10 ஆகஸ்ட், 2010

இணைய அரங்கு (வித்தியாசங்களின் தொகுப்பு)

Boing boing




உலகத்திலே எண்ணிலடங்காத விடயங்கள் நாளாந்தம் நடைபெறுகின்றன.அவற்றுள் பல விடயங்கள் சுவாரஸ்யமானவை.இவ்வாறான சுவாரஸ்யமான விடயங்களை இணையத்தில் நித்தமும் தொகுத்து வழங்கும் விபரகொத்தாக Boing Boing இனைக் குறிப்பிடலாம்.இத்தளத்தில் புதிய சுவாரஸ்யமிகுந்த பல செய்திகள் பல்வேறு மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன.இத் தளத்
திலே A directory of wonderful things என குறிப்பிடப்பட்டுள்ளது.சுவாரஸ்யம்மிகுந்த நிலைகளை சுவைக்க Boing boingற்க்கு சென்றுதான் பாருங்களேன்.இதன் இணையத்தள முகவரி http://boingboing.net


பூமிக்கு வெளியே.....



அண்டவெளியில் நடக்கும் நிகழ்வுகள்,வேற்று கோள்களின் நிலைகள் பற்றி அறிய அனைவரும் ஆவலாக இருப்பார்கள்.இவ்வாறான விடயங்களைப் பற்றி உடனுக்குடன் தெளிவான தகவல்களை வழங்கும் நிறுவனம் NASA ஆகும்.NASAவினைப் பற்றி தெரியாதோர் எவரும் இருக்க முடியாது.NASAவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலே அனைத்து விண்வெளி ரீதியிலான ஆராய்ச்சிகள் பற்றி அறிந்து
கொள்ள முடிவதோடு செய்மதி படங்களையும் காணக்கூடிய வாய்ப்புள்ளது.அண்டவெளியின் அற்புதத்தினை கண்டறிய கட்டாயம் செல்ல வேண்டிய தளம் இதுவாகும்.இத் தளத்தின் முகவரி- http://www.nasa.gov

 எப்படி...எப்படி...
நாளாந்தம் நாம் பரிகரணம் செய்யும் கருவிகள்,பொருள்கள் ஆகியவை எவ்வாறு இயங்குகின்றன என அறிந்து கொள்ள யாருக்குத்தான் ஆர்வமிருக்காது,விஞ்ஞானம் தொட்டு விவசாயம் வரைக்கும் காணப்படும் விடயங்கள் எவ்வாறு இயங்குகின்றன என மிகத் தெளிவாக அறிந்து கொள்ளக் கூடிய இணையத்தளமே How stuff works ஆகும்.ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் குறித்த விடயத்தில் பாண்டித்
தியம் பெற்றவர்களாலேயே இங்கு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.இந்த தளத்தில் சாதாரணமாக அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் விரிவான மற்றும் தெனிவான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.இந்த இணையத்தள முகவரி http://howstuffworks.com



சின்னதாய் ஒரு முகவரி!
இணையத்திலே இலவசமாக எமது இணையத்தளங்களை இட்டுக் கொள்ள பல நிறுவனங்கள் வசதிகளை ஏற்படுத்தி தந்தாலும் அவை எமக்கு வழங்கும் இணையத்தளத்தின் முகவரி நீளமானதாக காணப்படும்.இதனால் இலவசமாக உருவாக்கப்பட்ட எமது இணையத்தளத்தின் முகவரியினை எமது நண்பர்களிடம் தெரிவிப்பதற்க்கு இலகுவாக அவற்றினை இத்தளத்தின் உதவியுடன் சுருக்கி கொள்ளலாம்.அத்தோடு
நண்பர்ஒருவருக்கு ஒரு இணையத்தளத்தின் முகவரியினை மின்னஞ்சல் செய்ய வேண்டியேற்பட்டால் நீளமான முகவரியை மிகச் சிறியதாக்கி நண்பருக்கு அனுப்பலாம்.இந்நிலைகளை சாத்தியமாக்கும் இவ் வலைமனையின் முகவரி http://tinyurl.com என்பதாகும்.

கிரிக்கட் செய்திகள்.
என்னதான் விளையாட்டுக்கள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டாலும் கிரிக்கட் மீது மக்கள் கொண்டுள்ள ஆருவம் குறையாதது போலவே இருக்கிறது.நாளாந்தம் உலகின் பல பாகங்களிலும் கிரிக்கட் போட்டிகள் நடைபெறுகின்றன.இப் போட்டிகளின் களநிலவரங்கள் நேரடியாக தொலைக்காட்சி,வானொலி போன்றவற்றினால் காட்டப்படுகின்றன.இணையத்திலும் இப்போட்டிகள் பற்றிய நிலைவரங்கள் போட்டி நடக்கும் அதே வேளையில்
நேரடியாக அறிவிப்பு செய்யும் இணையத்தளமொன்று இணைய வெளியிலே காணப்படுகிறது.இத்தளத்தின் மூலம் போட்டி பற்றிய நேரடித் தகவல்களை மட்டுமல்லாது எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள போட்டி பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.அது மட்டுமல்லாமல் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடும் நாடுகளின் விபரங்கள் அந்த நாட்டின் சார்பாக விளையாடும் விளையாட்டு வீரர்களின் விபரங்கள் ஆகியவை அனைத்தையும்
மொத்தமாக தரும் கிரிக்கட் விளையாட்டிற்காகவே உருவாக்கப்பட்ட தளம் தென் முகவரி www.cricinfo.com ஆகும்.

Concepte By
A.Shanojan

Contact info-shanojan1993@yahoo.com

கருத்துகள் இல்லை:

Share With your friends