29 டிசம்பர், 2011

அன்ட்ராயிட்டும் (Android) இனி தமிழ் பேசும் - ஒரு Application அறிமுகம்


இணையத்தையும் கைத்தொலைபேசிகளையும் வியந்து பார்த்த காலம் மாறி அவற்றை எம்முடனே எடுத்துச் செல்லுகின்ற அளவுக்கு அவை இரண்டும் அபரிமிதமாக வளர்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக Smart phone என்பதுதான் கைத்தொலைபேசிகளின் இன்றைய Trend. Smart phone மோகம் இன்று வயது, பால் வேறுபாடின்றி ஒரு காய்ச்சல் போலவே பரவியிருக்கிறது.


இத்தனைக்கும் அவை கொண்டுள்ள சிறப்புத் தன்மைகளே காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் Smart phone என்பது சாதாரண கைத்தொலைபேசிகள் என்பதையும் தாண்டி கணினியின் ஒரு சில இயல்புகளையும் தன்னுள் உள்வாங்கி கொண்ட சாதனமாக காணப்படுகிறது. Smart phone களைப் பற்றி பேசும் போது இந்தச் சொல்லையே தனக்கு மட்டுமே உரியது என பிடித்து வைத்திருப்பது அன்ட்ராயிட் (Android) இயங்கு முறைமைதான். என்னதான் Windows mobile களும் ஆப்பிள் ஐ-போன்களும் இதனோடு மல்லுக்கு நின்றாலும் ஆடம்பரத்தில் மட்டுமன்றி விலையிலும் சற்று குறைந்தே இருக்கின்ற காரணத்தால் அன்ட்ராயிட் (Android) இயங்குதள கைபேசிகள் அனைவர் மனங்களோடும், இல்லை..இல்லை அனைவர் கைகளிலும் இலகுவில் ஒட்டிக் கொள்கிறது. இத்தனைக்கும் மேலாக இணைய ஜாம்பவான், புதுமை அரசன் கூகிளின் (Google) தயாரிப்பு இது. இதைவிடவும் ஒரு காரணம் வேண்டுமா?


இவ்வாறான இந்த அன்ட்ராயிட் (Android) இயங்குதள கைபேசிகள் போன்ற Smart phone களில் Application என்பவை பிரபல்யமானவை. அதாவது கணினிக்கு மென்பொருள் போல. இவைகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும் என்பது குறிப்பிட தெரியவில்லை. ஏனென்றால் மணிக்கொரு முறை 100 க்கும் மேற்ப்பட்ட Application களை Android market உள்வாங்கி கொள்கிறது. இந்த ஆயிரக்கணக்கான Application களில் தமிழ் ஆர்வலர்களுக்காக, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது போல எங்கள் செம்மொழியை உங்கள் அன்ட்ராயிட் (Android) தொலைபேசியிலும் முதன்மை மொழியாக பாவிக்க ஒரு Application இருக்கிறது.


இந்த Application ஐ நான் தந்திருக்கின்ற இணைப்பில் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். உங்கள் அன்ட்ராயிட் (Android) தொலைபேசிக்கான முழுமையான ஒரு தமிழ் யுனிக்கோட் (Unicode) விசைப்பலகையாகும்.
இதனை பயன்படுத்தி Phonetic எனப்படுகின்ற ஒலிக்குறிப்பு முறையில் இலகுவாக தமிழை தட்டச்சு செய்யலாம். ஒலிக்குறிப்பு முறை என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் அறியாதவர்களுக்காக சொல்கிறேன். உதாரணமாக நீங்கள் தமிழில் "வணக்கம்" என தட்டச்சு செய்ய Vanakkam என தட்டச்சு செய்து Space ஐ அழுத்த அது தமிழில் தோன்றும். 

இந்த சிறிய Application ஐ உங்கள் அன்ட்ராயிட் (Android) கைத்தொலைபேசியின் எந்த இடத்திலும் பயன்படுத்தலாம். அதாவது குறுஞ்செய்திகள் (Instant messages), அரட்டை, இணையத் தேடல் அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஒரு தமிழ் வலைப்பதிவராக இருந்தால் இந்த Application ஐ பயன்படுத்தி ஒரு பதிவே எழுதி விடலாம். செம்மொழியாம் தமிழ் மொழியை இனி தொழில்நுட்பத்தோடு நுகருங்கள். அன்ட்ராயிட்டும் (Android) இனி தமிழ் பேசும். மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கின்றேன். 


..பதிவு பிடித்திருந்தால் வழமை போல இன்ட்லி மற்றும் தமிழ்10 திரட்டிகளில் ஓட்டளித்து பதிவை பிரபலமாக்குங்கள்..     

1 கருத்து:

அணில் சொன்னது…

ஆண்ட்ராய்டில் உண்மையிலேயே தமிழை பேச வைப்பதற்கும் (tamil tts for blind) வழி வந்துவிட்டது. அதைப் பற்றி மேலும் விவரங்கள் அறிந்துகொண்டு பகிர்ந்து கொள்கிறேன்

Share With your friends