21 நவம்பர், 2012

இசைப்பிரியர்களுக்கான இலவச மென்பொருள் - Media Monkey (இம்மாத மென்பொருள்) + இலவச தரவிறக்கம்


மனிதகுலம் தோன்றியதிலிருந்து இன்று வரை எம்மிடமிருந்து பிரிக்க முடியாமலிருக்கின்ற விடயங்களில் இசை முதலிடத்தை பிடித்திருக்கின்றது என்று சொல்லலாம். அந்தளவுக்கு மொழி, இன, மத பேதமின்றி அனைவரையும் ஆட்கொண்டது இசை. அதிலும் தொழில்நுட்ப வளர்ச்சி இசைக்கு ஒரு மறுபிறப்பு என்று சொல்லுமளவுக்கு இசையினது வளர்ச்சியில் தொழில்நுட்பம் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறது, செலுத்துகின்றது. அன்றிருந்த நிலையும் இன்றிருக்கின்ற நிலையும் இசையை பிரசவிக்கின்ற இசைக் கருவிகள் தொடங்கி அதனை அனுபவிக்கின்ற சாதனங்கள் வரை ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எளிமையான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நூறு பேர் உட்கார்ந்து மீட்டுகின்ற இசைக்கு ஒரு கணினி பிரதியீடாகியிருக்கிறது, பாடல் கேட்க என்ற சாக்கில் எமது வீட்டின் பாரிய பரப்பை பிடித்திருந்த Gramophone காலம் கடந்து, உள்ளங்கைக்கும் ஓராயிரம் ஓசைகளை சுமக்க முடிகின்ற iPod கள் தோன்றியிருக்கின்றன. இதனால் எத்தனையோ பாடல்களை, இசைக் கோர்ப்புக்களை சுலபமாக சேமிக்க முடிவதுடன் காலம் கடந்து அவற்றை வாழ வைக்கவும் முடிகிறது. 

இசை மனிதனுக்கு பொதுவான ரசனையானாலும் ஒரு சிலருக்கு இசையின் மீது தனிக் காதலே ஏற்படும், தமிழ் சினிமாவின் அன்று தொட்டு இன்று வரையான அனைத்து பாடல்களையும் சேர்த்து வைத்திருப்பார்கள், விடாமல் வாய் ஏதாவது பாடலை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கும்  அதுமட்டுமல்லாது பாடல்கள் பற்றிய விபரங்கள் அதாவது இசையமைப்பாளர், பாடியவர், திரைப்படம், பாடல் வெளியான ஆண்டு என்று எல்லாமே அவர்கள் விரல் நுனியில் இருக்கும். அந்தளவுக்கு இசையின் தீவிர ரசிகர்களாக இருப்பர். பொதுவாக இப்படிப்பட்டவர்களின் கணினி வன்தட்டுக்கள், கைபேசிகள், ஏனைய பொழுது போக்கு சாதனங்களை இசைக் கோப்புக்களே (music files) பெரிதும் ஆக்கிரமித்திருக்கும். நீங்களும் இப்படியான ஒரு இசைப் பைத்தியம் என்றால் இந்தப் பதிவு உங்களுக்காகவே.. என்ன நீங்கள் அப்படியில்லையா?? உடனே வேறொரு பதிவை தேடுங்கள்...

வரம்பின்றி தரவுகளை சேமித்து வைக்க அதிலும் குறிப்பாக இசைக் கோப்புக்களை சேகரித்து வைக்க கணினியே சிறந்த சாதனமென்ற அடிப்படையிலும் அதுவே இலகு என்ற காரணத்தாலும் கையில்படுகின்ற எல்லா இசைக் கோப்புக்களையும் அடுக்கிவைத்திருப்போம். ஆனாலும் இது ஒரு எல்லையை தாண்டுகின்ற போது அவற்றை நிர்வகிப்பது சிரமமாவதுடன், பாடல்களை தேடியெடுப்பது பெரும் தலையிடியாகிவிடும். உங்களிடம் இருக்கின்ற பாடல்கள் உங்களுக்கே மறந்துவிடும். ஆகவே இப்படிப்பட்ட தொல்லைகளால் கஷ்டப்படுகிற உங்களுக்கு உதவுகின்ற இலவச மென்பொருள்தான் Media Monkey.

முதலில் கீழுள்ள இணைப்பில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் இதனை திறந்து கொள்ளுங்கள் முதல் படிமுறையாக உங்கள் Music Database இனை இதற்க்குள் உட்செலுத்த (Import) ​வேண்டும். அதாவது உங்கள் இசைக் கோப்புகளுக்கான பிரதான் Folderஇனை தெரிவு செய்து Import செய்யுங்கள். பின் Music என்ற பகுதியில் உங்கள் பாடல்கள் Album, Artist, Title என்ற வகைகளில் காட்சிப்படுத்தப்படும். 



# இதிலிருந்தே பாடலை தெளிவான தரத்தில் கேட்க முடியும். அத்தோடு மேம்படுத்தப்பட்ட Equalizer காணப்படுகிறது.
# பாடலின் Properties இலகுவாக மாற்ற முடியும்.
# Playback இன் போது Cross fade வசதி.
# Audio CDகளை இதிலிருந்தே RIP செய்து Libraryயில் Add செய்யலாம்.
# Playlist இனை தானாகவே உருவாக்கின்ற வசதி.
# DJ Mode போன்ற இசைப்பிரியர்களுக்கு பயன் தருகின்ற பல வசதிகள்.

Media Monkey மென்பொருள் Ventis Media நிறுவனத்தினால் வினியோகிக்கப்படுவதுடன் இது Gold version மற்றும் Free version என்ற இரண்டு வகையான பதிப்புகளில் காணப்படுகிறது. இரண்டு பதிப்புக்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுகளில்லை. சாதாரணமாக Free version மட்டுமே சாதாரண 
பயன்பாட்டுக்கு போதுமானது. அதற்கான இணைப்பை தந்திருக்கின்றேன். மற்றைய பதிப்பு பணம் செலுத்தி பெற வேண்டியது என்பதுடன் இணையத்தில் Crack உடன் இலவசமாக தரவிறக்கலாம். தேவையானவர்கள் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். அனுபவங்களை பி்ன்னூட்டங்களாக பகிருங்கள்...  







7 நவம்பர், 2012

விண்டோஸ் 8 உங்களுக்காக தருகின்ற விஷேட வசதிகள் - ஒரு அலசல் (பகுதி 01) + இலவச தரவிறக்கம்

மற்றுமொரு பதிவினூடாக எனது வலைப்பதிவின் வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. சில தவிர்க்க முடியாத காரணங்களாலும் வேலைப்பளுவினாலும் முன் போல சுவையாகவும் சூடாகவும் பதிவு போட முடியாவிட்டாலும் கடந்த மாதங்களில் இலங்கையில் இருந்து வெளியாகின்ற 'இனியது' இணைய சஞ்சிகையில் சில தொழில்நுட்ப பதிவுகளை கிறுக்க முடிந்தது மகிழ்ச்சி, ஆனாலும் என் வலைப்பதிவின் தனிப்பட்ட வாசகர்களை அவை சென்றடைகிறதா அல்லது அவற்றை நமது வாகர்களுடன் பகிர முடிவதில்லை என்ற ஏக்கமும் இருந்தது. அதனால் பொருத்தமான நான் முன் எழுதிய பதிவுகளை இப்பொது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

தொழில்நுட்ப உலகில் அண்மையில் அடித்து சற்று ஓய்ந்திருக்கின்ற புயல்  (இது புயல் சீசனாச்சே..) Windows 8 என்பததுதான். அதனால் Windows 8 இற்கு மாறுவதற்காக பலரும் காதத்திருக்கின்ற நிலையிலும் அது பற்றி அறிய வேண்டிய ஆவல் ஒருபுறம் மற்றும் அதற்காக எமது கணினிகள் தயார் நிலையில் இருக்கின்றனவா என்ற கேள்வி மறுபுறமுமாக இருக்கின்ற தொழில்நுட்ப ஆர்வலர்களுக்காக இந்த பதிவு. இது சென்ற மாதம் வெளியிடப்பட்ட Windows 8 இன் Consumer Preview இனை வைத்து நான் எழுதிய பதிவு. இதனால் வசன அமைப்புக்கள் சற்று வேறுபட்டிருக்கும் அவவ்ளவுதான். அனுபவங்களை பின்னூட்டங்களாக பகிருங்கள்...

மனிதனின் பல்வேறு வகைப்பட்ட தேவைகளுக்கும் ஏற்றால் போல அன்று முதல் இன்று வரை முடிவின்றி வளர்ந்து கொண்டிருக்கும் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பம் என்ற இந்த விடயங்களின் வளர்ச்சிப் பாதையிலும் முக்கிய மைற்கல்லாக அமைந்திருப்பது கணினிதான். சார்ள்ஸ் பபேஜ் உலகிற்கு தந்த உயர்தரமான (Advance) கணித்தல் பொறியின் அத்திவாரத்தோடு அலன் டூரிங் (Alen Dooring), ப்ளாசி பஸ்கால் (Blaise Pascal)  எனும் இரு மாமனிதர்களின் புத்தாக்க சிந்தனைகளுமே இன்று நாம் காண்கின்ற கணினிக்கு உடல் தந்தது. ஆனால் மற்றைய சாதனங்கள் போல வெறும் வன்பொருள் (Hardware) மட்டுமே இருந்து ஒரு கணினியை இயக்குவதில்லை. கணினிப் பாகங்களின் உயிர்நாடியாக அமைகின்ற மென்பொருட்களே (Software) அவற்றின் ஒவ்வொரு செயலையும் நிர்ணயிக்கின்றன. அதற்க்கமைவாக பேணூயின் எண்களை அக்காலத்தில் உருவாக்கப்பட்ட கணித்தல் பொறியினால் கணிப்பது தொடர்பான விளக்கங்களை ஆவணமாக (Document) வெளியிட்டதன் மூலம் கணினி மென்பொருளின் வளர்ச்சி பாதைக்கு அடித்தளமிட்ட முதல் கணினி செய்நிரலாளரான (Computer programmer) Ada Lovelace என்ற பெண்ணின் முயற்ச்சியும் சேர்ந்து இன்று கணினியின் வளர்ச்சியை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கின்றன.
மனித கண்டுபிடிப்புகளினால் கணினியின் வன்பொருள் முறைமைகள் விரைவாக வளர்ச்சியடைந்தாலும் மறுபுறம் அதனை மிஞ்சிய வேகத்தில் அதனை இயக்குகின்ற இயங்கு முறைமைகளும் (Operating System) வளர்ந்து கொண்டிருப்பது நாமறிந்ததே. என்னதான் இன்றளவில் இயங்குமுறைமைகளை (Operating System) ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு வடிவில் அறிமுகப்படுத்தினாலும் ஆதி முதல் இன்று வரை கணினியின் இயங்குமுறைமைகள் (Operating System) தொடர்பில் பல கோடிக்கணக்கான கணினிகளையும் தனக்கென தனியிடத்தையும் ஆக்கிரமித்திருப்பதென்னவோ Microsoft நிறுவனம்தான். காரணம் அனைத்து தரப்பு மக்களாலும் இலகுவாகவும் குறைந்த விலையிலும் (சில சமயங்களில் இலவசமாகவும்) எந்தவித சிக்கலுமின்றி பயன்படுத்தக்கூடியதாக அமைந்திருப்பதுதான்.

ஒவ்வொரு பதிப்பிலும் (Version) ஒவ்வொரு விதமான புதுமைகளையும், வசதிகளையும் தந்து அனைவரினது வரவேற்ப்பை பெற்றிருக்கும் இந் நிறுவனம் தனது பயனர்களுக்காக அண்மையில் தனது விண்டோஸ் வகை இயங்கு முறைமையின் மற்றுமொரு பதிப்பான Windows 8 இனது Consumer Preview ஐ வெளியிட்டதை பலர் அறிந்திருப்பீர்கள். இதற்க்கு முந்தைய பதிப்பான Windows 7 பெற்ற வெற்றியும் அதனை தொடர்நது சில மாத காலங்களிலேயே பல கவர்ச்சிகரமான முன்னறிவித்தல்களுடனும் ஆரம்பித்திருந்த இதன் தயாரிப்பு பணிகளும் கணினி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. சொன்னது போலவே சென்ற மாதம் Windows 8 தொகுப்பின் முன்னோட்ட பதிப்பை வெளியிட்டிருந்தது Microsoft. இன்றுவரை உங்களில் பலரும் இதனை பயன்படுத்தியிருப்பீர்கள். பலர் இது பற்றி அறிய ஆவலாயிருப்பீர்கள். Microsoft இதற்கு முன் வெளியிட்ட பதிப்புக்களை விட இந்த Windows8 என்னென்ன வகையில் சிறப்பு பெறுகிறது, இது உங்களுக்கு மேலதிகமாக தருகின்ற வசதிகள், நடைமுறையில் இதனுடைய இயக்கம் (Working) போன்ற பல விடயங்களையும் Microsoft வெளியிட்ட தகவல்களின் படியும் உலகெங்குமுள்ள பயனர்கள் (Users) பயன்படுத்திப்பார்த்து தெரிவித்த கருத்துக்களினடிப்படையிலும் அனைத்தையும் தொகுத்து  ஒரு தொகுப்பாக தருகிறேன். Windows8 Consumer Preview இனை பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நான் தந்திருக்கின்ற இணைப்பில் அதனை இலவசமாகவே தரவிறக்கி குறுந்தட்டில் (CD) பதிந்து பயன்படுத்தலாம்.


# அசுர வேகத்தில் Boot ஆகிறது...



Microsoft இதுவரை தனது வாடிக்கையாளர்களுக்காக தந்த இயங்கு முறைமைகளிலேயே மிகவும் வேகமான தொடக்கத்தை (Start Up) கொண்டது இதுதான். உங்கள் கணினியில் எத்தனை பெரிய கொள்ளளவுள்ள (Capacity) மென்பொருட்கள் இருந்தாலும் நீங்கள் கணினியை On செய்ததிலிருந்து வெறும் 8 செக்கன்களில் உங்களின் முகப்புதிரையை (Desktop) அடையலாம். இந்த வேகமானது கூகிள் (Google) வெளியிட்ட அதனுடைய Chrome இயங்கு முறைமையை (அண்மையில் Samsung Notepad கணினிகளுக்கான Chrome எனும் இயங்கு முறைமையை கூகிள் வெளியிட்டது.) விட வேகமானது என்பதை Microsoft நிறுவனம் ஒப்பிட்டு காட்டுகின்றது. இந்த காணொளியை காணுங்கள் 



# புதுமையான பயனர் இடைமுகம் (Interface)
இந்தப் பகுதியே Windows இன் ஏனைய பதிப்புக்களில் இருந்து Windows8 இனை தனித்துவப்படுத்துகிறது. காரணம் வழமையான Desktop இலிருந்து மாறுபட்டு Metro Interface UI எனும் வகையிலமைந்த இடைமுகத்தை வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் கணினின் நிலைமைகள் மட்டுமன்றி இணைய இணைப்பு இருந்தால் உலகில் இடம்பெற்ற முக்கிய செய்திகளை ஒரு இடத்தில் இருந்தே அறிய முடியும். இது முழுவதும் தொடுதிரை (Touch screen) கணினிகளுக்காகவே வடிவமைக்கப்ட்டிருப்பதுடன் நமது சாதாரண Mouse, Keyboard மூலமும் இதனை இயக்கலாம் என்பது சிறப்பு, இதனால் இவை ஒரு Smart phone இல் வேலைசெய்வது போன்ற உணர்வையும் தருகின்றன. ஆனால் உங்களுக்கு இந்த Metro Style பிடிக்கவில்லையென்றால் ஒரு கிளிக்கில் பழைய Desktop தோற்றத்துக்கே போய்விடலாம். 




# பாவனைக்கு இலகுவான அப்ளிகேஷன்ஸ்
Smart phone களிலுள்ளது போன்று உங்கள் தேவைக்கேற்றால் போல மேலதிக Application களை நிறுவும் வாய்ப்பு உள்ளதுடன் அதனை Metro Interface இலுள்ள Store என்ற பகுதியில் இருந்து தரவிறக்கலாம்.

# Transparent overlay in the right side
உங்கள் கணினி திரையில் வலது புற த்தில் உங்கள் Mouse Cursor ஐ அசைக்கும் போது ஒரு சிறிய திரை தோன்றும். இது Transparent overlay என அழைக்கப்படுவதுடன் உங்களுக்கு உதவக்கூடிய 5 விடயங்களை அதில் காணலாம். Search, Share, Start, Devices மற்றும் Settings. கணினியின் எந்தவொரு இடத்திலிருந்தும் எல்லா வேலைகளையும் செய்யக்கூடிய இடைமுகமாக இது அமைந்திருக்கிறது.  


# எங்கிருந்தும் இலகுவாக மென்பொருள்களை நீக்கலாம்
புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் Metro Style தோற்றம் மூலம் உங்கள் மென்பொருட்களை Uninstall செய்வது இலகுவாக்கப்பட்டிருக்கிறது. காரணம் முன்னர் மென்பொருட்களை நீங்கள் Control Panel சென்று அங்குள்ள Add/Remove Programe கட்டளை மூலமே நீக்க முடியும். ஆனால் இப்போது இலகுவாக Metro Interface இலுள்ள Icon மீது வலது கிளிக் (Right Click) செய்ய கீழே தோன்றுகின்ற உதவி Menuவில் Uninstall என்பதை கிளிக் செய்ய சில வினாடிகளில் உங்கள் மென்பொருள் நீக்கப்படும்.   


# மேம்படுத்தப்பட்ட தரவுப் பிரதியாக்கம் (Copying)
ஏனைய பதிப்புக்களை விட இதில் File Copying இலகுபடுத்தப்பட்டுள்ளது. உங்கள் File copy ஆவதற்க்கு எடுக்கும் நேரம், அதனது வேகம் போன்றவற்றோடு CPU Progress உம் காட்டப்படும். அத்தோடு தேவைப்பட்டால் File copying ஐ தற்காலிகமாக நிறுத்தி (Pause) வைக்கும் வசதியும் சேர்க்கப்பட்டிருக்கிறது.



தொடரும்...

பகுதி 02




விண்டோஸ் 8 உங்களுக்காக தருகின்ற விஷேட வசதிகள் - ஒரு அலசல் (பகுதி 02) + இலவச தரவிறக்கம்


சென்ற பதிவின் தொடர்ச்சி.......

# New improved Task manager
பொதுவாக Windows வகை இயங்குமுறைமைகளை பயன்படுத்துபவர்களுக்கு Task manager என்ற பகுதியை தெரிந்திருக்கும். கணினியின் அனைத்துவிதமான செயல்பாடுகளையும் மென்பொருள் ரீதியாக கட்டுப்படுத்தக்கூடிய பகுதியாகும். இலகுவாக கணினியின் அனைத்து செய்முறைகளையும் (Process) கட்டுப்படுத்தும் வசதி காணப்படுவதுடன் Ctrl+Alt+Del விசைகளை அழுத்துவதன மூலம் இதனை பெற முடியும். 




# குறைந்தளவான RAM பயன்பாடு
ஒப்பீட்டளவில் ஏனைய விண்டோஸ் இயங்கு முறைமைகளை விட குறைந்தளவான அளவினை இது பயன்படுத்துவதால் கணினி வேகமாக இயங்க வழிவகுக்கிறது.
இவை தவிர இன்னும் ஏராளமான நன்மைகளோடு முன்னோட்ட (Consumer Preview) பதிப்பாக வெளிவந்திருக்கும் Windows8 தனது வாக்குறுதிகளை பெரும்பாலும் காப்பாற்றியிருக்கிறது. இதனடிப்படையில் நாங்களும் எந்தவித பயமுமின்றி Windows8 க்கு மாறலாம். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதியளவில் இதனுடைய முழுமையான பதிப்பை எதிர்பார்க்கலாம் என Microsoft அறிவித்திருக்கிறது. நான் தந்திருக்கும் இணைப்பில் பதிவிறக்கி பயன்படுத்தி பாருங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளங்கள்.

Windows 8 Pro இயங்கு தளத்தை முழுமையாக இங்கே இலவசமாக தரவிறக்கலாம்..! 

#Windows 8 -x86              #Windows 8 -x64

- Part 01                                                    Part 01
  Part 02                                                    Part 02

<<<< அல்லது >>>>>             <<<< அல்லது >>>>>
 Part 01                                                     Part 01
 Part 02                                                     Part 02

-ஷான்


Share With your friends