26 ஏப்ரல், 2010

Google Docs& Spreadsheets - ஒரு பார்வைபெரிய அறையொன்றுக்குள் ஆரம்பித்த கணினிப்புரட்சி இப்போது உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது.அதே போல் கணினியை அடிப்படையாக கொண்டு கம்பிவழித்தொடர்புகளூடாக ஆரம்பித்த இணையச் சேவைகள் இப்பொழுது கம்பியில்லாத் தொழில்நுட்பமாக மாறி,எங்கிருந்தும்,எப்போதும் எப்படியும் பயன்படுத்த கூடிய ஒன்றாக பரிணமித்திருக்கிறது. இந்த இரண்டு சாதனைகளையும் ஒன்றுசேர ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவந்தால் எப்படியிருக்கும்? என்ன குழப்பமாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.

இப்போது கணினி மூலம் நாம் ஒரு செயற்பாட்டை செய்யவேண்டுமானால் எம்மிடம் ஒரு கணினி அதற்குரிய அனைத்து வன்பொருள்களுடனும் அதில் நாம் நினைத்த காரியங்களை செய்வதற்கான மென்பொருள்களுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லாமல் இணைய இணைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு கணினி இருந்து விட்டால் போதும் மீதம் இருக்கும் காரியங்கள் அனைத்தையும் இணையவழியாகவே நீங்கள் செய்து கொள்ளலாம் என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்?

இணையத் தேடுபொறிச் செயற்பாட்டில் ஜாம்பவானான Google நிறுவனம் இந்த நவீன பொறிமுறைக்கு இப்போது அடியெடுத்து வைத்திருக்கிறது.கணினி சம்பந்தப்பட்ட எல்லா விடயங்களையும் தன்னுடைய இணைய சேவையினூடாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் இப்போது அது இறங்கியிருக்கிறது. Writley எனப்படும் இணைய அடிப்படையிலான Word processing மென்பொருளையும் Spreadsheets எனப்படும் Excel வகை இணையவழி மென்பொருளையும் ஒன்றினைத்து Google Docs & spreadsheets எனும் சேவையை அது அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதன் மூலம் Msword,Excel மற்றும் Openoffice போன்ற மென்பொருள்களின் உதவியுடன் நீங்கள் கணினியில் செய்யும் வேலைகளை அந்த மென்பொருள்கள் இல்லாமலேயே இப்போது நீங்கள் இணையத்தில் Online இல் இருந்தபடியே செய்ய முடியும்.இச்சேவை மூலம் இன்னும் பல நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடிகிறது.எமது கணினியில் Word processing அல்லது Spreadsheet மென்பொருள் நிறுவப்படாமல் இருந்தாலும் கூட எமது Word,Excel fileகளை Google Docs & spreadsheets இற்கு மேலேற்றுவதன் மூலம் Open செய்து கொள்ள முடியும். வேண்டுமானால் அதில் எடிட்டிங் செய்யவும் இயலும்.

Onlineஇல் இருந்தபடியே குறித்த Google Docs & spreadsheets (http://docs.google.com) இணையத்தளத்திற்கு சென்று எமது கூகிள் கணக்கின் மூலம் Sign in ஆனதன் பின்னர் Google Docs & spreadsheets மூலம் Word,Excel போன்ற மென்பொருள்களைக் கொண்டு உருவாக்கும் ஃபைல்களை இணையத்தளத்திலிருந்தபடியே உருவாக்கி எமது கணினியிலோ அல்லது கூகிள் சேர்வர்களிலோ அதனை சேமித்து கொள்ளலாம். சேர்வரில் சேமித்து வைத்தால் உங்கள் ஆவணங்களை நீங்கள் எங்கு சென்றாலும் Open செய்து அதனைப் பயன்படுத்திக்கொள்ளகூடிய வாய்ப்பும் கிட்டுகிறது.

Google Docs & spreadsheets எனும் இணைய வழிமென்பொருளானது doc, .xls, .csv, .ods, .odf, .pdf, .rtf, .html போன்ற ஃபைல் ஃபார்மட்களுடன் மிகவும் சிறப்பாக இயங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக நாம் உருவாக்கும்
வேர்ட் டாக்குமென்டுகளை பிடிஎஃப் ஆக மாற்றி டவுன்லோட் செய்துகொள்ளக்கூடிய வசதியும் கிடைக்கிறது.

நீங்கள் உருவாக்கியுள்ள ஒரு கட்டுரையை அல்லது வரவுசெலவுத் திட்டத்தை உலகின் வேறொரு மூலையிலிருக்கும் உங்கள் நண்பருடன் சேர்ந்து தொகுக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் இதற்கும் Google Docs & spreadsheets தீர்வாய் வருகிறது. நீங்கள் உங்கள் நண்பரின் Gmail address இற்கு அழைப்பை ஏற்படுத்தி அவரையும் உங்கள் ஆவணத்தை தொகுக்க வழி செய்யலாம் நீங்கள் தொகுக்கும்/மாற்றும் விடயங்கள் குறித்த ஆவணப்பக்கத்திலேயே குறிப்பிட்டுக் காட்டப்படும். இதனால் மாற்றங்களைச் செய்தவர் செய்த நேரம்,செய்த மாற்றம் என அனைத்து தகவல்களையும் விபரமாக அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கு ஒரு ஆவணத்தை ஒரு நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் தொகுக்கலாம் இதற்கு எல்லையே கிடையாது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக Google Docs & spreadsheets உதவியுடன் உங்களால் உருவாக்கப்பட்ட ஆவணங்களை இணையப்பக்கத்திலோ அல்லது வலைப்பதிவிலோ பப்ளிஷ் செய்ய முடியும். இதற்கு எந்தவித HTML அறிவும் தேவையில்லை.

போகிற போக்கைப் பார்த்தால் இனிமேல் கணினியில் பல வன்பொருள்களுக்கும் மென்பொருள்களுக்கும் வேலைஇருக்காது போலிருக்கிறது.எல்லாவற்றையும் இணையத்தொடர்புகளுக்கூடாகவே செய்து கொள்ள முடியும்.

...வழமை போல இன்ட்லி மற்றும் தமிழ்10 திரட்டிகளில் ஓட்டளியுங்கள்...

21 ஏப்ரல், 2010

இணைய அரங்கம்

சென்ற மாதம் (http://itcornerlk.blogspot.com/2010/03/blog-post_27.html) இப்பகுதியில் புதிய 5 தளங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.அவை உங்களுக்கு பயன் அளித்திருக்கும் என நம்புகின்றேன். அதே போன்று இந்த மாதமும் வித்தியாசமான 5 இணையத்தளங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.வாசித்து பயனடையுங்கள்....


சலனப்படங்களின் சோலை..இணையத்தில் இலவசமாக Videoக்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதியை பல இணையத்தளங்கள் நமக்கு வழங்குகின்றன.அவ்வாறான சிறந்த இணையத்தளங்களில் ஒன்றாக Dailymotion ஐ குறிப்பிடலாம்.
இங்கே இணையப்பயனர்களால் நாள்தோறும் பல வகையான Video fileகள் Upload செய்யப்படுகின்றன.அவ்வாறு Upload செய்யப்பட்ட Videoகளை அவ் இணையத்திலிருந்தே பார்க்ககூடிய வசதி காணப்படுவதுடன்
நம்மிடமுள்ள Videoக்களை அப்லோட் செய்து கொள்ளவும் முடியும்.20 நிமிட அளவை கொண்டதும் 150 எம்பி வரை கொள்ளளவை கொண்ட Videoக்களை அப்லோட் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விணையத்தளத்தின் முகவரி www.dailymotion.com என்பதாகும்.


சொற்களுக்கு பொருள்...

நீங்கள் பொருள் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை ஆங்கில் சொற்களுக்கும் மிகவும் விரைவாக பல மூலங்களிலிருந்தும் (Source) பொருளை காட்சிப்படுத்தும் இணையத்தளமே Onelook ஆகும்.
மிகவும் எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விணையத்தளத்திலிருந்து நாம் வழங்கும் சொல்லுக்கு பொருளை தருவதோடு மட்டுமல்லாது மேலதிக உசாத்துணைக்காக குறித்த இணையத்தளங்களுக்கான இணைப்பையும் தருகிறது.இத்தளத்தின் முகவரி www.onelook.com

எப்படி எருவாகியது???


இது எப்படி சாத்தியம் என கேட்கிறீர்களா??உங்கள் வீட்டினையும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களையும் நீங்கள் மட்டுமல்லாமல் உலகின் எந்ந பிரதேசத்திலுமுள்ள ஒருவராலும் பார்க்க முடியுமா? இந்த கேள்விக்கு

தீர்வு சொல்கிறது Wikimapia.இந்த வலைத்தளமானது உலகின் ஒரு சில பிரதேசங்களை தவிர உலகின் ஏனைய பிரதேசங்களை மிக அண்மிய கோணத்தில் உங்கள் கண்முன் கொண்டுவருவதுடன் எங்கள் வீட்டினை

நீங்களே இந்த இணையத்தளத்தில் குறிக்கவும் முடிகிறது.Search வசதியின் மூலம் உங்களுக்கு தேவையான பிரதேசங்களை மிக இலகுவில் கண்டுபிடிக்கலாம்.இத்தளத்தின் முகவரி www.wikimapia.org


தமிழ் Mp3 Download 

பாடல்கள் என்றால் Mp3 என்று சொல்லுமளவுக்கு Mp3 இன் ஆதிக்கம் உலகெங்கும் பரந்து காணபபடுகிறது.Mp3 பாடல்களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்த பல இணையத்தளங்கள் இணைய வலைப்பின்னலில் காணப்படுகின்றன. அதிலொன்றுதான் Tamilbeat ஆகும்.இங்கே பழைய,புதிய,இடைக்கால பாடல்கள் மட்டுமன்றி பக்தி பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. பாடல்களை டவுன்லோட் செய்வது மட்டுமன்றி அவற்றை இணையத்திலிருந்நே கேட்கவும் முடியும்.இதன முகவரி www.tamilbeat.com  

...வழமை போலவே இன்ட்லி மற்றும் தமிழ்10 திரட்டிகளில் விருப்பம் சொல்லி ஏனைய நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்...

PDF தரும் நன்மைகள்!

இன்று உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான டாக்குமென்ட் ஃபார்மட்டாக பிடிஎஃப் ஃபைல் ஃபார்மட் விளங்குகிறது.1993ம் ஆண்டு Adobe systems என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பிடிஎஃப் ஃபார்மட் இன்று இன்டர்நெட்டில் நம்பர் ஒன் யுனிவர்சல் டாக்குமென்ட் ஃபார்மட்டாக விளங்குகிறது.இத்தகைய தனித்தன்மையோடு செயல்படும் PDF Format இல் டாக்குமென்ட்டுகளை மாற்றுவதால் ஏற்படும் பத்து நன்மைகளை இப்பகுதியில் அறியலாம்.

1) விண்டோஸ்,மேக்,லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் மற்றும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் புதிய வகை செல்ஃபோன்கள் மற்றும் PDAக்களிலும் PDF ஃபைல்களை உங்களுடன் பணிபுரிபவர்களுடனோ, நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ Share செய்து கொள்ளலாம்.

2) Document ஃபைலை பிடிஎஃப் ஃபைலாக மாற்றும் போது பிடிஎஃப் ஃபைலாக மாற்றப்பட்ட ஃபைலானது அளவில் சிறியதாகவும் மற்றும் தரமானதாகவும் இருக்கும்.மேலும் ஸ்ப்ரெட்ஷீட்கள்,வேர்ட் டாக்குமென்டுகள், போட்டோக்கள் மற்றும் இதர வகையான ஃபைல்களை ஒன்றாக இணைத்து ஒரே பிடிஎஃப் ஃபைலாக மாற்றலாம்.

3) எந்தவொரு அப்ளிகேஷன் மூலமும் உருவாக்கப்பட்ட டாக்குமென்ட் ஃபைலை பிடிஎஃப் ஃபைலாக மாற்ற முடியும்.பிடிஎஃப் பைலாக மாற்றப்படை டாக்கு மென்ட் ஃபைலானது நல்ல தரமான பேப்பரில் பிரின்ட் எடுத்தது போல் தோற்றமளிக்கும்

4) நீங்கள் பிடிஎஃப் மாற்றிய டாக்கு மென்டை வேறு யாரும் பிரின்ட் எடுக்கவோ அல்லது நகல் செய்யவோ முடியாத வண்ணம் பாதுகாப்பு கொடுக்கலாம்.இதனால் உங்கள் பிடிஎஃப் பைலை ஷேர் செய்பவர்கள் அதில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்ய முடியாமல் பாதுகாக்கப்படுகிறது.

5) வைரஸ் மற்றும் ட்ரோஜன் போன்றவற்றினால் பிடிஎஃப் ஃபைல்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.இதனால் உங்கள் பிடிஎஃப் ஃபைலை மற்றவர்கள் ஷேர் செய்யும் போது அதற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.

6) உங்கள் டாக்குமென்ட் ஃபைலை பிடிஎஃப் ஃபைலாக மாற்ற உதவும் பிடிஎஃப் கன்வர்ஷன் மென்பொருள்கள் பல இன்டர்நெட்டில் இலவசமாகவும் மற்றும் குறைந்த கட்டணத்திலும் கிடைக்கின்றன.இவ்வகையான மென்பொருள்களை பயன்படுத்தி உங்கள் டாக்குமென்ட் ஃபைல்களை பிடிஎஃப் ஃபைல்களாக மாற்றிக் கொள்ளலாம்.

7) பிடிஎஃப் ஃபைலை திறந்து பார்க்க உதவும் மென்பொருளான Acrobat reader ஐ இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது டாக்குமென்ட்களை
பிடிஎஃப் ஃபார்மட்டிலேயே வெளியிடுகின்றன.

8) உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் Web browser இல் பிடிஎஃப் ஃபைல்களை மிகவும் எளிதாக திறந்து பார்க்கலாம்.மேலும் இணையத்தளங்களில் ஏதாவது லிங்க் மூலம் இணைக்கப்பட்ட பிடிஎஃப் ஃபைலை அந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் திறந்து பார்க்கலாம்.

9) கோர்ட்டின் சட்டங்களின்படி ஒரு டாக்குமென்ட் என்பது அது உருவாக்கப்பட்ட பிறகு அதில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்பட கூடாது.பிடிஎஃப் ஃபைல்களில் எந்தவிதமான மாற்றங்களும் செய்ய முடியாது
என்பதால் பிடிஎஃப் ஃபைல்கள் டாக்குமென்ட் ஃபைலுக்கு தேவையான விதிமுறைகளை கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.

10) தற்போது பயன்பாட்டில் உள்ள Modern portable reader systemsகளிலும் பிடிஎஃப் ஃபைலை பயன்படுத்தலாம்.மேலும் E-paper reader களிலும் பிடிஎஃப் ஃபைல்களை பயன்படுத்தலாம்.

... வழமைபோல இன்ட்லி மற்றும் தமிழ்10 தளங்களில் ஓட்டளித்து இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்...

18 ஏப்ரல், 2010

விண்டோஸ் மீடியா ப்ளயர் தலைப்புப் பட்டையில் (Title bar) நமது பெயரை தோன்ற செய்ய...

Start - Run - Type 'regedit'  open Registry editor
HKEY_CURRENT_USER\Software\Policies\Microsoft என்பதில் வலது கிளிக் செய்து New>key என்பதினை தேர்வு செய்யவும்.
உருவாகும் புதிய கீயினை விண்டோஸ் மீடியா ப்ளயர் என பெயர் மாற்றம் செய்யவும்.
இந்த விண்டோஸ் மீடியா ப்ளேயர் கீயினை வலது கிளிக் செய்து New>String value என்பதினை தேர்வு செய்யவும்.
இப்பொழுது வலத் பக்க பேனில் ஒரு புதிய String value உருவாகும்.அதனை Titlebar என பெயர் மாற்றம் செய்யவும்.
பின்னர் அதனை திறந்து தலைப்பு பட்டையில் (Titlebar) எந்த பெயரைகாட்ட செய்யவேண்டுமோ அதை கொடுக்க வேண்டும்.
ரெஜிஸ்ட்ரி எடிட்டரை Close செய்யவும்.விண்டோசை Refresh செய்து மீடியா ஃப்ளேயரினை திறக்கவும்.தலைப்பு பட்டையில் நாம் கொடுத்த பெயர் காட்டப்படும்.
Try It....
Concepte By
A.Shanojan

15 ஏப்ரல், 2010

பயர்பாக்ஸ்: விரும்பும் புரோகிராமினைத் திறக்க


                                               
இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் பைல் ஒன்றைத் திறக்க, அல்லது இமெயில் அனுப்ப லிங்க் ஒன்றைக் கிளிக் செய்கிறீர்கள். என்ன நடக்கிறது? நீங்கள் எதிர்பார்த்த புரோகிராம், திறக்கப்படாமல் வேறு ஒரு புரோகிராமில் அது திறக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, பாடல் பைல் ஒன்றை இயக்கிக் கேட்க விரும்புகிறீர்கள். அப்போது நீங்கள் விரும்பும் விண் ஆம்ப் இயக்கப்படாமல் விண்டோஸ் மீடியா பிளேயர் இயக்கப்படலாம்.
அதன் மூலமும் பாடலைக் கேட்கலாம் என்றாலும், நீங்கள் பழகிய புரோகிராமான விண் ஆம்ப் திறந்து கேட்பது தான் உங்களுக்கு சுகமான அனுபவமாக இருக்கும். அதே போல நீங்கள் தண்டர்பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராம் மூலம் உங்கள் இமெயில்களைக் கையாண்டு வருகிறீர்கள். ஆனால் லிங்க்கில் கிளிக் செய்கையில் முன்பு போட்டு வைத்த இடோரா இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்படுகிறது. நிச்சயம் நீங்கள் அதனை விரும்ப மாட்டீர்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது? நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரில், ஒவ்வொரு வகை பைலும் குறிப்பிட்ட புரோகிராமால் திறக்கப்பட வேண்டும் என நீங்கள் குறிப்பிடாவிட்டால், பிரவுசர் கம்ப்யூட்டரில் பதிந்துள்ளதைக் குறியிட்டு அமைத்துக் கொள்கிறது. எனவே நாம் இதனை எப்படி அமைக்க வேண்டும் என்பதை இங்கு பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் பார்க்கலாம்.

பயர்பாக்ஸ் 3.5 மற்றும் அடுத்த பதிப்புகளில் இந்த வகையில் மாற்றங்களை ஏற்படுத்தவும். முதலில்Tools>Options செல்லவும். பின்னர் 'Applications' என்ற டேப்பினைத் திறக்கவும். இங்கு நீங்கள் எந்த வகை பைலுக்கு புரோகிராம் செட் செய்திட விரும்புகிறீர்களோ, அந்த வகை பைலை, அங்கு ஸ்குரோல் செய்து தேடிக் காணவும். எடுத்துக் காட்டாக இமெயில் குறித்து என்றால் 'mailto' என்ற பிரிவிற்குச் செல்லவும். பின் கீழ் விரி மெனுவில் எந்த மெயில் புரோகிராம் வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே ஒவ்வொரு வகை பைலுக்கும் அதற்கான புரோகிரா மினைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த புரோகிராம்களில் தான் அந்த அந்த வகை பைல்கள் திறக்கப்படும்.

நன்றி- www.lakasri.com

கணினியை பராமரிக்க 07 வழிகள் (சென்ற மாத இடுகையின் தொடர்ச்சி...)

வழிமுறை-05 Antivirus
உங்கள் கணினியில் ஒரு நல்ல Antivirus மென்பொருளை கண்டிப்பாக நிறுவியிருக்க வேண்டும்.சில வகையான Antivirusகள் இணையத்தளத்தில் இலவசமாக கிடைக்கின்றன.சில வகையான Antivirusகள் பணம் செலுத்தி வாங்க வேண்டியது இருக்கும்.பொதுவாகவே வைரஸ்கள் கணினியில் ஒளிந்தவாறு இருந்து கொண்டு கணினிக்கு ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்.கணினியில் ஆன்டிவைரஸ் இல்லையென்றால் வைரஸ் கணினியில் உள்ளதா இல்லையா என்பதை அறியாமலே போய்விடும்.எனவே Norton,Mcafee,Computer associates போன்ற ஏதாவது ஒரு நல்ல ஆன்டிவைரசை கணினியில் நிறுவியிருக்க வேண்டும்.இலவசமாக ஆன்டிலைரஸ் பெறுவவதற்கு Yahoo மற்றும் Google போன்ற தேடுபொறிகளில் free antivirus download என்று தேடி ஒரு நல்ல Antivirus மென்பொருளை நிறுவி கொள்ளுங்கள்.
பரிந்துரை--- தற்காலத்தில் இணையத்தில் இலவசமாக கிடைக்ககூடிய Avast5 Antivirus மென்பொருளை நிறுவுவது இலகுவானது.இதன் வலைத்தள முகவரி

வழிமுறை-06 Recycle bin
டெம்பரரி ஃபைல்களை போலவே ரீசைக்கிள் பின்னில் உள்ள ஃபைல்களும் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பவையாகும்.உங்களுக்கு வேண்டப்படாத ஃபைல்களை நீங்கள் அழிக்கும் போது அந்த ஃபைல்கள் ரீசைக்கிள் பின்னில் போய் பதியும்.இவ்வாறு பல நாட்களாக நீங்கள் அழித்த ஃபைல்கள் ரீசைக்கிள் பின்னில் சேர்வதால் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் குறிப்பிட்ட அளவு இடம் வீணாக போகிறது.இதனால் கணினியின் வேகமும் குறைகிறது.எனவே எப்பொழுதும் ரீசைக்கிள் பின்னை காலியாக வைத்திருப்பது நல்லது.மேலும் உங்களுக்கு வேண்டாத ஃபைல்களை ரீசைக்கிள் பின்னிற்கு செல்லாமலேயே அழிப்பதற்கு அழிக்க வேண்டிய ஃபைலை தேர்வு செய்து கொண்டு Shift+del கீகளை அழுத்தவும்.

வழிமுறை-07 Adware and Spyware
இவ்விரு வகை புரோகிராம்களும் கணினிக்கு ஏதாவது ஒரு வகையில் சிக்கல்களை கொடுக்கும்.இவ்விரு வகை புரோகிராம்களும் கணினிக்கு ஏதாவது ஒரு வகையில் சிக்கல்களை கொடுக்கும்.இவ்விரு வகை புரோகிராம்களும் உங்கள் கணினியில் பதியப்பட்டு நீங்கள் கணினியில் என்னென்ன செய்கிறீர்கள்,எந்தெந்ந இணையத்தளங்களை பார்வையிடுகிறீர்கள், நீங்கள் எதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளீர்கள் போன்ற செய்திகளை செர்வருக்கு(Server) அனுப்பும்.இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் ஸ்பைவேர் உங்களது செயல்பாடுகளை செர்வருக்கு அனுப்பும்.அதே நேரத்தில் அட்வேரானது உங்களது செயல்பாடுகளை செர்வருக்கு அனுப்புவதோடு உங்களது கணினியில் ஒரு விளம்பரத்தையும் தோற்றுவிக்கும்.இணையத்தில் ஆன்டிஸ்பைவேர் மற்றும் ஆன்டிஅட்வேர் ஆகியன இலவசமாக கிடைக்கின்றன.தேடுபொநிகளில் தேடி ஒரு நல்ல ஆன்டிஸ்பைவேர் மற்றும் ஆன்டிஅட்வேரை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்வதால் கணினியின் வெகத்தை அதிகரிக்கலாம்.

10 ஏப்ரல், 2010

Ctrl+Alt+Delete ஐக் கண்டுபிடித்தவர்உங்களது கணினி இயங்க மறுக்கும் அல்லது Struk ஆகும் ஒவ்வொரு தடவையும் கணினியை Log off செய்து மீண்டும் இயங்க செய்யவோ அல்லது இயக்கமற்று உறைந்து போயிருக்கும் ஒரு புறோகிராமை மூடிவிடவோ என பல்வேறு பிரச்சினைகளுக்கும் இலகுவான தீர்வாக இருப்பது Ctrl+Alt+Del ஆகும்.இவ்வாறு உங்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்யும் இந்த குறுக்கு வழியை கண்டுபிடித்தவர் டேவிட் பிரட்லி (David Bradly) என்பவர் ஆவார்.கணினியின் இயக்கத்தை நிறுத்தாமல் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்க்கான ஒரே வழி இந்த Ctrl+Alt+Delஎன்பது அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும்.IBM நிறுவனத்தில் 28 வருடங்கள் சேவைசெய்து ஓய்வு பெற்றவரான பிரட்லி தன்னுடைய இந்தக் கண்டுபிடிப்பு பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை."இதைவிட பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறேன்.ஆனால் இதுதான் எனக்கு புகழை தந்துவிட்டது"
என்கிறார் அவர்.அவருடைய புகழ் கணினியில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினை காரணமாகத்தான் ஏற்பட்டிருக்கிறது.

6 ஏப்ரல், 2010

தகவல்களின் மொத்த திரட்டு விக்கிபீடியா (கவர் ஸ்டோரி)


இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக காணப்படுவது விக்கிபீடியா.ஆனால் இந்த விக்கிபீடியா என்றால் என்ன?இது என்ன செய்கிறது?இதன் வரலாறு என்ன? என்பது போன்ற பல விடயங்கள் பலருக்கு தெரியாத விடயமாக காணப்படுகிறது.எனவே முழுமையான ஒரு விக்கிபீடியா பற்றிய விடயங்களை எனது தேடலுக்கு அகப்பட்ட வகையில் ஒரு கட்டுரையாக தொகுத்து இம்மாதத்திற்கான கவர்ஸ்டோரியாக தருகிறேன்.

தகவல்களை சீராக ஒழுங்கமைத்தபடி கொண்ட பெரும்பாலும் எல்லா விடயங்களைப் பற்றிய தகவல்களையும் உள்ளடக்கிய நுாலை கலைக்களஞ்சியம் (Encyclopedia) என்று சொல்வோம்.Encyclopedia என்றால் எம் எண்ணத்திற்கு வருவது மைக்ரோசாப்டின் Encarta encyclopedia மற்றும் Britania encyclopedia போன்றவைகள் தான். ஆனாலும் இன்றைய நிலையில் மேற்சொன்ன Encyclopedia யாவற்றையும் தோற்கடித்து தகவல்களின் மொத்த திரட்டாக Wikipedia எனும் கட்டற்ற கலைக்களஞ்சியம் உருவெடுத்துள்ளது.

Wikipedia-ஓர் அறிமுகம்


ஹவாய் மொழியில் விக்கிவிக்கி என்றால் விரைவு என்று பொருள் இணையத்தளங்களைப் பார்வையிடும் எந்தவொரு விருந்தாளியும் தொகுக்ககூடிய வகையில் அமைந்த இணையத்தளங்களே இணையப்பரப்பில் விக்கி என அழைக்ப்படும்.இவ்வாறான விக்கி வகை இணையத்தளங்களை பராமரித்து முகாமைசெய்வதற்கு Wiki engines எனப்படும். மென்பொருள்கள் பயன்படுகின்றன.இதற்குப் பெரும்பாலும் Open source வகை மென்பொருள்கள் பயன்படுகின்றன. MediaWiki எனும் Open source வகையைச் சார்ந்த மென்பொருள் மூலமே Wikipedia பராமரிக்கப்படுகிறது.எவராலும் தொகுக்ககூடிய வகையிலமைந்த கலைக்களஞ்சியம் என்பதால் இதற்கு Wikipedia என்பதே பொருத்தமான பெயராகும்.   

Wikipedia-உருவான நிஐம்


2000ஆம் ஆண்டில் ஜிம்மி வேல்ஸ் (Jimmy wales) என்பவரும் அவரது சகபாடிகள் சிலரும் இணைந்து Nupedia எனும் இணைய அடிப்படையான கலைக்களஞ்சியமொன்றை ஆரம்பித்தனர்.இதில்,தகைமை வாய்ந்தவர்களிடமிருந்தே ஆக்கங்ங்கள் பெறப்பட்டு வெளியிடப்பட்டன.இதனால் Jimmy wales எண்ணியது போல Nupedia வின் வளர்சி அமையவில்லை.இதனால் அவர் தனது சகபாடிகளுடன் இணைந்து Encyclopediaஐ வளர்ச்சியடைய செய்ய என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமென தீவிரமாக ஆலோசித்தனர். அதன்போதே Wiki தொடர்பான எண்ணக்கருவினை அறிந்து அதன்படி Nupedia ஐ Wiki வகையான கலைக்களஞ்சியமாக மாற்றத்தீர்மானித்தனர். 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி Nupedia வானது Wikipedia என பெயர்மாற்றப்பட்டு இணையத்திற்கு வந்தது.அன்று முதல் தகவல்களின் திரட்டுகை ஆரம்பமாயிற்று.அதனாலோ என்னவோ ஒவ்வொரு வருடமும் ஜனவரி 15ம் திகதியை விக்கிபீடியா தினம் (Wikipedia day) என சிலபயனர்கள் நினைவுபடுத்திக் கொண்டாடுகிறார்கள்.

Wikipedia-வளர்சிப்படி


ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் (http://en.wikipedia.org) மட்டும் காணப்பட்ட விக்கிப்பீடியா பின்னர் நுாற்றுக்கதிகமான வெளிநாட்டு மொழிகளில் முக்கியமாக நமது தமிழ் மெழியிலும் தகவல்கள் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளது.மொத்த விக்கிப்பீடியாவில் இலக்கியம்,பண்பாடு,வரலாறு,அறிவியல்,கணிதம்,புவியியல்,சமூகம் மற்றும் தொழில்நுட்பம் என பல தொகுதிகளுக்கும் அடங்கும் 3,800,000 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் காணப்படுகின்றன.அத்தோடு ஒவ்வொரு நாளும் விக்கிபீடியாவின் பிரதான பக்கத்தில் (Main page) சிறப்புக் கட்டுரை,கூ்ட்டு முயற்சி கட்டுரை,உங்களுக்கு தெரியுமா?,மற்றும் வரலாற்றில் இன்று என ஏகப்பட்ட விடயங்கள் சார்பான தகவல்கள் புதிது புதிதாக காட்சியளிக்கும்.இவை யாவும்

உலகின் பல பாகங்களிலுமிருந்தும் இணையத்துடன் இணைந்து தங்களறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்த ஆயிரக்கணக்கான பயனர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையாலே சாத்தியமாகியுள்ளது.அத்தோடு விக்கிபூடியாவிலுள்ள சகல ஆக்கங்களும் GNU Free documentation licence (GFDL) இற்கு இணங்கவே வழங்கப்படுவதால் இங்குள்ள தகவல்களை எவரும் இலவசமாகவே தமது தேவைகளுக்காகப் பாவிக்க முடியும்.

Wikipedia-ஏனைய முயற்சிகள்


விக்கிபீடியாவின் துரிதமான வளர்ச்சியின் காரணமாக தகவல்களைப் பெறும் மூலங்கள் இலகுவாக்கப்பட்டுள்ளதோடு தகவல்களின் சுதந்திரமும் பேணப்படுகிறது.விக்கிபூடியாவானது,இன்னும் பல காத்திரமான தவல் கோட்டைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை சொல்லாமலும் இருக்கமுடியாது.அவற்றுள் பின்வருவனவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம். விக்சனரி (Wiktionary) எனப்படும் அகராதி,விக்கிநுால்கள் (Wikibooks) எனப்படும் கட்டற்ற நுால்கள் மற்றும் கையேடுகளின் தொகுப்பு,விக்கி மேற்கோள்கள் (Wikiquote) எனும் மேற்கோள்களின் தொகுப்பு,விக்கி மூலம் (Wikisource) எனும் இலவச மூலஆவணங்களின் தொகுப்பு,விக்கி இனங்கள் (Wiki species) எனும் இனங்களின் கோவை,விக்கி பொது 
(Wiki-commons) எனும் பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு என விக்கிப்பீடியாவின் சேவைத் தொகுதிகளை அடுக்கி கொண்டே செல்லலாம்.இந்தச் செயற்றிட்டங்கள் யாவும் வெகு சீக்கிரமாக தகவல்களால் போஷிக்கப்பட்டு வருவது எதிர்கால சந்ததிகளின் தகவல் தாகத்திற்கு பெருந்துணையாக அமையும்.


இனி நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி விக்கிப்பீடியாவை நமது தாய்மொழியில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.எனவே தமிழ் விக்கிப்பீடியாவை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.இது உங்களுக்கும் உறுதுணையாக இருக்கும்

Wikipedia-தேமதுரத் தமிழில்தமிழ் மொழியிலமைந்த கட்டற்ற கலைக்களஞ்சியம் தமிழ் விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) முயற்சி 2003 இல் ஆரம்பமானது.இதில்,ஆங்கில மொழியிலமைந்த விக்கிப்பீடியாவைப்போல தகவல் செறிவு இல்லாவிடினும் இதுவரை 3000 க்கும் மேற்ப்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.நீங்கள் இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் போதே 
கட்டுரைகளின் எண்ணிக்கை மாறியிருக்ககூடும்.தமிழில் அமைந்த விக்கிப்பீடியாவிற்கு தாங்களறிந்த மற்றவர் அறிவதால் பயன் ஏற்படுமென எண்ணுகிற தகவல்களை எவரும் விக்கிப்பீடியாவில் சேர்க்க முடியும்.இந்த விக்கிப்பீடியாவில் வேண்டப்படுகின்ற கட்டுரைகள் மற்றும் படங்கள் பற்றிய விபரமும் காணப்படுவதால் அவற்றை வாசித்தறிந்து இந்த 
தகவல் சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள 'தொகு' எனப்படும் Hyperlink ஐ கிளிக் செய்வதன் மூலம் தகவல்களை அளிக்க முடியும்.தகவல்களை வழங்குவது தொடர்பாக பயிற்சி பெறுவதற்கு விக்கி மணல்தொட்டி (Wiki sand box) எனும் வசதியும் காணப்படுகிறது.தமிழ் மொழியிலமைந்த விக்கிப்பீடியாவிலும் ஏனைய முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.அவற்றுள் விக்கிநூல்கள் மற்றும் விக்கிமேற்கோள்கள் ஆகிய முயற்சிகள் குறிப்பிடத்தக்களவு முன்னேறியுள்ளதை சுட்டிக்காட்டலாம்.தமிழ் விக்கிப்பீடியாவும் தகவல்களின் மொத்த திரட்டாக உருவெடுககும் காலம் வெகுதொலைவில் இல்லையென எண்ணத் தோன்றுகிறது.


Wikipedia-தகவல்களை நம்பலாமா?


எவராலும் தொகுக்கப்படக்கூடிய வகையிலமைந்துள்ள விக்கிப்பீடியாவிலே காணப்படுகின்ற தகவல்கள் உண்மையானதாக இருக்குமா?என்ற கேள்வி எம்எல்லோருக்கும் வெளிப்படையாக உண்டாகும்.யாரேனும் ஒருவர்,அறியாமலோ,அன்றி வேண்டுமென்றோ தவறான தகவல்களை வழங்க முடியுமல்லவா?என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஆனால் ஒருவரால் பிழையான தகவல்கள் வழங்கப்பட்டாலும் அவை இன்னொருவரால் திருத்தப்படும் நிகழ்தகவு இதில் அதிகமென்றே நம்பப்படுகின்றது.ஆனாலும் இது பரந்து விரிந்து காணப்படும் எல்லாத் தகவல்களும் சாத்தியமாகுமா?இதனை ஆராய்ந்தறிய உலகிலே மிகவும் பிரசித்தமான பிரித்தானியாவின் Nature எனும் விஞ்ஞான சஞ்சிகை முற்பட்டது.இது தொடர்பாக தமது அறிக்கையை கடந்த வருட இறுதிப்பகுதியில் அது வெளியிடப்பட்டது.அதில் விஞ்ஞானம் சார்பாக விக்கிப்பீடியாவில் காணப்படும் தகவல்கள்,கட்டுரைகள்,மற்றும் படிமங்கள் (Images) யாவும் உலகப் பிரசித்தி பெற்ற Encyclopedia Britannica இலுள்ள தகவல்களைப் போல உண்மையானவையாகுமென குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே விக்கிப்பீடியாவானது தகவல்களின் சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் பேணும் சிறப்பானதொரு ஊடகம் என்று நம்பலாம்.

Wikipedia-எதிர்காலம் பலமானது


உலகின் நாலா பக்கங்களிலுமுள்ள பங்களிப்பாளர்களின் பங்களிப்பின் விளைவாக சேர்க்கப்படும் ஆக்கங்கள் உலகின் பல பாகங்களிலுமுள்ள சுமார் 100இற்கும் அதிகமான சேவையகங்களில் சேமிக்கப்பட்டு விக்கிப்பீடியா இணையத்தளமூடாக காட்சிப்படுத்தப்படுகின்றன.தகவல்களின் அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக Serverகளில் சேமிக்கப்பட்டு இணையத்தில் இது பரப்பப்படலாம்.இதனால் விக்கிப்பீடியாவானது தகவல்களின் மொத்தத்திரட்டாக உருவெடுக்கும் நிலையை எவராலும் தடுக்கமுடியாது. அகிலத்திலேயே அனைத்துத் தகவல்களையும் தெளிவாக,விரிவாக கொண்ட ஒரேயொரு கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா எதிர்காலத்தில் உணரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த ஆக்கபூர்வமான முயற்சியை வாழ்த்துவோம்!எம்மால் முடிந்தளவுக்கு நாமும் பங்களிப்போம்.

2 ஏப்ரல், 2010

கணினி வரலாற்றின் மைல்க் கற்கள்...

10,000 ஆண்டுகளுக்கு முன் :  தகவல்யுகம் இவ்வுலகில் அவதரித்த காலம்
கி.மு 3000 :  எகிப்திய நாட்டவர் நாட்டின் முக்கிய இரகசியங்களை காகிதத்தில் பதித்து (Save) பாதுகாக்க தொடங்கினர்.

கி.மு 1700 :  பொனீசியர்கள் 22 எழுத்துக்களை கொண்ட அரிச்சுவடியை
                        பயன்படுத்த தொடங்கினர்.

கி.மு 1000 : இன்று வரை மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் மணிச்சட்டம்
                        புழக்கத்துக்கு வந்த காலம்.

கி.பி 1642 :   பாஸ்காலின் கணக்கிடும் பொறி கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி 1833 :  சார்ள்ஸ் பபேஜ் என்பவர் Analytical எனும் இயந்திரத்தை
                       கண்டுபிடுத்தார்.

கி.பி 1924 :  IBM நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

கி.பி 1930 :  புஷ் என்பவர் அனலாக் என்ற பெயருடைய கணக்கிடும் கருவி
                      ஒன்றை உருவாக்கினார்.

கி.பி 1944 :  ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகத்தினர் Mark-1 எனும் மின்சாரத்தால்
                      இயங்கக்கூடிய இலத்திரனியல் கணினியொன்றை உருவாக்கினர்.

கி.பி 1946 :  முதல் தானியங்கி மின்னணு எண்ணியல் கணினி
                      உருவாக்கப்பட்டது.இது ENIAC என அழைக்கப்பட்டது.

கி.பி 1947-1972 :  Transistor கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி 1951 :  Univac-1 எனும் வர்த்தக தகவல்களை ஆராயும் கணினி
                      உருவாக்கப்பட்டது.

கி.பி 1969 :  இணையம் தோன்றுவதற்கு காரணமாயிருந்த வலைப்பின்னல் 
                       (Network) தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி 1970 :  Floppy disk,4004 Chip விற்பனைக்கு வந்தது.

கி.பி 1971 :  சிறியரக கணினி உருவாக்கப்பட்டது.

கி.பி 1974 :  தொலைநகல் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி 1975 :  தனிநபர் (personel) மற்றும் Super computers தயாரிக்கப்பட்டன.

கி.பி 1976 :  LAN என்பது Ethernet எனும் பெயரில் அறிமுகமானது.

கி.பி 1982 :  Compact disk வெளியிடப்பட்டது.

கி.பி 1983 :  செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி 1985 :  Apple macintosh வகைக் கணினிகளின் விலை பாரிய அளவில்
                      குறைக்கப்பட்டது.

கி.பி 1990 :  சுவிற்சலார்ந்தில் Wold wide web உருவாக்கப்பட்டது.

கி.பி 1993 :  Pentium வகை ப்ராசசர்கள் வெளியிடப்பட்டது.

கி.பி 1994 :  Navigator ஆணைத் தொடர் உருவாக்கப்பட்டது.

கி.பி 1995 :  MS Windows 95 விற்பனைக்கு வந்தது.

கி.பி 1996 :  MS Explorer அறிமுகமானது.

கி.பி 1997 :  சூப்பர் கணினிகள் உருவாக்கப்பட்டது.

கி.பி 1999 :  PIII,PC,500MHz வகைக் கணினிகள் விற்பனைக்கு விடப்பட்டன.

குப்பைக் கூடைக்கு போனதை மீண்டும் பெற...

கணினிகளில் நமக்கு தேவைப்படாத ஃபைல்களை நாம் அழிக்கும் போது அவை நேராக ரீசைக்கிள் பின் எனப்படும் குப்பைக்கூடைக்கு சென்றுவிடும் என்பது யாவரும் அறிந்த செய்தி.குப்பைகூடையில் உள்ள ஃபைல்கள் ஏதாவது நமக்கு மீண்டும் தேவைப்பட்டால் Restore எனும் Option ஐ பயன்படுத்துவோம்.


நமக்கு எப்போதுமே தேவையில்லை என்று நினைக்கும் ஃபைல்களை Shift Keyயினை அழுத்தி கொண்டு அழிப்பதன் மூலம் ரீசைக்கிள் பின்னிற்கு செல்லாமல் அழிக்கமுடியும் என்பது நாமறிந்த செய்தி.ஆனால் இவ்வாறு நாம் தெரியாமல் அழித்த ஃபைல்களையோ அல்லது நமக்கு தெரியாமல் வேறு ஒருவர் அழித்த ஃபைலையோ எவ்வாறு மீளப்பெறுவது?இவ்வாறு ஃபைல்களை மீளப்பெற உதவும் டூல்கள் File recovery tools எனப்படுகின்றன.

பொதுவாகவே ரீசைக்கிள் பின்னிலுள்ள ஃபைலை அழிக்கும் போது அது வன்தட்டிலிருந்து (Harddisk) நிரந்தரமாக அழிக்கப்படுவதில்லை,மாறாக குறிப்பிட்ட பைல் உங்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்படும் ஒரு ஃபைலை அதன் மீது Overwrite செய்வதற்காக குறித்துவைக்கப்படும்.புதிதாக ஒரு ஃபைலை உருவாக்கி அதை ஹார்ட்டிஸ்க்கில் பதிக்கும் போது Overwrite செய்வதற்காக குறித்து வைக்கப்பட்ட ஃபைலின் மீது Overwrite செய்யப்படும்.ஆனால் Owerrite ஆகும் போது கடைசியாக ரீகைக்கிள் பின்னிலிருந்து அழிக்கப்பட்ட ஃபைலே முதலில் முதன்முதலில் Overwrite ஆகும்.அதாவது Overwriting ரிவர்ஸ் (Reverse) ஓடரில் நடைபெறும்.எனவே ரீசைக்கிள் பின்னிலிருந்து கடைசியாக அழிக்கப்பட்ட ஃபைல் உங்களுக்கு தேவைப்பட்டால் அந்த
ஃபைலை Recover செய்யும் முன்னர் வேறு எந்த ஃபைலையும் ஹார்ட்டிஸ்க்கில் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளவும்.

ஒரு நல்ல ரீசைக்கிள் பின் டேட்டா டூலை கொண்டு கடைசியாக அழித்த ஃபைலை ரெக்கவரி செய்து கொள்ளலாம்.ரீசைக்கிள் பின் ரெக்கவரி டூலை பயன்படுத்த விரும்பினால் மற்றொரு ஹார்ட்டிஸ்கிலோ,ஃளாப்பியிலோ,யுஎஸ்பி ட்ரைவிலோ அல்லது வேறு ஏதாவது ஸ்டோரேஜ் சாதனத்தில் இன்ஸ்டால் செய்து ஃபைலை ரெக்கவரி செய்யவும்.நேரிடையாக உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் நிறுவினால் ரீசைக்கிள் பின்னிலிருந்து கடைசியாக அழிக்கப்பட்ட ஃபைல் ஓவர்ரைட் ஆகிவிடும்.

அடுத்ததாக ரீசைக்கிள் பின் ரெக்கவரி டூலை தேடுவதற்கு உங்கள் கணினியை பயன்படுத்த வேண்டாம்.அவ்வாறு உங்கள் கணினியின் மூலம் இன்டநெட்டை பயன்படுத்துவதால் அதன் மூலம் உருவாகும் Cache,Cookies மற்றும் பிற தகவல்களால் நீங்கள் ரீசைக்கிள் பின்னிலிருந்து அழிக்கப்பட்ட ஃபைல்களில் எதை ரெக்கவரி செய்ய நினைக்கிறீர்களோ அந்த ஃபைல் சில நேரம் அழிந்துவிடக்கூடும்.

எந்த ரீசைககிள் பின் ரெக்கவரி டூலை பயன்படுத்தியும் ஃபைலை பெற முடியவில்லை என்றால் ஒரு நல்ல டேட்டா எடுத்துதரும் நிறுவனத்தை அணுகுவது நல்லது.டேட்டா ரெக்கவரி நிறுவனத்தை நாடுவது சிறிது கூடுதல் செலவாகும் என்பதால் நீங்கள் ரெக்கவர் செய்ய வேண்டிய டேட்டாவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு அவர்களை நாடலாம்.இணையம் மூலமாக ரீசைக்கிள் பின் ரெக்கவரி டூல்கள் கிடைக்ககூடிய சில தளங்களை உங்களுக்கு தருகிறேன்.அவற்றில் பொருத்தமானதை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்
தொகுத்து தந்தவர்
A.Shanojan

சொற்களை வாசிக்கும் Speak&Mailஎழுத்துக்களை அதாவது சொற்களை ஒலி வடிவத்திற்கு மாற்றும் ஒரு மென்பொருள்தான் இந்த Speak&Mail ஆகும்.Notepad,Wordpad,Word,Excel,Powerpoint போன்றவற்றிலுள்ள எழுத்துக்கள் உட்பட அனைத்துவகையான எழுத்துக்களையும் இம்மென்பொருள் ஒலு வடிவத்திற்கு மாற்றி நமது காதுகளில் ஒலிக்கச் செய்யும்.குறிப்பாக நாம் அன்றாடம் பாவிக்கும் மின்னஞ்சல் மற்றும் இணையத்தளங்கள் போன்றவற்றிலுள்ள எழுத்துக்களையும் கூட இந்த மென்பொருள் வாசிக்கும்.நமக்கு தேவையான சொற்களை Textboxஇல் Type செய்து Sayit எனும் Buttonஐ அழுத்தியதும் Merlin எனும் உருவம் அதனை வாசிக்கும்.இதனை விருப்பம் போல் மாற்றவும் முடியும்.மேலும் இதில் ஒரு கூடுதல் சிறப்பாக நமது மின்னஞ்சல் கணக்கு விபரங்களை இதில் வழங்குவதன் மூலம் நாம் இணையத்தில் இருக்கும் போது நமக்கு வரும் மின்னஞ்சல்களையும் இது வாசித்து சொல்லும் தகவு கொண்டது. மேலும் Date,Time,Jokes,Songs போன்றவற்றையும் இது நமக்கு சொல்கிறது.மேலும் Notes&Reminders எனும் பகுதியில் நாம் வழங்கும் விபரங்களை குறித்த நாளில் எமக்கு ஞாபகப்படுத்தும் வசதியும் காணப்படுகிறது. மேலும் வாசிக்கும் வேகம்,ஆண்குரலா அல்லது பெண் குரலா போன்ற பல்வேறு விபரங்களையும் எமது விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம்.இவ்வாறு பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த மென்பொருளை www.shadisoft.com எனும் வலைமுகவரியில் பெறலாம்.

தொகுத்தளித்தவர்
A.Shanojan

ஃளாப்பி டிஸ்க்கின் கதை


ரிமூவபிள் ஸ்டோரேஜ்(Removable storage) இன் வரலாற்றில் முக்கிய சேமிப்பு கருவிகளின் வரிசையில் ஃளாப்பிடிஸ்க்குக்கு தனி இடம் உண்டு இப்போது மெமரி கார்ட்கள்.பென்ட்ரைவ்கள் போன்ற பல வசதிகளுடன் சேமிப்புகருவிகள் வந்துவிட்டாலும் ஃளாப்பியை பயன்படுத்துபவர்கள் பலர் உள்ளனர்.இதற்கு காரணம் ஃளாப்பி குறைந்த விலைக்கு கிடைக்கும்.,தகவல்களை
அழித்து விட்டுபதிந்து கொள்ளலாம்.மேலும் எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.இவைமிக குறைவான தகவல்களை மட்டுமே சேமிக்கவல்லன என்பதால் இதை பெரும்பாலும் பூட்டிஸ்க்குகளாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.எளிதில் கரப்ட் ஆகிவிடுவதும் ஃளாப்பிகளின் முக்கிய குறைபாடு,இந்த ஃளாப்பி தன் வாழ்கைப் பயணத்தை தொடங்கிய ஆண்டு 1970.இது மேக்னடிக் ரெக்கார்டிங் கொள்கையின் அடிப்படையில் இயங்குகிறது.தகவலை சேமிக்கவும் திருப்ப எடுக்கவும் காந்ததலைகள் (Magnetic head) இருக்கும்.ஃளாப்பி டிஸ்கின் வேகம் 300 சுற்றுக்கள் நிமிடத்துக்கு (300RPM) எனவும் கூறுவர்.RPM என்றால் Rotations per minute என்று பொருள்.ஃளாப்பியின் மேல் பகுதியில் ஒரு நகர்வி (Ceramic slider) உள்ளது.அதில் ஒரு ஹெட்டானது Flexible டிஸ்க் ஒன்றுடன் உராயும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த Flexibleடிஸக் இரு புறமும் Polyethylene terephth alate(PET) என்றொரு பொருளால் மூடப்பட்டுள்ளது.மேலும் இதனுடன் Magnetic iron oxide பொருட்களும் கலந்துள்ளன.ஃளாப்பியில் காட்ரிஜ் எனப்படும் பகுதி மிக முக்கியமானதாகும்.இது டிஸக்கின் சுழலும் வேகத்தை கட்டுப்படுத்துவதோடு டிஸ்க்கை சுத்தமாக்குவதிலும் உதவி புரிகிறது

Concepte By
A.Shanojan

Share With your friends