7 மே, 2010

பைத்தான் - ஓப்பன்சோர்சின் ஒப்பில்லா மொழி (Cover story)

இன்றைய மென்பொருள் உலகில் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்துறை வளர்ந்து வருகிறது.ஓப்பன்சோர்ஸ் என்றதும் லினக்சைதான் எல்லோரும்
நினைப்போம்.லினக்ஸ் என்பது ஓப்பன்சோர்ஸ் அடிப்படையிலான இயக்க முறைமை (Operating system) மட்டுமே.இதைத் தவிர ஓப்பன் சோர்ஸை
ஆதரிக்கும் டூல்களும் மொழிகளும் நிறைய உண்டு.அவற்றில் முக்கியமான மொழி பைத்தான் (Python) மொழியாகும்.

பைத்தான்-அறிமுகம்
ஓப்பன் சோர்ஸ் துறைக்கென்றே உருவாக்கப்பட்ட பொது பயன்பாட்டு (General purpose) மொழியே பைத்தான் ஆகும.1970களில் பிரிட்டனில் மான்டி
பைத்தான் பறக்கும் சர்க்கஸ் (Monty python's flying circus) என்றொரு நகைச்சுவைத் தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.இத்தொடரை
பார்த்து ரசித்த கைடோ வன்ரோசம் (Guido van rossum) என்பவர் 1990 ம் ஆண்டில் தான் உருவாக்கிக் கொண்டிருந்த மொழிக்கு பைத்தான் என்று பெயர்
வைத்தார்.இன்று அவர் நிறைய பைத்தான் ஆதரவாளர்களை கொண்டு டிஜிட்டல் கிரியேஷன்ஸ் (Digital creations) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி
பைத்தானின் வளர்ச்சி அடிப்படையிலான ஆய்வுகளையும் மேம்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்.


பைத்தான்-சிறப்பம்சங்கள்
ஓப்பன் சோர்சின் அதிவிரைவு மொழியாக கருதப்படும் பைத்தான் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.சி++ மொழி மூலம் காணப்படும்
தீர்வுகளை தரும்படியான அந்த மொழிக்கு நிகரான மொழியாக பைத்தானை கருதலாம்.பைத்தானின் சிறப்பம்சங்கள் வருமாறு..
  • பைத்தான் மொழியில் உருவாக்கப்படும் சோர்ஸ் கோடானது (Source code) Compile செய்யப்படுவதில்லை.மாறாக Interpret செய்யப்படுவதால் பைத்தான் விரைவான பயன்பாட்டு உருவாக்க டூல் எனலாம்.(Rapid application devolopment)
  •  நினைவகத்தை தானாகவே ஒதுக்கியும் காலி செய்தும் கொள்வதால் தைதான் மொழி Garbage collection கருத்தமைவை கொண்டது.
  •  பொருள் நோக்கிலான (Object oriented) கருத்தடைவை கொண்டதால் சி++,ஜாவா உள்ளி்ட்ட மொழிகளுக்கு நிகரான ஓப்பன்சோர்ஸ் மொழியாக வலம் வருகிறது.
  • பைத்தான் மொடியூல்களுக்கு (Module) தானாகவே ரீ-லோட் செய்யப்படுவதால் தைதானில் எழுதப்படும் புரோகிராம்களை திருத்தி அமைக்கும் போது (Modify) எந்தவிதமான தங்குதடையின்றி இயங்கும் வல்லமை கொண்டது.
  •  எளிமையாக,மொழியின் இலக்கணம் (Syntax) உடனடியாக புரியும் வண்ணம் இருப்பதாலும் சிக்கலின்றி வடிவமைக்கப்பட்டதாலும் தைதான் மொழியில் எழுதப்படும் புரோகிராம்கள் படிக்க எளிமையானவையாகவும் (Readability) பராமரிக்க எளிமையானதாகவும் (Maintainability) இருக்கிறது.
  •  GUI அடிப்படையை ஆதரிப்பதால் பைத்தான் மொழியில் எழுதப்படும் தீர்வுகள் விண்டோஸ்.மெகின்டோஸ் (Macintosh) என எல்லா வகையான இயக்க முறைமைகளிலும் இயங்கும்.
  •  இன்டர்நெட் புரோட்டோகால் (Internet protocal) என்பதை முழுமையாக ஆதரிப்பதால் E-mail,FTP,Http,CGI உள்ளிட்ட இணையம் சார்ந்த நுட்பங்களுக்கு பெரிதும் துணை புரியும்.
  •  எல்லாவற்றிற்கும் மேலாக முழுமையான ஓப்பன்சோர்ஸ் மொழி என்பதால் பைத்தான் புரோகிராம்கள் எளிதாக பிற பயன்பாட்டுத் தொகுப்புகளுடன் உட்பொதியப்படும்.(Embedded)


பைத்தானின் பயன்கள்
  • சிஸ்டம் புரோகிராமிங் செய்ய தேவைப்படும் Sockets,Threads,Signals,Pipes,RPC Calls,Posix bindings உள்ளிட்டவைக்கு பைத்தான் பயனளிக்கும் வரைகலை அடிப்படையிலான பயனர் இடைமுகப்பும் அதாவது TK,BMW,MFC,X-11,KDE மற்றும் Gnome உள்ளிட்ட பயனர் இடைமுகப்புகளை பைத்தான் உதவும்.
  •  Oracle,Sybase,Postgres,MySQL உள்ளிட்ட தகவல்தள இடைமுகப்புகளுக்கு பைத்தான் உதவும்.COM,ActiveX,ASP,ODBC,.NET(டாட் நெட்) போன்ற விண்டோஸ் டூல்களை பயன்படுத்தும் மென்பொருட்களும் பைத்தான் பயனளிக்கிறது.
  •  JPython,CGI Tools HTML/XML பார்சஸ்,Zope போன்ற இன்டர்நெட் டூல்களை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களுக்கும் பைத்தான் உதவும்.
  •  பரவலாக்கப்பட்ட Object நுட்பங்களான DCOM-Distributed component object model,CORBA-Comman object request booker architecture போன்றவற்றிற்கும் பைத்தானில் எழுதப்படும் புரோகிராம்கள் பயன்படும்.
மேற்கண்ட பயன்களை Scriptography,Regular expresions போன்ற புரோகிராமிங் செய்ய பயன்படும் உத்திகளுக்கும் பைத்தான் உதவும்.

பைத்தான்-குறைகள்
பைத்தான் மொழி ஜாவாவைப் போன்றதாகும்.அதாவது பைத்தான் மொழியில் எழுதப்படும் கோடிங்குகள் Compile செய்யப்படாமல் Interprete செய்யப்படுகின்றன.எனவே
Exe ஃபைலினை உருவாக்காது.Bytecodeஇனை பைத்தான் புரோகிராம்கள் உருவாக்கும்.Bytecode என்பது பைத்தான் விர்ச்சுவல் மெஷின் (PVM) மூலம் உருவாகும்.
எனவே சி மொழியில் உருவாக்கப்படும் கணினி அடிப்படையிலான (System applications) தீர்வுகளை பைத்தான் மூலம் உருவாக்க இயலாது.
சி மொழி மூலம் உருவாக்கப்படும் தீர்வுகளை விட பைத்தான் தீர்வுகளின் வேகம் குறைவுதான்.ஆனால் சி++,சி மாடுலர் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் கூறுகளை
பைத்தான் உள்ளடக்கியிருப்பதால் வணிகநோக்கிலான பயன்பாடுகளை உருவாக்க முனையும்போது வெறும் பைத்தானை மட்டும் முழுமையாக பயன்படுத்த இயலாது.
எனவே வணிக நோக்கிலான தீர்வுகளை (Bussiness solutions) உருவாக்க முனைவோர் பைத்தான் மொழி கலந்த பிற மொழிகளையும் சேர்த்து பயன்படுத்த முடியும்.



பைத்தான்-டூல்கள்
 பைத்தான் மொழி கொண்டு உருவாக்கப்பட்ட டூல்கள் நிறைய உண்டு.இவற்றைக் கொண்டும் பைத்தான் மொழியில் புரோகிராம்கள் எழுத முடியும். அவை..
 PYedit (பை எடிட்)
பைத்தான் மொழிக்கான டெக்ஸ்ட் எடிட்டரே பை எடிட் ஆகும்.

Py view (பை வியூ)
வரைபடங்களையும் ஸ்லைடுஷோக்களையும் பார்க்க உதவும் டூலாகும்.

Py draw (பை ட்ரோ)
படங்களை வரையவும் படங்களின் பொருட்களை இடம் பெயர்க்கவும் உதவும் டூலே Pydraw ஆகும்.

Py tree (பை ட்ரீ)
ட்ரீ அமைப்பிலான புரோகிராம்களை வரைய உதவும் டூல் ஆகும்

Py clock (பை க்ளாக்)
பைத்தான் மற்றும் டீ.கே என்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட அனலாக் மற்றும் டிஜிட்டல் க்ளாக் ஆகும்.

Py toe (பை டோ)
செயற்கை நுண்ணறிவு என்பதைக் கொண்டு வரைகலைக்கென்றே உருவாக்கப்பட்ட புரோகிராம் ஆகும்.

Py form(பை ஃபோர்ம்)
ஆப்ஜெக்ட்டுக்கள் கொண்ட டேபிளில் உலவ தேவையான டூலாகும்

Py calc
பைத்தான் மொழிக்கென்றே உருவாக்கப்பட்ட கணக்கீடு தொகுப்பாகும்

Py mail
Post office protocol மற்றும் Simple mail transfer  protocol கொண்ட இமெயில் Clientக்கு தேவையான டூலாகும்.

Py FTP

ஃபைல்களை இணையத்தில் பரிமாற உதவும் GUI அடிப்படையிலான டூலாகும்

Py Errata
இணையம் சார்ந்த பிழைகளை தெரிவிக்கும் டூலாகும்.மேற்கண்ட அனைத்து டூல்களும் பைத்தான் மொழியில் எழுதப்பட்டுள்ளதுதான்.இவற்றின் முதல் இரண்டு எழுத்துக்களை
பார்த்தாலே Py என்ற முன்னொட்டுடன் காட்சியளிக்கும் பைத்தான் மொழியால் உருவாக்ககப்பட்டிருந்தாலும் பிற பயன்பாடுகளின் வேலைகளையும் இவற்றின் மூலம் செய்ய
முடியும்.
இன்னும் இது போன்ற நிறைய டூல்கள் பைத்தான் மொழியில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பைத்தான்-எதிர்காலம்
ஓப்பன் சோர்சின் ஒப்பில்லா மொழியாக உலாவரும் பைத்தான் தொடக்கத்தில் பைத்தான்1.0 என்ற பதிப்பாக வந்தது.பின்1.5.2,1.6 என பதிப்புகள் வந்து இப்பொழுது பைத்தான்
2.0 என்ற புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு வந்துள்ளது.
ஓப்பன் சோர்சின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வருங்காலங்களில் இன்னும் மேம்படுத்தப்பட்ட பதிப்புக்கள் பைத்தான் மொழியில் வரலாம்.மெலும் வெறும் ஸ்கிரிப்டிங் மொழி
மட்டுமே என கருதப்பட்ட பைத்தான் பொருள் நோக்கிலான (Object oriented) புரோகிராமிங் கருத்தமைவுகளை ஏற்றுக் கொண்டுள்ளதால் பைத்தானின் பலம் மிகவும் கூடியுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக இணைய பயன்பாடுகளில் பைத்தானின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.சில மென்பொருள் நிறுவனங்களில் பைத்தானை பயன்படுத்துவதை வெளிப்ப
டுத்துவது இல்லை.இணையப்பக்கங்கள் அழிந்து போகும் அவை உலாவியில் பைத்தான் மொழியில் உருவாக்கப்படும் பிழை செய்திகளை காட்டுகிறது.
இதனைகொண்டுதான் குறிப்பிட்ட நிறுவனங்கள் பைத்தானை தங்களது இணைய தீர்வுகளுக்கு பயன்படுத்துவது தெரியவருகிறது.இதன் மூலம் நாம் பைத்தானின் வலிமையை அறிந்து
கொள்ள முடியும்.எது எப்படியோ,பிற மொழிகளை போல பிரபலம் ஆகாமல் பிரபலம் ஆகாமல் இருப்பினும் பைத்தான்,ஓப்பன் சோர்ஸ் சந்தையில் வெற்றிக்கொடி நாட்டிவருகிறது.
பைத்தானின் வளர்ச்சியை கண்டு பைத்தான் டெவலப்பர்கள் மகிழ்ச்சி அடைந்தவண்ணம் உள்ளனர்.

தொகுப்பு
A.Shanojan


நன்றி- http://www.python.org

Share With your friends