15 ஏப்ரல், 2011

Mozilla firefox இன் புதிய பதிப்பு...


இணைய உலாவலுக்கு (Webbrowsing) மிகவும் பிரபல்யம் பெற்ற ஒரு மென்பொருளாக Mozilla firefoxஇனை குறிப்பிடலாம்...பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள இம்பொருளினது 3.6 மென்பொருளே முன்னைய காலங்களில் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது..எனினும் கடந்தவாரம் இதனது புதுப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வமான 4வது பதிப்பு வெளியாகியிருக்கிறது.
இத்தனை காலமும் பயனர்களால் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக பல புதிய வசதிகளுடனும் இது வெளிவந்திருப்பது சிறப்பம்சமாகும்.. என்கின்ற இதனுடைய உத்தியோகபூர்வ இணையதளத்தில் நீங்கள் இலவசமாகவே இதனை பதிவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளலாம்.எனினும் மொசில்லா ஃபயர்பாக்சின் பழைய பதிப்பு உங்கள் கணினியில்
இருந்தால் அது தானாகவே Upgrade செய்யப்படும் என்பதும் ஒரு கூடுதல் தகவல்...இனி Mozilla firfox4 பயனர்களுக்கு என்னென்ன பது வசதிகளை தருகிறது என்று பார்ப்போம்..


அருகே நீங்கள் படத்தில் காண்பது மொசில்லா ஃயர்பாக்சின் புதிய இடைமுகமாகும்.(Interface) இதில் பழைய மெனு வடிவம் நீக்கப்பட்டு அனைத்தும் Firefox என்கிற ஒரு பட்டனுக்கு மாற்றப்பட்டிருக்கிநது..இணைப்பக்கங்கள் Load செய்யப்படும் போது தோன்றும் Progressbarக்கு பதிலாக Tabஇலேயே Loading...செய்யக்கூடிய வசதி...மேலும் Option மெனுவில் Sync எனப்படும் புதிய வசதி
சேர்க்கப்பட்டிருக்கிறது..

அதாவது உங்களுடைய History,Bookmarks,Password போன்றவற்றை உங்கள் தனிப்பட்ட கணினியில் (PC) நீங்கள் இலகு பாவனைக்காக சேமித்துவைத்திருப்பீர்கள்...இதனை நீங்கள் வெளியில் சென்று பயன்படுத்த நேர்ந்தால் இந்த Optionஐ பயன்படுத்தலாம்..இது எவ்வாறு சாத்தியமாகிறதென்றால் நீங்கள் மொசில்லாவில் ஒரு Sync கணக்கை திறக்கவேண்டும்..
பின்னர் இதனை கொண்டு இவ்வசதியை சாத்தியமாக்கலாம்......

12 ஏப்ரல், 2011

ஃளாஷ்5 பழகலாம் வா..! (அத்தியாயம்2)


இம்முறை நாம் ஃளாஷ் இல் ஒரு அனிமேஷனுக்கு நிறத்தை எவ்வாறு மாற்றலாம் என பார்ப்போம்...முதலில்
* Timelineல் முதல் Frameஐ தெரிவு செய்து அதில் Rightclick செய்து தோன்றும் மெனுவில் Create motion tween ஐ கிளிக் செய்க..படம்01
* பின்னர் உங்கள் Object எவ்வளவு வேகத்தில் செல்லவேண்டும் என்பதை தீரமானித்து Timelineல் சிறிதுதுாரத்தில் வலதுகிளிக் செய்து Insert key frame என்பதை கிளிக் செய்க (Shortcut-F6)
* பின் பந்து எவ்விடத்தில் அடிக்கவேண்டுமோ அங்கு Select tool மூலம் பந்தினை Drag செய்யவும்..
* பிறகு பந்து எவ்வளவு வேகத்தில் மேல் எழ வேண்டுமோ அதை பொறுத்து Timeline சிறிது துாரம் நகர்த்தி ஒரு Frameஐ செலக்ட் செய்து அதை வலதுகிளிக் செய்து Insert key frame என்பதை கிளிக் செய்க (Shortcut-F6)
* இப்போது பந்து எவ்வளவு துரம் எழ வேண்டுமோ அங்கு பந்தினை Drag செய்யவும்..
* உங்கள் கீபோர்ட்டில் Enter கீயை அழுத்த நீங்கள் செய்த பந்து துள்ளுவதனை காணலாம்..இனி உங்களுக்கு எவ்விடம் வரை இவ் அனிமேஷன் நடைபெறவேண்டுமோ அதுவரை மேற்சொன்ன முறைகளை செய்யவும்..


பி்ன்னர் உங்கள் அனிமேஷனின் இறுதி Frameஐ தெரிவு செய்து Windows menuவில் Panels என்பதிலுள்ள Effect என்ற கட்டளையை பிரயோகிக்கவும்...படம்01பின் தோன்றும் Effect மெனுவில் (படம்02) Tint என்பதை தெரிவு செய்து விரும்பிய வர்ணத்தை தெரிவு செய்யவும்.இப்போது Enter விசையை அழுத்த உங்கள் Object நிறம் மாறி செல்வதை காணலாம்....

10 ஏப்ரல், 2011

உங்களுக்காக புதிதாய் ஒரு சமூக வலைப்பின்னல்


சமூக வலைத்தளங்கள் என்றதும் எம் அனைவரினதும் கண்முன்னே வருவதென்னமோ Facebook தான்.அந்தளவுக்கு அதன் அமைப்பு,வியாபிப்பு,உரிமையாளர் என அனைத்துமே எம்வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட ஒன்றாக மாறியிருக்கிறது.எனினும்
இத்தனை பிரபல்யம் பெற்ற பேஸ்புக் வழங்கும் பல சேவைகள் பலரை திருப்தி படுத்துவதில்லை...மேலும் பலரும் பேஸ்புக்கில் புது மாற்றங்களை வேண்டுவதும் கண்கூடு.அத்துடன் தற்காலங்களில் பேஸ்புக்கின் Privacyயும் தற்காலங்களில் கேள்விக்குறியே.. அதனால் பலர் ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு மாற முயற்ச்சித்தாலும் நண்பர்களை 
இழக்க வேண்டி ஏற்படுவதால் இது சற்று சிக்கலாகவே இருக்கிறது.எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு புது இணையத்தளம் உருவெடுத்திருக்கிறது..இது Zorpia.com என அழைக்கப்படுகிறது..இதன் சிறப்பம்சங்களை இனி ஆராய்வோம்.

* முதலில் இதில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும்...ஆனாலும் உங்களிடம் Facebook கணக்கு இருந்தால் Connect with facebook என்ற பட்டன் மூலம் உங்கள் பேஸ்புக் கணக்கை Share செய்து கொள்ளலாம்.இதனால் உங்கள் பேஸ:புக் கணக்கின் முழு விபரங்களும் உங்கள் Profile  போன்ற விபரங்களும் Share செய்யப்படும்..
ஆனால் Privacyக்கு பாதிப்பில்லை....பேஸ்புக் தருகின்ற அதே வசதிகளுடன்(Command,Like,Add friend,Pages,Groups,Notifications...etc) மேலதிகமாக இதில் உங்களுக்கென்றொரு பக்கத்தை அமைத்து அதனை ஒரு Mini blog ஆக பராமரிக்கமுடிவதோடு இதனை சாதாரண Website போன்றும் பயன்படுத்தலாம்..

இனியென்ன நீங்களும் இன்றே ஒரு Zorpian ஆக மாறுங்கள்... இதன் இணைய முகவரி www.zorpia.com 
Share With your friends