1 பிப்ரவரி, 2017

"bitport.to" - Torrent கோப்புகளை தரவிறக்க புதிய வழி..



இன்றையகால இணையப்பாவனையை பொறுத்தவரை தரவிறக்கம் என்பது மிகவும் அதீத அளவில் இடம்பெற்று வருவது கண்கூடு. மலிந்துவிட்ட இணையசேவை வழங்குனர்களும், இலகுவில்பெற்றுக்கொள்ளக்கூடிய அதிவேக இணைய இணைப்புக்களும் இதனை சாத்தியமாக்குகின்றன. இந்த இணைய தரவிறக்கமானது Direct download, Cloud-based download என்று பலவகைப்பட்டிருந்தாலும் peer to peer வகையை சேர்ந்த torrent அடிப்படையிலான தரவிறக்கம் மிகவும் பிரபலமானது. குறிப்பாக பாரிய கொள்ளளவு (Capacity) உள்ள தரவுகளான காணொளி, திரைப்படங்கள், கணினி விளையாட்டுக்கள், மென்பொருள்கள் என பலவற்றை இந்த முறையினுாடாக தரவிறக்கி கொள்வது இன்றைய இணையப்பாவனையாளர்கள் மத்தியில் பிரபலமானது. இதன்போது P2P மென்பொருள்களான utorrent, Bittorrent போன்ற இன்னும் பல மென்பொருள்களை நாம் எமது தரவுகளை தரவிறக்க பயன்படுத்துகிறோம். இந்த முறைக்கு மாற்றீடான முறையை அதுவும் பல விதங்களில் நன்மையளிக்கின்ற முறையை இந்தப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். 

பொதுவாக இணையத்தில் Torrent filesகளை இணையத்தில் சேமிக்கவும் அவற்றை Direct linkஆக மாற்றித்தருவதற்கான சேவையை பல நிறுவனங்கள் வழங்குகிறார்கள். அவ்வாறான ஒரு சேவைதான் bitport இணையத்தளம். அடிப்படையில் இது ஒரு Cloud-based சேமிப்பு வசதியை தருகின்ற தளமாக இருந்தாலும் Torrent தரவிறக்கத்திற்கு இது மிகவும் சிறப்பான பலவசதிகளை தருகிறது.

* பொதுவாக சில முக்கியமான கோப்புகளை torrentஇல் பதிவிறக்க முற்படுகையில் நாம் சந்திக்கின்ற பிரச்சினை Seeds போதாமையினால் வேகமாக கோப்புகளை தரவிறக்க முடியாதுபோவது ஆனால் இவ்வாறான torrentகளை இங்கு பதிவேற்றிவிட்டால் அவற்றை இலகுவாக direct link ஆக தரவிறக்கி கொள்ளலாம். 
* நீங்கள் தரவிறக்கம் torrent சிலவேளை பாதுகாப்பற்றதாக virus, malware போன்றவற்றை உள்ளடக்கியிருக்கலாம் எனவே இங்கு அந்த கோப்புகளை பதிவேற்றுவதன் மூலம் இவர்களின்உ ட்பொதியப்பட்ட Anti-virus scanner அவை எதுவித பிரச்சினையும் இல்லாது இருப்பதை உறுதிசெய்கிறது.
* நீங்கள் தரவிறக்கின்றவற்றை சிலவேளை சேமிக்க இடம் போதாது இருக்கின்றபோது அவற்றை அவர்கள் சேவையகங்களிலேயே சேமிக்கலாம்.
* சிலவேளை நீங்கள் ஒரு திரைப்படத்தையோ அல்லது காணொளியையோ உங்கள் கணினிக்கு தரவிறக்காமல் இணையத்தில் பார்த்தாலே போதுமானது என நினைக்கின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை இந்த தளத்திலேயே stream செய்து பார்க்கும் வசதியும் உண்டு.
* மிகமுக்கியமாக இந்த வசதிகள் அத்தனையையும் இவர்கள் இலவசமாக தருகிறார்கள் மற்றும் ஏனைய சேவைவழங்குனர்களில் இல்லாத ஒன்றாக இது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இனியென்ன..இங்கு ஒரு கணக்கு திறந்து உங்களின் torrent தரவிறக்கங்களை புதிய வடிவில் இலகுவாக மேற்கொள்ள தொடங்கலாமே... மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.



Share With your friends