15 ஜனவரி, 2012

தரவிறக்க காத்திருக்கிறீர்களா? - இனி அது தேவையில்லை
இந்த இனிய நாளில் உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி. இணையத்தைப் பொறுத்தவரை தரவிறக்கம் என்பது தவிர்க்க முடியாதது. அதிலும்  Broadband தொழில்நுட்பம் அறிமுகமானதன் பின் இணையத்திலிருந்தான தரவிறக்கம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எமது கோப்புக்களை இணைமூடாக மற்றவர்களின் தரவிறக்கத்திற்கென பகிர்வதற்காக பல இணையத்தளங்கள் உலாவருகின்றன, அவற்றை Online Storage என்று சொல்வோம். உதாரணமாக Megaupload, Rapidshare, Mediafire, WUpload, Filekeen இன்னும் பல. இணையத்தளங்களும் ஏதாவது மென்பொருள்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்த இணைப்புகளையே (Links) தருகின்றன. நம்மைப் போன்றவர்களுக்கு இவற்றில் மிகப் பெரிய தலையிடியாக இருப்பது கால எல்லை (Time limit). அதாவது அவர்களின் இணையத தளங்களில் பதிவிறக்கம் செய்ய (இலவசமாக) அவர்கள் தரும் நேரம் வரை காத்திருக்க வேண்டும். அந்த கால எல்லை ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரி. இதனை தவிர்க்க அவர்கள் தளத்தில் பணம் செலுத்தி Premium கணக்கு திறக்க வேண்டும். (நமக்குத்தான் அந்தப் பழக்கமேயில்லையே..) எனவே இத்தனை காலமும் இந்த தலையிடியால் நீங்கள் அவதிப்பட்டிருந்தீர்களானால் உங்களுக்கு மருந்தாக வருகிறது இந்தப் பதிவு.

இவ்வாறான இந்த தொடறரா தேக்ககங்களில் (Online Storage) காத்திருத்தலை தவிர்க்க ஃயர்ஃபாக்ஸ் (Firefox) மற்றும் குரோம் (Chrome) உலாவிகள் Skip screen என்ற ஒரு நீட்சியை வழங்குகின்றன. இதனை நிறுவிக் கொண்டால் உங்கள் கணினியிலும் இதனை தவிர்க்கலாம். இதனை நிறுவிய பின் (Firefox மற்றும் Chrome உலாவியிலும்) ஒரு முறை உலாவியை மீளியக்குங்கள் (Restart). பின் Toolbar இல் Skip screen இனுடைய Icon ஐ அவதானிக்கலாம். இனி நீங்கள் Megaupload, Rapidshare, Media fire, WUpload, Filekeen போன்ற ஏதாவதொரு தொடறரா தேக்ககங்களுக்கு (Online Storage) சென்றால் வழமையான தரவிறக்க இணைப்புக்கு கீழே Skip screen Download என்ற இணைப்பு தோன்றும் அதன் மூலம் இலகுவாக தரவிறக்கலாம். பயன்படுத்தி பாருங்கள், பின்னூட்டங்களை பகிருங்கள். மீண்டுமொரு முறை அனைவருக்கும் இனிமையான உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள், இந்த நாள் இனிய நாள்.

தரவிறக்க இணைப்பு
             
   ....பதிவு பிடித்திருந்தால் இன்ட்லி மற்றும் தமிழ்10 திரட்டிகளில் வாக்களித்து பதிவை பிரபலமாக்குங்கள்...   14 ஜனவரி, 2012

கூகிள் குரோம் பிரியரா நீங்கள் - இது உங்களுக்காகவே..!


இந்த வருடத்தின் முதல் தொழில்நுட்ப பதிவில் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி, இணையத்தின் ஆதிக்கம் இன்றைய நவீன யுகத்தில் மனிதர்களின் வாழ்வில் சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில் கற்பனைக்கும் எட்டாத வேகத்தில் அகல்கற்றை (Broadband) தொழில்நுட்பம் மூலம் கணினியின் மொத்த செயற்பாடுகளையும் இணையத்தின் மூலமே செய்யக் கூடியளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. இணைய உலாவிகள் இல்லாமல் இணையம் பற்றி பேச முடியாது. ஏனெனில் அவையே இணைத்தின் முக்கிய கருவிகள்.

இணைய உலாவிகள் எனும் போது இன்றைய நாட்களில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பல இணைய உலாவிகளை அறிமுகப்படுத்துகின்றன. அதில் நம்முடைய விருப்பத்திற்க்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு மென்பொருளைப் பயன்படுத்துகிறோம். அந்த வகையில் கூகிளின் குரோம் உலாவியை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் இணைய உலாவல் அனுபவத்தை இன்னும் மெருகூட்ட இந்த பதிவு உதவும் என நினைக்கிறேன்.

அதாவது Extensions என்ற பகுதியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை ஃபயர்ஃபாக்ஸ் (Firefox) மென்பொருளுக்கு இருந்தாலும் Extension களை வைத்தே புதுமை செய்தது கூகிளின் குரோம் உலாவி. எம் தேவைக்கேற்ப கூகிளின் Webstore இல் ஆயிரக்கணக்கான Extension கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் உங்களுடைய ஒரு குரோம் உலாவியில் கட்டாயம் இருக்க வேண்டிய சிறந்த 5 Extension களை தந்திருக்கிறேன். வாசித்து பதிவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்.


Google Dictionary 

இந்த Extension ஐ தரவிறக்கி உங்கள் குரோம் உலாவியில் நிறுவியதன் பின் Toolbar இல் புதிதாக ஒரு Icon சேர்ந்திருப்பதை அவதானிக்கலாம். நீங்கள் குறித்த ஒரு இணையத்தளத்தை பார்வையிடும் போது நீங்கள் கருத்தை அறிய வேண்டிய சொல்லை Select செய்து பின் குறித்த Icon ஐ அழுத்த ஒரு Balloon திறந்து உங்களின் சொல்லுக்கான அர்த்தத்தை காண்பிக்கும். இனி நீங்கள் இணைய உலாவலில் ஈடுபடும் போது எந்தவொரு சொல்லுக்குமான அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் இணைய உலாவல் மேலும் வளம் பெறும். இங்கே தரவிறக்கலாம் 

Ad Block 

இன்றைய நாட்களில் இணைய வாயிலான விளம்பரப்படுத்தல்கள் மிகவும் அதிகமானவை. இவை சில வேளைகளில் நன்மையை தந்தாலும் பல வேளைகளில் எமது இணைய உலாவலை தடை செய்பவையாகவே உள்ளன. அதுமட்டுமன்றி இணையத்தை மெதுவாக்க கூடியவையும் இவையே. ஆனால் இவற்றை தடுக்க இந்த AdBlock Extension உதவுகிறது. இது நீங்கள் தரிசிக்கும் இணையப்பக்கங்களில் உள்ள விளம்பரங்களை தடை செய்து அவற்றின் உள்ளடக்கத்தை மட்டுமே காண்பிக்கும். இதனால் உங்கள் இணைய இணைப்பு வேகமாக இருப்பதுடன் தேவையில்லாத விளம்பரங்களால் நமது கவனம் கலைவதும் குறையும். இங்கே தரவிறக்கலாம்

Turn Off the Lights

இது காணொளி (Video) பிரியர்களுக்காகவே உருவாக்கப்பட்ட Extension. அதாவது இணையத்தில் அதிகமாக நாம் காணொளிகளை பார்க்கும் போது திரையரங்கில் பார்ப்பது போன்ற உணர்வை இது தருகிறது. அதாவது குறித்த வலைப்பக்கத்தில் ஒரு காணொளியை Play செய்யும் போது அந்த காணொளியை தவிர்ந்த ஏனைய இடங்களை இருள் நிலையில் இது வைத்துக் கொள்ளும். ஆகவே ஒரு புதுமையான அனுபவத்தை பெறலாம். மேலும் இதனுடைய Settings இல் இருளின் அளவு, எப்போது பின்புலம் இருளடைய வேண்டும் போன்ற பலவற்றை நம் விருப்பப்படி மாற்றிக் கொள்ள முடிவதும் கூடுதல் சிறப்பம்சம். இங்கே தரவிறக்கலாம் 

Google Mail Checker

இந்த Extension பற்றி நான் சொல்லவே தேவையில்லை. ஏனெனில் பெயரில் உள்ளது போலவே எந்தவொரு இணையப் பக்கத்தில் இருந்தும் உங்கள் ஜீ-மெயிலை சரிபார்த்து கொள்ளலாம். மேலும் வருகின்ற மின்னஞ்சல்களுக்கு உடனேயே பதிலும் அனுப்பிவிடலாம். நிறுவியதன் பின் உங்கள் Toolbar இல் சேர்கின்ற சிறிய G Icon உங்களின் மின்னஞ்சல் நிலவரத்தை சொல்லிக் கொண்டே இருக்கும். இங்கே தரவிறக்கலாம்

Angry Birds

இந்தப் பெயரை அறியாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். ஏனெனில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கட்டிப் போட்ட 2011ம் ஆண்டின் கணினி விளையாட்டு. ஸ்மார்ட் ஃபோன்களில் மட்டுமே விளையாட முடிந்த இந்த விளையாட்டை முதன் முதலில் கணினியில் விளையாடவைத்து என்னைப் போன்ற பலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய பெருமை குரோம் உலாவியையே சாரும். இணைய உலாவலின் போது மிகச்சிறந்த பொழுது போக்கு. இங்கே தரவிறக்கலாம் ...பதிவு பிடித்திருந்தால் இன்ட்லி மற்றும் தமிழ் 10 திரட்டிகளில் வாக்களித்து பதிவை பிரபலமாக்குங்கள்...
5 ஜனவரி, 2012

2011 இல் IT CORNER - ஒரு மீட்டல் (பகுதி 01)

புதுவருடம் பிறந்து 5 நாட்கள் கடந்திருக்கின்ற நிலையில் இந்த வருடத்தின் முதல் பதிவு ஒரு மீட்டலாக இருக்க வேண்டும் என்பதால் இந்தப் பதிவு. சென்ற 2011ம் வருடம் தொடக்கம் முதல் இறுதி வரை நான் இங்கே எழுதிய அனைத்து இடுகைகளையும் நீங்கள் வாசித்திருப்பீர்களா என்பது தெரியாது, ஆனால் அப்படிப்பட்டவர்களுக்காகவே இது. வாசகர்களால் அதிகம் தரிசிக்கப்பட்ட மற்றும் திரட்டிகளில் அதிகூடிய வாக்குகளை பெற்ற சிறந்த 20 பதிவுகளை தொகுத்து தந்திருக்கிறேன். இனி வரும் காலங்களில் தொழில்நுட்ப உலகம் எதிர் கொள்ளப் போகும் நிலைகளை எண்ணிப்பார்க்க இம் மீட்டல் நிச்சயம் உதவும்.


Number 20 CMOS - ஒரு பார்வை 

கடந்த வருடத்தின் ஜனவரி மாதம் 12ம் திகதி இந்தப் பதிவை எழுதியிருந்தேன். கணினியின் நினைவக கூறுகளின் ஒரு பகுதியான CMOS Battery யின் அடிப்படை செயல்பாடுகளையும் அதன் வரலாறுகள் பற்றியும் தொடர்ந்து இரண்டு பகுதிகளாக வெளியிட்ட பதிவு. நிச்சயம் வன்பொருள் ஆர்வலர்களுக்கு பயனளித்திருக்கும். இப்பதிவை முழுதாய் காண இங்கே அழுத்துங்கள்.

Number 19 PDF ஃபைல்களை இலகுவாக Unlock செய்யலாம்!

மிகவும் பாதுகாப்பானதும் நேர்த்தியானதுமான ஆவணப் பரிமாற்றலுக்கு பெயர் பெற்ற பிடிஎஃப் கோப்பு வகைகள் பற்றி அறிந்திருப்போம். அவ்வாறான பிடிஎஃப் கோப்புக்கள் சில வேளைகளில் அதன் உள்ளடக்கங்களை பிரதி செய்ய முடியாதவாறு தடுக்கப்பட்டிருக்கும். ஆனாலும் ஒரு விசேடித்த மென்பொருள் கொண்டு அவ்வாறான 
கோப்புகளை Unlock செய்வது பற்றி நான் சென்ற வருடம் February மாதம் 05ம் திகதி பகிர்ந்து கொண்ட பதிவு. பதிவு சிறிதாயிருந்தாலும் பிரசுரித்த அந்த நாட்களில் 300க்கும் மேற்ப்பட்ட வாசகர்கள் தரிசித்த பதிவாகவும் இது இருக்கிறது. பதிவை காண இங்கே கிளிக்குங்கள். 

Number 18 காவலன்-The bodyguard

இதுவும் சென்ற வருடத்தின் இரண்டாம் மாதம் வெளியிட்ட பதிவு. தலைப்பை பார்த்து யோசிக்காதீர்கள். காவலன் திரைப்படம் சூடு பிடித்திருந்த நேரம் அது ஒரு கணினிக்கான முழுமையான இலவச Anti malware பற்றிய பதிவென்பதால் தலைப்பு கச்சிதமாக பொருந்திவிட்டது. 100க்கும் மேற்ப்பட்ட வாசகர்கள் தரித்த பதிவு. முழுமையாக காண இங்கே 

Number 17 உங்களுக்காக புதிதாய் ஒரு சமூக வலைப்பின்னல் 

கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 10ம் திகதி இங்கே பகிர்ந்து கொண்ட பதிவு இது. பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்க்கு இணையான இலகுவான ஒரு பதிய சமூக வலைப்பின்னல் அறிமுகம் நீங்களும் சென்று பாருங்கள்


Number 16 ஸ்கைப் நண்பர்களை தேட இலகு வழி

உலகெங்கும் உள்ள அனைவரோடும் இணையத்தை பயன்படுத்தி பேச உதவுகின்ற ஒரு மென்பொருள் Skype என அறிவோம். ஆனாலும் சமூக வலைத்தளங்கள் போல புதிய நண்பர்களை Skype மென்பொருளிலும் தேடிக் கொள்ள உதவுகின்ற மற்றுமொரு இணையத்தளம் பற்றிய அறிமுக பதிவு

Number 15 Notepad-அறிந்ததும் அறியாததும்

எளிமையான Text editing வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு இலவச மென்பொருள் Notepad என்பது தெரியும். ஆனால் அந்த Notepad மென்பொருளைக் கொண்டு HTML வலைப்பக்கங்கள் மட்டுமல்ல கணினியையே கதிகலங்க வைக்கும் வைரஸ் செய்நிரல்கள் வரை உருவாக்கலாம். இத்தனை காலமும் நீங்கள் அறிந்திருந்த இம் மென்பொருளின் அறியாத பல விடயங்களை சொல்லித்தருவதற்கென்றே சென்ற வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட பகுதி இது.  

Number 15 மிரட்டும் கார் பந்தயம் - இம்மாத கணினி விளையாட்டு 

கணினி விளையாட்டுப் பிரியர்களுக்காகவே ஒவ்வொரு மாதமும் நான் எழுதுகின்ற பதிவு இது. உலகப் புகழ் பெற்ற Need for Speed கார்ப் பந்தய விளையாட்டின் Most wanted பதிப்பைப் பற்றி ஒரு பார்வை. அதனோடு Bonus ஆக இலவச தரவிறக்க சுட்டிகளையும் கொடுத்திருந்தேன். அதனாலோ என்னமோ பிரசுரித்த அந்த நேரம் தரிசித்த மொத்த வாசகர்கள் 200க்கும் மேல். சில வேளை உங்களுக்கும் பயன்படலாம்.

Number 14 தரவிறக்கத்திற்கென தனியாக ஒரு மென்பொருள் FlashGet

இணையம் எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் பெரும் ஆதிக்கத்தை ஏற்ப்படுத்தியிருக்கிறதோ, அது போலவே அதனோடு இணைந்த தரவிறக்கமும் தவிர்க்க முடியாததுதான். அவ்வாறானவர்களுக்காக ஒரு இலவச தரவிக்க அமன்பொருளை அறிமுகப் படுத்தியிருந்தேன். சென்ற வருடத்தின் ஜூலை மாதம் இங்கு நான் பகிர்ந்து கொண்ட பதிவு. எமது
கணினியின் தரவிறக்கங்களை இலகுவாக ஆளுகை செய்ய வழி செய்யும் இம் மென்பொருள் மூலம் Torrent சார்ந்த கோப்புகளையும் தரவிறக்கலாம் என்பது கூடுதல் தகவல். இங்கே 

Number 13 ISO Image File ஆதி முதல் அந்தம் வரை

ISO கோப்புகள் பற்றி ஒரு முழுமையான விளக்க பதிவாக எழுதியிருந்தேன். அதுமட்டுமன்றி ISO கோப்புகளை குறுவட்டுகளில் பதியாமலே அவற்றினுள் உள்ள கோப்புகளை பிரித்தெடுப்பது எவ்வாறு எனவும் அதற்கான ஒரு மென்பொருள் அறிமுகமும்
                                                                                                                                   
Number 12 நீங்கள் விரும்பாத இணையப்பக்கங்களை எந்தவொரு மென்பொருளின் துணையுமின்றி தடுக்கலாம்..!

நீங்கள் விரும்பாத, தரிசிக்ககூடாது என நினைக்கிற இணையப்பக்கங்களை அல்லது உங்கள் பிள்ளைகள் உலாவரகூடாது என நீங்கள் நினைக்கிற பக்கங்களை தடுப்பது பற்றிதான் இந்தப் பதிவு. அதுவும் இந்த வேலையை விண்டோஸ் இயங்கு முறைமையில் உள்ள ஒரு குறுக்கு வழியை பயன்படுத்தி செய்து விடலாம். மேலும் படிக்க 

Number 11 நீங்கள் விரும்பும் File ஐ PDF ஆக மாற்றலாம்

சென்ற வருடத்தில் அதிகமாக பிடிஎஃப் (PDF) கோப்புகளைப் பற்றி எழுத வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்றுதான் இந்தப் பதிவு. அதாவது உங்களிடம் உள்ள ஒரு ஆவணத்தை இலகுவாக PDF வடிவத்திற்க்கு மாற்ற உதவ கூடிய இலவச மென்பொருள் பற்றிய பதிவு. பலருக்கு பயன் தரக்கூடிய மென்பொருள்.  

தொடரும்...

...இன்ட்லி மற்றும் தமிழ் 10 திரட்டிகளில் வாக்களித்து பதிவை பிரபலமாக்குங்கள்...4 ஜனவரி, 2012

என் பதிவுலகில் பின்நோக்கி ஒரு பயணம் போகிறேன்...


ஒரு மாதிரியாக பலத்த எதிர்பார்ப்புகளோடு அனைவரும் எதிர்பார்த்திருந்த 2012ம் வருடம் பிறந்து விட்டது. எல்லா கொண்டாட்டங்களும் முடிந்து இயல்பான இயந்திர வாழ்க்கைக்கு எல்லோருமே திரும்பியிருக்கின்ற நேரம், என்னுடைய பதிவுகளும் வழமை போலவே இநத வருடமும் தொடர்கின்றன. இந்தப் பதிவின் தலைப்பு பலருக்கு ஆச்சர்யமளித்திருக்கலாம், ஏனெனில் இந்த வலைப்பதிவில் தொழில்நுட்பம் தவிர்ந்து நான் எழுதுகின்ற முதலாவது பதிவு இது. சுயபுராணம் பலருக்கு பிடிக்காத விடயம், இந்தப் பதிவு முழுக்க முழுக்க அப்படிப்பட்டது என்பதால் அவ்வாறானவர்கள் இத்தோடு நிறுத்தி கொண்டால் நன்றாயிருக்கும்.

Share With your friends