22 ஜூன், 2010

இம்மாத மென்பொருள் கார்ட்டூன் திரைப்படங்கள் உருவாக்கம்

சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி இரசிக்கும் நிகழ்ச்சியாக கார்ட்டூன் தொடர்கள் காணப்படுவதை நாமறிவோம்.இந்த கார்ட்டூன் நிகழ்ச்சிகளை உருவாக்க பல்வேறு மென்பொருள்கள் மற்றும் உயர்தொழில்நுட்ப நிபுணர்கள் எல்லோரும் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டுமென்ற காலம்
மாறிவிட்டது.இப்போது நாமெல்லோரும் கார்ட்டுன் தொடர்களென்ன கணினிவிளையாட்டுக்களையே மிகவும் இலகுவாகவும் வேகமாகவும் உருவாக்கிவிடலாம்.
எந்தக் கணினி மொழிபற்றிய அறிவுமில்லாமலே உயர்தரத்திலான அசையும் வீடியோ மற்றும் ஒலித்தோற்றங்களை கொணட கார்ட்டூன் தொடர்களை இலகுவாக அமைக்க உதவும் மென்பொருளே Scratch எனப்படுவதாகும்.அமெரிக்காவின் MIT நிறுவனத்தின் மீடியாலேப் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இம்
மென்பொருள் மூலம் எமக்குத் தேவையான கார்ட்டூன் தொடர்களை இன்டராக்டிவ் நிலையில் அமைத்துக்கொள்ள முடியும்.Scratch மென்பொருளை கணினியில் நிறுவ அதனுடன் பல மாதிரி கார்ட்டூன் அமைப்புக்களும் நிறுவப்படும்.அக் கார்ட்டூன் படங்களை Customize செய்ய முடிவதோடு
நாம் விரும்பினால் புதிதாக கார்ட்டூன் படங்களையும் உருவாக்க முடியும்.நாமுருவாக்கும் கார்ட்டூன்களுக்கு ஒலிகளையும் இணைக்கமுடிவதோடு கார்ட்டூன் அமையவேண்டிய பின்னணி நிலைகளையும் எம்மால் மாற்ற முடியும்.எமக்கு விரும்பியவாறு ஒரு திரைக்கதைக்கேற்ப பாத்திரங்களை கையாண்டு
கார்ட்டூன் திரைப்படமொன்றையே தொகுத்து வெளியிடும் வாய்ப்பை இந்த மென்பொருள் வழங்குகின்றது.சிறுவர்கள் பலரும் இந்த மென்பொருளை பயன்படுத்தி பல வித்தியாசமான ஆக்கங்களை உருவாக்கி Scratch இணையத்தளத்தின் மூலமாக பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த மென்பொருளை http://scratch.mit.edu/pages/download எனும் இணைய முகவரியிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அழகிய கோலங்களில் உங்கள் எண்ணக்கோலங்களை வடித்திட Scratch உள்ளது.இன்றே நீங்களும் உங்கள் உள்ளத்து கற்பனைகளுக்கு வடிவம்
கொடுங்கள்

தொகுப்பு
A.Shanojan

21 ஜூன், 2010

உங்கள் Password பாதுகாப்பானதா?

உங்களால் இலகுவில் ஞாபகப்படுத்தி கொள்ளக்கூடியதும் ஏனையோரால் இலகுவில் ஊகிக்க முடியாததுமான Passwordதான் பாதுகாப்பான பாஸ்வேர்ட் என்ற வகைக்குள் அடங்கும்.இன்றளவில் இணையத்தோடிணைந்த நிலைகள் மற்றும் வங்கி நடவடிக்கைகள் என்பன
பாஸ்வேர்ட்டையே எமது பாதுகாப்பின் திறவுகோலாக நம்பியிருக்கிள்றன.ஆக பாஸ்வேர்ட் என்பது மிகவும் முக்கியமானதென்பது உண்மைதான்.அதை எவ்வாறு பாதுகாப்பானதாக உருவாக்கி ஞாபகத்தில் வைத்து கொள்ளலாம்.

  • எல்லாச் சேவைகளுக்கும் ஒரேயொரு பாஸ்வேர்ட்டை நீங்கள் பயன்படுத்துவீர்களானால் உங்கள் பாஸ்வேர்ட்டை யாரும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்துச் சேவைகள் தொடர்பிலும் உங்கள் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிடும்.ஒரு பாஸ்வேர்ட்டையே எல்லாவற்றிற்கும் பாவித்தால் அதிகளவான பிரச்சினைகளை அது உண்டுபண்ணி தரும்.என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.

ஒரு சிறிய விதியொன்றுக்குள் நீங்கள் பாவிக்கும் பாஸ்வேர்ட்களை உருவாக்கும் வழமை உங்களிடம் இருந்தால் 100வகையான பாஸ்வேர்ட்களை தனித்தனியாக ஞாபகப்படுத்தி கொள்ளத்தேவையில்லை.ஒரு தனியான பாஸ்வேர்ட்டை உருவாக்குவதற்க்கான வழி..

  • முதலில் அடிப்படையான பாஸ்வேர்ட்டை தெரிவு செய்து அதில்நாம் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தும் இணையச்சேவையின் பெயரை சேர்த்து விடுவதாகும்.உதாரணமாக நீங்கள் தெரிவுசெய்த அடிப்படை பாஸ்வேர்ட் ITCORNER என வைத்துக்கொண்டால் யாகூ இணையத்தளத்தில் இந்த பாஸ்வேர்ட்டை ITCORNERYAHOO எனவும் Facebook தளத்தில் ITCORNERFACEBOOK எனவும் பாவிக்க முடியும்.
  • இதனை இன்னும் ஊகிக்க கடினமான பாஸ்வேர்ட்டாக மாற்ற உங்கள் அடிப்படை பாஸ்வேர்ட்டான ITCORNER உடன் உங்களை கவர்ந்த இரு இலக்கங்களை தெரிவு செய்து அதனை மாற்றிவிடலாம்.உதாரணத்திற்க்கு Gmail தளத்தில் இந்த பாஸ்வேர்டைITCORNER30GMAIL எனப்பாவிக்கலாம்.
இந்த ஒரு விதியைக்கொண்டு நீங்கள் நூற்றுக்கணக்கான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ளமுடியும்.பொதுவாக பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களை கொண்டிருத்தல் விரும்பத்தக்கது.அத்தோடு இவை வெறுமனே ஆங்கில அரிச்சுவடி எழுத்துக்களை
மட்டும் கொண்டிராது இலக்கங்கள்,குறியீடுகள் என்பவற்றையும் கொண்டிருத்தல் பாஸ்வேர்ட்டின் பலத்தை அதிகரிக்கும்.அது பற்றியும் கவனத்தில் கொள்ளுங்கள்.

அடிப்படை பாஸ்வேர்ட்டை தெரிவு செய்வதற்க்கான சில வழிமுறைகளை பற்றி நாம் இங்கு ஆராய்வோம்.
  •  ஒரு வசனத்தின் அல்லது பாடல் வரியின் முதலெழுத்துக்கள் உதாரணமாக நீங்கள் டைட்டானிக் திரைப்படத்தின் Theme songன் வரியான 'Every Nights In My Dreams'என்பதை பாவிக்க எண்ணினால் உங்கள் அடிப்படை பாஸ்வேர்ட் ENIMD என்றவாறு அமையும்.பாஸ்வேர்ட்டை நினைவிலிருத்த நீங்கள் பாட்டை பாடினாலே போதும்.

  •  ஏற்கனவே காணப்படும் கீபோர்ட்டின் கீகளின் அமைவுகளை ஞாபகப்படுத்தலாம்.உதாரணமாக QWER,ASDF,ZXCV போன்றன.
  •  இன்னும் அதிகமாக பாதுகாப்பான அடிப்படை பாஸ்வேர்ட்டை தெரிவு செய்ய உதாரணமாக ஒரு சொல்லை நினைவில் நிறித்தி கொள்ளுங்கள்.நீங்கள் நினைக்கும் சொல் Dog என வைத்து கொண்டால் கீபோர்டில் இந்த எழுத்துக்கள் உள்ள நிலைக்கு மேலே உள்ள எழுத்துக்களை பாஸ்வேர்ட்டாக மாற்ற முயலுங்கள்,Dog என்பதற்கு e9t என்ற சொல் கிடைக்கப்பெறும்.இம்முறையால் யாருமே இலகுவில் ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட்டை உருவாக்கி கொள்ள முடியும்.
முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயம்!!

19 ஜூன், 2010

இணைய அரங்கு

Citizen Journalism

சம்பவங்கள் பற்றிய விடயங்களை செய்திகளை வினைத்திறனாக அறிவிப்பதில் ஊடகத்துறையே முக்கிய பங்காற்றி வருகிறது.இலத்திரனியல் சாதனங்கள் தன்னகம் கொண்டுள்ள வேறுபட்ட உயர்
தொழில்நுட்ப வசதிகளால் இன்று ஒவ்வொரு பிரஜையும் ஊடகவியலுக்கு தமக்கு தகுந்த வகையில் பங்களிப்பு செய்கின்றனர்.பொதுமக்களால் இவ்வாறு திரட்டப்படும் செய்திகள் நிழற்படங்கள் போன்றன
ஒன்றாக சேர்த்து சிட்டிசன் ஜேர்னாலிஸம் எனப்படுகிறது.இவ்வாறு பிரஜைகளால் பலப்படுத்தப்படும் ஊடக உள்ளடக்கங்களை காண்பிக்கும் பல இணையச் சேவைகள் இணையப்பரப்பில் காணப்பட்டாலும்
Now public என்பது இவற்றுள் பிரபவமானது.இதன் உடாக நீங்களும் ஊடக பரப்பிற்கு உதவி புரியுங்கள்.இதன் தள முகவரி www.nowpublic.com என்பதாகும்.புள்ளி விபரங்கள்
உலகில் உள்ள அத்தனை விடயங்களும் புதுமைகளோடு இணைந்தது போலவே காணப்படுகின்றன.இந்தப் புதுமைகளின் தரவுகள் புள்ளி விபரங்கள் மிகவும் புதுமையானவை.உலகின் பல்வேறு விடயங்களை
ஊர்ஜிதப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்கள் மூலம் விபரமாக வழங்கும் இணையத்தளம்  தான் Nation master என்பதாகும்.இந்த இணையத்தளத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை விடயங்களையும்
புள்ளிவிபரங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடிகிறது.நீங்களும் இந்த தளத்திற்கு சென்று சுவாரஸ்யமான புள்ளி விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.www.nationmaster.com என்பதே இதன் இணைய முகவரியாகும். சிறந்த இணையத்தளங்கள்
இணையம்,எண்ணிலடங்கா இணையத்தளங்களை தன்னகம் கொண்டுள்ளது.அத்தனை இணையத்தளங்களும் ஒரே மாதிரியாக அமைவதில்லை.இணையத்தில் காணப்படும் இணையத்தளங்களிடையே சிறந்த தளங்களை தெரிவு செய்யும் முயற்சி
உள்ளதா?என்ற கேள்வி உங்களுக்குள்ளே சிலவேளை எழுந்திருக்கலாம்.சிறந்த இணையத்தளங்களை வருடா வருடம் தெரிவு செய்து அவற்றிற்க்கு விருது வழங்கும் முயற்சி இணையப்பரப்பிலே உள்ளது.இது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் சிறந்த இணையத்தளங்களுக்கு வழங்கப்படும் இவ்விருது Webby awards என்று அழைக்கப்படுகிறது.இவ்விருதினை ஏற்பாடு செய்யும் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலே ஒவ்வொரு வருடமும் விருதினை பெற தகுதியுள்ள
இணையத்தளங்களின் பட்டியல் காணப்படும்.அத்தோடு இணையத்தளங்கள் தொடர்பான பல முக்கியமான விடயங்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.இதன் இணையத்தள முகவரி www.webbyawards.com என்பதாகும்.


குறுஞ்செய்தித் தொகுப்பு
குறுஞ்செய்தி சேவை எனப்படும் SmS மூலம் தகவல் பரிமாற்றிக்கொள்ளும் வீதம் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களிடையே அதிகரித்து வருகிறது.வெறுமனே செய்திகளை மட்டுமே பகிர்ந்து கொள்வதை தாண்டி சுவாரஸ்யம்மிகுந்த SmSகளையும்
நண்பர்களிடையே அடிக்கடி பரிமாற்றிக் கொள்ளும் நிலையும் மிகவும் பிரபல்யமடைந்து வருகிறது.சுவாரஸ்யமிக்க பல்வேறு வகைகளை சேர்ந்த SmSகளை வகைப்படுத்தி பட்டியற்படுத்தி காண்பிக்கும் இணையத்தளமே SmS Collection இணையத்தமாகும்.இதில்
பல்லாயிரக்கணக்கான குறுஞ்செய்தி மாதிரிகள் தொகுக்கப்பட்டுள்ளன.கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய தளம் இதுவாகும்.இந்த தளத்தின் முகவரி www.smscollection.com ஆகும்.Webdunia-ஒரு தமிழ் உலகம்.
இணையத்தில் பல நூறு தமிழ் இணையத்தளங்கள் இருந்து வருகின்ற போதிலும் ஒரு சில தளங்களே சிறந்தவைகளாக காணப்படுகின்றன.அதில் ஒன்றுதான் வெப்துனியா ஆகும். உலகச் செய்திகள்,சினிமா,விளையாட்டு.மின்னஞ்சல்,ஈகார்டுகள்,ஆன்மீகம்,நகைச்சுவை,
கட்டுரைகள்,சமையல்,வைத்தியம் உட்பட மேலும் பல பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய ஒரு பரிபூரணமான தமிழ் இணையத்தளமாக இவ்இணையத்தளம் திகழ்கிறது.இலவசமாக தமிழ் மொழியில் மின்னஞ்சல் செய்யக்கூடிய வசதியும் இங்கு உள்ளது.
இத் தளத்தின் முகவரி http://tamil.webdunia.comConcepte By
A.Shanojan

நிழற்படங்களின் நிஜச் சோலை Flickrஒருவர் தன்னுடைய கெமரா ஒன்றினால் பிடித்த போட்டோக்களை உலகில் இருக்கின்ற கோடிக்கணக்கான மக்களுக்கு காட்டுவதற்க்காக இப்போது ஒரு வழி முறை உள்ளது.அது அந்த போட்டோக்களை
Flickr வெப் தளத்திந்கு மேலேற்றம் செய்வதாகும்.Flickr உலகில் First class photo sharing வெப் தளமாகும் வேண்டிய ஒருவர் தான் எடுத்த போட்டோக்களை flickr மூலம்
மக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல பகிர்ந்த் கொள்ளும் நிழற்படங்கள் பற்றிய அபிப்பிராயங்களை கூட தெரிவிக்கும் பொருட்டு இப்படியானதொரு முறையை கனடாவில் தற்போது 37வயதை
உடைய Catherina Fake என்ற பெண்ணும் அவரின் கணவர் Steuwart Butterfield என்பவருமே உருவாக்கினர்.2004 பெப்ரவரி மாதம் இவர்கள் இருவரினதும் கூட்டு நிறுவனமான
Ludicorp என்ற நிறிவனத்தின் கீழ் Flickr வெப்தளம் உருவாகியது.அன்றிலிருந்து அத்தளம் மிகவும் வேகமாக பிரபல்யமடைந்தது.அது எவ்வளவு பிரபல்யம் அடைந்தது என்றால் 2005 மார்ச்
இல் Flickr உட்பட Ludicrop நிறுவனத்தையே முழுவதுமாக விலைக்கு வாங்க யாகூ தமது விருப்பத்தை தெரிவிக்கும் அளவுக்கு.இதற்க்கு விருப்பம் தெரிவித்த Catherina Fakeஉம்
Steuwart Butterfieldஉம் 3கோடிடொலர்களுக்கு ப்ளிக்கரை விற்பனை செய்தார்கள்.கனடாஇன் செர்வர்களிலிருந்து ப்ளிக்கர் தளம் 2005 ஜுன் 28ம் திகதி அமெரிக்கா இன் செர்வர்களுக்கு
மாற்றப்பட்டது.தற்போது ப்ளிக்கரில் 15கோடிக்கணக்கான போட்டோக்கள் காணப்படுகின்றன.இத்தளத்தில் பதியப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50 இலட்சமாகும்.(2007ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி)
இதற்க்கு மேலாக ஒவ்வொரு நாளும் இத் தளத்திற்கு வந்து போகும் Visitor'sஐப் பற்றி சொல்வதாயின் அதற்க்கு கோடியை தாண்டிய ஒரு இலக்கம் தேவைப்படும்.மேலும் ப்ளிக்கரின் மூலம் Share
செய்து கொள்ளப்படும் போட்டோக்களை யார்வேண்டுமானாலும் பார்வையிடலாம்.தேவையானவாறு டவுன்லோட் செய்யவும் முடியும்.ஆனால் அதற்க்கு நீங்கள் யாகூமெயில் கணக்கு உடையவராக இருக்க
வேண்டும்.

நன்றி-www.wikipedia.org
தமிழில்-A.Shanojan
தொடர்புகளுக்கு-shanojan1993@yahoo.com

15 ஜூன், 2010

கூகிளைப் பற்றிச் சுழலும் இணையம்...


நம்மில் பலபேருக்கு கூகிள் இணையத்தளம் பறறி கேட்டால் இன்டர்நெட்டில் தேடுவதற்கான தேடுபொறி என்று உடனடியாக சொல்லி விடுவார்கள்.அந்த அளவுக்கு அது தேடலுக்கு
பிரபலமானது.ஆயினும் கூகிள் தளத்தின் சேவைகள் தேடுபொறிச் செயற்பாட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை.ஆனால் அதன் ஏனைய சேவைகள் பற்றிக் கேள்விப்பட்டவர்களும்
அதனைப் பயன்படுத்துபவர்களும் குறைவே.கூகிளை உபயோகித்து பல விடயங்களையும் தேடிய நாம் இப்போது கொஞ்சம் கூகிளின் உள்ளே தேடிப் பெற்றவைகளில் சிலவற்றை
பார்ப்போமா?

1.மேம்படுத்திய தேடு பொறி  http://labs.google.com/accessible/

இது சாதாரண தேடுபொறியில் இருந்து வேறுபட்டது.சாதாரணமாக google.com இல் தேடும்போது தற்போது பயன்பாட்டில் இல்லாமல் நின்றுபோன இணையத்தளங்கள்
மற்றும் உபயோகத்தில் இல்லாத தளங்கள் எல்லாவற்றையும் பட்டியலிடும்.ஆனால்,இந்த மேம்படுத்திய தேடுபொறியோ பயன்பாட்டில் இருக்கின்ற அதாவது உயிருள்ள
இணையத்தளங்கள் மற்றும் கோப்புக்களை மாத்திரமே பட்டியலிடுகிறது.இது எமக்கு மேலும் பயனுள்ளதுதானே...

2.விளம்பர சேவை (Adsense)
  http://google.com/adsense

இது முற்றுமுழுதாக இணையத்தளங்களை நடாத்துபவர்களுக்குரியது.அவர்களுடைய தளப்பராதரிப்பு செலவில் ஓரளவையேனும் இதனுாடாக ஈடுசெய்யலாம்.இது வெவ்வேறு
நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகின்ற விளம்பரங்களை கூகிளினூடாக உங்கள் இணையத்தளங்களில் பிரசுரிக்கும் வகையிலானது.குறித்த நிறுவனத்திடமிருந்து குறித்த விளம்ப
ரத்திற்காக கூகிள் நிறுவனம் பெறுகின்ற பணத்தில் ஒரு தொகையினை கூகிள் உங்களுக்கு காசோலை மூலமாக அனுப்பி வைக்கும்.இங்கு சென்று உங்களுக்குரிய கணக்கினை
ஆரம்பித்தால் ஸ்கிரிப்ட் கோடிங் கிடைக்கும்.அதனை உங்கள் தளத்தின் பக்கங்களில் சேர்த்து வடிவமைத்தால் சரி உங்கள் தளத்துக்கு வருகை தருகிறவர்கள் கூகிளின் விளம்பரங்
களை பார்க்ககூடியதாக இருக்கும்.ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பல்வெறு வடிவங்களில் விளம்பரங்கள் தெரியக்கூடியவாறு ஸ்கிறிப்ட் கோடிங்களை கூகிள் தருகிறது.

3.விளம்பர சேவை (Ad words)
  http:/google.com/adwords

இதுவும் விளம்பர சேவைதான்.ஆனால் இது உங்களை கூகிளில் விளம்பரப்படுத்துவதற்க்கானது.வெவ்வேறு இணையத்தளங்களில் உங்கள் விளம்பரம் இடம் பெறுவதுடன்
அந்த விளம்பரம் கிளிக் செய்யப்படுவதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் ஒவ் வொரு கிளிக்கிற்கும் உங்களிடம் கட்டணம் அறவிடப்படும்.

4.தளப்புள்ளி விபரம்

  http:/google.com/analytics

இது இணையத்தளங்களை நடாத்துபவர்களுக்கானது.இலவசமானதும் கூட.இதன் மூலம் உங்கள் இணையத்தளத்திற்கு எத்தனை பேர் வந்தார்கள்?..எங்கிருந்து எப்போது வந்தார்கள்?
எவற்றைப் பார்த்தார்கள்??எவ்வளவு நேரம் தளத்தில் செலவழித்தார்கள்?என்றெல்லாம் விலாவரியான அறிக்கையினை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.இந்தச் சேவை
கூகிளினால் 2005ம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.ஒரு தடவை முயன்றுதான் பாருங்களேன்.

5.சந்தேகம் தீர்த்தல்
  http:/answers.google.com/

இங்கே கேட்க்கப்படும் கேள்விகளுக்கு பதிவு செய்யப்பட்ட வல்லுனர்கள் பதிலளிப்பார்கள்.அவர்களுடைய பதிலுக்காக பணம் செலுத்துவதற்க்கு கூகிள் அனுமதிக்கும்.

6.சேமிப்பகம்
  http:/base.google.com

இங்கே பயனர்கள் தங்கள் கோப்புக்கள் பக்கங்களை கூகிள் சேவர்களிலும் தரவுத்தளங்களிலும் பிறர் தெடிப் பெற்றுக் கொள்ள வழி செய்யலாம்.

7.வலைப்பூ தேடி
  http:/blogsearch.google.com/

குறிப்பாக இணையத்தில் காணப்படுகின்ற ப்ளொக்ஸ் (Blogs) எனப்படும் வலைப்பூக்களை தேடுவதற்கான பிரத்தியேகமான பகுதியாகும்.பிறமொழி வலைப்பூக்களையும்
இங்கே தேடலாம்.

8.புத்தகக் குறி
  http:/google.com/bookmarks

பயனர்கள் தமது இரசனைக்குட்பட்ட தேவையான தளங்களின் முகவரிகளை Online இலேயே சேமித்துக் குறித்து வைப்பதற்க்கான பகுதி இதுவாகும்.


Concept By
A.Shanojan

Share With your friends