பொதுவாக கணினியில் எமக்கு வேண்டாத தரவுகள் இருந்தால் அவற்றை அழித்து விடுவதும், அவ்வாறு அழிக்கப்பட்ட தரவுகள் கணினியில் உள்ள Recycle Bin என்ற பகுதிக்கு செல்வதும் மீண்டும் அந்த தரவுகள் தேவைப்படுகின்ற போது Restore கட்டளையை பிரயோகித்து அவற்றை மீளப் பெற முடியும் என்பதும் தெரிந்த ஒரு விடயம். ஆனாலும் சில தரவுகளை இனி தேவையையே இல்லை எனக் கருதி அல்லது தெரியாமலே Recycle Bin இலிருந்தும் அழித்து விடுவோம். அவ்வாறு அழிக்கப்பட்ட முக்கியமான தரவுகளை எந்த சேதாரமும் இல்லாமல் மீட்டுத்தருவதற்கென்றே
உருவாக்கப்பட்ட மென்பொருள்தான் File Scavenger v3.2
ஆனால் இங்கு முக்கியமான விடயம் ஒன்றை கவனிக்க வேண்டும். எப்போதும் நாம் எந்தவொரு தரவுத்தேக்கத்திலிருந்தும் (Data Storage) தரவுகளை அழிக்கின்ற போது உண்மையில் அவை அழிக்கப்படுவதில்லை,
மாறாக குறித்த தரவின் கொள்ளளவை (Capacity) கொண்ட இடம் தரவு தேக்கத்தில் (Data Storage) ஒதுக்கப்படும். பின்பு நீங்கள் வேறொரு கோப்பை பதிக்கின்ற போது அது அந்த இடத்தில் பிரதியீடு (Overwrite) செய்யப்படும்.
இதனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். தரவுகளை மீளப் பெறுவதற்க்கான Recovery Tools களைப் பயன்படுத்தும் போது குறித்த தரவு அழிக்கப்பட்ட தரவு தேக்கத்திலிருந்து Recovery செய்யும் வரை மேலதிகமாக எந்த தரவும் பதியப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த விதி நான் சொல்கின்ற இந்த File Scavenger v3.2 மென்பொருளுக்கும் பொருந்தும்.
இது உண்மையிலேயே பணம் செலுத்தி பெற வேண்டிய மென்பொருளென்றாலும் நான் தந்திருக்கின்ற இணைப்பில் Crack உடன் இலவசமாகவே தரவிறக்கலாம். தரவிறக்கிய பின் மென்பொருளை நிறுவி பின் reg கோப்பை நிறுவிக் கொள்ளுங்கள்.
கொள்ளளவில் மிகச் சிறிய (849KB) இடத்தையே கொண்டிருப்பதுடன் எளிமையான செய்முறைகள் மற்றும் Windows 7, Vista போன்ற பிந்திய விண்டோஸ் இயங்கு முறைமைகளிலும் இந்த File Scavenger v3.2 மென்பொருள் உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும். பயன்படுத்திப் பார்த்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கலாம்.
தரவிறக்க சுட்டி
...பதிவு பிடித்திருந்தால் இன்ட்லி மற்றும் தமிழ் 10 திரட்டிகளில் வாக்களித்து பதிவை பிரபலமாக்குங்கள்..
1 கருத்து:
பயனுள்ள பதிவு! நன்றி சார் !
கருத்துரையிடுக