12 பிப்ரவரி, 2011

காவலன்-The bodyguard (It's not a movie)



என்ன..தலைப்பை கண்டு ஒரு மாதிரி ஆகிவிட்டீர்களா?நான் சொல்லப்போவதொன்றும் விஜய்,அசின் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் பற்றியில்லைஆனால் அதற்கு சற்று ஒத்த தன்மை கொண்ட ஒரு விடயம்தான்..(அது வேறு ஒன்றுமில்லை,காவலன் பார்த்தவுடன் எழுதுகின்ற பதிவு அதுதான்..)

இன்றைய நாட்களில் கணினியுகம் எல்லையின்ற நாளொருவண்ணமும் பொழுதுதொரு மேனியுமாக வளர்ந்து வருவது நாமறிந்ததே..இதனால் கணினி பாவனை கிராம,நகர வேறுபாடின்றி பரவி வருகிறது..எனினும் இன்று கணினிபாவனையாளர்கள் பெரிதும் Virus,Trojanhorse,Malware,Spyware பற்றி பெரிதும் கவலைப்டுவதும் கண்கூடு..ஏனெனில் தகவல் தொழில்நுட்பம் தீமைகளையும் தந்திருக்கிறதல்லவா..!அதனையும் ஏற்க வேண்டும்
எமது கணினிகளை இந்த Virus,Trojanhorse,Malware,Spyware இவற்றிடம் இருந்து எவ்வாறு தப்பிகொள்வது என்றால் அதற்கே ஒரு தனி பதிவெழுதலாம்.அது மட்டுமன்றி உங்களிடம் கேட்டால் ஒரு நல்ல Anti-virus பயன்படுத்தலாம் என்பீர்கள்..அதுவும் உண்மைதான் ஆனாலும் அது Pirate copyகளை நேசிக்கும் நம்மவர்களுக்கு சாத்தியமில்லை.

எனவே இலவசமாக பாதுகாப்பு பெற என்ன வழி என்று கேட்பவர்களுக்கு நான் சொல்ல போவது தீர்வாக அமையும்.Original Anti-virus CDகளுக்கு ஈடாக வேலை செய்யக்கூடிய பல Freewareகளும் சந்தையில் கிடைக்கின்றன..அதில் ஒன்றுதான் நான் சொல்லும் Malwarebytes-Anti malware.

இது ஒரு ஓப்பன்சோர்ஸ் அடிப்படை மென்பொருளாக அமைந்தாலும் வெறுமனே Antivirusஆக மட்டுமன்றி Antimalware,Firewall,Trojan remover ஆகவும் தொழிற்படகூடியது.இந்த லிங்ங் இல் பதிவிறக்கி உடன் இற்றைப்படுத்தி (Update) கொள்ளுங்கள்.இது பலரின் தேவையை பூர்த்தி செய்யும் என்பது ஐயமில்லை..உண்மையில் இலவசமாக இவ்வளவு வேலைசெய்கின்ற இது எமது கணினிக்கு உண்மையிலேயே ஒரு நல்ல காவலன் தானே....... தொடர்ந்தும் பேசலாம்,பல தலைப்புகளில் உலக கிண்ண
எதிர்பார்ப்புகளுடன் விடைபெறுகிறேன்...மீண்டும் சந்திப்போம்..Keep in Touch....   GOOD LUCK

6 பிப்ரவரி, 2011

Temporary Fileகளை நீக்க பல வழிகள்..


டெம்பரரி ஃபைல்கள் அல்லது tmp files என அழைக்கப்படுபவை நீங்கள் கணினியில் ஒரு ஃபைலையோ அல்லது மென்பொருளையோ பயன்படுத்தும் போது தாமாகவே உருவாகும்.இவை எந்தவித வைரஸ்களும் அல்ல. எனவே நீங்கள் Anti-virusகொண்டு Tem file களை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு டெம்பரரி ஃபைலும் .temp` என்ற குறியை ஃபைலின் பெயரோடு இணைத்திருக்கும்.சான்றாக நீங்கள் ஏதாவது வேர்ட்(Ms-Word) ஃபைலை பயன்படுத்தும் போது ஃபைலானது `IT CORNER.tmp போன்ற பெயரில் உருவாகும்.` குறியை வைத்து குறிப்பிட்ட ஃபைலானது Temporary ஃபைல் என்று அறிந்துகொள்ளலாம்.பொதுவாகவே tmp ஃபைல்கள் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் இடத்தை விணாக்குபவைகளாகும். எனவே இவற்றை குறிப்பிட்ட கால கட்டங்களில் அழித்துவிடுவது நல்லது .tmp ஃபைல்களை நீங்களாகவோ அல்லது ஏதாவது டூலை கொண்டோ அழிக்கலாம்.

வழிமுறை 01: 
Disk defragmenter பயன்படுத்தினால் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் வேண்டாத ஃபைல்கள் குவிந்துள்ள இடத்தினை மீட்கலாம்.Disk defregment பயன்படுத்துவதன் மூலம் tmp ஃபைல்களையும் அழிக்க முடியும்.

வழிமுறை 02:
My computer Iconஐ திறந்து C Driveஇனுள் உள்ள Windows Folderஐ திறந்து அதனுள் உள்ள Temp ஃபோல்டரை திறந்து அதனுள் உள்ள ஃபைல்களை அழித்து விடுங்கள்.

வழிமுறை 03:
Start menu--Programs--Accessories--System Tools வரை Browse செய்யுங்கள் அங்கு Maintenance Wizard Option ஐ தேர்வு செய்து டெம்பரரி ஃபைல்களை அழிக்கலாம்.

வழிமுறை 04:
அல்லது Run இற்கு சென்று (Windows7 பாவனையாளராக இருந்தால் Search option இல்) .tmp என தேடி அழிக்கலாம்.இந்த வழிகள் ஒன்றும் பிடிக்க வில்லையென்றால் Tmp ஃபைல்களை அழிக்க நீங்களே எளிய ஒரு Uttility உருவாக்கலாம்,Notepad ஐ திறந்து

C:>copy com a.bat
del/f/s/1 *.*tmp

என டைப் செய்து IT CORNER.bat என்ற பெயரில் டெக்ஸ்டாப்பில் Save செய்து கொள்ளுங்கள். இனி tmp ஃபைல்கள் உருவாகும் போதெல்லாம் இதனை இரட்டைகிளிக் செய்து ஃபைல்களை அழிக்கலாம். ஆனால் கணினிமென்பொருள் தேர்ச்சிபெற்றவருடன் இந்த செய்முறைகளை பரிட்சித்து பார்க்கவும்.

...மறக்காமல் திரட்டிகளில் ஓட்டளித்து இந்த பதிவை பயனடைய செய்யுங்கள்...

5 பிப்ரவரி, 2011

PDF ஃபைல்களை இலகுவாக Unlock செய்யலாம்!!






பல நாட்களுக்கு பின் நான் எழுதுகின்ற பதிவு இது..நடுவில் சில முக்கிய வேலைகள்........

இன்றைய நாடகளில் அதீத இணையப்பாவனையை எங்கும் சாதாரணமாக காணலாம்.அதனால் இணையமூடாக Online நிலையில் Documentகளை பரிமாறிகொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது..இதற்கு பெரும்பாலும் PDF Formatகளே பயன்படுகின்றன.ஏனென்றால்..!அதுதான் Security கூடியதாம்..இதன் மூலம் டாக்குமென்ட் Copy செய்யப்படுவதை தடுக்கலாம்.(என்னய்யா செக்கியூரிட்டி ஜூஜூபி..) இது Wikileaks யுகம் சொல்வது புரிகிறதா..அதாவது நான் சொல்ல வருவது என்னவென்றால் எப்பெயர்ப்பட்ட Securityயாக இருந்தாலும் ஒரு சிறிய மென்பொருள் கொண்டு அதை Unlock செய்து விடலாம்.இது Illegal இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது..ஆனாலும் சில முக்கியமான ஆவணங்கள் தயாரிக்கும் போது சில குறிப்புகள் அவசியமாகின்ற வேளைகளில் அல்லது வேறு முக்கிய சந்தர்ப்பங்களில் இதை பயன்படுத்தலாம்.PDF Unlock செய்ய சந்தையில் பல மென்பொருள்கள் கிடைக்கின்றன.ஆனால் அவை பல வேளைகளில் trial ஆகவோ/செயற்திறன் அற்றதாகவோ/கடின செய்முறை கொண்டதாகவோ இருக்கும்.ஆனால் நான் சொல்லும் இந்த A-PDF Restrictions remover ஆனது இலவச மென்பொருள் மட்டுமன்றி
ஒரு கிளிக்கில் Documentஐ அன்லொக் செய்யலாம்.அதாவது இந்த மென்பொருளை நிறுவிய பின் குறித்த பிடிஎஃப் ஃபைலை வலது கிளிக் செய்து Remove restrictions & Save as.. என்பதை கிளிக் செய்தாலே போதுமானது..(படத்தில் காண்க)

இதனை தயவு செய்து சட்டவிரோதமாக பயன்படுத்தாதீர்கள்..இம் மென்பொருளை பெற சொடுக்குக....

3 பிப்ரவரி, 2011

வாழ்த்துகிறோம்.........





மேற்கத்தைய அடிமைப்படுத்தலை ஒற்றுமையால் வெற்றிகொண்ட 63வது ஆண்டுநிறைவை கொண்டாடும்
இலங்கை திருநாட்டுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமையடைகிறோம்.....


ஜாவைப் பற்றி சுழலும் இணையம்..


நமது இணையப்பக்கங்களை வடிவமைக்கும் போது எச்டிஎம்எல்லின் வசதிகளையும் விட அதிக வசதிகளை வழங்கும் ஸ்க்ரிப்ட்களை பயன்படுத்துவது வழக்கம்.சில எளிய ஜாவா ஸ்க்ரிப்ட்கள் நமக்கு இணைய பக்கங்களை வடிவமைப்பதில் பேருதவி புரிகின்றன..அவ்வாறான சில Java scriptகளை இப்பொது தருகின்றேன்...இது பல நண்பர்களுக்கு பிடித்த விடயமாகவும் அமையும்..பல பேர் கேட்டுகொண்டதற்கு அமைய முக்கிய ஸ்க்ரிப்ட்களை தருகிறேன்...
முதலில் Welcome message சொல்லும் ஓர் எளிய மாறுபட்ட ஸ்க்ரிப்ட் ஒன்றை பார்ப்போம்.ஸ்க்ரிப்ட் இதுதான்..

ஸ்க்ரிப்டின் விளக்கம்
ஜாவா ஸ்க்ரிப்டில் Date என்ற உள்ளிணைந்த ஆப்ஜெக்ட் (Object) ஒன்று உள்ளது.இது 20 Methodகளை உள்ளடக்கியது.அதில் ஒன்று தான் gethours().இது அப்போதைய மணியை திரையில் கொண்டுவர பயன்படுகிறது.

2 பிப்ரவரி, 2011

இணையஉலாவல் (Web browsing) வேகத்தை துரிதப்படுத்த...


நீங்கள் சர்வதேச வலைப்பின்னலில் உள்ள பல்வேறு பக்கங்களில் அன்றாடம் உலாவரும் போதெல்லாம் அா்ாக்கங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தற்காலிக கோவைகள் (Temporary files) உங்கள் கணினியில் தற்காலிகமாக சேமிக்கப்படும்.இதன் நோக்கம் மீண்டும் இன்னோர் நேரம் நீங்கள் வலைப்பின்னலில் உலாவர எத்தனிக்கும் போது மிக விரைவாக முன்னர் உலாவிய பக்கங்களுக்கு பிரவேசிக்க வழியமைப்பதற்காகும்..ஆனால் உண்மையில் இந்த வசதியானது இணைய உலகில் அகல்கற்றை (Broadband) தொழில்நுட்பம் அறிமுகமாக முன்னர் இணைய இணைப்பு வேகம் குறைவானது என்பதால் பயனர்களின் வேலைகளை இலகுவாக்கவே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் இந்த நவீன யுகத்தில் அதாவது செக்கனுக்கு 21மெகாபைட் வேகம் கொண்ட இணையவசதி உள்ள இந்த நாட்களில் தேவையற்றது.ஆனாலும் இந்த செயற்பாடானது பெரும்பாலும் Interner cafe களில் பெரிதும் அவதானிக்கப்பட கூடியதொன்றாகும்.அதாவது நீங்கள் வலைப்பின்னலை திறந்தவுடன் நீங்கள் பிரவேசிக்காத உங்களுக்கு சம்பந்தமில்லாத வேறு சில தளங்கள் தொடக்கத்தில் தன்னியல்பாக வருவதை அவதானிக்கலாம்.
இதற்கு காரணம் குறிப்பிட்ட வலைப்பின்னலை உங்களுக்கு முன்னர் வேரொருவர் பாவி்த்தமையே இதற்கு காரணமாகும்.மேலும் இது உங்கள் வீட்டுகணினிகளில் இடம்பெறுவதால் உங்கள் கணினியின் நினைவகம் விரயமாகவும் கூடும்.இதனை தவிர்க்க என்ன செய்யலாம்..
Mozilla firefox பயன்படுத்துவோர்.....
Toolsமெனுவிற்கு சென்று அங்கு Clar recent history என்பதை கிளிக் செய்யவும்.
Google chrome பயன்படுத்துவோர்.....
Settingsசென்று History கிளிக் செய்யவும்.அல்லது Ctrl+H அழுத்தி பெறப்படும் மெனுவில் Clear items என்பதை சொடு்ககி அழிக்கவும்


Share With your friends