28 மே, 2011

ஸ்கைப் நண்பர்களை தேட இலகு வழி...



இன்றைய நாட்களில் ஸ்கைப் மென்பொருள் பற்றி தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அதாவது அடிப்படை கணிணனி அறிவற்றவர்கள் கூட பேசுகின்ற சொல்லாக Skype என்பது மாறும் அளவுக்கு இம் மென்பொருள் பிரபல்யமடைந்திருக்கிறது.இதற்கான முக்கிய காரணம் என்ன என ஆராய்ந்தால் இணையமூடாக எந்த நேரத்திலும் எந்த இடத்திற்கும்/லிருந்தும் இலவசமாக அதுவம் வீடியோ அழைப்பு மூலம் பேச இது வழி செய்வதேயாகும். எனவே நம்மில் பல பேர் நம் வெளிநாடுகளிலுள்ள உறவுகளோடு இதனூடாக இலவசமாக பேசிக் கொள்ள முடிகிறது..அது மட்டுமன்றி உலகெங்கும் உள்ள பல புதிய நண்பர்களை தேடவும் இது உதவுகிறது.

ஆனாலும் இது சமூக வலைத்தளங்கள் போல நண்பர்களை தேடி பிடிக்க இடம் தருவதில்லை. மாறாக அவர்களின் தனித்த அடையாளமான Skype ID மூலமாகவே நண்பர்களை சேர்த்து கொள்ளலாம். அல்லது ஒருவருடைய குறித்த ஸ்கைப் கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரி தெரிந்திருக்க வேண்டும்.எனவே நமக்கு இது சற்று சிரமம்தான். ஆனால் இவ்வாறு ஆசையுடைய உலகெங்கும் உள்ள பல நண்பர்களை ஒன்று சேர்த்து உங்களுக்கு இந்த வாய்ப்பை ஓர் இயைத்தளம் வழங்குகிறது..இத்தளத்திற்கு நீங்கள் சென்று உங்கள் சரியான Skype id ஐ கொடுத்து உங்கள் Gender மற்றும் வயதெல்லை ஆகியவற்றை கொடுத்து Add me என்ற பொத்தானை அழுத்த இவ் இணையத்தளத்தின் Serverஇல் உங்கள் பெயரும் இணைக்கப்படும்..பின் இவ் இணையத்தளத்தில் தற்பொது ஸ்கைப் மென்பொருளில் ஆன்லைனில் உள்ள நண்பர்கள் பட்டியல் தோன்றும்..இதில் உங்களுக்கு பிடித்தவர்களை தேர்ந்தெடுத்து உங்கள் நண்பர் வட்டத்தையும் பெருக்கி கொள்ளலாம்..இதன் இணைய முகவரி www.skypecontacts.com என்பதாகும்.

...திரட்டிகளில் வாக்களித்து பதிவை பிரபலமாக்குங்கள்...


   

Share With your friends