16 அக்டோபர், 2011

Folderக்குள் என்ன இருக்கிறது..?
இந்த மாதம் நாம் JR Directory எனும் மெக்பொருள் பற்றி பார்ப்போம்.JR Directory என்பது ஒரு ஃபோல்டர் அல்லது துணைஃபோல்டர் ஒன்றினுள் உள்ள அனைத்து ஃபொல்டர்களையும் ஃபைல்களையும் டெக்ஸ்ட் வடிவமாக ப்ரின்ட் செய்யக்கூடிய விதத்தில் தரக்கூடிய ஒரு மென்பொருளாகும். இம் மென்பொருளானது மிகச் சிறிய கொள்ளளவினை கொண்டதாக இருந்தாலும் மிகவும் பயனுள்ள மென்பொருளாகவே இருக்கின்றது.மேலும் இதை நமது கணினியில் நிறுவ வேண்டிய அவசியமும் இருக்காது.நாம் இப்போது இவ்
JR Directory இன் பயன்களை பற்றி சற்று ஆராய்வோம்.உதாரணத்துக்கு நீங்கள் My documentsல் உள்ள Folderகளையும் ஃபைல்களையும் பற்றி விபரங்களை பெற்றுக் கொள்ள வேண்டுமெனில்JR Directory  மென்பொருளை Ope செய்து மை டாக்குமென்ட்சை Browse செய்து Start எனும் பட்டனை அழுத்தியதும் அந்த ஃபோல்டரினுள் உள்ள அனைத்து Folderகளையும் மற்றும் ஃபைல்களையும் பற்றிய முழுமையான விவரங்களை Notepad இல் பட்டியலிட்டு காட்டும்.அதாவது ஃபோல்டர்களினதும் ஃபைல்களினதும் Name,Size
Data,Time உட்பட அது எந்த வகையினை சார்ந்தது என்பதையும் டெக்ஸ்ட் வடிவமாக மிகத் தெளிவாக Notepad இல் காட்டும்.இங்கே காணப்படும் Recurse subdirectories அதாவது Sub folders களின் விபரங்களை நமது தேவைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள முடிவதுடன் Folderகளினதும் ஃபைல்களினதும் பெயர்களை Lowercase filename வடிவத்தில் பெற்றுக் கொள்ளவும் முடிகிறது.DOS Modeஇல் ஃபோல்டர்களினதும் ஃபைல்களினதும் பெயர்களானது எட்டு எழுத்துக்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டு பட்டியலிட்டு காட்டப்படும்
என்பதை நீங்கள் அறிவிர்கள்.இங்கே DOS Style filename எனும் option மூலமாக ஃபோல்டர் மற்றும் ஃபைல்களின் பெயர்களை இலகுவாக DOS Filename வடிவத்தில் பெற்றுக் கொள்ள மிடிவது இம் மென்பொருளின் குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிறப்பம்சமாகும்.இங்கே காணப்படும் மற்றொரு Option ஆன Format எனும் Optionஇனின் மூலம் ஃபோல்டர் மற்றும் ஃபைல்களின் கொள்ளளவு பற்றிய விவரத்தை Kilobytes மூலமாகவா அல்லது Bytes மூலமாகவா என்பதனை நமது விருப்பத்திற்கேற்றால் போல தெரிவு செய்யலாம்.
இந்த JR Directoryயில் உங்களுக்கு அவசியமான ஃபோல்டர்கள் மற்றும் ஃபைல்கள் பற்றிய விவரங்களை விரும்பியவாறும் இலகுவாகவும் Text வடிவமாக பெற்று அதை Print செய்து பயனடையலாம் தானே..குறிப்பாக ஒரு சிடியில் காணப்படும் ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்களை பற்றிய விடயங்களை Text Fileஆக மாற்றி சேமித்து அல்லது ப்ரின்ட் செய்து கொண்டால் CD தேவைப்படும் ஒவ்வொரு முறையும் அதனை CD Rom இல் இட்டு அதில் காணப்படும் ஃபைல்களை அலச வேண்டியிராது. ஆனால் இந்த மென்பொருளை
பெற்று பயன்படுத்தும் போது சொல்லித்தந்த IT CORNERஐயும் நினைத்துக் கொள்ளுங்கள்...இந்த இலவச மென்பொருளை பெறுவதற்கான முகவரி http://www.convertjunction.com/download/jdiprint.zip   ஆகும்....

6 அக்டோபர், 2011

நீங்கள் விரும்பாத இணையப்பக்கங்களை எந்தவொரு மென்பொருளின் துணையுமின்றி தடுக்கலாம்..!
நீண்டதொரு இடைவெளிக்கு பிறகு உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிற இடுகை.. கொஞ்சம் வித்தியாசமாகவும் புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவுகள் இருக்க வேண்டும் என்பதில் குறியாயிருப்பதாலும் வேறு சில வேலைகள் குறுக்கிட்டதும் இந்த பதிவின் தாமதத்துக்கு காரணம்..என்றாலும் எப்படியேனும் பதிவிட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தட்டச்சு செய்து இன்றுதான் பதிவேற்ற வாய்ப்பு கிடைத்தது..தகவ.தொழில்நுட்ப ஆர்வலர்கள் மன்னிக்க வேண்டும்..இனி பதிவுகள் கொஞ்சம் சுறுக் நறுக்காக இருக்கும். புரியாதவற்றை பின்னூட்டங்களில் தெளிவுபடுத்துகிறேன்.. 
  
                  தலைப்பில் நான் சொன்னபடியும் நீங்கள் ஊகித்த படியும் சொல்லப்போவது கணிணியில் உள்ள ஒரு Trick பற்றியே.... அதாவது நீங்கள் விரும்பாத, தரிசிக்ககூடாது என நினைக்கிற இணையப்பக்கங்களை அல்லது உங்கள் பிள்ளைகள் உலாவரகூடாது என நீங்கள் நினைக்கிற பக்கங்களை தடுப்பது பற்றிதான். இந்த வேலையை செய்ய சந்தையில் பல மென்பொருள்கள் உலாவருகின்றன. ஆனால் நம்மிடமே வழி இருக்க ஏன் வேறு மென்பொருள்களை பயன்படுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் (Xp, Vista, 7) இயங்குமுறைமையிலேயே அதற்கான வழி இருக்கிறது..

இதனை மேற்கொள்ள முதலில் உங்கள் கணினியில் உள்ள ஏதாவதொரு Administrator கணக்கினூடாக உள்நுழைந்து கொள்ளுங்கள். பின் 

உங்கள் Mycomputer இல் உள்ள C ட்ரைவினுள் சென்று..  1. Windows ஃபோல்டரை திறந்து அதனுள் இருக்கும் System32 என்ற ஃபோல்டரை திறந்து கொள்ளுங்கள் ..
  2. பின் அதனுள் உள்ள drivers என்ற ஃபோல்டரை திறந்து கொள்ளுங்கள்..
  3. இறுதியாக அதனுள் உள்ள etc என்ற பெயரில் அமைந்த ஃபோல்டரை திறங்கள்..இப்போது உங்கள் கணினி திரை கீழுள்ளது போல காணப்படும்..

                          இதில் காட்டப்பட்டுள்ள hosts என்ற ஃபைலை இரட்டைகிளிக்
செய்து திறங்கள் ...அப்போது கீழுள்ளது போல் Openwith விண்டோ கிடைக்கும்..அதில் Notepadஐ தெரிவு செய்து Ok பட்டனை அழுத்துங்கள்..இப்பொது நீங்கள் திறந்து வைத்துள்ள இந்த hosts ஃபைல்தான் உங்கள் கணினிக்கான இணையம் சம்பந்தப்பட்ட அனைத்து தரவுகளையும் ஆளுகை செய்கிறது. இதில் சில மாற்றங்கள் செய்துவிட்டால் நான் மேற்சொன்ன
மாதிரி இணையப்பக்கங்களை தடுத்து விடலாம்.. 


நான் படத்தி்ல் காட்டியபடி அந்த ஃபைலின் இறுதி வரி 127.0.0.1       localhost இப்படி இருக்கும்..இந்த வரி முடிகின்ற இடத்தில் Cursorஐ வைத்து
Enter கீயை அழுத்தி அதாவது அந்த வரிக்கு கீழ் பின்வருமாறு தட்டச்சு செய்யுங்கள்.

உதாரணமாக நீங்கள் யூடியூப் (Youtube) தளத்தை Block செய்ய நினைத்தால் 127.0.0.1 இதன்பிறகு ஒரு இடைவெளி விட்டு www.youtube.com

127.0.0.1 www.youtube.com இவ்வாறு அமையும்...

பின் இதனோடு சேர்த்து Facebook தளத்தை Block சேய்ய நினைத்தால் அதன் கீழ் 127.0.0.1 www.facebook.com இவ்வாறு அமையும்..

127.0.0.1       localhost 
127.0.0.1 www.youtube.com
127.0.0.1 www.facebook.com

இப்படியாக நீங்கள் தடுக்க நினைக்கிற அனைத்து தளங்களின் முகவரிகளையும் வழங்கிய பின் Ctrl+S அழுத்தி Save செய்து விட்டு வெளியேறுங்கள்.. இனி உங்கள் கணினியில் நீங்கள் தடுத்த தளங்கள் மட்டுமல்ல ஏனைய தளங்களில் இணைக்கப்பட்டிருக்கும் அந்த இணையதளங்களின் Widgets கூட வெலை செய்யாது...  முயற்சித்து பார்த்து கருத்துக்களை எழுதுங்கள்..

...திரட்டிகளில் ஓட்டளிக்க மறந்து விடாதீர்கள்...

Share With your friends