21 ஏப்ரல், 2010

PDF தரும் நன்மைகள்!

இன்று உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான டாக்குமென்ட் ஃபார்மட்டாக பிடிஎஃப் ஃபைல் ஃபார்மட் விளங்குகிறது.1993ம் ஆண்டு Adobe systems என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பிடிஎஃப் ஃபார்மட் இன்று இன்டர்நெட்டில் நம்பர் ஒன் யுனிவர்சல் டாக்குமென்ட் ஃபார்மட்டாக விளங்குகிறது.இத்தகைய தனித்தன்மையோடு செயல்படும் PDF Format இல் டாக்குமென்ட்டுகளை மாற்றுவதால் ஏற்படும் பத்து நன்மைகளை இப்பகுதியில் அறியலாம்.

1) விண்டோஸ்,மேக்,லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் மற்றும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் புதிய வகை செல்ஃபோன்கள் மற்றும் PDAக்களிலும் PDF ஃபைல்களை உங்களுடன் பணிபுரிபவர்களுடனோ, நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ Share செய்து கொள்ளலாம்.

2) Document ஃபைலை பிடிஎஃப் ஃபைலாக மாற்றும் போது பிடிஎஃப் ஃபைலாக மாற்றப்பட்ட ஃபைலானது அளவில் சிறியதாகவும் மற்றும் தரமானதாகவும் இருக்கும்.மேலும் ஸ்ப்ரெட்ஷீட்கள்,வேர்ட் டாக்குமென்டுகள், போட்டோக்கள் மற்றும் இதர வகையான ஃபைல்களை ஒன்றாக இணைத்து ஒரே பிடிஎஃப் ஃபைலாக மாற்றலாம்.

3) எந்தவொரு அப்ளிகேஷன் மூலமும் உருவாக்கப்பட்ட டாக்குமென்ட் ஃபைலை பிடிஎஃப் ஃபைலாக மாற்ற முடியும்.பிடிஎஃப் பைலாக மாற்றப்படை டாக்கு மென்ட் ஃபைலானது நல்ல தரமான பேப்பரில் பிரின்ட் எடுத்தது போல் தோற்றமளிக்கும்

4) நீங்கள் பிடிஎஃப் மாற்றிய டாக்கு மென்டை வேறு யாரும் பிரின்ட் எடுக்கவோ அல்லது நகல் செய்யவோ முடியாத வண்ணம் பாதுகாப்பு கொடுக்கலாம்.இதனால் உங்கள் பிடிஎஃப் பைலை ஷேர் செய்பவர்கள் அதில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்ய முடியாமல் பாதுகாக்கப்படுகிறது.

5) வைரஸ் மற்றும் ட்ரோஜன் போன்றவற்றினால் பிடிஎஃப் ஃபைல்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.இதனால் உங்கள் பிடிஎஃப் ஃபைலை மற்றவர்கள் ஷேர் செய்யும் போது அதற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.

6) உங்கள் டாக்குமென்ட் ஃபைலை பிடிஎஃப் ஃபைலாக மாற்ற உதவும் பிடிஎஃப் கன்வர்ஷன் மென்பொருள்கள் பல இன்டர்நெட்டில் இலவசமாகவும் மற்றும் குறைந்த கட்டணத்திலும் கிடைக்கின்றன.இவ்வகையான மென்பொருள்களை பயன்படுத்தி உங்கள் டாக்குமென்ட் ஃபைல்களை பிடிஎஃப் ஃபைல்களாக மாற்றிக் கொள்ளலாம்.

7) பிடிஎஃப் ஃபைலை திறந்து பார்க்க உதவும் மென்பொருளான Acrobat reader ஐ இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது டாக்குமென்ட்களை
பிடிஎஃப் ஃபார்மட்டிலேயே வெளியிடுகின்றன.

8) உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் Web browser இல் பிடிஎஃப் ஃபைல்களை மிகவும் எளிதாக திறந்து பார்க்கலாம்.மேலும் இணையத்தளங்களில் ஏதாவது லிங்க் மூலம் இணைக்கப்பட்ட பிடிஎஃப் ஃபைலை அந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் திறந்து பார்க்கலாம்.

9) கோர்ட்டின் சட்டங்களின்படி ஒரு டாக்குமென்ட் என்பது அது உருவாக்கப்பட்ட பிறகு அதில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்பட கூடாது.பிடிஎஃப் ஃபைல்களில் எந்தவிதமான மாற்றங்களும் செய்ய முடியாது
என்பதால் பிடிஎஃப் ஃபைல்கள் டாக்குமென்ட் ஃபைலுக்கு தேவையான விதிமுறைகளை கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.

10) தற்போது பயன்பாட்டில் உள்ள Modern portable reader systemsகளிலும் பிடிஎஃப் ஃபைலை பயன்படுத்தலாம்.மேலும் E-paper reader களிலும் பிடிஎஃப் ஃபைல்களை பயன்படுத்தலாம்.

... வழமைபோல இன்ட்லி மற்றும் தமிழ்10 தளங்களில் ஓட்டளித்து இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்...

கருத்துகள் இல்லை:

Share With your friends