29 செப்டம்பர், 2012
பேஸ்புக்கினை (Facebook) உங்கள் விருப்பம் போல வடிவமைக்கலாம்..!
27 செப்டம்பர், 2012
பாரியளவான கோப்புக்களை (Files) சிறிதாக சுருக்கித்தரும் அதிசய மென்பொருள்
கணினி அல்லது தகவல்
தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் தரவு மற்றும் கோப்புக்களின் (Files) பயன்பாடு என்பது
மிக அவசியமானதொன்றாகும். எமது தேவைகளை பொறுத்து நாம் பயன்படுத்துகின்ற
கோப்புக்களின் வடிவங்களும் (Formats), கொள்ளளவுகளும் (Capacity) மாறுபடுகின்றன. அதே நேரம் இவ்வாறான தரவுகளையும்
கோப்புக்களையும் சேமிக்க வேண்டிய தேவையும் மறுபுறம் உருவாகிவிடுகிறது. இதற்கென
இன்றளவில் பல தரப்பட்ட சாதனங்களும் கருவிகளும் நம்மிடையே உலா வருகின்றன. சாதாரண கணினி
வன்தட்டுக்கள் (Hard disk)
தொடங்கி நாம்
காவிச்செல்கின்ற Pen drive
வரையிலும்
அனைத்துமே தரவு மற்றும் கோப்புக்களின் சேமித்தல் செயற்பாட்டை இலகுபடுத்துகின்ற
சாதனங்களே. ஆனாலும் தரவு சேமிப்பு மற்றும் பகிர்ந்து கொள்ளலில் எந்தவொரு சாதனமென்றாலும்
அல்லது இணையவழி முறைமைகளென்றாலும் கோப்புகளின் கொள்ளளவில் குறித்தவொரு கட்டுப்பாடு
நிச்சயமாக காணப்படுகிறது. முடிவிலி (Infinitive) அளவிலான கோப்புக்களையும் தரவுகளையும் சேமிக்க
கூடிய சாதனங்களோ அல்லது இணையவழி சேவைகளோ எனக்கு தெரிந்து இதுவரை அறிமுகமாகவில்லை.
இவ்வாறான
சந்தர்ப்பங்களில் பாரியளவிலான கொள்ளளவு கொண்ட கோப்புக்களை அந்த கோப்பை விடவும்
கொள்ளளவு குறைந்த யதாயினுமொரு உபகரணம் முலமாகவோ அல்லது இணையமூடாகவோ பரிமாறிக்கொள்ள
அல்லது சேமித்துக் கொள்ள அறிமுகப்படுத்தப்பட்டதே Compressing அல்லது File Zipping எனும் தொழில்நுட்பம் என எளிமையாக கூறலாம். இது
சாதாரணமாக கணினி தொழில்நுட்பங்களோடு பழக்கப்பட்டவர்கள் அறிந்திருக்கின்ற விடயம்.
பொதுவாக விண்டோஸ் வகை இயங்குமுறைமைகளில் (Operating System) Compress என்ற வசதி
இணைக்கப்பட்டே இருக்கும். அதாவது ஒரே நேரத்தில் பல கோப்புக்களை அனுப்புகின்ற தேவை
வருகின்ற போது இதனை பயன்படுத்தலாம். ஆனாலும் கணினி பயனர்களிடையே தரவுச்
சுருக்கத்திற்கென (Data
encryption) பெயர்போன மென்பொருள் Win RAR என்பதுதான். ஆனால் நாம் நினைக்கின்ற அளவுக்கு
அது பாரியளவிலான Encryption
எதனையும்
செய்வதில்லை. ஆனாலும் சில விஷேடித்த மென்பொருள்கள் மூலம் கோப்புக்களின்
கட்டமைப்புக்களில் (File
structure) மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் 10GB அளவான ஒரு
கோப்பினை 10MB வரையிலும்
சுருக்க முடியும். இதனை சாத்தியமாக்குகின்ற ஒரு இலவச மென்பொருள் பற்றி இந்தப்
பதிவிலே பகிர்ந்து
கொள்கிறேன்.
KGB Achiever எனப்படுவது முற்றிலும் இலசவமாக பெற்று
பயன்படுத்தக்கூடிய Open
source வகை மென்பொருள். இதனுடைய தரவுச் சுருக்க செயற்பாடுகளானது PAQ6 என்ற முறைமையை
கொண்டு இயங்குவதுடன் இது AES-256 என்ற
சக்திவாய்நத தரவுச் சுருக்க முறையை கையாள்கிறது. அதாவது உங்களின் தரவுகளை துவித
எண் தொகுதிளாக (Binary) கூட்டமாக்கி
சேமிக்கின்ற முறையை பயன்படுத்துகின்றது. இது Windows மற்றும் Linux வகை இயங்கு தளங்களில் வேலை
செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் உங்கள்
கோப்புக்களை சுருக்கின்ற போது மென்பொருளின் தொழிற்படு வேகம் அதிகமாக அமைவதுடன்
இந்த மென்பொருள் கோப்புக்களின் வடிவங்கள் (Formats) தொடர்பில் உங்களுக்கு எந்தவித
கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை.
அதாவது நீங்கள்
எந்தவிதமான கோப்புக்களையும் இதன் மூலம் சுருக்கலாம். ஆனால் இதில் உள்ள சிக்கல்
என்னவென்றால் தரவுச் சுருக்கத்திற்கென்று (Data encryption) பயன்படுத்தப்படும்
பொதுவான Format இனை
இம்மென்பொருள் பாவிப்பதில்லை, இதனால் நீங்கள் இந்த மென்பொருள் கொண்டு சுருக்கப்படுகின்ற
கோப்புக்களை பழைய நிலைக்கு கொண்டுவர கட்டாயம் KGB Achiever மென்பொருள் தேவை. அதே போன்று இந்த மென்பொருளில்
கோப்புக்களை சுருக்க பல வழிமுறைகள் காணப்படுகின்றன. High, maximum, normal, low, very weak போன்ற முறைகளில்
அவை காணப்படுவதுடன் உங்கள் கணினியின் இயலுமை மற்றும் கோப்பின் வகை என்பவற்றை
பொறுத்து இதில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். இந்த செயற்பாட்டிற்க்கு எடுக்கும்
நேரம் இந்த முறைமைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
முக்கியமாக நீங்கள் இந்த
மென்பொருள் மூலம் கோப்புக்களை சுருக்கி இணையமூடாக பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் அதை
பெற்று பயன்படுத்துகின்றவரிடம் KGB Achiever இருந்தால்தான் அதனை பழைய நிலைக்கு கொண்டுவரலாம் என்பதை
கவனத்தில் கொள்ளுங்கள். சாதரணமா இதனை நிறுவ 256 MB RAM ற்றும் 1.5 GHz Processor என்பன ஆகக்குறைந்த வன்பொருள் தகவுநிலைகளாகும்.
இவை தவிர இந்த மென்பொருளின் மேலதிக வசதிகள்.
* .kgb மற்றும் .zip வகை கோப்புக்களை ஆதரிக்ககூடியது.
* Self-Extracting கோப்புக்களை உருவாகக்லாம்.
* Unicode எழுத்துருக்களை ஆதரிப்பதால் தமிழ் மொழியிலான File name உடைய கோப்புக்களை
கூட கையாளளலாம்.
* கடவுச்சொல் மூலம் சுருக்கப்படுகின்ற கோப்புக்களை
பாதுகாக்கலாம்.
இவ்வாறு முற்றிலும்
இலவசமாக இத்தனை வசதிகளையும் தருகின்ற இந்த இலவச மென்பொருளை நீங்களும்
பயன்படுத்திப்பாருங்கள். இனிவரும் உங்கள் கோப்பு பயன்பாட்டையும் இலகுவாக்கி
கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள். கருத்துக்களை பகிர்ந்து
கொள்ளுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)