26 நவம்பர், 2013

உங்களின் PowerPoint கோப்புக்களை YouTube இல் பகிர்வதற்க்கு உதவும் சிறப்பு மென்பொருள் - இம்மாத மென்பொருள்

  


பொதுவாகவே ஒரு விடயத்தை அதனைப் பற்றி அறிந்திராத புதியவர்களுக்கு முன்வைக்கின்ற செயற்பாடு Presentation என எளிமையாக கூறலாம். கணினி நுட்பம் வளர்ந்து விட்ட பிறகு இவ்வாறவான ​செயல்பாடுகளை செய்வதில் பெரிதும் துணை புரிவது Microsoft Office தொகுப்பின் PowerPoint மென்பொருள்தான். பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தொடங்கி அலுவலகங்களில் புதிய செயல்திட்டங்களின் (Projects) அறிமுகப்படுத்தல் வரை ஒரு விடயத்தை மற்றவர்களுக்கு இலகுவாகவும், தெளிவாகவும், அழகாகவும் சொல்ல Microsoft Office தொகுப்பின் PowerPoint மென்பொருளையே நாம் பயன்படுத்துகிறோம். 



இவ்வாறு இம் மென்பொருளில் ஒரு கோப்பினை தயாரிக்கும் போது அதனை இன்னுமொரு கணினியில் பார்ப்பதற்க்கு அதிலும்  Microsoft Office தொகுப்பின் PowerPoint மென்பொருள் நிறுவப்பட்டிருக்க (Install) வேண்டும். அதேவேளை  PowerPoint மென்பொருள் கோப்புக்களை (Files) ஒரு காணொளி (Video) போன்று தொடர்ச்சியாக பார்வையிடவோ அல்லது அவற்றை YouTube போன்ற இணையத்தளங்களில் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கோ உரிய தெரிவுகள் (Option) இயல்பாக (Default) அம்மென்பொருளில் இருப்பதில்லை. எனவே இவ்வாறான தேவைகளை நிறைவு செய்ய Moyea PPT to Video Converter என்ற மென்பொருள் உதவுகிறது.




முதலில் நான் இந்தப் பதிவின் இறுதியில் தந்திருக்கின்ற இணைப்பின் மூலம் இம் மென்பொருளை இலவசமாக தரவிறக்கி (Download) நிறுவி கொள்ளுங்கள். பின் அம் மென்பொருளை திறந்து அதிலுள்ள Add Button ஐ கிளிக் செய்யுங்கள். இதன்போது தோன்றுகின்ற Browse Menu இல் நீங்கள் காணொளியாக (Video) மாற்றவிரும்புகின்ற கோப்பினை தெரிவு செய்யுங்கள். இதில் நீங்கள் ஒரே தடவையில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களையும் மாற்றலாம்.

பின்னர் Profile என்பதற்க்கு நேரேயுள்ள Settings என்பதை தெரிவு செய்ய தோன்றும் Output Setting Menuவில் உங்கள் காணொளி (Video) என்ன Format இல் வரவேண்டுமோ அதை தெரிவு செய்யுங்கள். உதாரணமாக YouTube தளத்தில் பதிவேற்றுவதற்கோ அல்லது பொது பாவனைக்காகவோ இருந்தால் Common Video பகுதியில் உள்ள MP4-MPEG-4 Video (*.mp4) என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர் உங்கள் காணொளி (video) எங்கு சேமிக்கப்பட (save) வேண்டுமோ அந்த இடத்தைOutput என்பதில் தேர்வு செய்து இறுதியாக Start என்பதை அழுத்த உங்கள் PowerPoint மென்பொருள் தொகுப்பு காணொளியாக மாற்றப்பட்டு விடும். இனி, வழமையாக பதிவேற்றுவது போன்று Youtube தளத்திலோ அல்லது ஏனைய இணையத்தளங்களிலோ இதனை பதிவேற்றவும் முடியும். 


கருத்துகள் இல்லை:

Share With your friends