12 ஏப்ரல், 2011

ஃளாஷ்5 பழகலாம் வா..! (அத்தியாயம்2)


இம்முறை நாம் ஃளாஷ் இல் ஒரு அனிமேஷனுக்கு நிறத்தை எவ்வாறு மாற்றலாம் என பார்ப்போம்...முதலில்
* Timelineல் முதல் Frameஐ தெரிவு செய்து அதில் Rightclick செய்து தோன்றும் மெனுவில் Create motion tween ஐ கிளிக் செய்க..படம்01
* பின்னர் உங்கள் Object எவ்வளவு வேகத்தில் செல்லவேண்டும் என்பதை தீரமானித்து Timelineல் சிறிதுதுாரத்தில் வலதுகிளிக் செய்து Insert key frame என்பதை கிளிக் செய்க (Shortcut-F6)
* பின் பந்து எவ்விடத்தில் அடிக்கவேண்டுமோ அங்கு Select tool மூலம் பந்தினை Drag செய்யவும்..
* பிறகு பந்து எவ்வளவு வேகத்தில் மேல் எழ வேண்டுமோ அதை பொறுத்து Timeline சிறிது துாரம் நகர்த்தி ஒரு Frameஐ செலக்ட் செய்து அதை வலதுகிளிக் செய்து Insert key frame என்பதை கிளிக் செய்க (Shortcut-F6)
* இப்போது பந்து எவ்வளவு துரம் எழ வேண்டுமோ அங்கு பந்தினை Drag செய்யவும்..
* உங்கள் கீபோர்ட்டில் Enter கீயை அழுத்த நீங்கள் செய்த பந்து துள்ளுவதனை காணலாம்..இனி உங்களுக்கு எவ்விடம் வரை இவ் அனிமேஷன் நடைபெறவேண்டுமோ அதுவரை மேற்சொன்ன முறைகளை செய்யவும்..


பி்ன்னர் உங்கள் அனிமேஷனின் இறுதி Frameஐ தெரிவு செய்து Windows menuவில் Panels என்பதிலுள்ள Effect என்ற கட்டளையை பிரயோகிக்கவும்...படம்01



பின் தோன்றும் Effect மெனுவில் (படம்02) Tint என்பதை தெரிவு செய்து விரும்பிய வர்ணத்தை தெரிவு செய்யவும்.இப்போது Enter விசையை அழுத்த உங்கள் Object நிறம் மாறி செல்வதை காணலாம்....

கருத்துகள் இல்லை:

Share With your friends