19 ஜூன், 2010

இணைய அரங்கு

Citizen Journalism

சம்பவங்கள் பற்றிய விடயங்களை செய்திகளை வினைத்திறனாக அறிவிப்பதில் ஊடகத்துறையே முக்கிய பங்காற்றி வருகிறது.இலத்திரனியல் சாதனங்கள் தன்னகம் கொண்டுள்ள வேறுபட்ட உயர்
தொழில்நுட்ப வசதிகளால் இன்று ஒவ்வொரு பிரஜையும் ஊடகவியலுக்கு தமக்கு தகுந்த வகையில் பங்களிப்பு செய்கின்றனர்.பொதுமக்களால் இவ்வாறு திரட்டப்படும் செய்திகள் நிழற்படங்கள் போன்றன
ஒன்றாக சேர்த்து சிட்டிசன் ஜேர்னாலிஸம் எனப்படுகிறது.இவ்வாறு பிரஜைகளால் பலப்படுத்தப்படும் ஊடக உள்ளடக்கங்களை காண்பிக்கும் பல இணையச் சேவைகள் இணையப்பரப்பில் காணப்பட்டாலும்
Now public என்பது இவற்றுள் பிரபவமானது.இதன் உடாக நீங்களும் ஊடக பரப்பிற்கு உதவி புரியுங்கள்.இதன் தள முகவரி www.nowpublic.com என்பதாகும்.



புள்ளி விபரங்கள்
உலகில் உள்ள அத்தனை விடயங்களும் புதுமைகளோடு இணைந்தது போலவே காணப்படுகின்றன.இந்தப் புதுமைகளின் தரவுகள் புள்ளி விபரங்கள் மிகவும் புதுமையானவை.உலகின் பல்வேறு விடயங்களை
ஊர்ஜிதப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்கள் மூலம் விபரமாக வழங்கும் இணையத்தளம்  தான் Nation master என்பதாகும்.இந்த இணையத்தளத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை விடயங்களையும்
புள்ளிவிபரங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடிகிறது.நீங்களும் இந்த தளத்திற்கு சென்று சுவாரஸ்யமான புள்ளி விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.www.nationmaster.com என்பதே இதன் இணைய முகவரியாகும்.



 சிறந்த இணையத்தளங்கள்
இணையம்,எண்ணிலடங்கா இணையத்தளங்களை தன்னகம் கொண்டுள்ளது.அத்தனை இணையத்தளங்களும் ஒரே மாதிரியாக அமைவதில்லை.இணையத்தில் காணப்படும் இணையத்தளங்களிடையே சிறந்த தளங்களை தெரிவு செய்யும் முயற்சி
உள்ளதா?என்ற கேள்வி உங்களுக்குள்ளே சிலவேளை எழுந்திருக்கலாம்.சிறந்த இணையத்தளங்களை வருடா வருடம் தெரிவு செய்து அவற்றிற்க்கு விருது வழங்கும் முயற்சி இணையப்பரப்பிலே உள்ளது.இது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் சிறந்த இணையத்தளங்களுக்கு வழங்கப்படும் இவ்விருது Webby awards என்று அழைக்கப்படுகிறது.இவ்விருதினை ஏற்பாடு செய்யும் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலே ஒவ்வொரு வருடமும் விருதினை பெற தகுதியுள்ள
இணையத்தளங்களின் பட்டியல் காணப்படும்.அத்தோடு இணையத்தளங்கள் தொடர்பான பல முக்கியமான விடயங்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.இதன் இணையத்தள முகவரி www.webbyawards.com என்பதாகும்.


குறுஞ்செய்தித் தொகுப்பு
குறுஞ்செய்தி சேவை எனப்படும் SmS மூலம் தகவல் பரிமாற்றிக்கொள்ளும் வீதம் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களிடையே அதிகரித்து வருகிறது.வெறுமனே செய்திகளை மட்டுமே பகிர்ந்து கொள்வதை தாண்டி சுவாரஸ்யம்மிகுந்த SmSகளையும்
நண்பர்களிடையே அடிக்கடி பரிமாற்றிக் கொள்ளும் நிலையும் மிகவும் பிரபல்யமடைந்து வருகிறது.சுவாரஸ்யமிக்க பல்வேறு வகைகளை சேர்ந்த SmSகளை வகைப்படுத்தி பட்டியற்படுத்தி காண்பிக்கும் இணையத்தளமே SmS Collection இணையத்தமாகும்.இதில்
பல்லாயிரக்கணக்கான குறுஞ்செய்தி மாதிரிகள் தொகுக்கப்பட்டுள்ளன.கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய தளம் இதுவாகும்.இந்த தளத்தின் முகவரி www.smscollection.com ஆகும்.



Webdunia-ஒரு தமிழ் உலகம்.
இணையத்தில் பல நூறு தமிழ் இணையத்தளங்கள் இருந்து வருகின்ற போதிலும் ஒரு சில தளங்களே சிறந்தவைகளாக காணப்படுகின்றன.அதில் ஒன்றுதான் வெப்துனியா ஆகும். உலகச் செய்திகள்,சினிமா,விளையாட்டு.மின்னஞ்சல்,ஈகார்டுகள்,ஆன்மீகம்,நகைச்சுவை,
கட்டுரைகள்,சமையல்,வைத்தியம் உட்பட மேலும் பல பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய ஒரு பரிபூரணமான தமிழ் இணையத்தளமாக இவ்இணையத்தளம் திகழ்கிறது.இலவசமாக தமிழ் மொழியில் மின்னஞ்சல் செய்யக்கூடிய வசதியும் இங்கு உள்ளது.
இத் தளத்தின் முகவரி http://tamil.webdunia.com



Concepte By
A.Shanojan

கருத்துகள் இல்லை:

Share With your friends