29 டிசம்பர், 2011

அன்ட்ராயிட்டும் (Android) இனி தமிழ் பேசும் - ஒரு Application அறிமுகம்


இணையத்தையும் கைத்தொலைபேசிகளையும் வியந்து பார்த்த காலம் மாறி அவற்றை எம்முடனே எடுத்துச் செல்லுகின்ற அளவுக்கு அவை இரண்டும் அபரிமிதமாக வளர்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக Smart phone என்பதுதான் கைத்தொலைபேசிகளின் இன்றைய Trend. Smart phone மோகம் இன்று வயது, பால் வேறுபாடின்றி ஒரு காய்ச்சல் போலவே பரவியிருக்கிறது.


இத்தனைக்கும் அவை கொண்டுள்ள சிறப்புத் தன்மைகளே காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் Smart phone என்பது சாதாரண கைத்தொலைபேசிகள் என்பதையும் தாண்டி கணினியின் ஒரு சில இயல்புகளையும் தன்னுள் உள்வாங்கி கொண்ட சாதனமாக காணப்படுகிறது. Smart phone களைப் பற்றி பேசும் போது இந்தச் சொல்லையே தனக்கு மட்டுமே உரியது என பிடித்து வைத்திருப்பது அன்ட்ராயிட் (Android) இயங்கு முறைமைதான். என்னதான் Windows mobile களும் ஆப்பிள் ஐ-போன்களும் இதனோடு மல்லுக்கு நின்றாலும் ஆடம்பரத்தில் மட்டுமன்றி விலையிலும் சற்று குறைந்தே இருக்கின்ற காரணத்தால் அன்ட்ராயிட் (Android) இயங்குதள கைபேசிகள் அனைவர் மனங்களோடும், இல்லை..இல்லை அனைவர் கைகளிலும் இலகுவில் ஒட்டிக் கொள்கிறது. இத்தனைக்கும் மேலாக இணைய ஜாம்பவான், புதுமை அரசன் கூகிளின் (Google) தயாரிப்பு இது. இதைவிடவும் ஒரு காரணம் வேண்டுமா?


இவ்வாறான இந்த அன்ட்ராயிட் (Android) இயங்குதள கைபேசிகள் போன்ற Smart phone களில் Application என்பவை பிரபல்யமானவை. அதாவது கணினிக்கு மென்பொருள் போல. இவைகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும் என்பது குறிப்பிட தெரியவில்லை. ஏனென்றால் மணிக்கொரு முறை 100 க்கும் மேற்ப்பட்ட Application களை Android market உள்வாங்கி கொள்கிறது. இந்த ஆயிரக்கணக்கான Application களில் தமிழ் ஆர்வலர்களுக்காக, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது போல எங்கள் செம்மொழியை உங்கள் அன்ட்ராயிட் (Android) தொலைபேசியிலும் முதன்மை மொழியாக பாவிக்க ஒரு Application இருக்கிறது.


இந்த Application ஐ நான் தந்திருக்கின்ற இணைப்பில் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். உங்கள் அன்ட்ராயிட் (Android) தொலைபேசிக்கான முழுமையான ஒரு தமிழ் யுனிக்கோட் (Unicode) விசைப்பலகையாகும்.
இதனை பயன்படுத்தி Phonetic எனப்படுகின்ற ஒலிக்குறிப்பு முறையில் இலகுவாக தமிழை தட்டச்சு செய்யலாம். ஒலிக்குறிப்பு முறை என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் அறியாதவர்களுக்காக சொல்கிறேன். உதாரணமாக நீங்கள் தமிழில் "வணக்கம்" என தட்டச்சு செய்ய Vanakkam என தட்டச்சு செய்து Space ஐ அழுத்த அது தமிழில் தோன்றும். 

இந்த சிறிய Application ஐ உங்கள் அன்ட்ராயிட் (Android) கைத்தொலைபேசியின் எந்த இடத்திலும் பயன்படுத்தலாம். அதாவது குறுஞ்செய்திகள் (Instant messages), அரட்டை, இணையத் தேடல் அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஒரு தமிழ் வலைப்பதிவராக இருந்தால் இந்த Application ஐ பயன்படுத்தி ஒரு பதிவே எழுதி விடலாம். செம்மொழியாம் தமிழ் மொழியை இனி தொழில்நுட்பத்தோடு நுகருங்கள். அன்ட்ராயிட்டும் (Android) இனி தமிழ் பேசும். மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கின்றேன். 


..பதிவு பிடித்திருந்தால் வழமை போல இன்ட்லி மற்றும் தமிழ்10 திரட்டிகளில் ஓட்டளித்து பதிவை பிரபலமாக்குங்கள்..     

25 டிசம்பர், 2011

போர்க்களம் (Battle Field 3) இம்மாத கணினி விளையாட்டு + Downlaodஇந்தப பதிவை தேடி வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் இனிமையான நத்தார் வாழ்த்துக்களும். இந்த மாதத்துக்கான கணினி விளையாட்டொன்றை நான் இப்போது உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகின்றேன். 

அதாவது தற்க்காலங்களில் நம்மில் எத்தனை போர் யுத்தகளத்தை நேருக்கு நேர் சந்தித்திருக்கிறோம். அது அரிதே..! ஆனால் ஒரு நிஜ யுத்த களத்தை நம் கண்முன்னே கொண்டு வருகிறது இந்த Battle field விளையாட்டு. இந்த பெயர் பலருக்கு பழகிப்போனது. ஏனெனில் இப்போது வந்திருப்பதுவோ இதனுடைய 3ம் பதிப்பு. அப்படியானால் இது எவ்வளவு பிரபலமானது என்பதை நான் சொல்லி அறிய வேண்டியதில்லை. 

எனவே இதனுடைய சில சிறப்புக்களை சுருக்கமாக பார்க்கலாம்.

இதிலுள்ள முதலாவது முக்கிய அம்சம் மற்ற போர் முனை  விளையாட்டுக்களைப் போல அல்லாமல் Multiplayer வகையில் விளையாடக்கூடியதாகவும் அமைந்துள்ளது. வாகனங்களைக்கூட இதில் பயன்படுத்தலாம். அதுமட்டுமன்றி ஒவ்வொரு நிலையையும் (Levels) நீங்கள் அழகான ரம்மியமான சூழலில் விளையாடலாம்.  இவை எல்லாவற்றையும் விட கூடுதல் வசதி நீங்கள் ஒரு குழுவாக விளையாடலாம் என்று சொல்லுவதை விட அதுதான் கட்டாயம். உங்களுக்கு 4 வீரர்களின் குழு தரப்படும். என்னதான் கணினி விளையாட்டு நன்றாக அமைக்கப்பட்டாலும் இதனிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதையும் நான் சொல்லி விடுவது சுகம். 

குறைகள் என்றால் இதில் அமைக்கப்பட்டுள்ள நிலைகள், ஆழமாக இந்த விளையாட்டில் ஈடுபடுகிற ஒருவருக்கு திருப்தியை அளிக்காது. ஏனெனில் ஒரு மந்தமான நகர்வே அனைத்து நிலைகளிலும் இருக்கும். அடுத்தது பலர் எதிர்பர்க்கின்ற ஒரு விடயம் அதிக எண்ணிக்கையான நிலைகள். ஆனால் இந்த விளையாட்டில் மொத்தம் இருப்பது 6 நிலைகள்தான். 
இதை தவிர வழமையான அம்சங்களோடு ஒரு நல்ல பொழுது போக்கு விளையாட்டாகவே இது திகழ்கிறது. இதனுடைய System requirement கொடுத்துள்ளேன். அதை கவனமாக படித்து நான் தந்துள்ள இணைப்பில் இருந்து இதனுடைய Pirate பதிப்பை தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்........

System requirements:
* Operating system: Windows Vista / Windows 7;
* CPU: 2 GHZ DUAL CORE (CORE 2 DUO 2.4 GHZ OR ALTHON X2 2.7 GHZ);
* RAM: 2 GB;
* Sound Card: DirectX compatible sound card;
* Video: DIRECTX 11 COMPATIBLE WITH 1024 MB RAM (NVIDIA GEFORCE GTX 560 OR ATI RADEON 6950);
* Free HDD: 14 gb of free space.

Torrent தரவிறக்கம்

தரவிறக்க சுட்டி 

...வழமை போல இன்ட்லி மற்றும் தமிழ் 10 திரட்டிகளில் ஓட்டளியுங்கள்... 

17 டிசம்பர், 2011

ஒரு Shutdown Timer நீங்களே உருவாக்கலாம்..!


மீண்டும் டிசம்பர் மாதத்தின் மற்றுமொரு பதிவினூடாக உங்களோடு இணைகின்றேன். சென்ற முறை நான் எழுதிய தொடரறா துருவல் பற்றி பலர் உங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தீர்கள். மற்றும் அந்த பதிவினுடைய 3 பகுதிகளிலும் இணைந்திருந்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. 

அது போலவே இன்றும் உங்களோடு ஒரு வித்தியாசமான விடயம் பற்றி பேச போகிறேன். Shutdown என்பது என்ன? என்று திடீரென கேட்டால் கணினி துறையோடு ஒன்றித்தவர்கள் அனைவரும் இலகுவாக சொல்லிவிடுவோம். அதனை எப்படி செய்வது என்பதுவும் எமக்கு தெரியும்.ஆனால் அதையே ஒரு Timer மாதிரி அதாவது கணினி எப்போது Shutdown ஆக வேண்டும், என்பதை ஏனென்றால் கணினியில் சில நேரங்களில் நீண்ட நேரம் வேலை செய்கின்ற போது வேலை முடிந்ததும் அதனை அணைக்க சோம்பல் படுபவர்களுக்கு இது உதவும். நீங்கள் வேலை தொடங்கி எப்போதுவரை கணினி விழித்திருக்க வேணடும் என்பது பற்றி நாங்களே சுயமாக ஒரு Utility தயாரிக்கலாம். எவ்வாறு என பார்ப்போம்.

முதலில் உங்கள் விண்டோஸ் இயங்கு தளத்தில் (XP/7/Vista) Desktop இல் வலது கிளிக் செய்ய தோன்றும் Menu வில் New என்பதற்க்கு சென்று Shortcut என்பதை தேர்ந்தெடுங்கள். பின் கீழுள்ளது போல தோன்றும்.


இதில் Type the location of the item என்பதில் shutdown -s -t 120  என தட்டச்சு செய்யுங்கள். இங்கு 120 என்பது உங்கள் கணினி எவ்வளவு நேரத்தில் அணைய (Shutdown) வேண்டும். என்பதை குறிக்கும். எப்போதும் நேரத்தை செக்கன்களிலேயே குறிப்பிட வேண்டும். அதன்படி 120 என்பது 2 நிமிடங்களை குறிக்கும். 1 மணித்தியாலம் எனின் 3600 என குறிக்க வேண்டும். உங்களுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமோ அதை நிமிடத்திற்கு மாற்றி 60ஆல் பெருக்க பெறப்படும் பெறுமானத்தை வழங்க வேண்டும். நான் குறிப்பிட்ட Code இல் 120ற்க்கு பதிலாக பிரதியீடு செய்யுங்கள்.

பின் Next அழுத்த தோன்றும் மெனுவில் உங்கள் Utility இற்க்கான பெயரை வழங்கி Ok செய்ய Desktop இல் அது உருவாகிவிடும். பின் நீங்கள் வேலை செய்ய கணினியில் அமரும் போது உங்கள் வேலை முடிவடையும் நேரத்தை கணக்கெடுத்து இந்த Utility யை இயக்கவும். நீங்கள் கொடுத்த நேரத்திற்க்கு ஏற்ப கணினி அணைய வேண்டிய நேரத்தை கணக்கெடுத்து கணினி தானாக அணையும். என்ன..இது இலகு தானே..

...வழமை போல இன்ட்லி மற்றும் தமிழ்10 தளங்களில் ஓட்டளித்து இந்த பதிவை ஏனையவர்களோடும் பகிருங்கள்...

15 டிசம்பர், 2011

Offline Hacking -உத்தரவின்றி உள்ளே வா..! பகுதி 03


சென்ற பதிவின் தொடர்ச்சி...

பலர் எதிர்பார்த்திருந்த பதிவு.. வேலைகளின் காரணமாக கொஞ்சம் தாமதமாகிவிட்டது. தொடரறா கணினிகளினை துருவுவது (Hacking) எவ்வாறு என்பது பற்றிய பதிவின் மூன்றாவது பகுதி. எதிர்பார்த்து எதிர்பார்த்து வாசிக்கின்ற உங்களுக்கு நன்றிகள். நேரடியாகவே விடயத்துக்கு போகலாம். அதாவது சென்ற இரண்டு பதிவுகளிலும் துருவல் (Hacking) என்றால் என்ன? அதனுடைய அடிப்படை விடயங்கள், துருவுவது (Hacking) எவ்வாறு? போன்ற விடயங்களையும் அதற்க்காக நாம் பயன்படுத்தப் போகின்ற மிக ஆபத்தான ஒரு மென்பொருள் பற்றியும் சொல்லியிருந்தேன்.

முந்தைய பதிவில் நான் சொன்னபடியே அந்த மென்பொருளை குறுந்தட்டில் (CD) பதிந்து செய்முறை விளக்கங்களுக்காக காத்திருக்கிறீர்கள். எனவே எவ்வாறு செய்வது என பார்ப்போம். உங்களின் இலகுத் தன்மைக்காவும் பெரிய பதிவென்பதால் சுவாரஸ்யம் அவசியம் என்பதற்காகவும் இந்த படிமுறைகளை ஒரு படையெடுப்பு போல கற்பனை செய்து ஒவ்வொரு Mission களாக தந்துள்ளேன்.

Mission 01
முதலில் உங்களிடம் உள்ள அந்த குறுந்தட்டை பயன்படுத்த முதல் நீங்கள் எந்தக் கணினியின் கடவுச் சொல்லை திருடப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்து பின் அதனுடைய Boot Menu வினுள் செல்ல முடிகிறதா என பாருங்கள். (அதென்ன Boot Menu என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முயன்றால் அதற்க்கு இன்னும் 3 தொடர்பதிவுகள் வேண்டும்.) Boot Menu வினுள் செல்ல பொதுவாக Intel Motherboard களாக இருந்தால் F2 கீயாக இருக்கும் அல்லது குறிப்பிட்ட கணினியின் ஆரம்பத்திலேயே அதற்க்கான விசை தோன்றும். அதனை பயன்படுத்தி உள்ளே செல்லுங்கள். அங்குதான் பிரச்சினை இருக்கிறது. இலகுவாக Boot Menu வந்து விட்டால் Level 1 சரி. இல்லாவிட்டால் குறித்த கணினியின் Boot menu விற்க்கான கடவுச்சொல்லை திருத்த வேண்டும். அதற்க்கு அந்த கணினியின் CMOS Battery கழற்றி சிறிது நேரத்தின் பின் போட்டு இயக்கினால் சரி. 

முன்னர் சொன்னது போல Boot Menu வினுள் சென்று First Boot device ஆக CD-ROM ஐ மாற்றுங்கள். ஆனால் புதிய ரக கணினிகள் என்றால் Winternals குறுந்தட்டை போட்டதும் கணினியை மீளியக்கும் போது Press Any Key to Boot from CD என்ற செய்தி வரும் அப்போது ஏதாவது ஒரு கீயை அழுத்தி Winternals குறுந்தட்டில் இருந்து கணினியை Boot செய்யுங்கள்.

இப்போது கீழுள்ளது போல திரையை அடைவீர்கள்.


Mission 02
படத்தில் காட்டப்பட்டிருப்பது போல Lock Smith என்பதுதான் கணினியின் கடவுச் சொல்லை திருடுவதற்க்கான கள்ளச் சாவி. இதனை தெரிவு செய்யுங்கள். பின் கீழுள்ளது போல விண்டோ தோன்றும்.


Mission 03
கள்ளச் சாவி கிடைத்துவிட்டது. இனியென்ன அடுத்த படிமுறை, நீங்கள் திருட வேண்டிய கணினி பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இதில் முக்கியம் என்னவென்றால், குறித்த கணினியில் எத்தனை User Account இருக்கின்றன. அதில் எவை Administrator மற்றும், எவை Limited போன்ற விவரங்கள் உங்கள் விரல் நுனியில் இருக்க வேண்டும். ஏனெனில் குறித்த கணினியின் Administrator கணக்கை கீழுள்ள படிமுறையில் தெரிவு செய்ய வேண்டும்.


Mission 04
பின் அதன் கீழ் New Password என்பதில் குறித்த கணக்கிற்கான புதிய கடவுச்சொல்லை வழங்குங்கள். பின் Confirm Password என்பதில் அதே கடவுச் சொல்லை மீளவும் வழங்குங்கள். பின் Finish. 

இனியென்ன அந்த அப்பாவி கணினி இனி உங்கள் வசம்.. கணினியை மீள இயக்கி (Restart) குறுந்தட்டை வெளியே எடுங்கள். உங்களின் புதிய கடவுச்சொல்லை வழங்கி கணினியை திறக்கலாம்... இப்பொது நீங்களும் ஒரு Offline Hacker என்பதை ஒத்து கொள்கிறீர்களா... 

குறிப்பு: நான் சொன்ன இந்த மென்பொருளை உங்கள் தனிப்பட்ட கணினியின் கடவுச் சொல் மறந்து போகின்ற வேளைகளில் அதனை மீட்டெடுக்க பயனபடுத்தலாம். அதுபோல தொடர்ந்து இந்த பதிவின் 3 பகுதிகளுடனும் இணைந்திருந்த உங்களுக்கு நன்றிகள்... நான் சொன்னது போல செய்து விட்டேன. உங்கள் வேலை 

...வழமை போல Intli மற்றும் Tamil 10 ஓட்டளித்து உங்களைப் போலவே ஏனைய நண்பர்களையும் பயனடைய செய்யுங்கள்...11 டிசம்பர், 2011

u Torrent மென்பொருளின் தரவிறக்க வேகத்தை அதிகரிக்க


வாரத்தின் முதல் நாளில் உங்களோடு இணைகின்றேன். இம்முறை நான் சொல்லப்போகின்ற இந்த மென்பொருள் நம்மில் பாதிப் பேருக்கு அறிமுகமானது. இணையத்தில் அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளை (Files) பகிர்ந்து கொள்ள/தரவிறக்கி கொள்ள பயன்படுத்துகின்ற Torrent தரவிறக்கத்தின் ஒரு பிரிவு (Client) என்று சொல்லக் கூடிய uTorrent மென்பொருளாகும்.  இதனை பொதுவாக பாரியளவிலான கொள்ளளவு (Capacity) கொண்ட தரவுகளை தரவிறக்கம் செய்ய பயன்படுத்துவோம்.

Torrent என்பது Peer 2 Peer வலையமைப்பு (Network Topology) அடிப்படையில் அமைந்த தரவிறக்கமாகும். இதனால் சாதாரண தரவிறக்க வேகத்தை விட அதிகளவான தரவிறக்கம் இதில் காணப்படும். ஆனால் குறிப்பிட்ட தரவிறக்க வீச்சினுள்ளே தான் (எமது இணைய இணைப்பு வேகமாக இருந்தாலும்) இதில் தரவிறக்க முடியும். இந்த பிரச்சினையை தீர்க்க வழிமுறை இதோ... 

  1. முதலில் உங்கள் கணினியில் உள்ள இம் மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  2. பின் Preference என்ற பகுதிக்கு செல்லுங்கள். (Option இனுள் காணப்படும்)

இதில் Connection என்பதில் மேலுள்ளது போன்று அமைப்புக்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். பின் Bandwidth என்பதை தேர்வு செய்ய மேலுள்ளது போல தோன்றும் அதில் Global maximum number of connected peers per torrent என்பதை 500000 எனவும் Maximum number of connected peers per torrent என்பதை 500000 எனவும் Number of upload slots per torrent என்பதை 50 எனவும் மாற்றுங்கள்.


பின் Bit Torrent என்பதை தேர்வு செய்ய மேலுள்ளதை போல தோன்றும். அதில் Protocol Encryption ஏன்ற பகுதியில் Outgoing என்பது Disabled ஆக இருந்தால் Enabled ஆக மாற்றுங்கள்.


இறுதியாக Advance என்ற பகுதியில் net.max_halfopen என்பதை கண்டுபிடித்து அதன் Value வை 50 ஆக மாற்றுங்கள்.

பின்னர் வழமை போல Apply கொடுத்து Ok செய்யுங்கள். இனி உங்களின் Torrent தரவிறக்கங்கள் முன்னரை விட வேகமாக இருக்கும். ஆனால் Torrent சார்ந்த மென்பொருள்கள் ஒழுங்காக இயங்க உங்கள் இணைய இணைப்பு வேகம் குறைந்தது 350KB/s ற்க்கு மேற்பட்டிருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

...உங்கள் வருகைக்கு நன்றி... வழமைபோல Intli மற்றும் Tamil 10 வலைத்தளங்களில் ஓட்டு அளித்து இந்தப் பதிவு ஏனையோரையும் சென்றடைய உதவுங்கள்..

10 டிசம்பர், 2011

இணையத்தால் வசமாகா கணினி எது? -இம்மாத மென்பொருள்


இந்த மாதத்தினுடைய மென்பொருள் பற்றிய பதிவினூடாக உங்களை சந்திக்கின்றேன். வழமை போலவே இந்த மாதமும் ஒரு புதிய (சிலருக்கு பழையதாய் இருக்கலாம்) மென்பொருள் பற்றி சொல்லப் போகின்றேன். இதனுடைய பெயர் Team Viewer என்பதாகும். அதாவது முற்றிலும் இலவசமான Freeware மென்பொருள். 

இணையம் சார்ந்து பயன்படுத்த வேண்டிய மென்பொருள். அதாவது நமக்கிடையே பொதுவாக தரவுகளை (அவை கோப்புகளாகவோ அல்லது அஞ்சல்களாகவோ இருக்கலாம்) இணையமூடாக பரிமாறிக் கொள்வது வழமை. இதிலும் சிலர் இணையத்தில் Screen sharing என்று பேசிக்கொள்வதும் உண்டு. அதாவது இணைய இணைப்பினூடாக எமது "கணினி திரையை" இன்னொருவருடன் பகிர்ந்து கொள்கின்ற நிலை என்று சொல்லலாம். இதனை செய்ய பிரத்தியேக மென்பொருள்கள் காணப்படுகின்றன. ஆனாலும் இதனை பிரபலமான Skype மென்பொருள் மூலமும் செய்யலாம் என்பதை அறிந்திருப்பீர்கள்.

ஆனால் இணையமூடாக எமது Internet Protocol (IP) ஐ மட்டும் வைத்து எமது கணினியையே இனுனொருவருடன் பகிரலாம். அது இந்த Team Viewer இன் மூலம் சாத்தியம். இம் மென்பொருளைப் பற்றி தொடர்ந்தும் பார்ப்பதற்கு முதல் இதனுடைய உத்தியோகபூர்வ தளத்திலிருந்து இதனை பதிவிறக்கி (Download) நிறுவிக் கொள்ளுங்கள். இதில் கூடுதல் வசதி இதனை Portable ஆகவும் பயன்படுத்தலாம். அதற்கு நிறுவும் போது Install என்பதற்கு பதிலாக Run என்பதை கொடுக்கவும்.

பின்னர் இம் மென்பொருளை திறக்கும் போது கீழ்வருமாறு தோன்றும். இதில் உங்களுக்கென்று ஒரு ID மற்றும் கடவுச்சொல் (Password) தரப்பட்டிருக்கும். இதன் அருகே நீங்கள் யாருடன் தொடர்பை ஏற்படுத்தப் போகிறீர்கள் என்பதற்கான விபரங்கள் தோன்றும்.


நீங்கள் இன்னொருவருடன் தொடர்பை ஏற்படுத்த அடுத்தவரின் கடவுச்சொல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் பாதுகாப்புக்காக இது Dynamic ஆக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு முறை இந்த மென்பொருளை திறக்கும் போதும் இதற்க்கான கடவுச்சொல் மாற்றமடையும். அடுத்து Remote Support, Presentation, File transfer, VPN என்ற நான்கு தெரிவுகள் காணப்படுகின்றன். முதலில் உங்கள் நண்பரின் ID ஐ வழங்கி Remote support ஐ வழங்கி Connect partner பட்டனை அழுத்த உங்கள் நண்பரின் கடவுச்சொல்லை கேட்டும். பின் அதனை வழங்கினால் உங்கள் நண்பரின் கணினி இனி உங்கள் வசம். உங்கள் தேவையை பொறுத்து இணைப்பு முறையை (Connection method) மாற்றலாம். கோப்புகளை மட்டுமே பரிமாற்ற நினைத்தால் File transfer என்ற வசதியை பயன்படுத்தலாம். 

...உங்கள் வருகைக்கு நன்றி... வழமைபோல Intli மற்றும் Tamil 10 வலைத்தளங்களில் ஓட்டு அளித்து இந்தப் பதிவு ஏனையோரையும் சென்றடைய உதவுங்கள்...

Offline Hacking - உத்தரவின்றி உள்ளே வா.. பகுதி 02


கடந்த பதிவின் தெடர்ச்சி.......

பலர் ஆவலோடு எதிர்பார்த்த இந்த பதிவு இரண்டாம் பாகம். நான் ஏற்கனவே சொன்னது போல இன்று வெளியிடுகிறேன். அதாவது இணையத்தோடோ அல்லது வேறு ஏதும் வலையமைப்புகளோடோ இணையாத தொடரறா (Offline) நிலையில் உள்ள கணினிகளினை எவ்வாறு துருவல் (Hacking) செய்வது? என்பது பற்றிய பதிவுதான் இது. இதில் முதலாவது பகுதியில் தருவல் பற்றியும் அடிப்படைகள் பற்றியும் சொல்லியிருந்தேன். இந்தப் பதிவில் எவ்வாறு துருவல் (Hacking) செய்யப் போகிறோம். அதற்க்கு என்ன ஆயுதத்தை பயன்படுத்தப்போகிறோம் என்பது பற்றிய ஒரு அறிமுகம்.

பொதுவாக தொடரறா நிலையில் உள்ள கணினிகள் எனப்படுவது நாம் சாதாரணமாக எமது வீடுகளில் வைத்திருக்ககூடியவை அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களி்ல் உள்ளவையே ஆகும். இவை பொதுவாக விண்டோஸ் இயங்குமுறைமை (Operating System) கொண்டே இயக்கப்படுகிறன. (இந்த துருவலும் விண்டோஸ் அடிப்படை கணினிகளில் மாத்திரமே சாத்தியம்). விண்டோஸ் இயங்கு முறைமைகளில் எமது தரவுகள் User Account என்ற பயனர் கணக்குகள் மூலமே தனியாள் மயப்படுத்தப்படுகிறன (Personal). ஒருவருடைய தரவுகளை கையாள வேண்டுமெனில் அவருடைய User Accountsக்கான கடவுச் சொற்கள் எமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதிலும் Administrator கணக்கு மூலம் இன்னொருவருடைய உரிமைகளையும் கட்டுப்படுத்தலாம்.


ஆகவே இப்போது நாம் ஒரு கணினியின் வன்தட்டினுள் செல்ல அந்த கணினியின் பயனர் கணக்கை உடைக்க வேண்டும். எனவே இதனை செய்ய சில பிரத்தியேக மென்பொருள்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் Winternals_ERD_Commander_2007  இதனை பணம் கொடுத்து பெற வேண்டுமென்றாலும் நான் தருகிற இணைப்பில் இலவசமாக பதிவிறக்கலாம் (Download). இது ஒரு போலி இயங்கு முறைமை அதாவது Live CD என்று சொல்வோம். OEM அடிப்படையிலான மென்பொருள். சாதாரணமாக வெறும் குறுந்தட்டை (CD) வைத்தே கணினியின் வன்தட்டை (Hard Disk) இயக்கலாம். எனவே இது ISO Image கோப்பாக கிடைக்கும். இதனை என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். உடனே ஒரு குறுந்தட்டில் பதிந்து எடுங்கள். ISO Image கோப்புககள் பற்றிய அடிப்படை அறிவு இல்லாவிட்டால் நான் எழுதிய இந்த பதிவை படியுங்கள்.
அவ்வாறு நீங்கள் பதிந்த குறுந்தட்டு ஒரு Bootable CD ஆக வரும். இதனை தான் நாம் கணினியின் கடவுச் சொல்களை திருட பயன்படுத்தப் போகிறோம்.

தொடர்ந்தும் மென்பொருளை தரவிக்கி குறுந்தட்டில் பதிந்து விட்டீர்கள். இதனை எவ்வாறு பயன்படுத்துவது? முடிந்தால் சுயமாக பயன்படுத்தி பாருங்கள். அல்லது செய்முறை விளக்கம் நான் முதலிலேயே சொன்னது போல 3ம் பகுதியில் எதிர்பாருங்கள்.

...உங்கள் வருகைக்கு நன்றி... வழமைபோல Intli மற்றும் Tamil 10 வலைத்தளங்களில் ஓட்டு அளித்து இந்தப் பதிவு ஏனையோரையும் சென்றடைய உதவுங்கள்..

பகுதி 03

9 டிசம்பர், 2011

Offline Hacking - உத்தரவின்றி உள்ளே வா.. -பகுதி 01)விரைவில்............ Hacking ஆரம்பம்..  


கணினி, இணையம் இவை இரண்டையும் பற்றிக் கேட்டால் "தெரியாது" என்று சொல்கின்ற அளவுக்கு இன்று ஒருவரும் இல்லை என்று சொல்லலாம், அந்தளவுக்கு இவை இரண்டினதும் தாக்கம் மனிதரிடையே மொழி, வயது, இன பாகுபாடின்றி ஊடுருவியிருக்கிறது. நம்மில் பலர் நமது இவை இரண்டையும் எந்தளவுக்கு அறிந்து வைத்துள்ளோம் என கேட்டால் அவரவர் தேவைக்கு ஏற்ப என்று சொல்வீர்கள். ஆனால் இதையே முழு மூச்சாக கொண்டவர்கள் இந்த துறையுடனேயே ஒன்றித்தவர்களுக்கான பதிவு இது. ஏனெனில் ஒவ்வொரு துறையை எடுத்தாலும் அவை கட்டங்களாக பிரிக்கப்பட்டிருப்பது போல Information Technology (IT) என்கின்ற தகவல் தொழில்நுட்ப துறையும் சில கட்டங்களை (Levels) கொண்டிருக்கிறது. அவை என்னென்னவென்று அந்த துறையோடே இருப்பவரகள் நன்கு அறிவார்கள். சுருங்க சொன்னால் "சாதாரணமாக கணினியில் நாம் கற்பது தொடங்கி கணினிக்கு நாம் கற்றுக் கொடுப்பது வரை இதனை ஆங்கிலத்தில் Programming என்பார்கள்"

எனவே இந்தப் பதிவை வாசிக்கின்ற நீங்கள் இப்போது எந்த இடத்தில் (கணினி அறிவை பொறுத்தவரை) இருக்கிறீர்கள் என்பது தெரியாது..! ஆனால் தலைப்பில் சொன்னது படியே கணினித்துறையின் உச்சக்கட்டம் நான் முன் சொன்னது போல கணினிக்கு நாம் கற்றுக் கொடுப்பது/கணினியை நாம் முட்டாளாக்குவது என்று அர்த்தப்படக்கூடிய "துருவல் நடவடிக்கை" ஆங்கிலத்தில் Hacking என்று சொல்வோம். தக.தொழி.நுட்ப துறையோடு இணைந்தவர்கள் பலர் அறிய நினைக்கிற/தாங்களே செய்ய நினைக்கிற ஒரு விடயம். இதை தவிர பலர் நிகழ்காலங்களில் பேசிக் கொள்வது Facebook Hacking என்பார்கள் அல்லது Email Hacking போன்றவை பற்றி. இதனால் துருவல் (Hacking) பற்றிய அடிப்படை எண்ணம் நம்மில் பலரிடையே தேவையான அளவு இருக்கிறது. இதையே புரியாதவர்களுக்காக ஒற்றை வரியில் சொல்கிறேன்.. ஒருவரின் பாதுகாக்கப்பட்ட/தனியாள் மயப்படுத்தப்பட்ட கணினியினுள்ளோ/இணையம் சார்ந்த அமைப்பினுள்ளோ அவற்றிலுள்ள பிழைகளை சரியாக பயன்படுத்தி அனுமதியின்றி நுழைந்து கொள்வது என்று சொல்லலாம். இன்னும் தகவல் தேவைப்பட்டால் சென்ற வருடம் நான் எழுதிய இந்த பதிவை படித்து பாருங்கள்.  

தலைப்பில் சொன்னதற்க்கு சம்பந்தமேயில்லாமல் இவன் ஏன் வீணாக பாடம் எடுக்கிறான்..? என நீங்கள் அங்கலாய்ப்பது புரிகிறது. "ஆழம் அறியாமல் காலை விடக்கூடாது" என்பதற்காகத்தான் இந்த முன் ஏற்பாடு.

துருவல் (Hacking) பற்றிய அடிப்படை அறிவும் வந்து விட்டது. இனி என்ன செய்யப்போகிறோம்..?    பொதுவாக நாமறிந்த துருவல் (Hacking) என்பது இணையம் சார்ந்தது (முன் சொன்னது போன்று). ஆனால் நான் சொல்லப் போகின்ற இந்த துருவல் (Hacking) தொடரறு (Offline) நிலையில் அதாவது இணையத்தோடு இணையாத நிலையில்/ வலையமைப்போடு இணையாத நிலையில் உள்ள ஒரு கணினியிலிருந்து தகவல்களை எவ்வாறு திருடுவது பற்றிதான். 

இது மிகவும் நீண்டதொரு பதிவு எனவே அனைத்தையும் ஒரேதடவையில் சொல்லவும் முடியாது..மூச்சுப்பிடித்து வாசிக்க உங்களாலும் முடியாது ஆனபடியால் இதனை நான் பிரதான 3 பகுதிகளாக பிரித்திருக்கிறேன். இதன் முதலாவது பகுதியில் துருவல் (Hacking) அடிப்படைகளை பகிர்ந்திருக்கிறேன். தொடர்ந்து திங்கட்கிழமை எழுதப்போகின்ற பதிவில் நமது இந்த துருவல் (Hacking) வேலைக்கு பயன்படுத்தப் போகின்ற ஆயுதங்கள் பற்றிய அறிமுகம்/ விளக்கம். இறுதியாக தொடர்போகும் 3ஆவது பகுதியில் எப்படி துருவல் (Hacking) செய்வது என்று விளக்கமாக எழுதுகின்றேன். 

...உங்கள் வருகைக்கு நன்றி... வழமைபோல Intli மற்றும் Tamil 10 வலைத்தளங்களில் ஓட்டு அளித்து இந்தப் பதிவு ஏனையோரையும் சென்றடைய உதவுங்கள்..


5 டிசம்பர், 2011

Skype இல் மறைந்திருக்கும் சில Emotions

                                         
பொதுவாகவே ஸ்கைப் என்ற வார்த்தை கணினி பற்றிய அறிவற்றவர்களும் அறிந்திருக்க கூடியது. மேலும் இதன் பயன்பாட்டை பற்றி முழுதாக அறியாத பலரும் இதை பற்றி பேசி கேட்கிறோம். அப்படி என்ன இருக்கிறது இந்த ஸ்கைப் இல் என்று நீங்கள் கேட்கலாம்..! பொதுவாக நமக்கு அதிகம் பயன்படுகின்ற/நாம் பயன்படுத்துகின்ற ஒரு விடயம் விரைவில் பிரபல்யமாகிவிடும். அதற்கு மென்பொருட்களும் விதிவிலக்கல்ல.

ஆனால் கொள்ளளவிலேயே சிறிய இடத்தை கொண்ட இந்த மென்பொருள் இவ்வளவு பிரபலமானதற்கு காரணம் இது மென்பொருள் என்பதையும் தாண்டி ஒரு தொலைத்தொடர்பு சாதனத்திற்கு இணையாக உலக மக்களால் பார்க்கப்படுகிறது. காரணம் நீங்கள் அறிந்ததே. இந்த மென்பொருள் வெறுமனே அழைப்பு (Calling) வசதியை மட்டுமன்றி கூடவே அரட்டை (Chatting) வசதியையும் வழங்குகிறது. அதிலும் இணைய அரட்டையின் போது உணர்வுகளை வெளிக்காட்ட நாம் பயன்படுத்துகின்ற குறியீடுகளே Emotions/Smileys எனப்படுகிறன.

                     இயல்பாக ஸ்கைப் மென்பொருளோடு குறிப்பிட்ட Smileys வருகின்றன. ஆனால் அவை மட்டும்தான் அம் மென்பொருளோடு வருவதில்லை. கூடவே சில Emotions/Smileys மறைந்திருக்கின்றன. பின்வருமாறு உங்கள் அரட்டையில் தட்டச்சு செய்து அவற்றையும் பெற்று விடலாம்...

   குறியீடு .                                .              தட்டச்சு செய்ய 
  அடையாளம் .                                      வேண்டிய முறைபிடித்திருந்தால் மறக்காமல் Tamil 10 மற்றும் இன்ட்லி தளங்களில் ஓட்டு போட்டு செல்லுங்கள்.


     

4 டிசம்பர், 2011

கணிணியிலும் மாயாஜாலம் செய்யலாம்..!

இறுதி மாதத்தின் மற்றுமொரு பதிவினூடாக சந்திக்கின்றேன். இந்த தடவை நான் சொல்லப் போவதும் வழமை போல புதுமையானதும் வினோதமுமான விடயம். அதாவது நம்மில் பல பேர் விண்டோஸ் இயங்கு முறைமை அடிப்படையில் இயங்கும் கணினிகளையே பயன்படுத்துகின்றோம். பதிப்புக்கள் மட்டுமே வேறுபடுகின்றன. ஆனால் இந்த விண்டோஸ் இயங்குதளங்களில் சில தொழிற்பாடுகள் நம்ப முடியாதவையாகவும், விசித்திரமாகவும் இருக்கும். இது ஒன்றும் அந்த இயங்கு முறைமை (Operating System) களின் குறையில்லை. அவற்றின் பண்புகளை தவறாக பயன்படுத்தும் போது சில வினோதங்களை காணலாம். அவ்வாறு விண்டோஸ் இயங்கு முறைமையில் நான் தேடி கண்ட சில வினோதங்கள்/மாயாஜாலங்கள் இவை .. நீங்களும் செய்து பாருங்கள்..

MAGIC 01 
உங்களின் விண்டோஸ் இயங்கு முறைமை கணினியின் ஏதாவது ஒரு இடத்தில் சென்று CON என்ற பெயரில் ஒரு ஃபோல்டரை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.. என்னதான் முயன்றாலும் அது முடியாது.. ஏனென்றால் CON என்பது Windows இயங்கு முறைமையால் வேறுபிரித்தாளப்படும் CONSOLE என்ற குறியீடு. அனால் இதை செய்ய Command Prompt இல் mkdir \\.\d:\con  என டைப் செய்து Enter கீயை அழுத்த உங்கள் D ட்ரைவில் CON என்ற பெயரில் ஃபோல்டர் உருவாகிவிடும். 

இதே போல நீங்கள் உருவாக்கிய அந்த ஃபோல்டரை அழிக்க rmdir \\.\d:\con என டைப் செய்யவும்..

MAGIC 02
ஒரு வெறும் நோட்பேட் ஃபைலை திறங்கள்.. அதில் Bush hid the facts என தட்டச்சு செய்யுங்கள். பின் அதனை சேமித்து விட்டு குறித்த ஃபைலை மூடி விடுங்கள். பின் மீண்டும் அந்த ஃபைலை திறந்து நடப்பதை பாருங்கள்..

MAGIC 03
இது மைக்ராசாஃட் ஆபீஸ் தொகுப்பில் உள்ள ஒரு வினோதம். உங்கள் கணினியில் மைக்ராசாஃட் ஆபீஸ் வேர்ட் இருந்தால் அதனை திறங்கள். 
பின் அதில் =rand (200,99) என தட்டச்சு செய்து Enter கீயை அழுத்துங்கள்.. நடப்பதை பாருங்கள்.. 

இவை போல இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களை வருகின்ற பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.


இந்த தீம்கள் (Themes) உங்கள் கணினியிலும் ஒளிந்திருக்கும்..!


     மீண்டும் ஒரு முறை வருடத்தின் இறுதி மாதத்தின் முதல் பதிவினூடாக இணைகின்றேன். வித்தியாசமானதும் புதுமையானதுமான பதிவுகளுக்காகவே இருப்பது IT CORNER. அது போல இம்முறையும் நான் சொல்லப்போவது நீங்கள் கனவிலும் நினைக்காத விண்டோஸ் 7 இயங்கு முறைமையின் (Operating System) ஒளிந்திருக்கும் ஒரு வசதி/விடயம்/அதிசயம் பற்றித்தான். எனவே செய்து பார்க்க உங்களிடம் விண்டோஸ் 7 இயங்கு முறைமை அவசியம்..

                   அதாவது பொதுவாக அழகுக்கும் இலகு பாவனைக்கும் பெயர் போனது விண்டோஸ் 7 இயங்கு முறைமை. இதற்கு பெரிதும் துணை புரிவது விண்டோஸ் 7 பதிப்பில் விஷேடமாக மைக்ரோசாஃட் (Microsoft) அறிமுகப்படுத்திய தீம்கள். பல்வேறு விதமான வடிவமைப்பு அடிப்படைகளுடன் தன்னியக்கமாகவே 7 வார்ப்புருக்களை (Theme) உட்பொதிக்கப் பெற்று விண்டோஸ் 7 இனுடைய Ultimate தொகுப்பு கிடைக்கப் பெறுகிறது.(ஏனையவற்றில் எவ்வாறு வருகிறன என்பது தெரியவில்லை).

          இதற்க்கும் மேலாக சில வார்ப்புருக்களை மைக்ரோசாஃட் இணையத்தளமூடாக இலவசமாக வழங்கியும் வருகிறது. ஆனாலும் நம்மை அறியாமலே நம்முடைய இந்த விண்டோஸ் 7 இயங்கு முறைமையினுள் பல வார்ப்புருக்கள் (Themes) ஒளிந்திருக்கின்றன என்பதை அறிவீர்களா?.. அவை உங்கள் பதிப்பை பொறுத்தும் உங்கள் அமைவிடத்தை (Region) பொறுத்தும் வேறுபடுகின்றன. அவற்றை தோண்டி எடுக்க நீங்கள் தயாரா??

    முதலில் உங்கள் Windows Explore இல் சென்று Address Bar இல் பின்வருமாறு தட்டச்சு செய்து தேடுங்கள்..பின் உங்கள் Explorer பின்வருமாறு தோன்றும்.      அதாவது எல்லோருக்கும் ஒரே மாதிரி பெறுபேறு கிடைக்காது. ஏனெனில் நான் முன் சொன்னது போல பதிப்பை பொறுத்தும் உங்கள் அமைவிடத்தை பொறுத்தும் வார்ப்புருக்கள் (Themes) வேறுபடும். எனவே தோன்றுகின்ற 5 கோப்புறைகளினுள்ளும் (Folders) காணப்படுகின்ற Theme என்ற கோப்புறையை திறந்து உள்ளிருக்கும் வார்ப்புருவை நிறுவலாம். அல்லது நீங்கள் விரும்பினால் அவற்றை தனித்தனி படங்களாகவும் பெறலாம். ஒவ்வொரு நாடுகளினதும் பல வார்ப்புருக்கள் காணப்படுகின்றன. 

       இனியென்ன இப்போதே உங்கள் கணிணியையும் சல்லடை போடுங்கள்.. எத்தனை தீம்களை கண்டு பிடித்தீர்கள்.. பின்னுாட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Share With your friends