14 ஏப்ரல், 2012

தகவல் பகிர்வு களங்கள் (Forums)- ஒரு அலசல்


வளர்ந்து கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் மக்களின் அறிவுப்பசியைப் போக்குவதற்க்கு பல சாதனங்களும் (Devices) ஊடகங்களும் (Media) தொழிற்பட்டு வருகின்றன. ஆனாலும் இந்த அனைத்து ஊடகங்களையும் விட தகவல் பரிமாற்றத்திலும், தகவல் அளிப்பிலும் இணையமே முதலிடம் பெற்றிருக்கிறது. இதற்க்கு காரணம் ஏனைய ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் என இவை அனைத்தினதும் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் இணையமே செய்து விடுகிறது. குறித்த ஒரு விஷயம் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் அருகில் இணையம் இருந்தால் போதுமானது. எனவே எல்லாமுமாக ஆகியிருக்கின்ற இந்த இணையத்தில் தகவல் தேடுதல் என்பது ஒரு கலையாகவே நோக்கப்படுகிறது. இதற்க்கென்றே இணையத்தின் தொடக்கமாகவும் முடிவாகவும் காணப்படுகின்ற தேடுதல் பொறிகள் (Search engines) அமைந்திருக்கின்றன.

எங்களுக்கு தேவையான அத்தனை விடயங்களும் இணையத்திலே கொட்டிக் கிடப்பதென்னவோ உண்மைதான். ஆனாலும் அவற்றை சரியாக பெற்றுக் கொள்கின்ற வழிமுறைகள் பலருக்கு தெரிந்திருப்பதில்லை. இணையத்தில் தேடலானது வினைத்திறனானதாக அமைந்திருக்க பயன்படுத்த கூடிய சில உபாயங்களை சென்ற பதிவிலே தந்திருந்தேன். இது போலவே இணையத்தில் தேவையானதை பெறுவதற்கென்றே அமைந்திருக்கின்ற இன்னுமொரு விடயம்தான் தகவல் பகிர்வு களங்கள். இதனை ஆங்கிலத்தில் Forum என்று சொல்லுவார்கள். இவற்றை வைத்து எங்கள் தேடுதலை எவ்வாறு பயனுள்ளதாக்கலாம் என்பது பற்றியும் அதற்க்கு உதவும் சில பயனுள்ள தளங்கள் பற்றியும் இந்தப் பதிவு ஆராயப்போகிறது.

-அடிப்படை-
இணையத்தை பொறுத்தவரை தகவல் பகிர்வு களங்கள் (Forums) பல்வேறு தேவைக்காக பயன்பட்டாலும் இதன் பொதுவான பண்பு என்னவென்றால், கலந்துரையாடல்தான். கொடுக்கப்படுகின்ற தலைப்பின் கீழ் பயனர்கள் (Users) தங்கள் வசதிக்கு ஏற்ப கருத்துக்களை அள்ளி விளாசலாம். நீங்கள் சொல்லுகின்ற விஷயங்களுக்கு ஆதாரம் இருக்கவேண்டுமென்பதில்லை. தனக்கு பொருத்தமான பதில் இருந்தால் அதை அந்த தலைப்பை தந்தவரே தெரிவு செய்து கொள்ள வேண்டியதுதான். இதன் மூலமாக குறித்த நபர் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விடைகளை பெற முடிவதுடன் பதில் அளிக்கின்றவர்களும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். சில நேரங்களில் குறிப்பிட்ட விடயங்களை தேடுகின்ற போது அவை இணையத்தில் தெளிவாக இருப்பதில்லை அல்லது கிடைப்பதில்லை. உதாரணமாக உங்களுக்கு Abragam Meslow இன் தேவைக் கோட்பாடுகள் பற்றிய நூலில் காணப்படுகின்ற கோட்பாடுகளும் விளக்கங்களும் தேவைப்பட்டால் அவற்றை தேடும் போது சிலவேளை அந்த நூல் மட்டும் இணையத்தில் இருக்கும். அல்லது அந்த நூலின் விளக்கவுரை மட்டும் இருக்கும். இம்மாதிரியான வேளைகளில் இம்மாதிரியான உங்கள் வினாக்களை பகிரும் போது உங்களுக்கு தீர்வு கிட்டும். அல்லது சிலவேளை உங்கள் கையடக்க தொலைபேசிக்கான ஒரு மென்பொருள் பயன்படுத்த முடியுமா அல்லது அதன் பயன்பாடுகள் பற்றி அறியவிரும்பினால் இவ்வாறான Forumகளில் பகிரும் போது உங்களி்ன கைத்தொலைபேசி வகையையே பயன்படுத்துகின்ற இன்னுமொரு நபர் அதற்கான தெளிவான பதிலை அளித்திருப்பார். இவ்வாறு சில சிக்கலான தேடற் பொறிகளால் தேட முடியாத விடயங்களை பெற இந்த Forumகளை பயன்படுத்தலாம். இந்த சேவையை விதம் விதமாக இணையத்திலே பல நிறுவனங்கள் தருகின்றன. அவற்றை தொகுத்து தந்திருக்கின்றேன். பொருத்தமானதை தெரிவு செய்து உங்கள் தேடலை வினைத்திறனாக்குங்கள்....



# www.answers.com 

# www.ehow.com

# www.yahooanswers.com

# www.whatis.com

...பதிவு பிடித்திருந்தால் இன்ட்லி மற்றும் தமிழ்10 திரட்டிகளில் வாக்களியுங்கள்...

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பா !

Share With your friends