24 அக்டோபர், 2010

Folder ஒன்றை Toolbarஆக மாற்றுதல்

உங்கள் கணினியிலுள்ள ஃபோல்டர் ஒன்றை டூல்பாராக மாற்றுவது பற்றி அறிந்திருக்கிறீர்களா?இதோ அதற்கான இலகுவழி..முதலில் நீங்கள் Toolbarஆக மாற்றவேண்டிய ஃபோல்டரை தெரிவு செய்து அதனை Desktop இன் விளிம்புவரை Drag செய்தால் ஃபோல்டர் ஆனது Toolbarஆக மாறிவிடும்.இவ்வாறு மாறிய Toolbarஐ டெக்ஸ்டொப்பின் மத்திய பகுதிக்கு Drag செய்தால் அது Floating Toolbarஆக மாற்றப்பட்டு காட்சியளிக்கும்.Toolbar தேவையில்லையென்றால் Close buttonஐ கிளிக் செய்து அதனை இல்லாமலாக்கலாம்.தேவையான ஃபைல்களை வேகமாக
திறப்பதற்கு மிகவும் பொருத்தமான Trick ஆக இதனை கருதமுடியும்.

திகிலூட்டும் கணினி விளையாட்டு அனுபவம்-Battle Field 2


இது என்னடா புதிததாக IT CORNERஇல் கேம்களை பற்றி சொல்கிறோமே! என்று நினைக்கிறீர்களா.. ஒவ்வொரு முறையும் மென்பொருள்களை பற்றி எழுதி அலுத்துவிட்டது..அதனால்தான் இனி ஒவ்வொரு மாதமும் ஒரு கணினி விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற Plan...தொடர்ந்து நாம் பார்க்க போவது Battle Field2 எனும் பெயர் கொண்ட போர்களத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு கணினி விளையாட்டை பற்றியாகும்.பொதுவாக இந்த விளையாட்டை அதிநவீன போர் ஆயுதங்களை கையாளுகை செய்வதற்கான வாய்பை வழங்கும்
கணினி விளையாட்டாக அறிமுகப்படுத்தலாம்.இந்த கணினி விளையாட்டு ஒரு தனிநபரோ அல்லது குழுவோ ஒரே நேரத்தில் விளையாடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.Digital Illusions CE எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டை Trauma Studios எனும் நிறுவனம் அபிவிருத்தி செய்துள்ளது.இந்த கணினி விளையாட்டில் வெற்றி பெற வேண்டுமாயின் விளையாடும் நபர் மூன்று அத்தியாயங்களில் சித்திபெற வேண்டும்.இதனை விளையாடும் போது 15இராணுவ வீரர்களின் துணை விளையாட்டு வீரர்ரகளுக்கு வழங்கப்படும்.
இணையத்தின் மூலம் இவ்விளையாட்டில் ஈடுபடும் போது 64வீரர்களின் துணை வழங்கப்படும்.இதனால் Online நிலையிலும் கணினி விளையாட்டை விளையாடும் வாய்ப்பு கிட்டும்.இந்த கணினி விளையாட்டில் காட்சி அமைப்புக்கள் மற்றும் ஒலிக்கலவை வரைகலை போன்றவை மிகவும் உயர் பிரிதிறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விளையாடும் நபர் நிஜமாகவே ஒரு போர்க்களத்தில் இருக்கும் அனுபவத்தை பெறுவார் என்று இதனை வெளியட்டுள்ள Electronic Arts கருத்து தெரிவிக்கிறது.23 அக்டோபர், 2010

பதிவிறக்கம் (DOWNLOAD) செய்யும் போது கவனிக்க வேண்டியவை

  இன்றைய காலத்தில் பெரும்பாலும் நாம் Broadband எனப்புடும் அகல்கற்றை தொழல்நுட்பம் (ப்ராட்பேன்ட்க்கு இதுதான் தமிழ் அர்த்தமாம்...) மூலமாகவே இணையத்தோடு இணைந்திருக்கிறோம்.இதன் போது இணைய வேகம் மிகவும் அதிகமாகும்.ஆகவே எமது டவுன்லோட்தேவைகளும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அதிகரிக்கின்றன.நாம் இவ்வாறு இணையத்தில் இருந்து ஃபைல்களை பதிவிறக்கும் போது அதனோடு சேர்ந்தால் போல் எம்மை அறியாமலேயே Spyware மற்றும் Virus இந்த சொற்கள் புதிதாயிருந்தால்
ஏப்ரல் மாதத்தில் 'கணிணியை பராமரிக்க 07 வழிகள் என்ற இடுகையை ஒருதடவை தட்டி பார்த்துகொள்ளுங்கள்) இவ்வாறு டவுன்லோட்டில் பல ஆபத்துக்கள் இருப்பதகால் இனிமேல் இணையத்திலிருந்து எந்தவொரு ஃபைலையும் டவுன்லோட் செய்யகூடாது என்ற முடிவுக்கு வரமுடியுமா?என்ன Download ஆகும் மென்பொருள்களோடு Spyware இணைந்து காணப்படுவது மிகவும் பொதுவான விடயதாக மாறியுள்ளது.இந்த ஸ்பைவேர்களின் மூலம் பயனர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்து
மென்பொருள் வழங்குனர்கள் இலாபமீட்டிக் கொள்கிறார்கள்.
இந்த வகையான ஸ்பைவேர்களை நீக்கிக் கொள்ள பல நம்பகமான மென்பொருள்கள் இப்போது பாவனையிலுள்ளன.இவற்றை பயன்படுத்தி Spywareகளை எமது கணினியிலிருந்து நீக்கிவிட வழி செய்யலாம்.கணினியினை பாதிக்ககூடிய நாசகார மென்பொருள்களை நம்மை அநியாமலெயே எமது கணினியில் நிறுவுவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும்.இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க சில முற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது.அவற்றை இப்போது பார்ப்போம்.
டவுன்லோட் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் குறித்த மென்பொருளின் உறுதிப்படுத்தப்பட்ட தன்மையை அறிந்து கொள்வது கட்டாயமானதாகும்.குறித்த மென்பொருள் பற்றி ஏனைய நம்பகமான இணையத்தளங்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?இதனைப் பாவித்த ஏனையோர் என்ன கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்,என்பதையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பிரபலமான தேடற்பொறியொன்றை(Google,Yahoo,Ask) திறந்து அதில் பதிவிறக்கம் செய்யவேண்டிய கோப்பின் பெயர்,மென்பொருளின் பெயர்,மற்றும் Spyware என்ற சொல் ஆகியவற்றை டைப் செய்து தேடுங்கள்.குறித்த மென்பொருளோடு அதனைப் பாவித்தவர்கள் பிரச்சினைகளை அனுபவித்திருந்தால் அது தொடர்பான விடயங்களை தேடற்பொறி பட்டியற்படுத்தும்.
டவுன்லோட் செய்த மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்வதற்கு முன்னர் அதில் வைரஸ் தாக்கமேதும் உள்ளதா என கட்டாயம் பரிசோதித்து கொள்ளவேண்டும்.இல்லாவிடில் குறித்த மென்பொருளோடு சேர்த்து வைரசும் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடலாம்.பின கணினியின் நிலை ஆபத்தாகிவிடும்.
எல்லாவற்றையும் விட உங்கள் கணினியை அடிக்கடி Backup செய்து கொள்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும்.தவறுதலாக அல்லது கவனக்குறைவாக Spyware,Virus என எமது கணினியில் இருந்து கொண்டு எம்மை கதிகலங்க வைத்தாலும் கவலைப்படாமல் கணினியை Restore செய்து கொள்ளலாம்.இவற்றை கடைப்பிடித்தால் எமது கணினியை வைரஸ் மற்றும் Spywareகளிடமிருந்து பெருமளவு பாதுகாக்கலாம்...என்ன இப்போது வேறு ஏதும் டவுன்லொட் செய்கிறீர்களா///???? பரவாயில்லை..Don't worry be Happy.

19 அக்டோபர், 2010

அசையும் எழுத்துக்களுக்கு சிறப்பு தோற்றம்

நீங்கள் வலைப்பக்கத்தினை உருவாக்கி பராமரிப்பவரா?அப்படியானால் இந்த தொகுப்பு கொஞ்சம் பயனுள்ள விடயங்களை சொல்லித் தரும்.நீங்கள் உங்கள் இணையத்தளத்தில் நகஶம் எழுத்துக்களை உருவாக்க மார்க்யு டேக்(Markquee-Tag) இனை பயன்படுத்தியிருப்பீர்கள்.இந்த மார்க்யூ டேக்கினையே இணையப்பக்கங்களில் ஸ்க்ரோலிங் மெசேஜ்களுக்கும் பயன்படுத்தலாம்.பலர் ஸ்ரோலிங் மெசேஜ்க்காக ஜாவா ஸ்க்ரிப்ட்களை பயன்படுத்துவர்.ஆனால் மார்க்யூ டேக்கினை சில கூடுதல் ப்ராப்பட்டிகளை இணைத்து
பயன்படுத்தும் போது ஸ்கிரிப்ட்களுக்கு இணையான மாற்றங்களை எச்டிஎம்எல் டேக் மார்க்யூவிலிருந்தே பெறலாம்.இந்த மார்க்யூ டேக் பொதுவாக கிழ்கண்ட அமைப்பில் இருக்கும். டேக்களுக்கிடையே கொடுக்கப்பட்ட செய்தி திரையில் வலது பக்கத்தில் இருந்து இடப்பக்கம் நோக்கி நகரும்.சான்றாக மேலுள்ள வரிகளை டைப் செய்தால் IT CORNER என்ற பெயர் திரையின் வலப்பக்க எல்லையிலிருந்து இடப்பக்க எல்லைக்கு நகரும்.இது தொடர்ச்சியாக நடந்து கொண்டேஇருக்கும்.

Markquee Tag உடன் இணைத்து பயன்படுத்த கூடிய பண்பியல்புகள்
எப்போதும் Default ஆக மார்க்யூ டேக்இல் எழுத்துக்கள் வலப்பக்கமிருந்து இடப்பக்கமாகவே நகரும்.ஆனால் Direction என்ற இயல்பை பயன்படுத்தி திசையை மாற்றலாம்.அதாவது டிரக்சன் பண்பில் நாம் எந்த திசையை காட்டுகிறோமோ அந்த திசை நோக்கி எழுத்துக்கள் நகரும். உதாரணமாக என்று கொடுத்தால் IT CORNER என்ற பெயர் திரையில் இடப்பக்கமிருந்து வலப்பக்கமாக நகரும்.அதே போல கிழிருந்து மேலாக நகர "up" என்றும்
மேலிருந்து கிழாக நகர "down" எனவும் கொடுக்கலாம்.  

ஸ்க்ரோலிங் தன்மையை மாற்றும் பண்பியல்பு
இயல்பாக மார்க்யு டேக் ஒரு செய்தியை ஸ்க்ரோல் செய்யும் இதற்கு மாறாக செய்தியை வேறு இரண்டு மாதிரிகளில் காட்டச்செய்யலாம்.அவை

* ஸ்லைடு(Slide)
* ஆல்டர்நெட் (Alternate)

இவற்றை பயன்படுத்த பிஹேவியர் (Behavior) என்ற பண்பியல்பு பயன்படுகிறது

மெசேஜை ஸ்லைடைப் போல காட்டச் செய்ய
ஸலைடு ஸடைல் என்றால் மெசேஜ் திரையின் ஒரு மூலையிலிருந்து நகர்ந்து மற்றொரு மூலைக்கு வந்து அமரும்.இது ஒரு முறைதான் நிகழும் தொடர்ச்சியாக நடக்காது. இதற்கான கோட்


இந்த கோடிங்கை ரன் செய்யும் போது IT CORNER என்ற சொல் திரையின் வலது ஓரத்திலிருந்து புறப்பட்டு இடது ஓரத்திற்கு நகர்த்து வந்து அமரும்.தொடர்ச்சியாக ஸ்க்ரொல் ஆகாது.


மெசேஜை ஆல்டர்நேட் மாதிரி காட்ட...

ஆல்டர்நேட் ஸ்டைல் என்றால் மெசேஜ் திரையின் இரு எல்லைகளிலும் மோதி மிதப்பது போன்ற ஒரு ஸ்டைல் ஆகும்.இது தொடர்ச்சியாக அசைவூட்டத்துடன் இருக்கும். இதற்கான கோட்


IT CORNER

இதன் வெளியீடானது IT CORNER என்ற பெயர் ஆல்டர்நேட் ஸ்டைலில் டிஸ்பிளே ஆகும்.
மெசேஜ் ஸ்க்ரோல் ஆகும் வேகத்தை மாற்ற...

மார்க்யூ டேகில் கொடுக்கும் வார்த்தை திரையில் ஸ்க்ரோல் ஆகும் வேகத்தினை நமக்கு ஏற்றாற் போல் அமைத்துக் கொள்ள ஸ்க்ரோல் டிலே(Scroll delay) என்ற பண்பு பயன்படுகிறது.உதாரணமாக

IT CORNER

என் கொடுத்தால் IT CORNER என்ற வார்த்தை மிக மெதுவாக ஸ்க்ரோல் ஆகும்.நமக்கு தேவையான வேகத்தை ஸ்க்ரோல் டிலே பண்பு முலம் நிர்ணயம் செய்யலாம்.
எத்தனைமுறை ஸ்க்ரோல் ஆக வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் பண்பு   மார்க்யு டேகில் கொடுக்கப்பட்ட மெசேஜ் தொடர்ச்சியாக ஸ்க்ரோல் ஆகவேண்டும் என்பதை நிர்ணயிக்க லூப்(Loop) என்ற பண்பியல்பு உதவுகிறது. உதாரணமாக
  IT CORNER

ஏன்று கொடுத்தால் IT CORNER என்ற மெசேஜ் திரையில் இரண்டு முறை ஸ்க்ரோல் ஆகும்.
ஸ்க்ரோலிங் மெசேஜின் பிண்ணனி நிறம்  ஸ்க்ரோலிங் மெசேஜின் பிண்ணனி நிறத்தை மாற்ற bgcolor என்ற பண்பு உதவுகிறது. சான்றாக

IT CORNER 

 என்று கொடுத்தால் ஸ்க்ரோலிங் மெசேஜின் பிண்ணனி நிறம் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டிருக்கும்.

இந்த இயல்புகளை உங்கள் இணையப்பக்கங்களுக்கும் பயன்படுத்துங்கள்...உங்கள் இணையப்பக்கத்தினை MArquee டூலை பயன்படுத்தி மேலும் எவ்வாறு மெருகூட்டலாம் என்பதை அடுத்த மாதம் பார்ப்போம்....

Share With your friends