இன்றைய தகவல் தொழில்நுட்ப தலைமுறையின் (Information Technology Generation) மாபெரும் தொடர்பாடல் சக்திகள் Social Networks என்று அழைக்கப்படும் சமூக வலைத்தளங்கள்தான். அதிலும் இணையம் உலகின் முலைமுடுக்குகளெல்லாம் பரந்து விட்ட நிலையில் இவற்றின் தாக்கமும் ஆதிக்கமும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இவை இல்லாமல் இணையத்தை கற்பனை செய்ய முடியாது என்ற நிலையை இவை தோற்றுவித்திருக்கின்றன. ஒரு செய்தியை குறுகிய நேரத்தில் பலருடன் பகிர்ந்து கொள்ள, நண்பர்களுடன் உடனுக்குடன் செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் என அனைத்தையும் பரிமாறிக்கொள்ள நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளை இலகுவாக சந்தைப்படுத்தவென இணையத்துக்குள் வரும் அனைத்து தரப்பினரையும் இந்த சமூக வலைத்தளங்கள் போஷிக்கின்றன.
இவ்வாறான சக வலைத்தள சேவையை முன்னணி நிறுவனங்கள் பல வழங்குகின்றன. Facebook, Twitter, Google+, MySpace இப்படியாக அனேக நிறுவனங்கள் வகைவகையாக சேவைகளை வழங்கினாலும் "தன்னுடைய அதிர்ஷ்டத்தினால்" பலரிடையே பேசப்பட்டுவது Facebook தான். பொதுவாக இந்தப் பதிவிடும் பொது சொல்லுகின்ற விடயம் பற்றிய விரிவான விளக்கம் கொடுப்பது எனது வழமையென்றாலும் Facebook விஷயத்தில் அது தேவையில்லையென்றே நினைக்கின்றேன். காரணம் என்னைவிட பல உங்களுக்கு அது பற்றி தெரிந்திருக்கும். இதனால் நேரடியாக விஷயத்தை சொல்லிவிடுகின்றேன்..
வயது, பால் வேறுபாடின்றி இன்று இணையத்தில் உலாவுகின்ற அனைவராலும் (சிலர் விதிவிலக்கு) பயன்படுத்தப்படுவது என்று நான் நினைக்கின்ற Facebook தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தனது வசதிகளையும் வடிவத்தையும் மாற்றிக் கொண்டிருப்பது நாமறிந்ததே. ஆனாலும் நீங்கள் விரும்பிய படியெல்லாம் உங்கள் Facebook கணக்கை அழகுற வடிவமைப்பதற்க்கு Social Fixer இணையத்தளம் உங்கள் உலாவிகளுக்கான (Browsers) இலவச நீட்சியை (Extentions) வழங்குகின்றது. இதன் மூலம் உங்கள் Facebook கணக்கை உங்கள் விருப்பம் பொல எவ்வாறெல்லாம் வடிவமைக்கலாம் என்பதை இந்தப்பதிவிலே பகிர்கிறேன்...
முதலில் உங்கள் உலாவிக்கு பொருத்தமான நீட்சியை நான் தந்திருக்கின்ற இணைப்பிலே இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உலாவியின் Facebook பக்கத்திற்க்கு செல்லும் போது உங்கள் கணக்கு புதிதாக தோற்றமளிப்பதுடன் ஏனைய Settings வசதிகளை நிங்கள் அதிலேயே செய்யவும் முடியும். இதனை பயன்படுத்தி கீழுள்ளது போல உங்கள் கணக்கையும் வடிவமைக்கலாம்..
தரவிறக்க சுட்டிகள்:
#Chrome
#Firefox
#Safari
#Opera
1 கருத்து:
விளக்கி சொல்லி உள்ளீர்கள்... எனது விருப்பம் போல் செய்து பார்க்கிறேன்... நன்றி...
கருத்துரையிடுக