்களின் அனைத்து வகையான ஆவணங்களையும் பயன்படுத்தலாம். இவ்வாறாக நீங்கள் மாற்றீடு செய்து பெறுகின்ற  எழுத்துக்களை (Text) 30க்கும் மேற்பட்ட பிரதான மொழிகளில் (English, French, Spanish, German, Italian, Russian, Portuguese, மற்றும் Chinese) மொழி மாற்றி பெற முடியும் என்பதும் கூடுதல் சிறப்பு.

உங்கள் ஆவணங்களையும் எழுத்து வடிவிற்க்கு மாற்றி கொள்ள i2OCR தளத்திறக்கு சென்று உங்கள் ஆவணத்தை தெரிவு செய்து பின் Upload கட்டளையை அழுத்துங்கள். இந்த சேவை மட்டுமன்றி i2type, i2Style, i2Image போன்ற பல வகையான மாற்றீடு வழிகளையும் தருகின்ற இந்த இணையத்தளம் இனிவரும் உங்கள் ஆவணப்பயன்பாடுகளை வினைத்திறனாக்கும் என்பதில் ஐயமில்லை.


கருத்துரையிடுக

Share With your friends