இணைய உலாவலுக்கு (Webbrowsing) மிகவும் பிரபல்யம் பெற்ற ஒரு மென்பொருளாக Mozilla firefoxஇனை குறிப்பிடலாம்...பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள இம்பொருளினது 3.6 மென்பொருளே முன்னைய காலங்களில் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது..எனினும் கடந்தவாரம் இதனது புதுப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வமான 4வது பதிப்பு வெளியாகியிருக்கிறது.
இத்தனை காலமும் பயனர்களால் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக பல புதிய வசதிகளுடனும் இது வெளிவந்திருப்பது சிறப்பம்சமாகும்.. என்கின்ற இதனுடைய உத்தியோகபூர்வ இணையதளத்தில் நீங்கள் இலவசமாகவே இதனை பதிவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளலாம்.எனினும் மொசில்லா ஃபயர்பாக்சின் பழைய பதிப்பு உங்கள் கணினியில்
இருந்தால் அது தானாகவே Upgrade செய்யப்படும் என்பதும் ஒரு கூடுதல் தகவல்...இனி Mozilla firfox4 பயனர்களுக்கு என்னென்ன பது வசதிகளை தருகிறது என்று பார்ப்போம்..
அருகே நீங்கள் படத்தில் காண்பது மொசில்லா ஃயர்பாக்சின் புதிய இடைமுகமாகும்.(Interface) இதில் பழைய மெனு வடிவம் நீக்கப்பட்டு அனைத்தும் Firefox என்கிற ஒரு பட்டனுக்கு மாற்றப்பட்டிருக்கிநது..இணைப்பக்கங்கள் Load செய்யப்படும் போது தோன்றும் Progressbarக்கு பதிலாக Tabஇலேயே Loading...செய்யக்கூடிய வசதி...மேலும் Option மெனுவில் Sync எனப்படும் புதிய வசதி
சேர்க்கப்பட்டிருக்கிறது..
அதாவது உங்களுடைய History,Bookmarks,Password போன்றவற்றை உங்கள் தனிப்பட்ட கணினியில் (PC) நீங்கள் இலகு பாவனைக்காக சேமித்துவைத்திருப்பீர்கள்...இதனை நீங்கள் வெளியில் சென்று பயன்படுத்த நேர்ந்தால் இந்த Optionஐ பயன்படுத்தலாம்..இது எவ்வாறு சாத்தியமாகிறதென்றால் நீங்கள் மொசில்லாவில் ஒரு Sync கணக்கை திறக்கவேண்டும்..
பின்னர் இதனை கொண்டு இவ்வசதியை சாத்தியமாக்கலாம்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக