18 ஆகஸ்ட், 2011

நிழற்படப் பகிர்வின் அகராதி

புகைப்படங்கள் என்பது மனிதர்களின் வாழ்வில் அன்றும், இன்றும், என்றும் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் என்றே சொல்லலாம். மனிதனின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட ஒரு அம்சமாக இந்த
புகைப்படங்கள் காணப்படுகின்றன. எமது வாழ்க்கையை, வளர்ச்சியை மீட்டிப்பார்க்க புகைப்படங்கள் பெரிதும் துணை புரிகின்றன. வாழ்க்கையில் சந்திக்கின்ற ஆயிரம் தருணங்களில் என்றும் எப்போதும்
நம்மோடு இருக்க வேண்டும் என்று சில தருணங்களில் தோன்றுவது உண்டு. அந்த நேரங்களில் விட்டுப்போன பழைய நினைவுகளை அதே யதார்த்ததுடன் சொல்லும் சக்தியும் புகைப்படங்களுக்கு
உண்டு. சுருங்கச் சொன்னால் இன்றைய புகைப்படங்களும் நாளைய வரலாறு தான். வாழ்வின் மறக்க முடியாத, மறக்க கூடாத நிமிடங்கள் எப்பொதும் எப்போதும் எம்மோடு இருக்க வேண்டும் என நினைக்கிற பல
புகைப்படங்கள் காலத்தால் அழியக்கூடியன. எனவே இவற்றை பாதுகாக்க நம்மில் பல பேர் அவற்றை மின் வடிவத்திற்கு மாற்றி கணினிகளில் சேமித்து வைத்திருப்போம்.

ஆனால் அவ்வாறு சேமிப்பது ஒரு தற்காலிக பாதுகாப்புதான். அதுமட்டுமன்றி நீங்கள் இரசித்த புகைப்படங்களை உங்கள் உஙவுகள், நண்பர்களுக்கும் காட்டி மகிழ்வதில் ஒரு அலாதி பிரியம் எல்லோருக்குமே உண்டு.
இவ்வாறான உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கென்றே இணையத்தில் பல இணையத்தளங்கள் வலம்வருகின்றன. இவற்றில் சில இலவசமானவை, சில பணம் செலுத்தி பெறவேண்டியவை
எனவே சில முக்கிய நிழற்பட பகிர்வு (Photo Sharing) தளங்களை அவற்றின் சிறப்பியல்புகளோடு தருகிறேன். உங்களுக்கு பொருத்தமானதை தெரிவு செய்து இன்றே நிழற்பட சேமிப்பை
தொடங்குங்கள்..

Picasa Web Albums

முதலில் நான் சொல்லும் இந்த இணையத்தளமானது முற்றிலும் இலவசமான சேவையை வழங்குகிறது. இது நாம் யாவரும் அறிந்த கூகிள் தேடு பொறி நிறுவனத்தின் ஒரு வெளியீடாகும். இதில்
நீங்கள் உங்கள் ஜீமெயில் கணக்கை மட்டுமே வைத்து உள்நுழையலாம். உங்கள் விருப்பபடி படங்களை தரவேற்றலாம். ஆனால் தரவேற்றம் தொடர்பில் கூகிள் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறது அதாவது உங்களுக்கு
இலவசமாக படங்களை தரவேற்ற 1GB கொள்ளளவு மாத்திரமே வழங்கப்படுகிறது. மேலும் ஒன்லைனிலேயே படங்களை எடிட் செய்ய Picnik இணையத்தளம் இதில் உட்பொதிக்கப்பட்டு (Inbuild)
காணப்படுகிறது. அதுமட்டுமன்றி உங்கள் இடத்தை கூட இதில் Tag செய்யலாம். வழமையாக நாம் எதிர்பார்க்கும் Privacy இதில் கொஞ்சம் கூடுதலாகவே கிடைக்கிறது. இதன் இணைய முகவரி http://picasaweb.google.com/ என்பதாகும்.


Flickr

அடுத்து நான் சொல்கின்ற ஃப்ளிக்கர் இணையத்தளமும் ஒரு இலவச சேவைதான்.. ஆனால் இது ஆரம்பத்தில் Ludicorp தம்பதிகளால் உருவாக்கப்பட்டு பின் பிரபல Yahoo நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டது.அடிப்படையான அனைத்து
வசதிகளோடும் மேலும் இந்த பிரபலமான தளமானது, வலைப்பதிவாளர்களுக்கு தங்கள் ஒளிப்படங்களை சேமித்து, அதனை தங்கள் வலைப்பதிவுகளில் காட்சிப்படுத்த ஏதுவான வகையில் சாத்தியங்களையும் வழங்குகிறது.இந்த சேவைக்கு, நவீன நகர்பேசிகளான
ஐஃபோன், பிளாக்பெர்ரி மற்றும் விண்டோஸ் ஃபோன் ஆகியவற்றிலிருந்து நேரடியாக ஒளிப்படங்களையும், நிகழ்படங்களையும் குறித்த தளத்தின் உத்தியோகபூர்வ செய்நிரல்களைப் பயன்படுத்தி நேரடியாக மேலேற்றவும் முடியும். மற்றும் உங்கள் யாஹூ கணக்கை
பணன்படுத்தி உள் நுழையலாம். இதன் வலைமனை முகவரி
www.flickr.com

Photobucket

இதுவும் இலவச சேவை வழங்குனர்தான் ஆனால் இதில் கட்டாயம் கணக்கு உருவாக்க வேண்டும். வழமையான சிறப்பம்சங்களுடன் இது உங்களுக்கு தரவேற்றம் தொடர்பில் எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை Unlimite Upload Spaceஐ வழங்குகிறது.
ஒரு புகைப்பட வலைப்பதிவு (photo blog) அமைக்கும் வசதியும் வழங்குகிறது. முகவரி www.photobucket.com

Tiny Pic

இது இலவசமான சேவை. மற்றும் இது பெரும்பாலும் இணைய தள நடத்துனர்களுக்கான சேவையையே வழங்குகின்றது. அதாவது படங்களுக்கான URL ஐ இது வழங்குகிறது. இதன் மூலம் வேறு தளங்களில் படங்களை காட்சிப்படுத்தவும் முடியும். இதன் முகவரி www.tinypic.com

7 ஆகஸ்ட், 2011

ISO Image File ஆதி முதல் அந்தம் வரை...

மீண்டும் கணினி சார் பதிவோடு உங்களோடு இணைந்திருக்கிறேன்.இன்று நாம் பார்க்கப் போவது நாம் அன்றாடம் கணினியை பயன்படுத்தும் போது பல வகையான ஃபைல் ஃபார்மட்களை (File format) பயன்படுத்துகிறோம். உதாரணமாக ,doc, .ppt, .pdf,.txt, .avi, .mkv, .mp3 இது போன்ற இன்னும் பல ஃபோர்மட்களையும் பயன்படுத்துகிறோம். ISO என்பதும் நான் மேற்சொன்னது போன்ற ஒரு வகையான File formatதான். இது பற்றி பலருக்கு தெரிந்திருக்கும். எனினும் தெரியாதவர்களுக்காக சிறிய அறிமுகம். பொதுவாக
இதனை ISO Image file என்று சொல்லுவோம். இது CD/DVD போன்றவற்றை Write செய்ய பயன்படுகிறது. பெயருக்கேற்றால் போல் இது எங்கள் CD/DVD போன்றவற்றில் உள்ள தரவுகளை படம் பிடித்து ஒரு சுருக்க கோப்பாக வைத்திருக்கும். தேவையான நேரம் இதனை ஒரு CD/DVDயில் விரித்து பயன்படுத்தி கொள்ளலாம்.சுருக்கமாக சொன்னால் CD/DVD போன்ற இறுவட்டுக்களின் மென் வடிவமே இந்த ISO Image ஃபைல்கள் ஆகும். இதன் முலம் உலகின் எந்த மூலையிலுருந்தும் எங்கிருக்கும் ஒரு நபருக்கும் ஒரு இறுவட்டை அனுப்பிவிடலாம். அதனை அவர் CDயில் ரைட் செய்தால் போதும். ஆனால் இந்த வசதி Audio CDகளுக்கு பொருந்தாது.


இனி இந்த ஃபைல் ஃபோர்மட்டின் சில முக்கிய நன்மைகளை சுருக்கமாக பார்க்கலாம்.அதாவது இதன் மூலமாக எமது Harddiskஇனை Backup செய்து ஒரு DVDயாக மாற்றி கொள்ளலாம். ஒரு சீடியினை அதாவது Bootable CDகளை இலகுவாக நண்பர்களுக்கு அனுப்பலாம். இப்படியாக இதன் நன்மைகள் இன்னும் பல. இதை தவிரவும் இந்த File format பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள விரும்பினால்
http://en.wikipedia.org/wiki/ISO_image என்ற முகவரியை நாடுங்கள்.

1 ஆகஸ்ட், 2011

Notepad-அறிந்ததும் அறியாததும்

மீண்டும் ஒரு பதிவினூடாக உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி. இம்முறை இந்தப் பதிவானது சற்று வித்தியாசமாக அமைந்திருக்கிறது..அதாவது "அறிந்ததும் அறியாததும்" என்று இம்மாதம்
முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிற சிறப்பு பகுதி. அதாவது இது ஒவ்வொரு மாதத்தின் 1ம் திகதியிலும் வெளியிடப்படும்.இதில் கணினி அல்லது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏதாவது ஒரு விடயம் பற்றி நீங்கள் "அறிந்து வைத்துள்ள" சில விஷயங்களில் நீங்கள் "அறியாத" பல விஷயங்களை சொல்லி தருகின்ற பகுதியாக இது அமையப்போகிறது என்பது பற்றி முன்னரே எனது வலைப்பதிவினூடாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இன்று நாங்கள் முதலில் இப்பகுதியில் பார்க்கப்போகிற விடயம் நம்மில் பலபேர் எமது விண்டோஸ் இயங்குதளங்களுடன் இலவசமாக இணைந்திருக்கும் Notepad பற்றி அறிந்திருப்போம். இது சில எளிமையான Text editing வேலைகளுக்கும் இணைய அடிப்படையிலான HTML மொழிமூலத்தினையும் ஒருங்கிணைக்கிற (Compile) ஒரு மென்பொருள் என்பதுவும் தெரிந்திருக்கும். என்றாலும் இது அனைத்தையும் தாண்டி இந்த Notepadஇனை ஒரு Programming Toolஆகவும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா??ஆம் அதைப்பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம்

Programming என்பது கணினி துறையை நெருங்கிய பலரின் ஒரு கனவு என்றே சொல்லலாம்..சுயமாக ஒரு கணினி செய்நிரலை எழுதிவிடவேண்டும் என்பது தகவல்தொழில்நுட்பத்தை நேசிப்பவர்களின் ஒரு கனவு. அதிலும் வைரஸ் செய்நிரல்கள் எழுத வேண்டும் என சிலர் ஆசைப்படுவதும் தெரியும் எனவே அதனை நிறைவேற்ற இந்த பதிவு சற்று உதவி செய்யும்.

ஆம் Notepad மூலம் சாதாரண கணினி செய்நிரல்கள் தொடங்கி கணிணியையே செயலிழக்க செய்யும் அபாயமான வைரஸ்கள் வரை உருவாக்கலாம். அதைப்பற்றியே இங்கு பார்ப்போம்..

01. முதலில் நாம் உங்களுடைய நண்பருடைய CD Driveஇனை தொடர்ச்சியாக Eject செய்வதற்கான செய்நிரலைப் பார்ப்போம் முதலில் கீழுள்ள Codingஐ காப்பி செய்து Notepadஇல்
Paste செய்து கொள்ளுங்கள்
 


பின் அதனை Anything.VBS என Save செய்து கொள்ளுங்கள்..அதனை இதனை திறந்தால் உங்கள் CD Drive இனை தொடர்ச்சியாக Ejectசெய்வதும் உள்ளெடுப்பதுமாக இருக்கும்.. என்ன செய்தும் இதனை நிறுத்த முடியாது. ரீஸ்டார்ட் செய்வதே ஒரே வழி. கடைசியில் CD Drive பழுதடைவது நிச்சயம்.

02. அடுத்து உங்கள் கீபோர்ட்டில் உள்ள CAPS lock கீயை தொடர்ந்து இயங்க மற்றும் அணைக்க செய்யும் செய்நிரல்..

  


பின் அதனை Anythingcapslock.VBS என Save செய்து கொள்ளுங்கள். பின் இதனை திறந்தால் உங்கள் CAPS lock கீயை தொடர்ந்து இயங்க மற்றும் அணைக்க ஆரம்பிக்கும்.

03.உங்கள் கணினியை திடீரென Shutdown செய்ய..


இதனை Anything.bat என சேவ் செய்து அதனை திறந்தீர்களானால் உங்களுக்கு I don't like you என்ற செய்தியை காண்பித்து உங்கள் கணிணியை Shutdown செய்யும்.

04. அடுத்து பார்க்கப்போவது கொஞ்சம் சவாரஸ்யமான செய்நிரல் அதாவது Hello! How are you Im good ,Thanks என்ற வார்த்தையை மெதுவாக பல Notepad விண்டோக்களில் திறந்து உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது..

  

...பதிவு பிடித்திருந்தால் இன்ட்லி மற்றும் தமிழ் 10 திரட்டிகளில் வாக்களித்து பதிவை பரபலமாக்குங்கள்...

Share With your friends