24 நவம்பர், 2011

உங்கள் காணொளிகளையும் Tweet செய்யலாம்..!

            சமூக வலைத்தளங்கள் என்றதும் நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது பேஸ்புக் தளம்தான். ஆனாலும் என்னதான் Facebook பிரபல்யமடைந்திருந்தாலும் டவிட்டர் இணையத்தளம் உலக மக்களிடையே தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

    இத்தனை பிரபல்யமான இந்த தளத்தில் வெறும் உரைகளையும் (Texts) படங்களையும் (Images) மட்டுமே நம்மால் பகிர முடியும். ஆனால் உங்கள் காணொளிகளையும் இப்போது பகிரலாம் இதற்க்கு http://www.twitvid.com இந்த தளம் உதவுகிறது.

14 நவம்பர், 2011

நீங்கள் விரும்பும் File ஐ PDF ஆக மாற்றலாம் - இம்மாத மென்பொருள்




இந்த மாதத்தின் முதலாவது பதிவினூடாக உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி. PDF கோப்புக்கள் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். அதாவது எமது ஆவணங்களை பாதுகாப்பாகவும் இலகுவாகவும் பரிமாறிக்கொள்ள கூடிய ஒரு கோப்பு வடிவம் என்று சுருக்கமாக கூறலாம். அதாவது வழமையாக நாம் ஒரு கணினியில் ஒரு ஆவணத்தை தட்டச்சு செய்து தயார் செய்வோம், ஆனால் அதனை வேறொரு கணினியில் அச்சிட வேண்டிய தேவை ஏற்படும். பொதுவாக அது மைக்ரோசாஃட் ஆபீஸ் வேர்ட் மென்பொருள் கொண்டோ அல்லது அடோப் பேஜ் மேக்கர் போன்ற வேறு ஏதேனும் சொல் செயலாக்க (Word processing) மென்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலோ நாம் அந்த ஆவணத்தை தட்டச்சு செய்ய என்னென்ன எழுத்துருக்களை (Fonts) பயன்படுத்தினோமோ அவற்றையும் மற்ற கணினிக்கு எடு்த்து செல்ல வேண்டும். ஆனால் பொதுவாக PDF கோப்புகளை (Files) பொறுத்தவரை அது அவசியமில்லை. மற்றும் நம்முடைய ஆவணம் பாதுகாப்பு கூடியதென்றால் அதனை வாசிக்க மட்டும் (Read only) செய்யக்கூடியதாகவும் செய்யலாம் இதனால் இது சிறிதளவு பாதுகாப்பானது. (ஏன் சிறிதளவு பாதுகாப்பானதெனில் சில மென்பொருள்களை கொண்டு 

அவ்வாறான கோப்புகளை Unlock செய்யலாம். இது பற்றி அறிய நான் எழுதிய பதிவை படியுங்கள்.) 

         ஆனால் நம்மில் பலருக்கு எமது ஆவணங்களை எவ்வாறு PDF வடிவத்திற்கு மாற்றுவது? என்பது தெரியாது... சிலருக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் அந்த வழிகளை விட நான் சொல்கின்ற இந்த வழி இலகுவானதும் இலவசமானதுமாகும். பொதுவாக எமது கோப்புகளை PDF வடிவத்திற்கு மாற்ற அடோப் இணையத்தளம் ஒரு சேவையை வழங்குகிறது. (https://www.acrobat.com/createpdf/en/home.html ) ஆனாலும் அதில் ஒரு கணக்குக்கு 3 கோப்புகளை மட்டுமே இலவசமாக மாற்றம் செய்ய முடியும். இதை தவிர இதே போன்ற சில Online சேவைகளும் உள்ளன. ஆனால் நான் சொல்கின்ற இந்த Win PDF மென்பொருளானது இணையத்தில் இலவசமாக கிடைக்ககூடிய திறந்த வள (Open source) மென்பொருளாகும். நான் இந்தப் பதிவின் இறுதில் கொடுத்துள்ள இணைப்பின் மூலமாக இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பின் அதனை வழமை போன்று நிறுவிக் (Install) கொள்ளுங்கள். 

             பின் நீங்கள் எந்த கோப்பை PDF ஆக மாற்ற வேண்டுமோ அதனை திறங்கள். பின் உதாரணமாக அது வேர்ட் கோப்பாக இருந்தால் Ctrl+P என்ற விசைகளை அழுத்துங்கள் அல்லது Print Option ஐ தெரிவு செய்யுங்கள். பின் Print Menu இல் Printer name என்பதில் Winpdf writer என்பது சேர்ந்திருக்கும். 

(படத்தில் உள்ளது போல). பின் அதனை தெரிவு செய்து பின் Page range இல் All என்பதை தெரிவு செய்து Print பொத்தானை அழுத்துங்கள்.


  அப்போது கீழுள்ளது போல் Save As Menu தோன்றும். அதில் உங்கள் புதிய கோப்பின் பெயரை கொடுத்து Save செய்யுங்கள், உங்கள் PDF கோப்பு தயார். இதே வழிமுறையை ஏனைய மென்பொருள்களுக்கும் பின்பற்றலாம்.



இம் மென்பொருளை இன்னும் உங்கள் வசதிக்கேற்றால் போல மாற்ற Start --> All programs --> Winpdf --> Preferences என்று சென்றால் கீழுள்ளது போல தோன்றுகின்ற Menu வை பயன்படுத்தலாம்.


இதனை இலவசமாக தரவிறக்க கீழுள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்.

 


Share With your friends