இன்றைய சிந்தனை...

உங்கள் சிந்தனைக்கு...

சோம்பேறிகள் என்று எவருமில்லை. சோம்பேறிகள் போல் தோன்றுபவர்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலையைப் பெற்றுக்கொள்ளாத துரதிஸ்டசாலிகள்.
- நெப்போலியன் ஹில்


April 2, 2014

பேஸ்புக் ப்ரைவசி (Privacy) சில ஆலாசனைகளும் வழிகாட்டல்களும்


மனிதகுல வரலாற்றில் கணினி, இணையம் இவை இரண்டினதும் கண்டுபிடிப்பு தகவல் தொடர்பாடலை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித இனத்தையுமே பலமடங்கு முன்னேற்றியிருக்கிறது. சில சமயங்களில் அவை முறையாக பயன்படுத்தப்பட தவறுகிற போது சமூகத்தில் எதிர்விளைவுகளையும் தோற்றுவிக்கின்றன. அதிலும் எமது நாடு போன்ற கீழைத்தேயங்களில் எவ்வளவுதான் படிப்பறிவு உயர்ந்திருந்தாலும் இவ்வாறு தொழில்நுட்பம், கணினி, இணையம் என்று வருகின்ற போது 2/4 பகுதியினர் இன்றுவரை தெளிவற்ற/முறையற்ற பயன்பாட்டையே கொண்டிருக்கின்றனர். இங்கு நான் குறிப்பிடுவது புதிய தொழில்நுட்பங்கள் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்ற உங்கள அறிவு மட்டத்தை அல்ல. ஒருவருக்கு கணினியில் தட்டச்சு செய்ய மட்டும்தான் தெரியும் என்றால் அதில் எந்த தவறுமில்லை. ஆனால் தெரிந்த அந்த விடயத்தை அவர் எந்தளவு தனக்கும் பிறர்க்கும் நன்மையுள்ளவாறு பயன்படுத்துகிறார் என்பதில் இருக்கிறது அவருடையதும் தொழில்நுட்பத்துடையதுமான வெற்றி. இன்றைய வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறையினர் சிறப்பானவர்கள், திறமைசாலிகள் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல, இவற்றோடு தொழில்நுட்பம் என்ற பாரிய சக்தியும் அவர்களிடம் இருக்கிறது. இது எங்கள் முன்னோர்களின் உழைப்பால் விளைந்தவை, இவை எங்களை வளப்படுத்தவும் எமக்கு பின் வருகிறவர்களை வழிகாட்டவும்தான் பயன்படவேண்டுமே தவிர எங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ள அல்ல. இனி 'பேஸ்புக்', இந்தச்சொல்லை தெரியாத இளையவர்கள் மட்டுமல்ல யாருமே இல்லை என்றளவுக்கு இது பிரபலம். சாதாரண இணையதளமாக உருவாகி இன்று மாபெரும் இணைய ஊடகமாக (cyber media) வளர்ந்திருக்கிறது. நாமனைவரும் இதை ஒவ்வொருவிதமாக பயன்படுத்துகிறோம். ஆனால் எங்களில் எத்தனை பேர் அதை சரியான முறையில் அதிலுள்ள Optionகளை சரியாக பயன்படுத்துகிறோம் என்றால் குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே. இதற்கு சிறந்த உதாரணம் பேஸ்புக்கில் உள்ள Tag என்ற வசதி மற்றவர்களுக்கு புகைப்படங்களை அனுப்புவதற்க்குதான் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அப்படியல்ல. நீங்கள் பேஸ்புக் பயன்படுத்த வேண்டுமா? இல்லலையா, எப்படி கணக்கு திறப்பது?, ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது எப்படி? என்று இங்கு சொல்லமுடியாது. ஆனால் எங்கள் பேஸ்புக் பாவனைக்கு சவாலாயிருக்கின்ற இநத Privacy பற்றி சொல்லித்தரலாம். அப்படியாவது இலங்கையில் கடந்த சில வாரங்களில் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களையும், இலங்கையில் முற்றாக பேஸ்புக் தளத்தை தடைசெய்ய வேண்டும் என்ற கோஷத்தையும் தவிர்க்கலாம் அல்லவா? 

பேஸ்புக் இன்று இரண்டு பிரதான நோக்கத்திற்காக பாவிக்கப்படுகிறது.
  1. சாதாரணமாக தனிநபரொருவர் தனது நண்பர்கள் உறவுகளோடு உறவாடவும் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துதல்.
  2. ஒரு நிறுவனமோ/அமைப்பொன்றோ தங்களது நடவடிக்கைகள் விளம்பரப்படுத்தல்கள் மற்றும் பாவனையாளர்களுடனான தொடர்புகளை மேற்கொள்ளவும் பயன்படுத்துதல்.  
இதன் மூலமாக வெறுமனே நட்பு நோக்கத்திற்குரியவர்கள் மட்டும் வலம்வருமிடமென்று பேஸ்புக்கினை எண்ணிக்கொள்ளாதீர்கள். எனவே நீங்கள் பேஸ்புக்கில் உங்களைப்பற்றிய தகவல்களை பகிரும் ஒவ்வொருமுறையும் இருமுறை சிந்தியுங்கள். இதில் எதுவும் கட்டாயமில்லை. பரிந்துரைப்பு மட்டுமே.பேஸ்புக்கில் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

இதனை பேஸ்புக் Privacy Settings என்கிறார்கள். நீங்கள் பேஸ்புக் இல் செய்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் யார் யார் பார்க்க வேண்டும் என்று ஒழுங்குபடுத்துகின்ற பகுதி. இதில் கீழுள்ளது போல 3 பிரதான வகை உண்டு. அதாவது 


  • Only Me, இந்த தெரிவினை கொடுத்தால் குறித்த தகவலை நீங்கள் மட்டுமே காண முடியும்.
  • Friends Only, உங்கள் நண்பர்களோடு மட்டும் தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்த வசதி.
  • Everyone./Public. பேஸ்புக்கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இணையத்தில் உலாவருகிறவர்களும் காண கூடியவகையில் அதாவது பேஸ்புக்கில் கணக்கு இல்லாத ஒருவராலும் இதனை காணமுடியும்.

மிகவும் கலைக்குரிய விடயமென்னவெனில் Defaultஆக இந்த வசதி Public/Friends Only என்பதில் இருக்கும். தகவல்களை பகிர்வதிலும் புகைப்படங்களை பதிவேற்றுவதில் பலருக்கும் இருக்கின்ற வேகம் அதில் உள்ள இந்த Privacy settings எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பதில் இருப்பதில்லை. எனவே சாதாரண நிலைத்தகவல்கள் தொடங்கி புகைப்படங்கள், Profile Details போன்றவற்றை யார்யாருடன் பகிர வேண்டும் என சிந்தித்து பகிருங்கள். கூடியவரை கணினியிலிருந்து புகைப்படங்களை தரவேற்றுங்கள். நேரடியாக Mobile, Tablet போன்ற சாதனங்களில் இருந்து தரவேற்றுவதை தவர்க்கவும். அதே போன்று இப்போதெல்லாம் Smartphone யுகம். இவற்றில் உள்ள Synchronization என்ற வசதி பற்றி அறிந்திருப்பீர்கள். இணைய இணைப்பு இருந்தால் உங்களை அறியாமலே Galleryஇல் உள்ளவற்றை அவை பேஸ்புக் போன்ற தளங்களுக்கு ஏற்றிவிடும். எனவே உங்கள் தேவைக்கேற்ப Sync settingsஐ மாற்றிக்கொள்ளுங்கள். 

அடுத்து உங்கள் நண்பர்களை நிர்வகிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தனிப்பட்ட கணக்கில் ஆகக்கூடியது 5000 நண்பர்களை இணைத்து கொள்ளலாம். இதனை இன்னும் இலகுவாக்குவதற்காக பேஸ்புக் Friend List என்ற வசதியை அறிமுகம் செய்திருந்தது. அதாவது உங்கள் வகுப்பு நண்பர்கள், வேலைத்தள நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் இப்படியாக இன்னும் பல பிரிவுகளில் நண்பர்களை பிரித்துவைத்துக் கொள்ள முடிவதுடன் மேற்சொன்ன Privacy Settings போன்று தேவைப்படும் போது தகவல்களை குறிப்பிட்ட ஒரு Listஇல் உள்ளவர்களோடு மட்டும் பகிரவும் முடியும்.

இவை போன்ற இன்னும் பல வசதிகள் மூலம் எமது Privacyஐ பாதுகாக்க முடியும். இனி வருகின்ற உங்கள் சமூக வலைத்தள உலாவல் அனுபவங்கள் உங்களுக்கும் சமூகத்திற்கும் பயன்தரட்டும்.

February 20, 2014

இணையத்தில் இசையோடு கதைபேச ஒரு பன்முக இணையத்தளம்


இணையம் மற்றும் அதனோடிணைந்த ஏனைய தொழில்நுட்பங்கள் இவை இன்றி கற்பனை செய்ய முடியாத ஒரு வாழ்வியலில், இவையெல்லாவற்றையும் பலவாறான தேவைகளுக்கும் பயன்படுத்தி கொண்டிருக்கின்ற போது அதனை இன்னும் கொஞ்சம் வினைத்திறன் மற்றும் விளைதிறன்மிக்கதாக்கவென ஒரு முயற்சி, ஆம் இணையத்தில் உலா வருகின்ற நம்மில் பலர் அறியாத அல்லது அறிந்தும் அதுபற்றி முழுதாக தெரிந்திருக்காத ஒரு இணையத்தளம் அதன் சேவைகள மற்றும் பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்யும் பதிவு. இணையத்தில் உலாவருகின்ற உங்களுக்கு சமூக வலைத்தளங்கள் (Social Networks) பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாம் நினைப்பது மாதிரி ட்விட்டர், பேஸ்புக் மட்டும் இந்த வகைக்குள் அடங்கவில்லை மாறாக இன்னும் நம்மில் பலர் அறியாத வினோத சமூக வலைத்தளங்களும் உள்ளன.
அவ்வாறான ஒரு தளம்தான் SoundCloud.பொதுவாக சமூகவலைத்தளங்களென்றாலே நண்பர்களை சேர்த்து கொள்ள, தகவல்களை பரிமாற என இருக்கின்ற போது இந்த தளம் பெயருக்கேற்றாற்போல ஒலிகளை (அதாவது ஒலித்துணுக்குகளை அது இசையாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை ஒருவரின் பேச்சாக கூட இருக்கலாம்) பல நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளவும் அதன் மூலமாக நட்புவளையங்களை உருவாக்கி கொள்ளவும் வழிசெய்கிறது. வெளிப்படையாக இது இப்படி இருந்தாலும் இந்த தளத்தை வேறுபல தேவைகளுக்கும் பயன்படுத்தமுடிதல் தான் இதன் சிறப்பு. 

அதாவது இதனை நாங்கள் எங்களுடைய ஒலிப்கோப்புகளை சேமித்து வைக்ககூடிய தொடரறா சேமிப்பகமாகவும் பயன்படுத்தலாம். அது போல நீங்கள் சிறந்த குரல்வளம், பேச்சாற்றல் உள்ளவரெனில் உங்கள் VoiceBlog ஆகவும் இதை பயன்படுத்தலாம். அது போல உலகெங்குமுள்ள பிரபல வானொலிகள் தங்கள் Podcast இனை கூட இங்கே பகிர்கிறார்கள். 

* இலங்கையின் சூரியன்FM வானொலியின் நிகழ்சி பகிர்வு (மாதிரி இணைப்பு)

நீங்கள் ஒரு வலைத்தள நிர்வாகியாக இருந்தால் உங்கள் தளத்தில் ஒலியை இணைக்கின்ற தேவை வருகின்ற போது Embeded Widjet வசதியையும் (மேலுள்ளது போல) இது தருகிறது. அதுமட்டுமன்றி பல இளம் கலைஞர்கள் தங்கள் இசை படைப்புக்களை இங்கே பகிர்ந்துகொள்வதனூடாக அவர்களின் முயற்சிக்கான சிறந்த அங்கீகாரத்தை பெறுவதுடன் புகழடையவும் வழிவகுக்கிறது. iOS, Android, Windows போன்ற மொபைல் இயங்குமுறைமைகளுக்கும் இது உள்ளது. ஆகவே பயன்படுத்த இன்னும் எளிதானது. இவ்வாறு பல வசதிகள் தருகின்ற இந்த தளத்தை பயன்படுத்தி பாருங்கள் அல்லது ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். 

இணைய முகவரி: www.soundcloud.com

January 25, 2014

நீங்களே உருவாக்கலாம் - ஒரு எளிய RAM Cleaner மென்பொருள்
2014ம் வருடம் பிறந்து 25வது நாளில்தான் இவ்வருடத்தின் முதல் பதிவு எழுத வேண்டும் என்ற சிந்தனை வந்தது. எனவே வேலைப்பளு, நேரப்பற்றாக்குறை இவற்றுக்கிடையில் சில மணிநேரங்களை கண்டுபிடித்து இப்பதிவை தயாரித்து தட்டச்சு செய்து பகிர்கிறேன். இதுவும் ஒரு Computer Trick வகையை சார்ந்த பதிவு/விடயம்தான். அதாவது நாம் கணினி என்ற சாதனத்தை பலவற்றுக்கும் பலவாறாகவும் பயன்படுத்துகிறோம் என்பது தெரியும். அதற்கேற்றால் போல விதம்விதமான மென்பொருள்களையும் உபயோகிக்கிறோம். 

அதே போன்று சரியான கால இடைவெளியில் கணினி பராமரிக்கப்பட்டால் மட்டுமே அதன் இயக்கம், வருவிளைவு ஆகியன உச்சமாக இருக்கும் என்பதும் தெரியும். இங்கே கணினி பராமரிப்பில் பல வகைகள் இருக்கின்றன. அதிலொன்றுதான் உங்களுடைய கணினியின் முதன்மை நினைவகமான RAM இனை சுத்தம் செய்வது (பௌதீக ரீதியாக அல்ல). இதற்காக பல மென்பொருள்கள் இலவசமாகவும் பணம் செலுத்தி பெற வேண்டியவையாகவும் கிடைக்கின்றன. பலருக்கு அதில் எது சிறந்தது? என்கின்ற பிரச்சினை வேறு. 

ஆனால் எங்களுடைய கணினியின் Notepad மென்பொருளைக் கொண்டே அதனை செய்து முடித்துவிடலாம். பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.

Step 01: Notepad ஐ திறந்து பின்வருமாறு தட்டச்சு செய்யுங்கள். 
                      
                                                                   "      FreeMem=Space(10240000000)     "

* இங்கு 1024 என்று குறிக்கப்பட்டது உங்களுடைய RAM இன் கொள்ளளவு ஆகும். நீங்கள் 512MB கொள்ளளவு உள்ள RAM ஐ பாவிப்பவரானால் மேலேயுள்ள Code ஐ 1024 இற்கு பதிலாக 512 என மாற்றுக.

Step 02: பின்னர் அந்த File ஐ Cleaner.vbs என்ற பெயரில் எங்குவேண்டுமானாலும் சேமியுங்கள். (Desktop ஆக இருப்பது நல்லது.)

Step 03: நீங்கள் Save செய்த இடத்தில் தோன்றுகின்ற Icon ஐ இரட்டை கிளிக் செய்து Run பண்ணினால் உங்கள் RAM சுத்தம் செய்யப்பட்டுவிடும். 

கருத்துக்களை பின்னூட்டங்காக பகிருங்கள்.

November 27, 2013

கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்ட Wi-Fi வலையமைப்பை தகர்ப்பது சாத்தியமா? - ஆய்வுப்பதிவு (பகுதி 03)

<< பகுதி 01
<< பகுதி 02

 

ஒரு நீண்ட பதிவின் மூன்றாம் பாகத்தில் உங்களோடு இணைந்து கொள்வது மகிழ்சி தருகிறது. கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்ற ஒரு கம்பியில்லா (Wi-Fi) வலையமைப்பை தகர்ப்பது அல்லது அதனுள் அனுமதியின்றி நுழைவது எவ்வாறு என்ற இலக்கு நோக்கிய இந்த பதிவின் பயணம் தொடர்கிறது... Wi-fi என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகின்றது? அது எப்படி பாதுகாக்கப்படுகிறது போன்ற அடிப்படைகளை அறிந்துகொண்டோம். பின் நாங்கள் துருவ வேண்டிய வலையமைப்பிலிருந்து வருகின்ற Data packetsஐ capture செய்வது பற்றியும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்த்தோம். இனி அவற்றை சேமித்து எவ்வாறு decryption செய்வது என்பதிலிருந்து இருந்து மூன்றாம் பாகம்.

Step 05: கடவுச்சொல்லை துருவுதல் (Hack the password)
------------------------------------------------------------------------
* நான் சொன்னதுபடியே 100000 வரை அல்லது அதற்கு மேலாக (இந்த தொகையைவிட நீங்கள் இன்னும் எவ்வளவு அதிகம் capture செய்கிறீர்களோ அந்தளவு வேகமாக சுலபமாக cracking அமையும்.) data packets capture செய்திருப்பீர்கள். இனி அவற்றை save செய்ய வேண்டும். commview மென்பொருளின் packets tab இற்கு செல்லுங்கள். இதுவரை நீங்கள் capture செய்த data packets அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதில் உள்ள அனைத்தையும் select (Ctrl+A)செய்யுங்கள்.

* பின்னர் right click செய்து பெறப்படும் menuவில் save packets as என்பதை click செய்யுங்கள். save as மெனு தோன்றும். நான் முன்னர் சொன்னது போல தனியான பாதுகாப்பான folder இல் packets என்ற file name இல் save செய்யுங்கள்.* அடுத்து commview மென்பொருளை மூடாமல் நீங்கள் packetsஐ சேவ் செய்த இடத்திற்கு சென்றால் packets என்ற பெயரில் commviewஇன் iconஇல் ஒரு fileஐ காண்பீர்கள். அதனை திறந்து கொள்ளுங்கள். இதன் போது கீழுள்ளது போல window தோன்றும்.

* அதில் file -> Export -> Wire shark tcpdump format என்பதை தெரிவு செய்யுங்கள். expackets என்ற பெயரில் அதனையும் தனியான ஓரிடத்தில் save செய்யுங்கள். இது .cap வடிவில் save ஆகும்.

* பின் நீங்கள் தரவிறக்கிய folderஇனுள் உள்ள aircrack-ng-1.2-beta1-win என்ற folderஐ திறந்து அதனுள் உள்ள bin folderஐ திறங்கள். பின் அதிலுள்ள Aircrack-ng GUI.exe ஐ திறந்து கொள்ளுங்கள்.* தோன்றும் மெனுவில் filename என்பதற்கு நேரே உள்ள choose என்பதில் நீங்கள் save செய்த expackets.cap ஐ தெரிவு செய்யுங்கள். பின் encryption என்பதில் WEP ஐ தெரிவு செய்து Launch கிளிக் செய்யுங்கள்.

* நீங்கள் 5000IV க்கு அதிகமாக capture செய்திருந்தால் நீங்கள் இவ்வளவு நேரமும் ஆவலோடு எதிர்பார்த்த நீங்கள் கண்டுபிடிக்க நினைத்த paswword தோன்றும். ஆனால் அது கொஞ்சம் வித்தியாசமாக தோன்றும். உதாரணமாக 
password 89281 என்பதாக இருந்தால் அங்கு (89:2:81:) என்று தோன்றும். அதிலுள்ள : () போன்றவற்றை நீக்கினால் password கிடைக்கும். 

* இனி வழமைபோல உங்கள் கைவரிசையை காட்ட வேண்டிய நேரம்... WPA, WPA2-PSk போன்ற wifi networkகளை துருவுதல் பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.


November 26, 2013

உங்களின் PowerPoint கோப்புக்களை YouTube இல் பகிர்வதற்க்கு உதவும் சிறப்பு மென்பொருள் - இம்மாத மென்பொருள்

  


பொதுவாகவே ஒரு விடயத்தை அதனைப் பற்றி அறிந்திராத புதியவர்களுக்கு முன்வைக்கின்ற செயற்பாடு Presentation என எளிமையாக கூறலாம். கணினி நுட்பம் வளர்ந்து விட்ட பிறகு இவ்வாறவான ​செயல்பாடுகளை செய்வதில் பெரிதும் துணை புரிவது Microsoft Office தொகுப்பின் PowerPoint மென்பொருள்தான். பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தொடங்கி அலுவலகங்களில் புதிய செயல்திட்டங்களின் (Projects) அறிமுகப்படுத்தல் வரை ஒரு விடயத்தை மற்றவர்களுக்கு இலகுவாகவும், தெளிவாகவும், அழகாகவும் சொல்ல Microsoft Office தொகுப்பின் PowerPoint மென்பொருளையே நாம் பயன்படுத்துகிறோம். இவ்வாறு இம் மென்பொருளில் ஒரு கோப்பினை தயாரிக்கும் போது அதனை இன்னுமொரு கணினியில் பார்ப்பதற்க்கு அதிலும்  Microsoft Office தொகுப்பின் PowerPoint மென்பொருள் நிறுவப்பட்டிருக்க (Install) வேண்டும். அதேவேளை  PowerPoint மென்பொருள் கோப்புக்களை (Files) ஒரு காணொளி (Video) போன்று தொடர்ச்சியாக பார்வையிடவோ அல்லது அவற்றை YouTube போன்ற இணையத்தளங்களில் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கோ உரிய தெரிவுகள் (Option) இயல்பாக (Default) அம்மென்பொருளில் இருப்பதில்லை. எனவே இவ்வாறான தேவைகளை நிறைவு செய்ய Moyea PPT to Video Converter என்ற மென்பொருள் உதவுகிறது.
முதலில் நான் இந்தப் பதிவின் இறுதியில் தந்திருக்கின்ற இணைப்பின் மூலம் இம் மென்பொருளை இலவசமாக தரவிறக்கி (Download) நிறுவி கொள்ளுங்கள். பின் அம் மென்பொருளை திறந்து அதிலுள்ள Add Button ஐ கிளிக் செய்யுங்கள். இதன்போது தோன்றுகின்ற Browse Menu இல் நீங்கள் காணொளியாக (Video) மாற்றவிரும்புகின்ற கோப்பினை தெரிவு செய்யுங்கள். இதில் நீங்கள் ஒரே தடவையில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களையும் மாற்றலாம்.

பின்னர் Profile என்பதற்க்கு நேரேயுள்ள Settings என்பதை தெரிவு செய்ய தோன்றும் Output Setting Menuவில் உங்கள் காணொளி (Video) என்ன Format இல் வரவேண்டுமோ அதை தெரிவு செய்யுங்கள். உதாரணமாக YouTube தளத்தில் பதிவேற்றுவதற்கோ அல்லது பொது பாவனைக்காகவோ இருந்தால் Common Video பகுதியில் உள்ள MP4-MPEG-4 Video (*.mp4) என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர் உங்கள் காணொளி (video) எங்கு சேமிக்கப்பட (save) வேண்டுமோ அந்த இடத்தைOutput என்பதில் தேர்வு செய்து இறுதியாக Start என்பதை அழுத்த உங்கள் PowerPoint மென்பொருள் தொகுப்பு காணொளியாக மாற்றப்பட்டு விடும். இனி, வழமையாக பதிவேற்றுவது போன்று Youtube தளத்திலோ அல்லது ஏனைய இணையத்தளங்களிலோ இதனை பதிவேற்றவும் முடியும். 


Disqus