23 ஏப்ரல், 2012

புதிய MS-WORD ஆவணத்தை பழைய MS-WORD இல் திறப்பது எப்படி?



தகவல் தொழில்நுட்ப யுகம் வளர்ந்து விட்டபிறகு கணினிப் பயன்பாட்டிற்க்கு அடிமைப்படாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஆவணப்படுத்தலிலும் (Documentation) இது தன் கைவரிசையை காட்டிய விதம்தான் இன்று பல அலுவலகங்களும், பாடசாலை உள்ளிட்ட அரச, தனியார் நிறுவனங்களும் கணினிமூலமான ஆவணப் பயன்பாட்டுக்கு மாறியிருக்கிறன. கணினியில் இந்த வேலைகளை முன்நின்று செய்வதில் பெரும் பங்களிப்பு மைக்ராசாஃட் ஆபீஸ் வேர்ட் (MS Office Word) தொகுப்புக்குத்தான். அந்தளவுக்கு அது நேர்த்தியாகவும் இலகு பாவனைக்கு ஏற்றால்போலும் வடிவமைக்கப்பட்டது. காலத்துக்கு காலம் மாறுகின்ற தொழில்நுட்பத்தின் புதிய அடைவுகளை தன்னுள் உள்வாங்கி கொண்டு மைக்ரோசாஃட் நிறுவனம் இம் மென்பொருளின் புதிய பதிப்புக்களை அறிமுகப்படுத்தி வருகிறது 1989ம் ஆண்டு Word for Windows 1.0 என்ற பெயருடன் தொடங்கி இன்று MS-Word 2011 வரை இதனது பதிப்புக்கள் வந்திருக்கின்றன.

எல்லாம் நல்லதுதான். ஆனால் இந்த பதிப்பு மாற்றங்களில் பலருக்கு தலையிடியாயிருப்பது இதன் Formateகள் தான். காரணம் புதிய Word மென்பொருளில் தயாரித்த ஆவணத்தை அதற்க்கு முந்திய பதிப்பில் திறக்க முடியாததுதான். எனவே இந்த பிரச்சினையை நீக்க மைக்ரோசாஃட் நிறுவனம் தன் பயனர்களுக்கு உங்கள் வேர்ட் மென்பொருளோடு மேலதிகமாக நிறுவவென ஒரு நீட்சியை தருகிறது. இதன் மூலமாக நீங்கள் விரும்பும் MS-Word ஆவணத்தை அதன் எந்தவெரு பதிப்பிலும் திறந்து தொகுக்கலாம்.


...பதிவு பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களியுங்கள்... 

17 ஏப்ரல், 2012

பழைய பேஸ்புக் தோற்றத்தை மீளப் பெற...


இந்த மாதத்தின் இரண்டாவது பதிவிலே உங்களோடு இணைகின்றேன். 110 இடுகைகளுக்கு பிறகு இங்கே பேஸ்புக் பற்றி எழுதுகின்ற முதலாவது இடுகை இது. இணையம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இந்த நிமிடம் வரை பல்வேறு வகையான வளர்ச்சி கட்டங்களை அடைந்திருக்கின்றது, அடைந்து கொண்டிருக்கிறது. அதனோடு சேர்ந்தாற் போல மின்னஞ்சல், தேடுபொறிகள், தகவல் சேமிப்பு என்பனவும் முன்னேற்றம் கண்டிருக்கின்றன. ஆனாலும் ஆரம்பகாலங்களில் ஒரு சாதாரண இணையத்தளங்களாக ஆரம்பிக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள், இன்று இணையத்துக்கே ஒரு அடையாளத்தை கொடுக்கின்ற அளவுக்கு உருவாகியுள்ளன. பொதுவாக இணையத்திலே கூடுகின்ற தனிநபர்களோ அல்லது ஒரு குழுவோ ஒருவரோடு ஒருவர் சகல வழிகளிலும் தொடர்பாடிக் கொள்ளுகின்ற வசதியை தருகின்ற இணையத்தளங்கள் சமூக வலைத்தளங்கள் (Social websites) என அழைக்கப்படும். இந்த சொல்லை சொல்கின்ற போது அதனோடு பின்னாலேயே வருகின்ற அடுத்த சொல் பேஸ்புக் (Facebook) என்பதுதான். இணையத்தோடு இணைந்திருக்கின்ற அல்லது இணையம் பற்றி அறிந்திருக்கின்ற ஒருவர் நிச்சயம் இதில் கணக்கு வைத்திருப்பார் என்ற நிலை வரை பேஸ்புக் பிரபலமானது. இத்தனைக்கும் அது பிரபல்யம் அடைந்ததற்க்கு காரணம் மாறுகின்ற தொழில்நுட்ப சூழலில் அதற்கேற்றால் போல இயைந்து கொடுக்கின்ற (Flexibility) தன்மைதான். ஒவ்வொரு மாற்றங்களையும் உள்வாங்கி தன் பயனர்களுக்கு (Users) புது புது வசதிகளை காலத்துக்கு காலம் வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் அண்மையில் பேஸ்புக் தன் பயனர்களுக்கு (Users) அறிமுகப்படுத்திய ஒரு விடயம் டைம்லைன் (Timeline). அதாவது உங்களின் பேஸ்புக் செயற்பாடுகளை கால அடிப்படையில் பட்டியல்படுத்தி காட்டுகின்ற முறை என்று சொல்லலாம். தற்பொழுது வரை ஒரு தெரிவாகவே (Optional) இவ்வசதி உள்ள போதும் விரைவில் இது கட்டாயப்படுத்த (compulsory) படவுள்ளது. இதனால் இந்த வசதியை ஒரு பரிசோதனையாக செயற்படுத்தி பார்க்க கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது இதனை செயற்படுத்தியதும் Publish Now என்ற கட்டளையை தெரிவு செய்வதன் ஊடாகவே அதனை நம் நண்பர்களும் பார்ப்பதாக செய்ய முடியும். ஆனால் இதை செய்த பின்னர் பழைய பேஸ்புக் தோற்றத்துக்கு மீள்வதற்க்கு எந்தவித வசதிகளும் தரப்படவில்லை. ஆனால் எங்களுக்கு பழைய தேற்றம்தான் வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு உதவ உங்கள் உலாவிகளில் நிறுவக்கூடய நீட்சியை (Extension) Timeline remove.com என்ற இணையத்தளம் தருகின்றது. இது முற்றிலுமாக உங்கள் பேஸ்புக்கின் டைம்லைனை நீக்காது. அதனை மறைத்து பழைய தோற்றத்தை காண்பிக்கும். அதே போல உங்கள் நண்பர்களின் பக்கத்தையும் காண்பிக்கும். இது நிறுவப்படாத கணினிகளில் டைம்லைன் வடிவிலேயே உங்கள் பேஸ்புக் தோன்றும். உங்களின் பாவனைக்கு பழைய பேஸ்புக் தோற்றம் வேண்டும் என்பவர்களுக்கு உதவக்கூடிய நீட்சி. உங்கள் உலாவிக்கு பொருத்தமானதை தரவிறக்கி பயன்படுத்துங்கள்.

#   Chrome

#   Mozilla Firefox

#   Internet Explorer

...பதிவு பிடித்திருந்தால் இன்ட்லி மற்றும் தமிழ்10 திரட்டிகளில் வாக்களித்து பதிவை பிரபலமாக்குங்கள்...



14 ஏப்ரல், 2012

தகவல் பகிர்வு களங்கள் (Forums)- ஒரு அலசல்


வளர்ந்து கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் மக்களின் அறிவுப்பசியைப் போக்குவதற்க்கு பல சாதனங்களும் (Devices) ஊடகங்களும் (Media) தொழிற்பட்டு வருகின்றன. ஆனாலும் இந்த அனைத்து ஊடகங்களையும் விட தகவல் பரிமாற்றத்திலும், தகவல் அளிப்பிலும் இணையமே முதலிடம் பெற்றிருக்கிறது. இதற்க்கு காரணம் ஏனைய ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் என இவை அனைத்தினதும் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் இணையமே செய்து விடுகிறது. குறித்த ஒரு விஷயம் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் அருகில் இணையம் இருந்தால் போதுமானது. எனவே எல்லாமுமாக ஆகியிருக்கின்ற இந்த இணையத்தில் தகவல் தேடுதல் என்பது ஒரு கலையாகவே நோக்கப்படுகிறது. இதற்க்கென்றே இணையத்தின் தொடக்கமாகவும் முடிவாகவும் காணப்படுகின்ற தேடுதல் பொறிகள் (Search engines) அமைந்திருக்கின்றன.

எங்களுக்கு தேவையான அத்தனை விடயங்களும் இணையத்திலே கொட்டிக் கிடப்பதென்னவோ உண்மைதான். ஆனாலும் அவற்றை சரியாக பெற்றுக் கொள்கின்ற வழிமுறைகள் பலருக்கு தெரிந்திருப்பதில்லை. இணையத்தில் தேடலானது வினைத்திறனானதாக அமைந்திருக்க பயன்படுத்த கூடிய சில உபாயங்களை சென்ற பதிவிலே தந்திருந்தேன். இது போலவே இணையத்தில் தேவையானதை பெறுவதற்கென்றே அமைந்திருக்கின்ற இன்னுமொரு விடயம்தான் தகவல் பகிர்வு களங்கள். இதனை ஆங்கிலத்தில் Forum என்று சொல்லுவார்கள். இவற்றை வைத்து எங்கள் தேடுதலை எவ்வாறு பயனுள்ளதாக்கலாம் என்பது பற்றியும் அதற்க்கு உதவும் சில பயனுள்ள தளங்கள் பற்றியும் இந்தப் பதிவு ஆராயப்போகிறது.

-அடிப்படை-
இணையத்தை பொறுத்தவரை தகவல் பகிர்வு களங்கள் (Forums) பல்வேறு தேவைக்காக பயன்பட்டாலும் இதன் பொதுவான பண்பு என்னவென்றால், கலந்துரையாடல்தான். கொடுக்கப்படுகின்ற தலைப்பின் கீழ் பயனர்கள் (Users) தங்கள் வசதிக்கு ஏற்ப கருத்துக்களை அள்ளி விளாசலாம். நீங்கள் சொல்லுகின்ற விஷயங்களுக்கு ஆதாரம் இருக்கவேண்டுமென்பதில்லை. தனக்கு பொருத்தமான பதில் இருந்தால் அதை அந்த தலைப்பை தந்தவரே தெரிவு செய்து கொள்ள வேண்டியதுதான். இதன் மூலமாக குறித்த நபர் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விடைகளை பெற முடிவதுடன் பதில் அளிக்கின்றவர்களும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். சில நேரங்களில் குறிப்பிட்ட விடயங்களை தேடுகின்ற போது அவை இணையத்தில் தெளிவாக இருப்பதில்லை அல்லது கிடைப்பதில்லை. உதாரணமாக உங்களுக்கு Abragam Meslow இன் தேவைக் கோட்பாடுகள் பற்றிய நூலில் காணப்படுகின்ற கோட்பாடுகளும் விளக்கங்களும் தேவைப்பட்டால் அவற்றை தேடும் போது சிலவேளை அந்த நூல் மட்டும் இணையத்தில் இருக்கும். அல்லது அந்த நூலின் விளக்கவுரை மட்டும் இருக்கும். இம்மாதிரியான வேளைகளில் இம்மாதிரியான உங்கள் வினாக்களை பகிரும் போது உங்களுக்கு தீர்வு கிட்டும். அல்லது சிலவேளை உங்கள் கையடக்க தொலைபேசிக்கான ஒரு மென்பொருள் பயன்படுத்த முடியுமா அல்லது அதன் பயன்பாடுகள் பற்றி அறியவிரும்பினால் இவ்வாறான Forumகளில் பகிரும் போது உங்களி்ன கைத்தொலைபேசி வகையையே பயன்படுத்துகின்ற இன்னுமொரு நபர் அதற்கான தெளிவான பதிலை அளித்திருப்பார். இவ்வாறு சில சிக்கலான தேடற் பொறிகளால் தேட முடியாத விடயங்களை பெற இந்த Forumகளை பயன்படுத்தலாம். இந்த சேவையை விதம் விதமாக இணையத்திலே பல நிறுவனங்கள் தருகின்றன. அவற்றை தொகுத்து தந்திருக்கின்றேன். பொருத்தமானதை தெரிவு செய்து உங்கள் தேடலை வினைத்திறனாக்குங்கள்....



# www.answers.com 

# www.ehow.com

# www.yahooanswers.com

# www.whatis.com

...பதிவு பிடித்திருந்தால் இன்ட்லி மற்றும் தமிழ்10 திரட்டிகளில் வாக்களியுங்கள்...

Share With your friends