16 ஜூலை, 2012

கடவுச்சொல் கொண்ட மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு இலகு வழி..






தொழில்நுட்ப உலகில் சஞ்சரிக்கின்ற நாம் அனைவருமே தற்காலங்களில் தொடர்பாடலுக்கும் தரவுப் பகிர்தலுக்கும் பயன்படுத்துகின்ற ஒரு முக்கிய சாதனம் மின்னஞ்சல்கள்தான் (Email). அதிலும் குறிப்பாக நம்மில் பலர் இலவச இணைய மின்னஞ்சல் சேவை வழங்குனர்களான Yahoo, Gmail, Hotmail போன்றவற்றையே பயன்படுத்துகின்றோம். ஒரு நாளில் எமது உறவினர்கள், நண்பர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் நாம் மின்னஞ்சலை அனுப்புவதோடு அவற்றின் பாதுகாப்பானது அதன் நோக்கத்தையும் பெறுபவரையும் பொறுத்து அமைகின்றது. சாதாரணமான மின்னஞ்சல்களை அனுப்பிவிடலாம். ஆனால் மிக முக்கியமான பாதுகாப்பு தன்மை வாய்ந்த மின்னஞ்சல்களை அனுப்பும் போது அதனை பெறுபவர் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சந்தர்ப்பங்கள் அமைகின்ற போது, நாம் விரும்பிய படி அனுப்புகின்ற ஒவ்வொரு அஞ்சல்களையும் தனியே பூட்டி வைக்கின்ற வசதியை நான் மேற்சொன்ன இந்த இலவச மின்னஞ்சல் சேவை வழங்குனர்கள் தருவதில்லை. இந்தப் பிரச்சினையை தீர்க்க LOCKBIN இணையத்தளம் உதவுகிறது. உதாரணமாக நீங்கள் ஒரு மின்னஞ்சலை பலர் பயன்படுத்துகின்ற மின்னஞ்சல் முகவரியொன்றுக்கு அனுப்புகின்ற நீங்கள் விரும்புகின்றவர்கள் மட்டுமே அதை படிக்க வேண்டும் என நினைத்தால் அந்த கடவுச்சொல்லை அவர்களுக்கு மாத்திரம் தெரிவிக்கலாம்.




இதனை செய்வதற்க்கு முதலில்
http://www.lockbin.com என்ற முகவரிக்கு சென்று படத்தில் உள்ளது போன்று Send Message என்பதை தெரிவு செய்ய, உங்களுக்கு ஒரு படிவம் (Form) தோன்றும்.


அதில் உங்கள் பெயர், உங்கள் மின்னஞ்சல் முகவரி, பெறுபவர் முகவரி, ரகசிய கடவுச்சொல் இவற்றோடு உங்கள் செய்தியை குறிப்பிட்டு SUBMIT பட்டனை அழுத்த உங்கள் அஞசல் குறித்தவருக்கு அனுப்பபட்டு விடும், பின்பு அவர் திறக்க முற்படுகையில் நீங்கள் கொடுத்த கடவுச்சொல் கேட்கப்படும். அதை வழங்கி அவர் கடிதத்தை படிக்க முடியும். இனியென்ன உங்கள் முக்கியமான அஞ்சல்களையும் கடவுச்சொல் கொண்டு பூட்டி பாதுகாக்கலாமே..!


...பதிவு பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களியுங்கள்...



Share With your friends