28 ஜனவரி, 2011

Screensaver தயாரிக்க இலகு வழி........




நாம் எமது கணினிகளில் பல வகையான ஸ்கிரீன்சேவர்களை பயன்படுத்துகிறோம்.பலர் இணையத்திலிருந்து பல வடிவங்கள் கொண்ட அனிமேஷன் வகையிலான ஸ்கிரீன்சேவர்களையும் பெற்று பயன்படுத்துகிறோம்.ஆனால் இவற்றை எமது விருப்பப்படி அமைத்து பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உண்டு...இதனை நிவர்த்தி செய்ய நான் சொல்கின்ற வழி இதுதான்...தொடர்ந்து படியுங்கள்
ஒளிப்படங்களைக் கொண்டு ஸ்க்ரீன் சேவர்களை உருவாக்கக்கூடிய மென்பொருள்தான் Cyberlink Media Show..இதில் பாதி பெயரை வாசிக்கும் போதே எமக்கு மனதில் தோன்றுவது PowerDVD மென்பொருள்தான்,அந்தளவுக்கு சைபர்லிங்க் என்ற பெயர் பிரபலமானது..ஆம் நீங்கள் நினைப்பது போலதான்..இந்த மென்பொருள் பவர்டிவிடி மென்பொருளின் ஒரு துணை மென்பொருள்தான்,இது தற்போது ஒரிஜினல் Power DVD மென்பொருள்களுடன் இலவசமாக கிடைக்கிறது..இல்லையெனில் இந்த இணைப்பு உங்களுக்காக.பதிவிறக்கி கொள்ளுங்கள்,மீடியாஷோ மென்பொருள் மூலம் அழகிய ஸ்க்ரீன் சேவர்களை இலகுவாக உருவாக்கலாம்.அனேகமாக எல்லாவிதமான Multimedia Fileகளையும் கையாளலாம்.,மேலும் Text effects,2D,3D Transition,Masking என பல Effectகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன..மேலும் இதை ஸ்க்ரீன் சேவராக மட்டுமன்றி .exeஃபைலாகவோ அல்லது HTML ஃபைலாகவோ மாற்றிக்கொள்ளலாம்.மேலும் புது பயனர்களுக்காக (Users) Automatic Tutorial நம்மை வழிநடத்துகிறது.நீங்களும் மென்பொருளை பதிவிறக்கி உங்கள் சொந்த ஸ்கிரீன்
சேவர்களை உருவாக்குங்கள்...இன்றே உங்கள் கற்பனைகளுக்கு வடிவம் கொடுங்கள்...மீண்டும் சந்திப்போம்!!

Share With your friends