1 செப்டம்பர், 2011

அறிந்ததும் அறியாததும்..2

இந்த மாதமும் 'அறிந்ததும் அறியாததும்' பகுதியில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்து நீங்கள் அறிந்த ஒரு விடயம் தொடர்பாக அறியாத பல விடயங்களை சொல்லி தருகிற பகுதியாக வந்திருக்கிறது. சென்ற மாதம் 1ம் திகதி Notepad மென்பொருளில் நீங்கள் அறியாத ஒரு பகுதி பற்றி சொல்லியிருந்தேன்.
இணைப்பு 

இந்த மாதம் நான் சொல்லப்போவது இன்றைய நாட்களில் பலரின் கணினிகளில் காணப்படுகிற ஒரு இயங்குதளமென்றால் அது நிச்சயமாக விண்டோஸ் 7 தான். இதற்கு காரணம் இலகுபடுத்தப்பட்ட அதன் பயனாளர் இடைமுகம் (User interface) மட்டுமன்றி அதனோடு இணைந்த பல புதிய சேவைகளும் காரணம்..(விண்டோஸ் 7 பற்றி நான் விரிவாக குறிப்பிடவில்லை) நம்மில் பலர் தினமும் இந்த இயங்கு முறைமையில் (Operating System) பல வேலைகளை செய்கிற போதிலும் அந்த வேலைகளுக்கான குறுக்கு விசைகள் (Shortcut keys) பற்றி அறிந்திருப்பதில்லை..நீங்கள் செய்கிற வேலைகளை இலகுவாக முடிக்க இவை உதவி செய்கிறன. இதனால் உங்கள் நேரமும் மீதமாகிறது.


குறுக்குவிசைகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகிறன?


பொதுவாக மெனுக்கள் அல்லது Command கள் மூலமாக நீங்கள் செய்கின்ற வேலையை இலகுவாக கீபோர்ட்டில் உள்ள கீகளை கொண்டு செய்தலே Shortcut key எனப்படுகிறது. பொதுவாக இந்த குறுக்கு விசைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட கீகளின் சேர்ககையினாலேயே உருவாகும். இவை சுட்டி (Mouse) மூலம் செய்கின்ற வேலைகளை செய்கிறவையாக இருக்கும்.

 விண்டோஸ் 7 இயங்கு முறைமையில் இதனுடன் சார்ந்த புரோக்கிராம்களுக்கு Alt விசையை அழுத்துவதன் மூலம் அந்த புரோக்கிராம்களுக்கான இலகுவான குறுக்கு விசைகளை திரையில் காணலாம்.

இனி பொதுவான  குறுக்கு விசைகளை பார்ப்போம்.

F1 -                               எந்த செய்நிரலுக்குமான உதவி இடைமுகத்தை பெறுவதற்கு
Ctrl+C or Ctrl+ insert -  தெரிவு செய்யப்பட்ட விடயத்தை பிரதி பண்ண (Copy)
Ctrl+X -                        தெரிவு செய்யப்பட்ட விடயத்தை வெட்ட (Cut)
Ctrl+V or Shift+ insert - தெரிவு செய்யப்பட்ட விடயத்தை ஒட்ட (Paste)
Ctrl+Z -                         செய்த செய்கையை தவிர்க்க (Undo)
Ctrl+Y -                         மீண்டும் அதே செய்கையை செய்ய (Redo)
Delete or Ctrl+D -         தெரிவு செய்யப்பட்ட விடயத்தை நகர்த்த (move) அல்லது
                                     Recyclebin  இற்கு அனுப்ப
Shift+Delete -               தெரிவு செய்யப்பட்ட விடயம் Recyclebinஇற்கு செல்லாமல்
                                    நேரடியாக அழிப்பதற்க்கு
F2 -                              தெரிவு செய்யப்பட்டதினை Rename செய்ய
Ctrl+Right arrow -         Cursor ஐ அடுத்த வார்த்தையின் ஆரம்பத்திற்கு கொண்டு
                                     செல்ல
Ctrl+Left arrow -           Cursor ஐ முந்தைய வார்த்தையின் ஆரம்பத்திற்கு கொண்டு
                                     செல்ல        
Ctrl+Down arrow -        Cursor ஐ அடுத்த பந்தியின் ஆரம்பத்திற்கு கொண்டு
                                     செல்ல
Ctrl+Up arrow -            Cursor ஐ முந்தைய பந்தியின் ஆரம்பத்திற்கு கொண்டு
                                     செல்ல     
Ctrl+Shift+Arrow keys - வார்த்தைகளை கட்டம் கட்டமாக தேர்ந்தெடுக்க
Shift with an any arrow key - ஒரு விண்டோவிலோ, டெக்ஸ்டாப்பிலோ அல்லது ஒரு ஆவணத்திலோ உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட பகுதிகளை தெரிவு செய்ய
F3 -                               ஒரு ஃபைல் அல்லது ஃபோல்டரை தேட
Alt+Enter -                     தேர்வு செய்யப்பட்ட விடயத்தின் Property யினை காண
Alt+F4 -                         தற்போது இயங்கி கொண்டிருக்கிற ஒரு புரோக்கிராமை
                                      நிறுத்த
Ctrl+ Esc -                     ஸ்டார்ட் மெனுவை திறக்க
Windows logo key Picture of Windows logo key+Pause      கணினியின் Properties ஐ காண
Windows logo key Picture of Windows logo key+R             Run Dialog boxஐ திறக்க




இதை தவிரவும் இன்னும் அதிகமான குறுக்கு விசைகளை காண http://windows.microsoft.com/en-US/windows7/Keyboard-shortcuts  இந்த முகவரியை காணவும்.



              








4 கருத்துகள்:

Shanojan.A சொன்னது…

Please add your comments

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள நுட்பத் தகவல்கள்.

அருமை.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

குறுக்குவிசைக் கட்டளைகள் மிகவும் பயனளிப்பவையாகவுள்ளளன.

Shanojan.A சொன்னது…

நன்றி திரு.முனைவர்.இரா.குணசீலன் அவர்களே

Share With your friends