28 மார்ச், 2010

தமிழில் தட்டச்சு செய்ய கூகிள் தரும் சேவை


கூகிள் நிறுவனமானது Indic transliteration எனும் சேவையை ஆரம்பித்துள்ளது.இதன்படி தமிழ்,ஹிந்தி,தெலுங்கு,கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ள சொற்களை இலகுவாக Unicode முறையில் தட்டச்சு செய்து கொள்ள முடியும்.தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் தட்டச்சு
செய்து ஸ்பேஸ்பாரை அழுத்த அவை தமிழ் சொல்லாக திரையில் தோன்றுகிறது.உதாரணமாக neengal என தட்டச்சு செய்து Space bar ஐ அழுத்த நீங்கள் என்ற தமிழ் சொல் திரையில் தோன்றும்.இதன் மூலம் வேகமாக சொற்களை தட்டச்சு செய்ய முடியும்.நாம் தட்டச்சு செய்த சொற்களில் கிளிக் 
செய்தால் அதனையொத்த சொற்பட்டியலையே கூகிள் நிரற்படுத்துகிறது.அது மட்டுமல்லாது Ctrl+g கீகளை அழுத்துவதன் மூலம் மொழியினை மாற்றியமைக்கவும் முடியும்.Unicode முறையில் தமிழை தட்டச்சு செய்ய கூகிள் வழங்கும் இந்த விஷேடித்த சேவையின் முகவரி www.google.com/transliterate/indic/tamil என்பதாகும்.சென்றுதான் பாருங்களேன்.

Concepte By
A.Shanojan

Contacts-shanojan1993@yahoo.com

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

இப்பதான் விஷயத்த கேள்வி பட்டிங்கலோ. . . . .

Shanojan.A சொன்னது…

பகிரப்பட்ட தேதியை கவனியுங்கள் Mr.மழைத்தூறல்

Share With your friends